செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஏன் வழக்கு போடாமல் பத்திரிக்கை மீது பாய வேண்டும்?






அவதூறு பேசியவர்கள் மீது வழக்கு போட வேண்டியது தானே? அதற்கு பதில் ஏன் நக்கீரன் பத்திரிக்கை மீது பாய வேண்டும்?
 
((நக்கீரனில்கடந்த 2010 இல் சகோ. பிஜே பற்றி அவதூறு செய்தி போடப்பட்டிருந்த போது எழுப்பப்பட்ட விமர்சனத்திற்கான பதில்.))



குமுதம் பத்திரிக்கையில், சம்மந்தப்பட்ட பொய்யர், பிஜே மீது அவதூறு சொல்கிறார். அந்த அவதூறோடு  சேர்த்து, பிஜேயின் மறுப்பும் இணைத்தே   அந்த கட்டுரையில் வெளியானது.
திருவிடைசெரி சம்பவம் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம்.
முஸ்லிம்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி வரும் ஒரு சம்பவம். 
இத்தகைய தருணத்தில், முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேட்டி  எடுத்தால் நல்ல விளம்பரம் தேடலாம் என்பது தான் குமுதத்தின் நோக்கமே தவிர, எந்த தலைவரையும் மட்டம் தட்டும் நோக்கில்லை.

இரு பக்க கருத்தையும் வெளியிட்டிருக்கிறது.


நக்கீரனில், பிஜேயின் மறுப்பு இல்லை.
என்றோ நடந்து முடிந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பத்திற்கு பிஜே தான் காரணம் என்று ஒருவர் சொன்னால், அதில் பிஜேயின் பங்கு என்ன என்பதை விசாரிக்காமலும் , அவரது கருத்தை அறிந்து அதையும் சேர்த்து வெளியிடாமலும் , அவதூறை மட்டும் வெளியிட்டிருப்பதற்கு , பிஜே என்ற நபர் மீது இவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வழக்கு யார் மீது போட வேண்டும் என்று தீர்மானிப்பது சம்மந்தப்பட்டவரின் முடிவே தவிர, மூன்றாம் நபர் அறிவுறுத்துவது நியாயமாகாது.

இரண்டு சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர் பிஜே என்ற வகையில், முடிவெடுக்கும் உரிமை அவரிடம் உள்ளது.

அந்த மூவர் மீது வழக்கு போடவில்லையே என்று மிகவும் வருத்தப்படும் சகோ. பீர் அவர்களே, அந்த மூவரை பகிரங்க விவாதத்தில் சந்திக்க தயார் என்று பிஜே அறிவித்திருக்கிறாரே, அதற்கு அழைத்து வர முயற்சியுங்கள்.

வழக்கு போடுவதும், விவாதத்திற்கு அழைப்பதும் இரண்டுமே உண்மையை அறிய உதவும். வழக்கிற்கு பயந்து பின்வாங்கியவனும், விவாத்திற்கு வராமல் பின்வாங்கியவனும் பொய்யன் தான்  என்று அளவிட போதுமான காரிணிகள் தான்.


இங்கு எழுதியதை போல அந்த மூவருக்கும், விவாதத்திற்கு வரும்படி அழையுங்கள்.

ஆனால், விசாரிக்காமல் அவர் சொல்வது அனைத்தையும் உண்மை என எப்படி நம்புவது? அப்படி நம்புவோமேயானால் அது தான் தக்லீது.


ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சுமத்தி விட்டதாலேயே, இருவரையும் இனி நம்பக்கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனமானது.
குற்றம் சுமத்துபவர் அக்குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்போது தான் குற்றம் சுமத்தியவர் உண்மையாளர் என்றும் சுமத்தப்பட்டவர் பொய்யர் என்றும் தெரிய வரும்.

அது அல்லாமல், எவரோ மூன்று பேர், ஒருவரை நோக்கி, நீங்கள் தான் குண்டு வைத்தீர்கள் என்று வெறும் வாயளவில் சொல்லி விட்டால், ஆஹ.. பார்த்தீர்களா, சொல்லி விட்டார்கள், இனி பிஜேயை நம்பக்கூடாது, என்று கூப்பாடு போடுவது வடி கட்டிய முட்டாள் தனமே தவிர வேறில்லை.

உங்களை நோக்கி நான், ஊழல்வாதி என்று குற்றம் சுமத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பார்த்தீர்களா, குற்றம் சுமத்தி விட்டார்கள், இனி நாஷித்தையும் நம்ப வேண்டாம், பீரையும் நம்ப வேண்டாம், கோர்டுக்கு செல்லலாம், என்று உங்கள் குடும்பத்தினர்  முடிவு செய்வார்களா ? அவ்வாறு செய்வது தான் சரி என்று தான் நீங்களும் கூறுவீர்களா? அல்லது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை நாஷிதிடம் கேட்டுப்பெறுங்கள் என்று வலியுறுத்துவீர்களா?

குற்றம் சுமத்தியவர் அக்குற்றத்தை நிரூபிக்க திராணி பெற்றவராக இருந்தால் நிரூபிக்கட்டும்.. அதை செய்யாதவரை, அவர்களே பொய்யர்கள்!! 

அது பேராசிரியராக இருந்தாலும் சரி, குண்டு வெடிப்பில் கைதானவர்களாக இருந்தாலும் சரி!!

நீங்கள் பிஜே அனுதாபிகளின் தலைவராக இருந்தால், அந்த மூன்று பேரிடமும் , பேராசிரியரிடமும் அவர்களின் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அவர்களிடம் சென்று கேளுங்கள்.

இல்லை, பேராசிரியரின், மற்றும் அந்த மூவரின் அனுதாபி தான் நீங்கள் என்றால், அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை தந்து விட்டு பிஜேயிடம் கேள்வி கேளுங்கள்.

இரண்டையும் செய்யாமல், (அல்லது செய்யும்படி வற்புறுத்தாமல்) குழுமத்தில் வசை பாடி திரிவது அவதூறை பரப்பிய பொய்யர்களில் நீங்களும் ஒருவர் என்ற கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக