செவ்வாய், 8 அக்டோபர், 2013

சந்திர சூரிய கணக்குப்படி நபியின் காலம்


நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதை ஹிஜ்ரத் ஆண்டின் கணக்கின் அடிப்படையில் நபிகளார் பிறந்த ஆண்டைக் கண்டுபிடிக்கலாம்.

தற்போது ஹிஜ்ரி 1433 ஆண்டாகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து 1433 ஆண்டுகள் ஆகியுள்ளது.
நபிகளார் நாற்பது வயதில் இறைத்தூதராகிறார்கள். இறைத்தூதரான பிறகு 13 வருடங்கள் மக்காவில் இருந்தார்கள். அதன் பின்னரே ஹிஜ்ரத். செய்தார்கள்.

எனவே அவர்கள் பிறந்த வருடத்தை அறிந்து கொள்ள 1433 உடன் 53 வருடத்தை நாம் கூட்ட வேண்டும். கூட்டினால் 1486 வருடங்கள்.

தற்போது உள்ள 2012 வருடத்தில் 1486 ஐ கழித்தால் 526 கிடைக்கும்.

நபிகளார் பிறந்து 1486 வருடங்கள் என்பது சந்திரகணக்கின்படி உள்ளதாகும். கி.பி. என்பது சூரிய வருடக்கணக்கில் உள்ளதாகும்.

எனவே சந்திரக் கணக்கை சூரியக்கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

சந்திர கணக்கின் படி வருடம் என்பது 354.37 நாட்களாகும். இதில் சூரிய வருடத்தைக் கழித்து பார்த்தால் 365-354=11 நாட்கள் வித்தியாசம் வருகிறது.
வருடத்திற்கு 11 நாட்கள் வித்தியாசம் என்றால் 1486 வருடங்களுக்கு 1486 ல 11=16346 நாட்களாகும்.
இதை சூரிய கணக்கின்படி வகுத்தால் 16346-365=44.78 ஆகும். 44 வருடங்கள் வித்தியாசம் வருகிறது.
இதை 526 உடன் கூட்டவேண்டும். கூட்டினால் நபிகளாரின் பிறப்பு சூரிய கணக்கின்படி வரும். 526+44=570 ஆகும்.
நபிகளார் பிறந்தது கி.பி. 570 ஆகும்.

- நவம்பர் 2012 தீன்குலப்பெண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக