வியாழன், 18 ஏப்ரல், 2013

நாகர்கோவில் தொகுதியின் நிலை




((2011 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது  நாகர்கோவில் தொகுதியின் நிலை பற்றி அப்போது நாம் எழுதியது..))



அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த தேர்தலில், நாகர்கோவில் தொகுதியை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜகவின் கோட்டையாக முன்பு திகழ்ந்த நாகர்கோவில் தொகுதி காலப்போக்கில் மாற துவங்கினாலும், இன்றும் பாஜக சார்பு நிலை முழுமையாக நீங்கி விடவில்லை. பல பகுதிகளில் பாஜக இன்னும் வலுவாகவே உள்ளது என்ற செய்திகள் நமக்கு கிடைக்கின்றன.
இந்நிலையில், பாஜக சார்பில் வேட்ப்பாளராக போட்டியிடும் மாநில தலைவர் பொன். ராதாக்ருஷ்ணன், அங்குள்ள நடுநிலை சமுதாயங்கள் மத்தியில் கூட பெரும் செல்வாக்கை பெற்றவராவார்.

இவரை எதிர்த்து களம் காணும் அதிமுக வேட்பாளர் முருகேசன் குறித்து நாம் அறிய வேண்டிய இன்னொரு செய்தி - இவர் ஒரு முன்னால் பாஜக தொண்டர்!!!!
நாகர்கோவில் பகுதியில் முன்பு நடைபெற்ற சிறு சிறு கலவரங்களில் எல்லாம் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்று செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான கோட்டாரிலேயே அதுவும், அரபிக்கல்லூரி அமைந்திருக்கும் பகுதிக்கு அருகிலேயே மேடை அமைத்து முஸ்லிம்களை வசைபாடியவர் இந்த அதிமுக வேட்பாளர் ! இவர், நாடார் பிரிவை சேர்ந்தவர். 

ஆக, இருவருமே எதிர் எதிர் அணியில் நின்று தேர்தலை சந்திப்பதால், பாஜக ஆதரவு எண்ணம் கொண்டவர்கள் ராதாக்ரிஷ்ணனுக்கும் , பாஜகவிற்கு எதிர்ப்பாக இருக்கும் கிறிஸ்தவர்களில் உள்ள நாடார்கள் இந்த முருகேசனுக்கும் வாக்களித்தால் , இந்த இருவரில் ஒருவர் பதவிக்கு வருவார்.
இருவரில் எவர் வந்தாலும் அவர் காவி சிந்தனையுடையவர் தான் எனபதை நினைவில் கொள்ளுங்கள்.


இதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இவ்விருவரையும் எதிர்த்து திமுக சார்பில் களம் காணும் மகேஷ் என்பவர், தனிப்பட்ட முறையில் நல்லவர் எனவும், முஸ்லிம்கள் மத்தியில் கூட அதிக எதிர்ப்பாளராக அறியப்படாதவர் எனவும் சொல்லப்படுகிறது.

இவருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தான் மற்ற இரு காவி சக்திகளின் பிடியிலிருந்து நம் தொகுதியை காக்க முடியும்.  நம் வாக்குகள் எந்த வகையிலும் சிதறி விடாமல் மிகுந்த கவனத்துடன் இந்த முறை நாம் செயல்பட வேண்டியது நமது கடமை.
முஸ்லிம்களில் சுயேட்சையாக சிலர் போட்டியிடுவதை வைத்து நமது ஓட்டுக்களை அவர்களுக்கு இட்டால் அதன் விளைவு , இந்த காவிகளுக்கு நாமே வழி செய்து தருவதாக ஆகி விடும் என்பதை கவனத்தில் கொண்டு நம் தொகுதி முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் இன்ஷா அல்லாஹ் திமுகவிற்கே அளிக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாய பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் வாக்குகளை இடுமாறு தூண்டுவதும் நம் கடமையாக இருக்கின்றது.

அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக