சனி, 25 அக்டோபர், 2014

மிஸ்ரி காலன்டர் என்றால் என்ன?


ஹிஜ்ரி காலண்டர் கணக்குப்படி இன்றுடன் (அதாவது ஜூலை 27) ரமலான் 29 நாட்கள் முடிகின்றன.
ஆனால், இவர்களுக்கு போட்டி காலண்டர் ஒன்று உள்ளது. அது தான் மிஸ்ரி காலண்டர்.
(இது போரா வகையினருக்கான முஃமினீன் எனப்படும் காலண்டர். எனினும், போரா அல்லாதோரில் பலரும் இதை பின்பற்றுகின்றனர்)
அதன் கணக்குப்படி இன்றுடன் அவர்களுக்கு ரமலான் 30 பூர்த்தியாகிறது !
ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுபவர்கள், நேற்று அமாவாசை தினமானதால் அமாவாசைக்கு அடுத்த தினம் முதல் பிறை என்று கணக்கிட்டு, இன்று பெருநாள் கொண்டாடியுள்ளார்கள்.
மிஸ்ரி காலண்டரை பின்பற்றுகிறவர்களோ, அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துள்ள தினத்தை முதல் பிறை என்கிறார்கள். அதன்படி நாளை அவர்களுக்கு பெருநாள் !!
முன்கூட்டியே கணிக்கலாம் என்று பிரச்சாரம் செய்கிறவர்களிடையேயும் எது முதல் பிறை என்கிற சர்ச்சை இல்லாமல் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளவே இந்த பதிவு !!
அமாவாசைக்கு அடுத்த சில மணித்துளிகளில் வானில் புதுப்பிறை உதயமாகி விடும் என்பதால், அது தான் முதல் பிறை என்பது முதலாமவர்களின் கூற்று.
என்னதான் வானில் உதயமானாலும் கண்ணால் பார்க்கும் அளவிற்கு அது வளர்ச்சி பெறுவது மறு நாள் தான் என்பதால் மறு நாள் தான் முதல் பிறை என்பது இரண்டாமவர்களின் கூற்று !!
முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்று சொல்வோரும் எது முதல் பிறை என்பதில் ஹிஜ்ரி காலண்டர் என்றும் மிஸ்ரி காலண்டர் என்றும் பிளவுப்பட்டு தான் நிற்கிறார்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக