திங்கள், 21 அக்டோபர், 2013

இறை நேசர்



இறை நேசர்களை நாமே கண்டறியலாம் என்கிற பொய் பிரச்சாரம் தான், இன்று இணை வைப்பு, தர்கா வழிபாடு போன்ற படுபாதக காரியங்களுக்கு ஆணி வேராக உள்ளது. 
அல்லாஹ், தனது தூதுத்துவ பணிக்காக தேர்வு செய்த நபிமார்களை தவிர, சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று அல்லாஹ் வாக்களித்த சில சஹாபாக்களை தவிர, இவ்வுலகில் வேறு எவரையும், இறை நேசர் என்று சொல்லவே இயலாது. அவ்வாறு சொல்லவும் கூடாது.

இதற்கு அடுக்கடுக்காக பல சான்றுகளை வைக்கலாம் என்றாலும் கீழ்காணும் ஒரு ஹதீஸே தெளிவான விளக்கத்தை அளித்து விடுகிறது !

உம்முல் அலா (ரலி) கூறியதாவது: "(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள்.
நான் (உஸ்மானை நோக்கி), "ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக் கூறினேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் "அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?'' என நான் கேட்டேன்.
அதற்கு, நபி (ஸல்) அவர்கள், "இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.
(நூல்: புகாரி 1243)

சஹாபி ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று விட்டாரா இல்லை என்று இன்னொரு சஹாபிக்கு தெரியாத போது,
நபி (ஸல்) அவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவார்களா மாட்டார்களா என்பது நபிக்கே தெரியாத போது,

இவர்களது கால் தூசுக்கு பெறுமதியற்ற அப்துல் காதரும், சாகுல் ஹமீதும், பீரப்பாவும், பாவாகாசிமும் இறை அன்பை பெற்று விட்டார்கள் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக