((கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது எழுப்பப்பட்ட கேள்வியும் அதற்கான விடையும்))
அஸ்ஸலாமு அழைக்கும் ,சஹோதர்களே,. நமது கேள்வி , தி.மு.க கூட்டணில் காங்கிரஸ் போட்டிடும் தொகுதி இல் நாம் காங்கிரஸ் ஐ ஆதரிக்கலாமா வேண்டாமா ? ஏன் என்றால் சென்ற முறை பாராளு மன்ற தேர்தலிலே முஸ்லிம்களை ஏமாத்தி முஸ்லிம்களுக்கு இட ஓதிகிடு தருவோம் என்று ஒரு பொய்யான ஒரு தேர்தல் வாக்குறுதி குடுத்து விட்டு , பின்பு வெற்றி பெற்றதும் ஆட்சில் இருந்தும் சுகம் அனுபவித்து கொண்டே முஸ்லிம்களை வஞ்சித்த , முஸ்லிம்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் ஆதரிக்கலாமா வேண்டாமா ?
சகோதரரின் கேள்வி நியாயமானது தான்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஆதரவு நிலைகளை பொறுத்தவரை நூறு சதவிகிதம் பரிசுத்தமான ஒரு நிலையை எந்த இயக்கத்தாலும் எடுக்க முடியாது.
இருப்பதில் சிறிதேனும் Better ஆக தெரியக்கூடிய ஒரு நிலையை தான் எடுக்க முடியும். எந்த நிலையை எடுத்தாலும் அதில் கேள்விகள் எழ தான் செய்யும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்வதாக இருந்தால், அத்தகைய முடிவை நாம் ஏன் எடுத்தோம் என்ற காரணத்தையும் சேர்த்து எண்ணிப்பார்க்க வேண்டும்.
நடைபெறுவது சட்டமன்றத்துக்கான தேர்தல்.
இதில், மாநில அளவிலான சமுதாய கோரிக்கை ஒன்றை நாம் முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றி தரும் என்று வாக்குறுதி தந்துள்ள அடிப்படையில் நாமும் நம்புகிறோம்.
இப்போது, நமது கோரிக்கையின் படியும் நமது நம்பிக்கையின் படியும் அவர்கள் நடக்க வேண்டுமென்றால், அடிப்படையான விஷயம் - திமுக வெற்றி பெற்றாக வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றால் தான் நம் கோரிக்கை நிறைவேறும்.
நம் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் நாமும் அவர்களை ஆதரிக்கிறோம்.
ஆக, திமுக வெற்றி பெற வேணடுமானால், அவர்களோடு உள்ள கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதை வைத்து தான் நம்மால் இப்போதுள்ள நிலையில் சிந்திக்க முடியும்.
திமுகவிற்கு 119 தொகுதிகள் தான் கைவசம் உள்ளன.. அதிமுகவிற்கோ 160 உள்ளன.
தனி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதாக இருந்தால், திமுகவினால், தன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் வர இயலாது.
கணிசமான இடங்களை (63) வைத்துள்ள காங்கிரஸ் கை கொடுத்தால் தான் திமுகவினால் பெரும்பான்மை பெற முடியும் என்பதை வைத்து பார்க்கும் போது திமுக வெற்றி பெற காங்கிரசின் வெற்றியும் முக்கியம்.
காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நிலை ஒரு பக்கம் இருக்கிறது என்றாலும், அதை இப்போது வெளிக்காட்டாமல் வருகின்ற பாராளமன்ற தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்துவதே புத்திசாலிதனமாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக