வியாழன், 18 ஏப்ரல், 2013

முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு, முஸ்லிமல்லாதவர்களுக்கு ஆதரவா?




நேர்மையற்றவர் என்று கூறி தமுமுக வேட்பாளர்களை எதிர்க்கும் நீங்கள், மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் நேர்மையானவர்கள் என்று தான் கூறுகிறீர்களா ?


அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவரை நேர்மையற்றவர் என்று நாம் புறந்தள்ளினோமேயானால் , அவர் நேர்மையற்றவரில்லை என்று வாதிட்டு, அதை மறுத்த பிறகு தான், ஏன், நீங்கள் ஆதரிக்கும் இன்னார் மட்டும் நேர்மையுள்ளவவரா? என்று கேட்க வேண்டும்.
நாம் எவரை நேர்மையற்றவர் என்று கூறினோமோ, அதற்குரிய உங்களது பதில் என்ன? 

இதற்கு பதில் சொல்லாமல், இன்னார் கூட நேர்மையற்றவர் தானே, அவரை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்பது, வாதத்திற்கு கேட்கப்படும் கேள்வி தானே தவிர, நியாயமான கேள்வி அல்ல!

இன்னும் சொல்லப்போனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள தயாநிதி, கருணாநிதி போன்றோரை விடவும் நேர்மையற்றவர்கள் தான் இவர்கள். 
நேர்மையில் பல வகைகள் உண்டு !!
தங்களுக்கு பணமும் புகழும் வேண்டும் என்பதற்காக ஊழல் செய்து சம்பாதிப்பது, ஒரு வகை என்றால், அதே புகழுக்காக சக முஸ்லிம் சகோதரர்களை, கொள்கைவாதிகளை வஞ்சிப்பது இன்னொரு வகை..
ஒரு முஸ்லிம் என்ற வகையில், நாம் இரண்டாம் வகைக்கு தான் முன்னுரிமை கொடுக்க முடியும்..


சாதாரணமாக வாக்குத்தவறிய அரசியல்வாதிகள் அடுத்தடுத்த தேர்தலில் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் முஸ்லிம் வேட்பாளர்கள் வாக்குத்தவறினால் தேர்தலில் மட்டுமின்றி அல்லாஹ்விடமும் பதிலளிக்க வேண்டியுள்ளது - அபு அசீலா 

என்று அபு அசீலாவே கூறியிருக்கிறார்!

சாதார அரசியல்வாதிக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் வேறுபாடு உள்ளது!! 100 % உண்மை!!! 


அந்த வகையில் பார்த்தால் , ஏகத்துவவாதிகளுக்கும், ஏகத்துவ கொள்கைக்கும் இந்த கூட்டம் செய்திருக்கும் அநியாயங்கள் ஒன்றே இவர்களை நேர்மையற்றவர்கள் என்று புறந்தள்ள போதுமான காரணமாகும்..

சாதாரண அரசியல்வாதி மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார் என்றால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சத்துடனும் சேர்த்து செயல்பட்டாக வேண்டும்..
தன்னால் ஒரு மனிதனோ ஒரு சமூகமோ ஏமாற்றப்பட்டால், அதற்குரிய மன்னிப்பை சம்மந்தப்பட்டவரிடம் பெறாதவரை அல்லாஹ்விடம் பெற முடியாது என்றும் நம்பியாக வேண்டும்!!

அத்தகைய நம்பிக்கை இல்லாமல் செயல்ப்படும் கூட்டத்தை ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஒருவரால் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர்கள் செய்த அநியாயங்களை நாம் பட்டியலிட்டால், அப்போதும், சாதாரண அரசியல்வாதியோடு முஸ்லிம் அரசியல்வாதிகளான இவர்களை ஒப்பிடுவீர்களா?

இது போன்ற இன்னும் பல பல காரணங்களை நாம் பட்டியலிடும் முன்பு, நாம் மேலே கேட்டிருக்கிற  கேள்விக்கு பதில் தரவும்.. 

""ஒருவரை நேர்மையற்றவர் என்று நாம் புறந்தள்ளினோமேயானால் , அவர் நேர்மையற்றவரில்லை என்று வாதிட்டு, அதை மறுத்த பிறகு தான், ஏன், நீங்கள் ஆதரிக்கும் இன்னார் மட்டும் நேர்மையுள்ளவவரா? என்று கேட்க வேண்டும்.
நாம் எவரை நேர்மையற்றவர் என்று கூறினோமோ, அதற்குரிய உங்களது பதில் என்ன? 
"""


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக