செவ்வாய், 8 அக்டோபர், 2013

இந்திய அரசின் "ஒரு நாள்" நாடகம்


ஒரு குறிப்பிட்ட நாளில் காந்தி பிறந்தார் என்பதற்காக வருடா வருடம் அந்த நாளில் மட்டும் காந்தி சொன்ன அறிவுரையை கேட்டு மதுக்கடைகளை அடைப்போம் என்று கூறுவது காந்தியை மதிப்பதாகுமா அல்லது அவமானப்படுத்துவதாகுமா?

அவர் பிறந்ததால் அந்த நாளில் அவர் சொல்லை கேட்பவர்கள், அவர் 78 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை மறந்து விட்டார்கள் !

அதை விட முக்கியமாக, அவரை மதிக்குமாறு இப்போ யார் அழுதது ? அவரது அறிவுரையை பின்பற்ற வேண்டும் என எவனாவது இந்திய அரசின் காலை பிடித்தானா?? இல்லையே..!

பின் எதற்கு இந்த "ஒரு நாள் நாடகம்" ?

மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்த அரசாங்கமாக இருப்பின் மதுவை காலத்திற்கும் தடை செய்ய வேண்டும்.
அல்லது காந்திக்காக இதை செய்கிறோம் என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் மட்டும் தடை செய்து அவரை மகிழ்வித்திருந்தால் போதும்.

அதை விடுத்து, வருடத்திற்கு ஒரேயொரு நாள் மட்டும் தடை விதிப்பதில் எந்த நன்மையையும் விளையப்போவதில்லை, யாரும் திருந்தப்போவதுமில்லை, எவரது குடும்பமும் சீரழிவில் இருந்து தூக்கி நிறுத்தப்பட போவதுமில்லை.

அரசுக்கு அனாவசியமாக சில நூறு கோடிகள் நட்டம் ஏற்படுவது ஒன்று தான் மிச்சம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக