திங்கள், 21 அக்டோபர், 2013

ஸலஃபிகளும் கெட்ட சகுனமும்


சகுனம் என்பது வீடு, பெண், கால்நடை ஆகிய மூன்றில் உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த செய்தி ஒன்று ஆயிஷா (ரலி) அவர்களது கவனத்திற்கு வரும் போது, இந்த அறிவிப்பு தவறு என்றும், உங்களுக்கு சோதனை ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் நாட்டத்தால் தான் ஏற்படுகிறது என்பதாக வரக்கூடிய குர்ஆன் வசனங்களுக்கு இது முரணாக இருப்பதாய் சொல்லியும் மறுக்கிறார்கள்.
இந்த செய்தி அஹமத் 24894 இல் பதிவாகியுள்ளது.

ஆனால், சகுனம் என்பது வீடு, பெண், கால்நடை ஆகிய மூன்றில் உண்டு என்கிற அந்த செய்தி புஹாரி 2858, புஹாரி 2859, புஹாரி 5094, புஹாரி 5753 போன்ற செய்திகளாகவும், இன்னும் ஏராளமான ஹதீஸ் நூல்களிலும், ஏராளமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, எத்தனை ஹதீஸ்களில் இருந்தாலும், எத்தனை அறிவிப்பாளர்கள் அதை அறிவித்தாலும், குர்ஆன் கூறும் செய்திக்கு அது மாற்றமாக இருக்குமேயானால் அத்தகைய செய்திகளை மறுக்கத்தான் வேண்டும் என்கிற விதியை ஆயிஷா (ரலி) அவர்களே செயல்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று.

- "வஹியோடு விளையாடும் வழிகேடர்கள்" என்கிற தவ்ஹீத் ஜமாஅத்தின் மறுப்புரையிலிருந்து எடுக்கப்பட்டது.

இதை அடிப்படையாக கொண்டு ஏராளமான கேள்விகளை ஸலஃபிகள் என்று சொல்லிக்கொள்வோரிடம் நாம் முன்வைக்கிறோம்.

சகுனம் பார்க்கும் வழக்கம் அறியாமைக்கால மக்களிடம் தான் இருந்தது, முஸ்லிம்கள் அவ்வாறு நம்பக்கூடாது என்பது தான் நபிகள் நாயகத்தின் கருத்தாக இருந்தது என்றால் சகுனம் என்பது வீடு, பெண், கால்நடை ஆகிய மூன்றில் உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த செய்தி தவறு என்று ஆகி விடுகிறது.

நபி சொன்ன கருத்துக்கு மாற்றமான கருத்தை சொன்ன அபு ஹுரைரா (ரலி) அவர்கள் பொய்யரா?

அல்லது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்று அறிவிப்பது அறிவிப்பாளர்களிலேயே உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபு ஹுரைரா அல்லவா, ஆகவே இதை கண்ணை மூடிக் கொண்டு நம்பத்தான் வேண்டும் என்று இந்த ஸலஃபிகளை போல் சிந்திக்காமல், இது குர்ஆனுக்கு மாற்றம் இருக்கிறதா என்று உரசிப் பார்த்த ஆயிஷா (ரலி) அவர்கள் வழிகேடரா?

அவ்வாறு உரசிப்பார்த்ததோடு நிறுத்தாமல், அந்த செய்தி குர்ஆனுக்கு முரணானது தான் என்று முடிவு செய்ததோடு அந்த ஹதீஸை மறுக்கவும் செய்த ஆயிஷா அவர்கள் இவர்களது பார்வையில் ஹதீஸையே மறுத்து குஃபுர் செய்தவர்களா? ( நவூதுபில்லாஹ்)

இது போக,

சூனியம் தொடர்பான செய்தியை பதிவு செய்த புஹாரி இமாம் சூனியத்தை நம்பிய முஷ்ரிக்கா? என்று நம்மை நோக்கி கேட்கும் இந்த வெட்கமில்லாத கூட்டத்தார், சகுனம் என்பது வீட்டிலும் கால் நடையிலும் உண்டு என்று வரக்கூடிய செய்தியை பதிவு செய்து விட்ட புஹாரி இமாம் சகுனத்தை நம்பி அல்லாஹ்வை மறுத்தவர் என்று அறிவிப்பார்களா?

அல்லது

புஹாரி இமாம் பதிவு செய்து விட்ட காரணத்தால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறி சகுனம் என்பது வீடு, பெண், கால்நடை ஆகிய மூன்றில் உண்டு என்று நம்புகிறார்களா?

பிஜேவை நக்கியே பிழைப்பு நடத்தும் இந்த எச்சக் கூட்டத்தை எங்கே சந்தித்தாலும் இதற்கான விடையை கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக