சனி, 25 அக்டோபர், 2014

சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்


சூனியத்தை உண்மையென நம்புகிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்கிற அபுதாவூத் ஹதீஸ், சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸாய் நிற்கிறது.
ஆனால், எப்படியாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தே தான் தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கும் சூனியப்பிரியர்கள், இந்த ஹதீஸில், முஃமினும் பிஸிஹ்ர், அதாவது சூனியத்த்தின் மீது ஈமான் கொள்வதை தான் வழிகேடு என்று சொல்லப்பட்டுள்ளது, நாங்கள் சூனியத்தை ஈமான் கொள்ளவில்லை என்கிற அர்த்தமேயில்லாத உளரலை வியாக்கானமாக தருகின்றனர்.
சூனியத்தை ஈமான் கொள்ளுதல் என்றாலும் சூனியத்தை உண்மையென்று நம்புதல் என்றாலும் ஒரே பொருள் தான். உண்மையென்று நம்புவதை தான் ஈமான் கொள்ள முடியும், ஈமான் கொண்டால் அது உண்மையென்று நம்புவதாக தான் ஆகும்.
யார் நட்சத்திரத்தை நம்புகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறிய மற்றொரு ஹதீஸ் இதற்கு சான்றாய் நிற்கிறது.
அதிலும் இதே ஈமான் என்கிற சொல் வருகிறது . அதாவது முஃமினுல் கவாகிப்.
நட்சத்திரத்தை நம்புதல் என்றால்,நட்சத்திரத்தால் தான் மழை பொழிகிறது என்று நம்புதல்.
அதாவது நட்சத்திரத்தை ஈமான் கொள்ளுதல் !
நட்சத்திரத்தை நம்புதல் இணை வைப்பு என்று சொன்னால் வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம்புவதை அது குறிக்காது. மாறாக நட்சத்திரத்திற்கு (மழை பெய்விப்பது போன்ற) நன்மை தீமைகளை செய்ய முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !
அது போல, சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியத்தின் மூலம் கெடுதல்கள் உண்டாக்க முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !
இதே போன்ற வார்த்தையமைப்பு குர் ஆனிலும் உள்ளது
வேதம் எனும் நற்பேறு வழங்கப் பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (4:51)
சிலைகளை அவர்கள் நம்புகின்றனர் என்றால் சிலை என்கிற ஒன்று உலகில் இருக்கிறது என்று நம்புவதை குறிக்காது.
சிலைகளும் நன்மை, தீமை செய்யும் என்று நம்புகின்றனர் என்று தான் இதற்கு அர்த்தம்,
அதாவது சிலைகளை உண்மையென நம்புகின்றனர் என்கிற பொருள் இதிலேயே ஒளிந்துள்ளது..!
சிந்திக்கும் திறன் கொண்ட எந்த பாமரனுக்கும் இது விளங்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக