செவ்வாய், 8 அக்டோபர், 2013

சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் கழுதைகள்


சத்திய கொள்கையை நாம் பிரச்சாரம் செய்கிற போது , அவற்றை தக்க வாதங்களுடன் எதிர் கொண்டு முறியடிக்க சக்தி பெற்றவர்கள் வாதங்களுடன் மட்டுமே நம்மை எதிர் கொள்வர். 

யாரிடம் நேரான கொள்கையில்லையோ அவர்களிடம் சத்தியம் இருக்காது, அவர்களிடம் நேர்மை இருக்காது, இத்தகையோருக்கு அவர்கள் சார்ந்துள்ள கொள்கைக்கு தக்க ஆதாரங்கள் கூட இருக்காது.

நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இருப்பதில்லை. 45:25

அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங் களில் தர்க்கம் செய்கின்றனர். 40:35

இத்தகையோரால் முன்னின்று சத்தியக் கொள்கைவாதிகளிடம் வாதிக்க இயலாது என்பதால் அவர்கள் பல கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டே தங்களது வெறுப்பை காட்டுவர்.

இது இப்ராஹிம் நபி காலம் தொட்டு இன்று வரை தொன்று தொட்டே நடந்து வரும் காரியமாகும்.

அல்லாஹ் தான் ஒரே இறைவன் என இஸ்ரவேல சமுதாயத்திடம் இப்ராஹிம் நபி போதித்த போது அவரையும் அம்மக்கள் ஏசினர், சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை என்கிற பேருண்மையை அவர்கள் பிரசாரம் செய்த போது அதற்கு வாதங்கள் மூலம் பதிலடி கொடுக்க திராணியற்ற அந்த சமுதாயம், அந்த மாமனிதரை நெருப்புக் குண்டத்தில் வீசி தங்களது மகிழ்ச்சியினை பரிமாறிக் கொண்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை போதித்த போதும் கூட அவரை பைத்தியக்காரர் என்று கூறியும், அவரை கல்லால் அடித்து விரட்டியும், ஊர் விலக்கு செய்தும் தான் மக்கத்து முஷ்ரிக்குகள் தங்களது வெறுப்பை காட்டினர்.

இவையெல்லாம், அந்த எதிரிகளிடம் இந்த சத்தியக் கொள்கையை முறியடிப்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்றாக திகழ்கிறதே அல்லாமல் அத்தகைய துன்பங்களை எதிர்கொண்ட நபிமார்களுக்கு அவை எந்த வகையிலும் பின்னடைவாகவோ இழிவுக்குரிய ஒன்றாகவோ இருக்கவில்லை !

இத்தகைய குணங்களில் அந்த இஸ்ரவேல சமுதாயத்தின் வழி தோன்றலாக, அந்த மக்கத்து முஷ்ரிக்குகளின் வழியில் இன்றும் இம்மார்க்கத்தின் எதிரிகள் செயல்பட்டு வருவதே வேடிக்கையான உண்மை.

இணையதளம் வாயிலாக ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்தால் நம் முன்னஞ்சல்களை முடக்குதல், குழும அக்கவுண்டுகளை முடக்குதல் என அத்தகைய கோழைத்தனங்களில் ஈடுபட்டு அவற்றில் அற்ப சந்தோஷம் அடைகின்றனர்.
வெளியில் பொதுக்கூட்டங்கள் நடத்தினால் மேடையேறி தாக்குகின்றனர், வெட்டுகின்றனர், காவல் துறையிடம் முறையிட்டு நம் நிகழ்ச்சிகளுக்கு தடை பெறுகின்றனர்.

மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர்.
அதுவே அவர்களுக்குக் கை சேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள். (8:36)

என்கிற இறை வசனத்திற்கு ஏற்றார்போல

வாதங்களை வாதங்கள் மூலமே எதிர்கொள்ள திராணியற்று எப்போது இது போன்ற கீழ் நிலைகளுக்கு இவர்கள் இறங்குவார்களோ, அந்த நொடியே அவர்கள் படுதோல்வி அடைந்து விடுகிறார்கள், அவர்களது இந்த தோல்வி, அவர்கள் நேர்வழி பெறாதவர்கள் என்பதை காட்டுகிறது,


சிங்கத்தை கண்டு விரண்டோடும் கழுதைகள் தான் அவர்களுக்கான ஒப்பீடு !!

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர் (74:49,50,51)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக