திங்கள், 21 அக்டோபர், 2013

எளிமையாக்கப்பட வேண்டிய விவாகரத்து சட்டங்கள்விவாகரத்து முறை எளிமையாக இருந்தாலே தவிர, இது போன்ற சம்பவங்கள் நீடித்துக் கொண்டு தான் இருக்கும்.

""சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் தம்பதியர் பிரிந்து விடலாம். அதற்கு சட்டப்படி வழி இருக்கிறது. அதைவிட்டு, கொலை செய்ய நினைப்பது காட்டுமிராண்டித்தனம். ஒருவர் சாவில் இன்னொருவர் சந்தோஷத்தை அனுபவித்து விட முடியாது. மனசாட்சி உறுத்தாவிட்டாலும் ஒருநாள் உண்மை தெரியவரும்போது, ஊரே காரித் துப்பிவிடும்."" http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49418

என்று தலையங்கம் எழுத தெரிந்த பத்திரிக்கைகளுக்கு தம்பதியர் அவ்வாறு எளிமையில் பிரிந்து விடும் அளவிற்கு தான் இந்திய சட்டங்கள் உள்ளனவா? என்பது குறித்து விவரிக்க தெரியவில்லை.

இஸ்லாத்தை தவிர வெறெந்த‌ மதத்தை சேர்ந்தவர்களாக‌ இருந்தாலும் அவர்கள் விவாகரத்து பெற வேண்டுமானால் அவர்களே சுயமாக அந்த முடிவை எடுக்க முடியாது.
அவர்கள் பிரிய வேண்டுமா கூடாதா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்து அவர்களுக்கு சொல்லும்.

நீதிமன்றம் சொல்வதை கேட்டு அதன் படி செயல்படுவது தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.

ஆக, பிரியத்தான் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவர்கள், என்ன காரணத்தை சொன்னால் நீதிமன்றம் அத்தகைய தீர்ப்பை அளிக்குமோ அந்த காரணத்தை சொல்வார்கள் !

அப்படியே நியாயமான (?) காரணங்களை சொல்லி நீதிமன்றத்தை தமக்கு சாதகமாய் வளைத்தாலும் கூட, தீர்ப்பு ஒரு வாரத்தில் தந்து விடுவர்களா?

இல்லை, ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை ஆகின்றன என்று புள்ளி விவரம் சொல்கிறது.

அப்படியும்,தமக்கு சாதகமான காரணங்களை ஜோடித்தாலும் கூட தீர்ப்பு சாதகமாய் வருமா வராதா என்கிற சந்தேகம்..

அப்படியே தீர்ப்பு சாதகமாய் வரும் அளவிற்கு காரணங்கள் வலுவாக இருந்தாலும் கூட, 3 வருடங்கள், 5 வருடங்கள் என யார் காத்திருப்பது???

என்று எண்ணுகிற அவனோ அவளோ, எதிர் தரப்பை தீர்த்துக் கட்டுவது தான் இதற்கான உடனடி மற்றும் நிரந்தர தீர்வாக அமையும் என முடிவு செய்கிரார்கள் !

அதை தான் இணைக்கப்பட்ட செய்தியில் பார்க்கிறீர்கள் !

ஆனால், இஸ்லாம் இறைவன் அளித்த மார்க்கம் என்பதாலும், மனித குணங்களையும் அவர்களின் பலகீனங்களையும் இறைவன் அறிந்து வைத்துள்ளான் என்பதாலும் அத்தகைய மார்க்க சட்டம் தான் இது போன்ற ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கின்றது.

முஸ்லிமான ஆணுக்கோ பெண்ணுக்கோ விவாகரத்து பெற வேண்டுமா? நீதிமன்றம் செல்லத் தேவையில்லை, ஐந்து வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவசியமில்லை,
கள்ளக் காதல் சபலத்தினால் கணவனை கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை.

மனைவி வேண்டாம் என்றால் கணவனும், கணவன் வேண்டாம் என்றால் மனைவியும் தகுந்த சாட்சிகள் முன்னிலையில் அறிவிப்பு செய்து அந்த கணமே பிரிவதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு மிக எளிய தீர்வை மனித குலம் கண்டறியும் !

"பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுவது நல்லது" என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டுமே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக