சனி, 25 அக்டோபர், 2014

முஃதஸிலாக்கள் என்றால் யார்?


கவாரிஜுகள், முஃதஸிலாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன என எதுவுமே தெரியாத அறிவிலிகள் எல்லாம், தவ்ஹீத் ஜமாஅத்தை கவாரிஜு என்றும் முஃதஸிலாக்கள் என்றும் கூறித் திரிகின்றன.
கவாரிஜு என்றால் என்ன? என்று இவர்களிடம் திருப்பிக் கேட்டுப்பாருங்களேன், எவனுக்கும் தெரியாது, எவனுமே உருப்படியான பதிலை சொல்லவும் மாட்டான்.
அவர்களும் சூனியத்தை மறுத்தார்கள், அவர்களும், குர் ஆனுக்கு முரண் என்று சொல்லி ஹதீஸை மறுத்தார்கள்.. என்று உளருவார்கள்.
கவாரிஜுகளுடைய கொள்கை என்ன என்பது தெளிவாக தெரியவில்லையென்றால் பேசாமல் மெளனம் காப்பது நலம், அதை விட்டு இப்படி தங்களது அறியாமையை படம் போட்டுக் காட்டக்கூடாது.
கவாரிஜுகளின் கொள்கையானது ஒட்டு மொத்த ஹதீஸ்களையே மறுப்பது தானே தவிர, குர் ஆனுக்கு முரண் என்றால் மட்டும் மறுப்பது அல்ல.
அவர்கள் பார்வையில், ஹதீஸ் என்பதே மார்க்கத்தில் இல்லாதது, குர் ஆனை மட்டும் தான் இறைவனிடமிருந்து வந்ததாக நம்புவார்கள்.
ஒரு சஹாபியப் பெண்மணி, ஒரு குறிப்பிட்ட ஹதீஸை குறித்து சந்தேகமெழுப்பிய போது ,ஆயிஷா அவர்கள், நீ என்ன கவாரிஜா? என்று முதலில் கேட்பார்கள், இல்லை இல்லை, இதில் மட்டும் எனக்கு சந்தேகமிருக்கிறது என்பதாக அந்த பெண்மணி பதிலளிப்பார். இந்த செய்தி முஸ்லிமின் பதிவாகியிருக்கும் ஹதீஸாகும்.
சுருங்க சொன்னால், இன்றைய அஹ்லே குர் ஆனின் தோற்றம் தான் இந்த கவாரிஜ்.
ஹதீஸே கூடாது என்று கூறும் ஒரு கொள்கைக்கும், மார்க்கத்தின் பெயரால் புனையப்பட்ட ஹதீஸ்கள் மட்டும் தான் கூடாது என்று கூறும் இன்னொரு சித்தாந்ததும் எவ்வாறு சமமாகும்?
அப்படி பார்க்கப்பபோனால், யார் நம்மைப் பார்த்து கவாரிஜுகள் என்கிறார்களோ, அவர்களும் பல ஹதீஸ்களை அறிவிப்பாளர் சரியில்லை என்கிற காரணத்தைக் காட்டி மறுக்கத் தான் செய்கிறார்கள்.
அறிவிப்பாளர் தொடரெல்லாம் சரியாக இருந்தாலும், அது பெரும்பான்மை கூட்டம் அறிவிக்கும் ஹதீஸ், இது சிறுபான்மை கூட்டம் (அல்லது ஒருவர்) அறிவிக்கும் ஹதீஸ், எனவே இது ஷாத் வகையை சேரும். இதை ஏற்கக் கூடாது என ஹதிஸ் கலை படித்து, பல்வேறு ஹதிஸ்களை மறுக்கத்தான் செய்கின்றனர்.
அந்த வகையில், இவர்கள் ஹதீஸ்களை மறுத்து காரிஜியாக்களின் கொள்கைக்கு சென்று விட்டார்கள் ஏன்று நாம் அவர்களைப் பார்த்து சொல்லலாமே..?
இன்னும் சொல்லப்போனால்,
ஒருவர் ஒரு கொள்கையை கொண்டிருக்க, அதே கொள்கையை நாமும் கொண்டிருந்தால், அதனால் எல்லாம் அவரும் நாமும் சமம் என்று ஆகி விடாது.
மாறாக,
அவருக்கு சாதகமான கொள்கையை நாம் கொண்டிருந்தால் தான் அவருக்கு நாம் சமமானோம் என்று பொருளாகும்.
அல்லாஹ் இருக்கிறான் என்று கூட காரிஜியாக்களும் நம்பத் தான் செய்கிறார்கள்.
நம்மை விமர்சனம் செய்யும் சலஃபிகள் என்று சொல்லிக் கொள்வோரும் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்புகிறார்கள்.
இதோ பாருங்கள், காரிஜியாக்களின் கொள்கையை தான் சலஃபிகளும் பின்பற்றுகிறார்கள் என்று எவனாவது சொன்னால் சொன்னவன் கூமுட்டை என்று பொருளாகுமா அல்லது சலஃபுகளும் காரிஜியாக்களும் சமம் என்று முடிவாகுமா??
அடிப்படை சிந்தனையற்று, கூட்டத்துடன் கோவிந்தா என்கிற ரீதியில், எல்லாரும் கவாரிஜ் கவாரிஜ் என்று சொல்கிறார்கள், எனவே நாமும் சொல்வோம் என்கிற ஆட்டு மந்தைகள் தான் இவர்கள் என்பது இதன் மூலமும் நிரூபணமாகிறது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக