சனி, 25 அக்டோபர், 2014

"Only death should stop us"


"Only death should stop us"
மாவீரன் என்று அழைக்கப்படும் நெப்போலியன் தனது போர்ப்படையினரிடம் சொன்ன வாசகம் இது என்று எழுதியிருக்கிறார்கள்.
ஏக இறைவனை நம்பாதவர்களுக்கு இது வெறும் பசப்பு வார்த்தை தான். உண்மையில் இந்த வாசகத்திற்கு நூறு சதவிகிதம் பாத்தியம் பொருந்தியவர்கள் ஏக இறைவனை நம்பிய நாம் தான்.
துன்பங்களும் வேதனைகளும் ஒரு பக்கம் வந்து கொண்டே தான் இருக்கும்.
நீ அல்லாஹ்வை நம்ப வேண்டிய முறையில் நம்பினால் சோதனைகள் என்பது பள்ளத்தாக்கை நோக்கி ஓடி வரும் தண்ணீரைப் போன்று உன்னை விரைவாய் வந்தடையும் என்பது நபிமொழி !
ஆனால், அற்பமான இந்த சொற்ப வாழ்வில் அவையெல்லாம் எந்த விதத்திலும் நம்மை பாதிக்கவே கூடாது.
இறுதி இலக்கு மறுமை வெற்றி. அதை அடைவதற்கு நாம் நம் வாழ்வில் சந்திக்கும் எந்த சோதனையும் தடையாக இருக்கக்கூடாது.
அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பிற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோருக்கு செய்ய வேண்டியவை, உற்றார், உறவினர்களுக்கு செய்ய வேண்டியவை, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் புனிதமான அழைப்புப்பணி என எதிலும் தொய்வு வரக்கூடாது.
மரணத்தை தவிர வேறு எதுவுமே இவற்றை நம்மிடமிருந்து பிரிக்கக்கூடாது ! இந்த உறுதி இருந்தால்தான் இறுதி இலக்கினை அடைய முடியும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக