21 : 63 வசனத்தில் இப்ராஹிம் நபி பொய் சொன்னதாக தானே அர்த்தம் வருகிறது?
அஸ்ஸலாமு அலைக்கும்..
இது போன்ற சந்தேகங்கள் எழுவது பாராட்டுக்குரியது.. ஆய்வு செய்யும் போது, இறை வசனங்கள் குறித்து தீர்க்கமாக சிந்திக்கும் போதும் மட்டுமே இது போன்ற சந்தேகங்கள் எழும்..
அந்த வசனம் பற்றி எனது கருத்தை கேட்டிருப்பதால் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்..
இதை நீயா செய்தது ? என்று கேட்கப்பட்ட போது, ",இல்லை", என்று அவர் மறுத்ததாக மொழியாக்கத்தில் உள்ளது, ஆனால், இல்லை என்ற வார்த்தை அரபிப்பததில் இல்லையே, என்று கேட்க்கிறார்.
"இல்லை", என்ற வார்த்தை அரபி பதத்தில் இல்லை என்றாலும், அவர்கள், இல்லை என்று பொருள் கொள்ளும் வகையில் தான் பதில் சொல்லியிருகிறார்கள்.
தொடர்ந்து வரும் அந்த வசனம் கூறுவது, "அந்த சிலை தான் செய்தது!!!", என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"அந்த சிலை தான் செய்தது, என்று ஒருவர் கூறினாலே, அதன் பொருள், "நான் செய்யவில்லை", என்பது தான்!!
ஆக, இந்த இடத்தில் "இல்லை,", என்ற அரபிப்பதம் இல்லைஎன்றாலும் "இல்லை என்று பொருள் கொடுக்கலாம்!! , என்பதற்காக இந்த விளக்கம்..
அடுத்து, "யார் செய்திருப்பார்கள் என்று அந்த சிலையிடமே கேட்டுக்கொள்ளுங்கள் (Someone did it !) என்று மட்டும் சொல்லியிருந்தால், அவர் செய்யவில்லை என்பதை மறுக்காததன் மூலம், அவர் பொய் சொல்வதாக ஆகாது என்று கருத இடமுண்டு.
ஆனால், இங்கு "அவர் "அந்த சிலையிடம் கேளுங்கள் என்று மட்டும் சொல்லவில்லையே!, அந்த சிலை (அதாவது பெரிய சிலை) தான் செய்தது, வேணடுமானால், இந்த சிறு சிலைகளிடம் கேட்டுப்பாருங்கள்", என்று தான் கூறுகிறார்கள்.
இதன் மூலமும் அவர் தான் செய்யவில்லை என்பதை இங்கு உறுதியாக மறுக்க தான் செய்கிறார்கள்.
ஆக, தான் செய்ததை தான் செய்யவில்லை என்று இப்ராஹீம் நபி உறுதியாக மறுக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்போது இதை அணுகும் முறை என்ன?
சொல்லப்பட்டிருக்கும் செய்தி, குர் ஆனில்! சொல்வது அல்லாஹ்.!!
ஆக, அல்லாஹ் ஒன்றை சொல்கிறான் என்றால், இந்த இடத்தில் ஏதோ ஒரு தனி சிறப்பு இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது! பிரத்யேக அனுமதி உள்ளது.
மார்க்கத்தை புரிய வைப்பதற்காக பொய் சொல்லலாம்!! என்று தான் புரிய வேண்டும்..
(இதற்கு ஆதாரமாக சகோ,. செய்யத் எடுத்துக்காட்டிய ஹதீஸை கொள்ளலாம்!)
இந்த இடத்தில், பொய் சொல்லி பிறரை ஏமாற்றும் எண்ணம் இப்ராஹீம் நபிக்கு இருக்க முடியாது. ஏனெனில், இந்த பொய், தன்னை காப்பாற்றிக்கொள்ள உதவாது என்று அவர்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது.
அதே போன்று, கேட்ட அந்த மக்களும், இப்ராஹீம் நபி சொல்வதை உண்மை என்று நம்பவில்லை, நம்ப மாட்டார்கள். நம்ப மாட்டார்கள் என்று தெரிந்தே தான் அவ்வாறு சொல்கிறார்கள் எனும் போது, இங்கு பொய் சொல்வது நோக்கமல்ல, அதில் உள்ள உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதே நோக்கம்!
6 :76 - 77 . படித்துப்பாருங்கள் - அதிலும் அல்லாஹ்வை கடவுள் என்று சொல்வதற்கு பதில், சூரியனையும் சந்திரனையும் இப்ராஹீம் நபி கடவுள் என்று சொல்வதாக இடம்பெற்றிருக்கும் .
இதை வைத்து இப்ராஹீம் நபி அவர்கள் இணை வைப்பு செயலில் ஈடுபட்டார்கள், என்று நாம் சொல்ல மாட்டோம், சொல்லக்கூடாது!.
எப்படி பிற மக்கள் புரிவதற்காக இது போன்று சூரியனையும் சந்திரனையும் கடவுள் என்பது போல் சொல்லி, அதை அவர்களே மறுத்து விளக்கினார்களோ, அதே போன்றே மேற்கண்ட "பொய்யையும்", புரிய வேண்டும் என்பது எனது கருத்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக