சனி, 25 அக்டோபர், 2014

அடேய் என்னடா நடக்குது இங்க..?கொல்கத்தாவிலிருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதை கண்ட அதிகாரிகள்
அதை சுத்தப்படுத்துவதற்காக ஒரு தனியான இடத்திற்கு அனுப்பி வைத்தார்களாம்.
இதுல கூத்து என்னன்னா.. இது பற்றி ஒரு உயர் அதிகாரி சொல்றத பாருங்க..
""விமானத்தில் ஒரு எலியின் நடமாட்டம் தென்பட்டால்கூட விமானம் முற்றிலும் சுத்தப்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. வயர் இணைப்புகளை இந்த எலிகள் கடித்து குதறிவைத்தால் விமானிகளால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு பேரழிவை சந்திக்கக்கூடும்"""
(என்னடா சொல்ற..???)
பயணிகள் விமானத்தில் சிந்தும் உணவுப்பொருட்களை உண்பதிலேயே எலிகள் கவனமாக இருப்பதால் வயர்களைக் கடிக்கும் நிலைமையிலிருந்து அவை பொதுவாகத் தடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
(இது வேறயா.. ஆமா இவரு போய் பார்த்தாராக்கும்.. எலி எத கடிக்கும் எத கடிக்காதுன்னு..
டவுன் பஸ் ஓட்ட வேண்டியவங்க எல்லாம் விமானத் துறை நடத்துனா இதான் நிலைமை..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக