சனி, 25 அக்டோபர், 2014

கசப்பான உண்மை !


மத்ஹபின் இமாம்கள் எழுதியவற்றை நாம் விமர்சித்தால் பதிலுக்கு அவர்கள் பிஜெவை விமர்சிப்பார்கள்.
சூஃபிகளின் பெரும் பெரும் ஜுப்பாக்களை நாம் விமர்சித்தால் பதிலுக்கு அவர்கள் பிஜெவை விமர்சிக்கிறார்கள்.
கப்ர் வணங்கிகள் கடவுளாக போற்றும் அவ்லியாக்களை நாம் விமர்சனம் செய்யும் போதும் பதிலுக்கு அவர்கள் திட்டுவது பிஜெவை தான்.
கிறித்தவ மதத்தையும் பைபிளின் லீலைகளையும் பற்றி பேசுகிற போதும் அதற்கு பதில் என்கிற பெயரில் கிறித்தவ க்கூட்டம் கையில் எடுப்பதும் பிஜெவை திட்டுவது என்கிற ஆயுதத்தை தான்.
இன்னும், ஹிந்து மதத்தை பற்றி கேள்வி கேட்டாலும் சரி, காதியானி மதத்தைப் பற்றி கேட்டாலும் சரி, அனைவரும் அட்சரம் பிசகாமல் ஏசுவது பிஜெ என்கிற மனிதரை தான் !
ஏகத்துவக் கொள்கை தவிர்த்து வேறெந்த கொள்கையின் பால் சென்றாலும் அங்கே சாமானியன் என்றொரு பிரிவும் அவர்களால் கண்மூடித்தனமாக பின்பற்றப்படும் தலைமைத்துவம் என்கிற பிரிவும் நிச்சயமாக இருக்கும்.
அந்த தலைமைத்துவம் என்பது சில சித்தாந்தங்களில் வழிகாட்டி , சிலர் பார்வையில் இறைவனுடன் தொடர்பில் இருப்பவர், சிலருக்கு அது இறைவனின் அவதாரம், இன்னும் சிலருக்கோ அது தான் இறைவன் !
இந்த வட்டத்தை விட்டும் தாண்டிய எந்த கொள்கையும் உலகில் இல்லை, நபி (சல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஏகத்துவக் கொள்கையை தவிர..
அதன் காரணமாக தான் ஏகத்துவவாதிகளுக்கு குர்ஆன் ஹதீஸ் தவிர வேறு தலைமை இல்லை, வேறு வழிகாட்டுதல் இல்லை.
இந்த கூட்டங்கள் யாரை நபிக்குரிய அந்தஸ்துடனும் இறை தன்மை கொண்டவராகவும் போற்றுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் சமமான அறிவை கொண்ட, அல்லது அவர்களையும் விஞ்சக்கூடிய மார்க்க ஞானத்தை பெற்றிருக்கக்கூடிய பிஜெ போன்று அறிஞர்கள் இன்றளவும் ஏகத்துவவாதிகளுக்கு ஒரு சாமானியனாகவே தென்படுவதற்கு அவர்கள் கொண்டிருக்கும் சத்தியக் கொள்கை ஒன்றே காரணம் !
ஒரு வேளை சகோ. பிஜெ இவர்கள் சார்ந்திருக்கும் கொள்கையை கொண்டவராக இருந்திருந்தால், அவர் இன்று ஒரு நபியாகவோ, கடவுளின் அவதாரமாகவோ அல்லது கடவுளாகவோ தான் நம்பப்பட்டிருப்பார் என்பதே நாம் உணர வேண்டிய கசப்பான உண்மை !
அவருக்கு நேர்வழியை அல்லாஹ் வழங்கியதன் மூலமும் அதே நேர்வழியை கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட சமூகமாக இந்த சமுதாயத்தை அல்லாஹ் உருவாக்கியதன் மூலமாகவும் நம் அனைவருக்கும் அல்லாஹ் பெரும் கிருபை செய்திருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக