சனி, 25 அக்டோபர், 2014

படம் காட்டித் திரியும் அறிவிலிகள்


என்றைக்கும் அமைதியையே விரும்புகிற, மத நல்லிணக்கத்தை கொள்கையாக கொண்ட, தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை நஞ்சென வெறுக்கிற இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் அனைவரும் நலமுடன் வாழவே விரும்புகின்றது.
ஈராக்கில் போர் நடக்கிறது என்றால், தனி இயக்கம் கண்டு அரசுக்கு எதிராக போரிடுகிறார்கள் என்றால் அது அவர்களது உள் நாட்டுப் பிரச்சினை.
அப்பாவிகள் பாதிக்கப்படுவதை மனித நேயம் கொண்டு கண்டிக்கலாமே தவிர, முழு ஞானமின்றியும், அவர்களது கொள்கைகள் என்ன என்பது பற்றிய ஆழமான விளக்கங்கள் கிடைக்காமலும் எந்த முஸ்லிமும் அவர்களை ஆதரிக்க முடியாது.
போர் என்று வந்தால் கூட இஸ்லாம் வகுத்து சொல்லும் பல்வேறு நெறிமுறைகளையெல்லாம் பேணித் தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையெனும் போது நானும் அவர்களை ஆதரிக்கிறேன் என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டார்.
அடிப்படை விபரமின்றி சில மூடர் கூட்டம் அப்படி பேசி திரிகின்றன என்றால் இதை தயவு செய்து யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,
அற்ப புகழுக்காக அலையும் இவர்கள் வெறும் டம்மி பீசுகள் தானே தவிர ஒரு புல்லை கூட பிடுங்கும் திராணி பெற்றவர்கள் அல்ல இவர்கள்.
நானும் ரவுடி தான் என்று நகைச்சுவை செய்யும் வடிவேலுவை போல் தான் இவர்களை ரசிக்க முடியும் என்பதால் இது போன்ற மூடர்களை அதிகார வர்க்கமும் இஸ்லாமிய சமூகமும் அலட்சியம் செய்யட்டும் !
இந்த மூடர்களுக்கு இதையே நமது கண்டனமாகவும் பதிவு செய்து கொள்கிறோம்,
இப்படி படம் காட்டித் திரிவதை ஒதுக்கி வெச்சுட்டு போய் குடும்பத்தை கவனிக்கிற வேலய பாருங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக