சனி, 25 அக்டோபர், 2014

சூனியம் இப்போது அழிந்து விட்டது (??)


...இதுல உச்சகட்ட வேடிக்கை என்னன்னா.. இது நாள் வரை சூனியம் இருக்கு இருக்கு, அதனால கை கால முடமாக்கலாம், பைத்தியமாக்கலாம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வந்தவர்கள் எல்லாம்..
இன்றைய தினம், அந்தர் பல்டி, ஆகாய பல்டியெல்லாம் அடித்து
சூனியம் என்பது முன்னொரு நாளில் இருந்த ஒரு கலை, அது இப்போது அழிந்து விட்டது
என்று சினிமா டயலாக் விட்டு திரிகின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் கோடம்பாக்கம் உங்களை வரவேற்கிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம் !
பிகு : ஏற்கனவே நோக்கு வர்மம் முன்னொரு காலத்தில் சீனாவில் இருந்தது, இப்போது அழிந்து போனது, ஆனால் அதை கற்றவர்களின் மரபணுவைக் கொண்டு மீண்டும் அந்த கலையை புதுப்பிக்க முடியும் என்பதான ஒரு திரைக்கதை ஏழாம் அறிவு என்கிற சினிமா மூலம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது !
சூனியத்திற்கு வேண்டுமானால் எட்டாம் அறிவு என்று பெயரிடுவோம்,
நல்ல வசூல் வேறு ஆகும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக