சனி, 25 அக்டோபர், 2014

நாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன நோய்


நாங்களும் இருக்கிறோம்லே என்று அடிக்கடி காட்டிக் கொள்ளும் மன நோய்க்கு பல வருடங்களாக ஆளானவர் அபு அப்துல்லாஹ் என்பவர்.
தனது சீடர்களை அழைத்து வைத்துக் கொண்டு பிஜெவை ஏசுகிற நிகழ்ச்சியொன்றினை ஈரோட்டில் நடத்தி முடித்திருக்கிறார். வழக்கம் போல் அதுவும் நகைச்சுவையின் உச்சகட்டமாக முடிந்திருக்கிறது.
விவாதத்திற்கு தயாரா? என்று நம் சகோதரர்கள் நேரடியாக கேட்க, விவாதத்தின் மூலம் சத்தியத்தை அறிய முடியாது என்று முதலில் அடித்தார் ஒரு பல்டி.
பிஜெவை விடுங்கள், மற்ற தாயிகளுடன், மற்ற அறிஞர்களுடன் விவாதிக்க முன்வருகிறீர்களா? என்று கேட்டதற்கு, தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயருடன் வந்தால் விவாதிக்க மாட்டோம் என்று அடித்தார் அடுத்த பல்டி.
நாத்திகர்களும் கிறித்தவர்களும் கூட தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் சரியானது என்று கூறி விவாதிக்க முன்வரும் துணிச்சலை பெற்றிருக்கிறார்கள்,
ஏன், காளிக்கு பூஜை செய்து உனக்கு சூனியம் வைப்பேன் என்று கூறுகிற சூனியக்கார கும்பல் கூட அவன் அளவிற்கு ஏதோ குருட்டு நம்பிக்கையில் விவாதிக்க வந்து விடுகிறான்.
இவர்களுக்கு, அந்த துணிச்சல் கூட இல்லை என்பதே இதன் மூலம் நிரூபணமாகிறது.
இவர் சார்பாக பேசிய இவரது சீடர் சலீம் என்பவர், "நேயர்" நாஷித் அஹமத் என்று ஆன்லைன் பிஜெ இணையதளத்தில் பொய்யாக எழுதியுள்ளார்கள் என்று சொல்லி விட்டு
தொடர்ந்து, இவர் ஒரு மிகப்பெரிய ஆகாசப் பொய்யினை அவிழ்த்து விடுகிறார்.
""நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயி, அவர் வாணியம்பாடி, பேரணாம்பேட்டில் இருக்கிறார்"" என்று அடித்தாரே ஒரு பொய் !!!!
நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறுகிற அளவிற்கு இந்த அப்துல்லாஹ் சலீம் நாஷித் அஹமதோடு கொண்டிருந்த நெருக்கம் என்ன? அவரென்ன நாஷித் அஹமதுக்கு மாமனா மச்சானா?
நாஷித் அஹமத் தவ்ஹீத் ஜமாஅத்தின் முழு நேர தாயி கிடையாது,
அமீரகத்தில் பணிசுமைக்கு நடுவே எழுத்திலும் அவ்வப்போது மற்ற வகைகளிலும் தாவா செய்வதை தவிர, இவர் கூறுவது போல் நாஷித் அஹமத் எந்த தேதியில், எந்த வருடத்தில் வாணியம்பாடி வந்தார், என்றைக்கு பேரணாம்பேட்டிற்கு வந்தார்?
இந்த சலீம் அவரை வாணியம்பாடியிலும் பேரணாம்பேட்டிலும் எங்கே எப்போது பார்த்தார்???
ஆதாரத்துடன் வெளியிட்டு விட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அருகதையினை பெறட்டும்.
பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்டு விட்டு நீங்கள் தவ்ஹீத் ஜமாஆத்தை விமர்சிக்கிறீரா?
என்றால், சொன்னதை ஆதாரத்துடன் சொல்லவும், என்று நாஷித் அஹமத் ஆகிய நான் கேட்டுக் கொள்கிறேன்.
கணிப்பு கணிப்பு என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த காலம் போய் ..
தற்போது வருமானம் படுத்து விட்டதை தொடர்ந்து, அவ்வப்போது இவ்வாறு தெருக்கூத்துகள் நடத்தி வியாபாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முன்வராமல் இவர்கள் எடுக்கும் ஓட்டத்தின் மூலம் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது !

ஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு



உங்கள் மத்ஹபில் என்ன அபத்தங்கள் எல்லாம் உள்ளன என்பதை உங்களுக்கு போதிக்காமலேயே உங்களை மத்ஹப் எனும் மாய வலையில் சிக்க வைத்திருக்கிறார்கள் மார்க்கமறியாத உங்கள் ஹசரத்மார்கள்.
அதற்கு சில சான்றுகளை இங்கே பார்ப்போம்.
ஹனஃபி மத்ஹப், அபு ஹனீஃபா இமாமை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்டது என்று தெரிந்திருக்கும் நீங்கள், அந்த அபு ஹனீஃபா இமாமை இந்த மத்ஹப் நுற்கள் எந்த அளவிற்கு வரம்பு மீறி புகழ்ந்திருக்கின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.
நூல்: துர்ருல் முக்தார்
பாகம்: 1, பக்கம்: 52
குர் ஆனுக்கு அடுத்த அற்புதமே அபு ஹனீஃபா இமாம் தானாம்.. இதை யார் உங்களுக்கு சொன்னது? அல்லாஹ்வின் அற்புதமான குர் ஆனோடு அபு ஹனீஃபாவை ஒப்பிடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தது?
அவரது மாணவர்களிடமும், அவரைப் பின்பற்றியவர்களிடமும் அவரது காலம் முதல் இன்று வரை ஞானத்தை அல்லாஹ் ஒப்படைத்து விட்டான். முடிவில் அவரது மத்ஹபின் அடிப்படையில் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.
நூல்: துர்ருல் முக்தார்,
பாகம்: 1, பக்கம்: 52
அபு ஹனிஃபா இமாமின் சட்டப்படி தான் ஈஸா நபி தீர்ப்பளிப்பார்களாம். இது அல்லாஹ்வையே கேலி செய்வதாகாதா? அல்லாஹ் ஈஸா நபியை உலகிற்கு அனுப்புகிறான் என்றால் அவர்களுக்கு இடப்படும் கட்டளை என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும்.
ஏற்கனவே பூமியில் நபியாக வாழ்ந்த அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள், சட்டங்கள் தெரியத் தான் செய்யும், ஒரு அபு ஹனீஃபா தேவையில்லை, ஈஸா நபிக்கு சொல்லித் தர.. !
"நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச் செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன். விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்'' என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அல்லாஹ்வைத் தொழும் போது கூட கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப் பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இங்கு அபூஹனீபாவின் கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.
ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.
அடுத்து, இவர்கள் எவ்வாறு சஹாபாக்களையே கேலி செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.
அபூஹனீஃபா அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் போன்றவராக இருக்கும் போது அவருக்கு இத்தகைய சிறப்புகள் எப்படி இல்லாமல் போகும்?
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அதாவது, அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களும் அபு ஹனீஃபாவும் சமமாம் !
எந்த அபுபக்கர் சித்தீக்? நீங்கள் மலையளவு தர்மம் செய்தாலும் அவர்களது ஒரு கையளவு தர்மத்திற்கு அது ஈடாகாது என்று நபி (சல்) அவர்கள் சிலாகித்து சொல்கிறார்களே அந்த சத்திய சஹாபாக்களில் சிறந்தவரான அபுபக்கர் சித்திக் அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதரான அபு ஹனீஃபாவும் சமமாம் !
இவர்கள் தான் நம்மைப் பார்த்து சஹாபாக்களை ஏசுகிறோம் என்று விமர்சனம் செய்பவர்கள் !

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்?



-------------------------------------------------------------------
முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்பது ஷைத்தானின் தூண்டுதலை தான் குறிக்கிறது என்பதற்கு பல சான்றுகளை நாம் முன் வைத்திருக்கிறோம்.
முடிச்சு என்பதற்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு ?
இரவில் தூங்கும் போது மூன்று முடிச்சுகளை ஷைத்தான் இடுகிறான் என புஹாரி 1142 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஊதுதலுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு?
ஷைத்தானின் தூண்டுதலை அவனது ஊதுதல் என்றும் அத்தகைய ஊதுதலிலிருந்து பாதுகாப்பு தேடுமாறும் அபுதாவுத் 651 இல் சொல்லப்பட்டுள்ளது.
ஷைத்தானை ஏன் பெண்பாலாக ஏன் சொல்ல வேண்டும்?
இதற்கான விடையை அறிவதற்கு முன், இது தொடர்பாக சலஃபிகளின் முரண்பாட்டை விளக்க வேண்டியுள்ளது. இந்த வசனம் ஷைத்தானை தான் சொல்கிறது என்று நாம் சொல்லும் போது, அப்படியானால் இங்கு ஏன் பெண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது? பெண் ஷைத்தானிடமிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று குதர்க்கமாக கேட்பர்.
அதே சமயம், இந்த வசனம் சூனியத்தை தான் குறிக்கிறது எனவும் இன்னொரு பக்கம் சொல்வார்கள்.
அப்படியானால் சூனியத்தை பெண்களால் மட்டும் தான் செய்ய முடியுமா? அல்லது பெண்கள் செய்யும் சூனியத்திலிருந்து மட்டும் பாதுகாவல் தேடினால் போதுமா? என்று, இவர்களது கேள்வியை நாம் இவர்களிடமே திருப்பிக் கேட்பதன் மூலம் இவர்களது சந்தர்ப்பவாதத்தையும் முரண்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் நஃப்ஃபாஸாத் என்பது இலக்கண அடிப்படையில் பெண்பாலை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் கூட, பொருள் அடிப்படையில் அது பொதுவாய் சொல்லப்படுபவை தான்.
முடிச்சுகளில் ஊதுபவைகளின் தீமையை விட்டும், என்று பொதுவாய் மொழியாக்கம் செய்வதும் இவ்விடத்தில் தகும்.
இதற்கு சான்றாய் குர்ஆனின் வேறு பல வாசகங்களை இங்கே பார்க்கலாம்.
79:1 5 வசனங்களில் பொதுவாக மலக்குகளை பற்றி அல்லாஹ் பேசும் போது நாஸியாத், நாஷிதாத் என்கிறான். இவை, இலக்கணப்படி பெண்பாலாக இருந்தாலும் மலக்குகளில் அவ்வாறு பாலின வேறுபாடு கிடையாது என்பதே சரி. இங்கு பொதுவாய் மலக்குகள் அனைவரையும் குறிக்கும் என்று தான் புரிய வேண்டுமே தவிர மலக்குகளில் பெண் மலக்கு உண்டு என்று புரியக்கூடாது !
அது போல், 77:5 வசனத்தில் இதயத்தில் உபதேசங்களை இடும் மலக்குகள் பற்றி சொல்கிற இடத்தில் முல்கியாத் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பெண்பாலை குறிக்கும் சொல் தான்.
அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் இருக்கிறது, கருவுற்றிருக்கும் பெண்ணை குறிக்க ஹாமில் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், ஹாமில் என்பது ஆண்பால் !
மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க ஹாயில் என்கிற சொல் உபயோகப்பட்டாலும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.
ஆக, முடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்று மொழியாக்கம் செய்தாலும், அது ஜின் இனத்தின் ஆண், பெண் என இரு பாலரையும் பொதுவாய் குறிக்கும் பொதுவான சொல் தான்.

தஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிரான ஆதாரம் !


நபிமார்கள் இதை செய்தார்கள், தஜ்ஜால் இதை செய்வான்.. என்றெல்லாம் சொல்லப்படுவது தான் சூனியத்தினால் எதையும் செய்ய முடியாது என்பதற்கு சான்று என்கிறேன் நான்.
ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களோ மேலோட்டமாக சிந்தித்து, நபிமார்கள் செய்வார்கள் தானே அப்படியானால் சூனியத்தின் மூலம் மற்ற மனிதர்களாலும் செய்ய முடியும் என்கிறீர்கள்.
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூனியம் என்கிற பெயரால் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும் என்பது உண்மையாக இருக்குமானால் தஜ்ஜாலைப் பற்றி குறிப்பிட்டு அல்லாஹ் சொல்ல மாட்டான் என்கிறேன் நான்.
ஈஸா அதை செய்தார், மூசா இதை செய்தார், சுலைமான் இன்னின்னதை செய்தார் என்று, ஒவ்வொரு அற்புதத்தையும் ஒவ்வொரு நபிமார்கள் செய்ததை தனி தனியே சுட்டிக் காட்டி அல்லாஹ் சொல்வதில் அர்த்தமிருக்காது என்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், அத்தகைய அற்புதம் தான் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்கள் என்று சமுதாயத்தில் காட்டிக் கொள்ள உதவியது என்கிற வகையில் சிந்திக்கையில், எல்லா மனிதர்களுக்கும் சகஜமாய் அற்புதத் திறன் இருக்கும் என்று நம்புவது தான் நபிமார்கள் மூலமாக அல்லாஹ் நிகழ்த்திய கராமத்களை மறுப்பதாக இருக்கும்.
அல்லாமல், கராமத்தை நம்புவதால் சூனியத்தையும் நம்ப வேண்டும் என்பது மிக மிக பாமரத்தனமான, ஆழமான, நுணுக்கமான புரிதல் அறவே இல்லாத வாதம் !
தஜ்ஜாலைப் பற்றியும் நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள் பற்றியும் அல்லாஹ் பெருமையுடனும் மனித குலம் படிப்பினை பெறுவதற்காகவும் சொல்கிறான் என்றால், அத்தகைய ஆற்றல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் அகோரிக்கும், நாதாரிகளுக்கும் கொடுக்கப்படவில்லை என்று பொருள் !
இவர்கள் வாதப்படி) ஏற்கனவே இவ்வுலகில் ஏராளமான மனிதர்கள் மூலம் ஏராளமான அற்புதங்களை சூனியம் என்கிற பெயரில் பார்த்து வந்த தலைமுறை தான் தஜ்ஜாலை சந்திக்கும்.
அப்படியிருக்கையில், தஜ்ஜாலை பத்தோடு ஒன்று பதினொன்றாக தான் அம்மக்கள் காண்பார்களேயொழிய யாரும் அவனைக்கண்டு பிரமிப்படைய மாட்டார்கள், இதுவரை காணாத ஒன்றை கண்டது போன்றோ இதுவரை கேட்டிராத ஒன்றை கேள்விப்பட்டதை போன்றோ வியப்படைய மாட்டார்கள் !
நபிமார்கள் அற்புதம் செய்திருப்பதால் சூனியத்தினால் செய்ய முடியாது என்கிறோம்.
அற்புதங்கள் தான் அவர்களை நபியென்று நிரூபிக்க உதவியது.
அந்த சாதனத்தை, அந்த ஆயுதத்தை அல்லாஹ் எவருக்கும் கொடுக்க மாட்டான் !!
எது சூனியத்தை மறுக்கிறதோ அதை சூனியத்தை நம்புவதற்கு சான்றாய் கொண்டு வருகிறார்கள் !! ஆழமான புரிதல் இல்லாமையே இதற்கு காரணம் !!

சூனியப்பிரியர்களிடம் ஒரு கேள்வி


எனது முந்தைய பதிவின் சாராம்சத்தை இங்கே சூனியப்பிரியர்களிடம் கேள்வியாக வைக்கிறேன்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால்
அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்று கூறி அவன் சொல்வதை அப்படியே நம்பி விடுவீர்களா?
அல்லது
விசாரித்து பார்த்து பிறகு நம்பலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பீர்களா?
அல்லது
எடுத்த எடுப்பிலேயே அவன் பொய் சொல்கிறான் என்று மறுத்து விடுவீர்களா?
இந்த மூன்றில் எந்த பதிலை சொன்னாலும் மாட்டிக் கொள்ளும் பரிதாபகர நிலையில் தான் நீங்கள் உள்ளீர்கள் !!

சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு


சூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பாமரத்தனமான ஒரு உதாரணத்தின் மூலம் புரியலாம் !
நேற்று வரை ஊரில் இருந்த நண்பனை இன்று காலை திடீரென துபையில் சந்திக்கிறீர்கள்.
எப்போது வந்தாய், எந்த ஃபிளைட்.. என்றெல்லாம் விசாரிக்கிறீர்கள்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால் சூனியத்தை நம்பாதவர்கள் அவனை பொய்யன் அல்லது கிறுக்கன் என்பார்கள்.
சூனியம் கூட அல்லாஹ் நாடினால் நடக்கும் என்று நம்புகிறவர்கள், ஆமாம் ஆமாம், அல்லாஹ் நாடினால் ஏன் முடியாது, அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்பது கூட இந்த தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு தெரியவில்லை என்று கூறி,
மேற்படி மன்னார்குடி டு துபை பறந்து வந்த அந்த அற்புத மனிதரை ஆரத்தழுவிக்கொள்வார்கள்.
ஐந்து நிமிட துபை பயணத்தை ஏற்றுக்கொள்வார்கள்!
(நம்பாமல் எப்படி? அவனென்ன சூனியக்காரனின் திறமையினாலா வந்தான் ? அல்லாஹ் நாடினான், அதனால் வந்தான் !!)
வேறுபாடு இது தான் !
மற்றபடி, இவர்களது காதில் பூ ஒன்று சுற்றப்பட்டிருக்கும், மற்றவர்களுக்கு அது இருக்காது. இதையும் வேறுபாடாக கொள்ளலாம் !!

காளியை ஈமான் கொண்டோர்


ஒருவன் ஹோமம் வளர்ப்பானாம்,
அதை வழிபடுவானாம்,
காளியை கடவுளாக நம்புவானாம்,
காளியின் பெயரைச் சொல்லி பூஜைகள் பல செய்வானாம்,
ஓம் கிரீம் சூம் என்று மந்திரங்கள் சொல்வானாம், காட்டில் தவமிருப்பானாம், 
நிர்வாணமாக அலைவானாம்,
இறந்து போன மனிதர்களின் மாமிசங்களையே புசித்து வாழ்வானாம்.
இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான, அல்லாஹ்வை மறுக்கும் இது போன்ற காரியங்கள் மூலம் ஒருவன் சூனியம் செய்தால் அந்த சூனியம் கூட பலிப்பதற்கு அல்லாஹ் நாடுவானாம் !
சுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் என்றால் யாருப்பா ? உன் பக்கத்து வீட்டுக்காரனா?
கொஞ்சமாவது விவரமும், உள்ளத்தில் அவனைப்பற்றிய அச்சமும் இருக்கிறதா உங்களுக்கு ?
அல்லாஹ்வின் இலக்கணம் தெரியுமா உங்களுக்கு??
அல்லாஹ்வின் பண்புகள் பற்றிய ஞானம் உனக்கு இருக்கிறதா??
ஆனா ஒண்ணு..
சூனியத்தை நம்புகிறவர்கள் பின்னால் நின்று தொழலாமா கூடாதா என்பதில் பல நாட்களாக சர்ச்சை இருந்து வந்த நிலையில், காளியை வணங்கும் ஒரு சாமியார் செய்யும் சூனியம் கூட பலிப்பதற்கு வாய்ப்பிருக்கு என்று இவர்கள் கூறி விட்ட பிறகு எந்த குழப்பமுமின்றி அந்த சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது !!
அல்லாஹ்வை மட்டும் நம்புகிறவர்கள் யார், அல்லாஹ்வையும் காளியையும் நம்புகிறவர்கள் யார் என்று பிரித்தறிந்து கொள்கிற வாய்ப்பினை இந்த சூனிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன,
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! (ஈடு இணையற்ற அந்த ஒருவனுக்கு மட்டுமே !!)

ஏட்டுச் சுரக்காய்கள் !


ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் எனவும் தத்துவம் பேசும் சித்தாந்தங்களில் விபச்சாரமும் கள்ள தொடர்புகளும் மலிந்து காணப்படுவதும்..
ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் உனக்கு அவசியமென்றால் அவளை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ் என்று கூறுகிற சித்தாந்தத்தில் விபச்சாரம் அரிதிலும் அரிதாக நிகழ்வதும்..
தெளிவான நகைமுரணாகவும்
மாறும் உலகில் மாறாத இஸ்லாமிய மார்க்கத்திற்கு சான்று பகர்வதாகவும் அமைந்துள்ளன !!
மனித வாழ்க்கைக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
மற்றவை கறிக்கு உதவாத ஏட்டுச் சுரக்காய்கள் !

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை !


இன்று ஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை !
ஒன்றை படித்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்தது.. அனைத்தும் நம்ம மருத்துவர் ஐயா ராமதாஸு அவர்களின் முத்து சிதறல்கள்..
1. நான் முதலமைச்சர் ஆனால் எனது முதல் கையெழுத்து மது ஒழுப்பு தான்.
2. மக்கள் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி தான் ஆட்சியில் அமர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
3. எல்லா மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கும் எங்களைப் பார்த்தால் பயம்.
4. எல்லா கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு பயம், பயப்படாமல் துணிந்து விமர்சிப்பவன் தமிழகத்திலேயே நான் ஒருவன் தான்.
5. தமிழகத்தின் எதிர்காலம் பாமக‌
அனைத்தையும் விட உச்சகட்டமாக..
..
..
..
..
..
..
..
..
..
..
..
6. திமுக, அதிமுகவுடன் இனி ஒரு போதும் கூட்டணி கிடையாது !!!
தயவு செய்து யாரும் பொதுவில் திட்டாதீர்கள் !  

சட்டம் தெரியாத அரை வேக்காடுகள்


ஒரு விஷயம் சட்ட விரோதம் என்று கூறி ஒரு கூட்டம் பத்திரிக்கையில் பேசுகிறது, பேட்டி கொடுக்கிறது, தெருக்களில் பேனர் வைக்கிறது, அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறது, பல பராக்கிரமங்களையெல்லாம் செய்து பார்க்கிறது,
ஒரு பயலும் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறான்.. ஒருத்தனும் சீரியஸாக எடுத்தபாடில்லை..
அட போயா கூமுட்டைகளா, உனக்கு சட்டம்னாலும் என்னானு தெரியல, அதை மீறுவது என்றாலும் என்னான்னு தெரியல..
போங்கய்யா போய் பிள்ளைகளை படிக்க வையுங்க..
என்கிற ரேஞ்சில் இவர்களின் குட்டிக்கரணங்களை அரசு கேலிச் சிரிப்புடனே பார்க்கிறது.
அப்போதாவது தங்களது கூமுட்டைத்தனத்தை இவர்கள் நிறுத்திக் கொண்டு வேறு பிழைப்பை பார்க்க சென்றிருக்க வேண்டும்.
ஆனால், இப்போதும், சட்ட விரோதம், சட்ட விரோதம் என்று பேனர் வைத்து நாங்களும் இருக்கோம்ல.. என்று மீண்டும் காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
அட கூறு கெட்டவர்களே, சட்ட விரோதமான ஒரு செயல் என்றால் சட்டம் அதன் கடமையை செய்யும், இன்னேரம் செய்திருக்கும்..
நீ மாங்கு மாங்கென்று கூப்பாடு போட்டும் சட்டம் எதுவும் பாயவில்லையென்றால், கோளாறு சட்டத்தில் இல்லை, உன் தலையில் தான்.. என்பதை இன்னுமா விளங்கிக் கொள்ள இயலவில்லை உங்களுக்கு?
ஒன்று, நீ குர் ஆனை படி, ஹதீஸ படி, அது உனக்கு இயலாது என்றால் குறைந்த பட்சம் இந்திய அரசியல் சட்டத்தையாவது படி..
ஒரு விளக்கெண்ணெய் அறிவும் இல்லாமல் இப்படி நகைச்சுவை செய்து கொண்டிருந்தால், நீ சொல்கிற சட்டம் கூட உன்னைப் பார்த்து சிரிக்கும் !

சூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை நேரில் காட்டு என்று சொல்வது போன்றதா?


சூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை நேரில் காட்டு என்று சொல்வது போன்றதா?
இரண்டுக்கும் என்ன வேறுபாடு??
இரண்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது. அதை விளக்குவதற்கு முன், இது போன்று கேள்வியெழுப்புவதன் மூலம் எந்த அளவிற்கு வழிகேட்டின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள் எனபதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இறந்து போன நல்லடியார் நாம் பேசுவதை கேட்டு பதிலளிப்பார் என்று பரேலவிகள் சொன்ன போது, அத்தகைய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்று நாம் மறுப்பு சொன்னோம்.
இதற்கு எதிர் கேள்வி கேட்ட அவர்கள், எங்கிருந்து எத்தனை பேர் அழைத்தாலும் அனைத்தையும் கேட்டு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? என்று..
அல்லாஹ்வின் வல்லமை குறித்தே கேள்வியெழுப்பி தாங்கள் எந்த அளவிற்கு கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தனர்.
அதாவது, தங்களது தர்கா வழிபாட்டினை நியாயப்படுத்த இவர்கள் எத்தகைய நிலைக்கும் செல்வர், அல்லாஹ்வையே அதற்கு ஒப்புமையுமாக்குவர்.
அதே நிலையை தான் இன்று சூனியத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களிடம் காண் முடிகிறது. அதன் வெளிபாடு தான், மேற்கூறிய இவர்கள் கேள்வியும்.
அல்லாஹ்வை காண்பதைப் பொறுத்தவரை, அது இவ்வுலகில் மனிதனால் இயலாத காரியம் என்று அல்லாஹ் தெளிவாக சொல்லி விட்டான். எந்த கண்களும் அவனை காணாது.
அல்லாஹ் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதற்கு கூட, அவன் படைத்த இந்த பூமி, அண்ட சராசரங்களை பார்த்து அதன் மூலம் படைத்த ஒருவன் இருக்கிறான் என்று புரியுமாறு தான் அல்லாஹ் சொல்கிறானே அல்லாமல், அவனை கண்டு நம்புமாறு சொல்லவில்லை.
இவர்கள் சூனியத்திற்கு சக்தி இருப்பதாக குர் ஆனிலேயே அல்லாஹ் சொல்கிறான் என்று நம்புகின்றனர்.
அப்படி நம்பக்கூடியவர்கள், இதோ சூனியத்தின் ஆற்றலை கண்ணால் காண முடியாது என்று அல்லாஹ் சொல்வதாக எடுத்துக் காட்ட வேண்டும்.
அவ்வாறு காட்டினால், அல்லாஹ்வை பார்த்து தான் நம்புவேன் என்று சொல்வதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமோ, சூனியத்தின் ஆற்றலையும் கண்ணால் கண்டு நிரூபணம் செய்து தான் நம்புவேன் என்பதை ஏற்க மாட்டோம்.
அல்லாஹ்வை பார்க்காமலேயே நம்பிய நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தான், சிலைகளுக்கு சக்தி இருப்பதாக சொல்லப்பட்ட போது அதை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள்.
அது எனக்கு தீங்கு செய்யட்டும் பார்ப்போம் என்று சொன்னார்கள்.
இவ்வுலகில் ஒரு காரியத்திற்கு பிரத்தியேக ஆற்றல் இருப்பதாக சொல்லப்பட்டால் அதை கண்கூடாக‌ கண்டு தான் நம்ப வேண்டும். அல்லாமல், அல்லாஹ்வை பார்க்காமல் தானே நம்புகிறாய்? அது போல் இதையும் பார்க்காமல் நம்பு ..என்று சொல்வது, தங்கள் அறியாமையை மூடி மறைக்க் இவர்கள் பயன்படுத்தும் யுக்தி.
சரி, ஒரு வாதத்திற்கு இவர்களது இந்த மடமையான கேள்வியை ஏற்றுக் கொண்டால் கூட..
அல்லாஹ்வை காணா விட்டாலும், அல்லாஹ் இருக்கிறான் என்பதை எண்ணற்ற பல காரிணிகள் நமக்கு அன்றாடம் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அவன் படைப்புகள் ஒவ்வொன்றும், தன்னை படைத்த ஒருவன் இருக்கிறான் என்பதை அனுதினமும் பறைசாற்றிக் கொண்டு தான் உள்ளன.
அப்படி சூனியத்தை மெய்ப்படுத்தும் காரிணிகளையாவது இவர்கள் காட்ட வேண்டுமல்லவா?
சரி, சூனியம் செய்பவரின் முகத்தை காட்ட வேண்டாம், அவரது முகவரியை தர வேண்டாம், சூனியக்காரனை கொண்டு வந்து காட்டு என்று நாங்கள் கேட்கவில்லை,
அவன் சூனியம் என்று எதை செய்கிறானோ அதன் விளைவுகளையாவது நாங்கள் காண வேண்டுமே?
அப்படி காண்பதன் மூலம், எப்படி அல்லாஹ்வின் படைப்புகளையும் அவன் இவ்வுலகில் செய்யும் அற்புதங்களையும் கண்ணால் கண்டு விளங்கி அதன் மூலம் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நம்புகிறோமோ அது போல‌
சூனியக்காரன் ஒருவன் இருக்கிறான், அவனுக்கும் மகத்தான ஆற்றலெல்லாம் இருக்கின்றன என்பதை நாங்கள் நம்பிக் கொள்வோமே?
அதை செய்யலாமே?
ஆக, இவர்கள் மனமுரண்டாக தான் சூனியத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இவர்கள் எழுப்பும் இந்த கேள்வியின் மூலமும் நமக்கு புரிகிறது !

மறுக்கப்படும் பெண்ணுரிமை


இவர்கள் பெண்களுக்கு தாலி கட்டுவார்கள், ஆனால் இவர்கள் திருமணமானதற்கு அடையாளமாய் எதையும் அணிய மாட்டார்கள்.
திருமணமான பெண் என்றால் அவள் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.
திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிய சொல்வார்கள்.
வாரா வாரம் கோவிலுக்கு சென்று அந்த தாலிக்கு சிறப்பு பூஜைகள் கூட செய்வார்கள்.‍
ஆனால்,இவை எதையும் இவர்கள் அணிய மாட்டார்கள்.
இவர்களுக்கு திருமணமானதற்கான எந்த அடையாளமும் அவசியமில்லை !
வரதட்ச‌ணை என்கிற பெயரால் வஞ்சிப்பார்கள், சொத்துரிமை தர மறுப்பார்கள், இவர்கள் வழிபடும் ஆலயங்களில் கூட பெண்களை அனுமதிக்க மாட்டார்கள்,
விவாகரத்து உரிமையை மறுப்பார்கள்,
திருமணமான ஆண்கள், மனைவி அல்லாத வேறு பெண்களுடன் உறவு வைத்திருந்தால் அதை கண்டிக்க சட்டமியற்ற மாட்டார்கள்,
மனைவி அதனால் எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானாலும் அதை பற்றி கவலைக் கொள்ள மாட்டார்கள்.
இறுதியில், கணவன் இறந்து போனால், மேலே எதையெல்லாம் அணியுமாறு இவர்கள் பெண்களிடம் திணித்தார்களோ, அவை அனைத்தையும் கழற்ற சொல்வார்கள்.
ஒரு படி மேலே போய், வாழ்நாள் முழுக்க மறுமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிடுவார்கள்.
வெள்ளை ஆடை தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்பார்கள், அழகுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தடை விதிப்பார்கள்.
ஆனால், இஸ்லாம், பெண்களுக்கு முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளது. திருமணமானதை காட்டும் விதமாக ஆண்களுக்கு எவ்வாறு எந்த அடையாளமும் அவசியமில்லையோ அது போல் பெண்களுக்கும் அவசியமில்லை.
இஸ்லாத்தில் வரதட்சணை இல்லை என்பது மட்டுமல்ல, மஹர் என்கிற பெயரில் ஆண்கள் தான் பெண்களுக்கு தர வேண்டும் என்று சட்டமியற்றும் அளவிற்கு பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துகிறது.
அந்த மஹர் பணத்தை கூட பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அனுமதிக்கிற அளவிற்கு உரிமை,
கணவன் இறந்தால் மறுமணம் செய்து கொள்ளும் முழு சுதந்திரம்,
கணவனை பிடிக்கவில்லை என்றால் காரணம் கூட சொல்லாமல், சுயமாகவே அவனை விவாகரத்து செய்து கொள்ளும் அதிகாரம்,
கணவன் தன்னை கை விட்டு சென்றால், ஜீவனாம்சம் என்கிற பெயரில் உரிமை கோருதல்,
தான் சம்பாத்தித்தவைகளை தாமே நிர்வகிக்கும் சொத்துரிமை,
கணவனின் சொத்துக்களை பங்கிடும் போது மனைவிக்கென கட்டாய பங்கு,
எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்குள் அனுமதி என்பது மட்டுமின்றி, இஸ்லாத்தை பிற மக்களுக்கு போதிக்கும் உரிமை,
மத பிரச்சாரம் செய்யும் சுதந்திரம்,
என பெண்ணினத்தை இஸ்லாம் கண்ணியப்படுத்தியிருக்கின்ற அளவிற்கு வேறெந்த சித்தாந்தங்களும் கண்ணியப்படுத்தவில்லை எனும் போது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூறுவது நகைப்புக்குரியதும் இவர்களது புறத்திலிருந்து எழக்கூடிய முரண்பாடுமாகும் !

வெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்



வெட்கம் .. அது ஈமானின் ஒரு பகுதி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (9)
அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, "அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (24)
மார்க்கத்தை அறிய வெட்கப்படக் கூடாது !
பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (500)
வெட்கம் தான் ஒரு காரியத்தை அழகாக்கும் ! கெட்ட வார்த்தை பேசுபவர் வெட்கமில்லாதவர் என்று கூறுகிறது இந்த ஹதீஸ்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப் படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: திர்மிதி (1897)
வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி (6117)
பெண்களை விடவும் அதிகம் வெட்கப்பட்ட மாமனிதர் !
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி (3562)
மறைவிடங்களை பேணுதல் :
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள்.
அறிவிப்பவர்: அல்முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: நஸயீ (17)
உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஃலா பின் உமய்யா (ரலி)
நூல்: நஸயீ (403)
ஒருவரிடம் வெட்க உணர்வு இல்லையென்றால் அதுவே அவனை எதையும் செய்யத் தூண்டும் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதாகும்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (3483)

சஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா?


சஹாபியின் பெயரோடு ரலியல்லாஹு அன்ஹு (ரலி) என்று சேர்த்து சொல்வது கட்டாயமில்லை என்கிற செய்தி பலருக்கும் தெரியவில்லை.
எந்த அளவிற்கென்றால், ஒருவர் அபுபக்கர் சித்தீக் என்று மட்டும் சொன்னால், அப்படி சொன்னவரை ஏளனமாய் பேசியும் திட்டியும் தீர்க்கின்றது ஒரு கூட்டம். ரலி என்று கூட சொல்ல தெரியவில்லை என்று, ஏதோ ரலி என்று சேர்த்து சொல்லாமல் விடுவது உலக மகா பாவச்செயல் போன்று சித்தரிக்கின்றது !
ஒரு படி மேலே சென்று, சம்மந்தப்பட்டவரை நாய் என்றும் மூடன் என்றும் மூன்றாம் தரத்தில் திட்டவும் செய்கின்றனர்.
உனக்கு மார்க்கம் தெரியவில்லையென்றால் வாய் மூடிக்கொண்டு இருப்பது தான் உனக்கும் நல்லது, உன் கண்ணியத்திற்கும் நல்லது. அதை விட்டு, மார்க்கம் போதிக்கும் அறிஞர்களை ஏளனம் செய்யும் அடிப்படை தகுதி உனக்கு இருக்கிறதா என்று சிந்தித்துக் கொள்.
சஹாபாக்களின் பெயரை சொன்னால் கூடவே ரலி என்று கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்று நீ எந்த கூறு கெட்ட குப்பை மதரசாவில் ஓதிய ஆலிமிடம் படித்தாயோ அவன் உனக்கு சொல்லி தந்திருப்பான்.
14 ஆண்டு மதரஸாவில் ஓதிய அவனுக்கும் மார்க்கம் தெரியாது, மவ்லானா சொல்லி விட்டால் அது தான் வேத வாக்கு என்று கருதும் உனக்கும் அதை அறிந்து கொள்ள துப்பில்லை.
மார்க்க ஆய்வு என்றால் கிலோ எத்தனை என்று கேட்கும் ஜடங்களை மவ்லானாக்களாக போற்றுகிற நீ அத்தகைய வக்கினை முதலில் வளர்த்துக் கொள்.
அல்லாமல், ஏளனம் செய்து உன் தரத்தை நீயே வெளிக்காட்டாதே !!
(அறிஞர்களை நாய் என்று ஏசுவதில் சங்கோஜம் கொள்ளாத சம்மந்தப்பட்ட நபருக்கு இது அனுப்பப்பட்டிருக்கிறது)

ஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன??


ஒரு வார்த்தை இந்த நூலில் எத்தனை தடவை வந்திருக்கிறது பார்த்தீர்களா? எனவே அது உண்மை தான்.. என்பதான அளவுகோல் எவ்வாறு சிலரது அறிவுக்கு ஏற்றதாக தெரிகிறதோ நமக்கு புரியவில்லை.
குர் ஆனிலும் ஹதீஸிலும் சூனியம் என்கிற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாம், எனவே சூனியம் என்பது உண்மையாம்.
கோபப்பட்டவனுக்கு கோவணம் தான் மிச்சம் என்கிற கதையாய், சூனியத்தை நிலைநாட்டப் போகிறேன் என்று புறப்பட்டவர்களின் வாதம் கடைசியில் இந்த நிலையை அடைந்திருப்பது தான் வேடிக்கை.
பேய் பிசாசுகள் இல்லை என்பதை நூல் வடிவில் ஒருவன் எழுதினால் கூட அதில் 1008 இடங்களில் பேய்,பேய் என்று எழுத தான் செய்வான்.
பாருங்கள், பேய் பேய் என்று எத்தனை இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது, எனவே பேய் என்பது உண்டு என்று எவராவது சொன்னால் இதுவா வாதம்??
அல்லாஹ் குர் ஆனில் பல்வேறு இடங்களில் சூனியம் என்கிற சொல்லை பயன்படுத்தியிருக்கிறான் என்பது என்ன 21 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பா??
அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தியிருப்பதால் தானே சூனியம் என்பதே பொய் என்கிற முடிவுக்கு எளிதில் வர முடிகிறது என்கிறோம் !
சூனியம் என்பது கற்பனை என்பதற்கு சான்றே அல்லாஹ் குர் ஆனில் சூனியம் பற்றி பேசியுள்ளவை தான் எனும் போது வார்த்தை எத்தனை முறை வந்திருக்கிறது என்பதா பிரதானம்??
ஷிர்க் என்கிற வார்த்தை கூட தான் அதிக இடங்களில் உள்ளது, ஆகவே அல்லாஹ்வுக்கு இணையாக உலகில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதோ அல்லாஹ்வே ஷிர்க் ஷிர்க் என்று சொல்லி விட்டான், என்று வாதம் வைத்து விடலாமா??
என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை... இதில் இம்தாதி என்று பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள் !!

இது எப்படிய்யா பொருந்தும்?


அமெரிக்காவில் வசிப்பவர்களை அமெரிக்கர்கள் என்கிறோம்.... சரி...
ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மானியர்கள் என்கிறோம். சரி...
இங்கிலாந்தில் வசிப்பவர்களை ஆங்கிலேயர்கள் என்று. அழைக்கிறோம், அதுவும் சரி..
""இந்தியாவில் வசிப்பவர்களை ஹிந்துக்கள் என்று அழைக்க வேண்டும்..""
அட வெண்ணெ .. இது எப்படிய்யா பொருந்தும்?
யாருய்யா அந்த கூறு கெட்டவன் இப்படியொரு விவரமில்லாத தத்துவத்தை சொல்வது?
மொழியயும் தேசத்தையும் உதாரணமா சொல்லிட்டு வந்து கடைசில மதத்த அதோட பொருத்துனா எப்படிய்யா பொருந்தும்? விவஸ்த்தை வேண்டாமா ??
சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொன்னால் சூப்பர் நகைச்சுவை என்று கூறி கை தட்டி சிரிக்கிறோம், அதற்கு சற்றும் சளைக்காமல் மேற்கண்டவாறு காமெடி செய்தால் அவனையெல்லாம் இயக்கத்தலைவர் என்கிறோம்..!
சரி சரி.. நல்லா சிரிச்சிட்டோம், போவும் போவும்.. போய் பொழப்ப பாரும்..

வலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?


இறந்து போன நல்லடியார்கள் நமது தேவைகளை கேட்டு பூர்த்தி செய்வார்கள் என்பதற்கு புஹாரியிலிருந்தே சான்று ஒன்றினை காட்டுகின்றது இந்த இணை வைக்கும் கூட்டம்.
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 6502)
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.
கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.
அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?
இதன் உண்மையான பொருள் என்ன?
பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.
அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.
மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
முஸ்லிம் 5021
இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.
இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா?
ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.
அல்லாஹ் உவமையாக சொன்னதை நேரடியாகப் புரிந்து அனர்த்தம் கொடுப்பதால் இஸ்லாத்தையே குழி தோண்டி புதைக்கும் மாபாதக செயலை செய்ய வேண்டியதாகிறது !!
புரிதலில் தவறை வைத்துக் கொண்டு தவ்ஹீத்வாதிகளை கேலி செய்வதில் மட்டும் ஒரு குறையையும் வைக்க மாட்டார்கள்!

we are penalized for covering our body and paid for being nude !


தனது அங்க அவயங்களை தனது ஆடையைக் கொண்டு மறைத்து தனது கணவனுக்கு நம்பிக்கைக்குரியவளாய் காட்சி தரும் ஒரு பெண், சமூகத்தின் பார்வையில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவள்.
அதே சமயம், தனது மனைவி, தனது மகள், அல்லது தனது தங்கையின் உடலழகை சமூகமே பார்த்து ரசிக்க ஏவும் ஒரு ஆணும் அதற்கு துணை நிற்கும் அந்த பெண்ணும் இந்த சமூகத்தின் பார்வையில் சுதந்திரமானவர்கள் !
இத்தகைய மானெங்கெட்ட சுதந்திரத்தை தான் இந்த நாடு தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறது !
We live in a world where we are penalized for covering our body and paid for being nude !!

அடேய் என்னடா நடக்குது இங்க..?



கொல்கத்தாவிலிருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதை கண்ட அதிகாரிகள்
அதை சுத்தப்படுத்துவதற்காக ஒரு தனியான இடத்திற்கு அனுப்பி வைத்தார்களாம்.
இதுல கூத்து என்னன்னா.. இது பற்றி ஒரு உயர் அதிகாரி சொல்றத பாருங்க..
""விமானத்தில் ஒரு எலியின் நடமாட்டம் தென்பட்டால்கூட விமானம் முற்றிலும் சுத்தப்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. வயர் இணைப்புகளை இந்த எலிகள் கடித்து குதறிவைத்தால் விமானிகளால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு பேரழிவை சந்திக்கக்கூடும்"""
(என்னடா சொல்ற..???)
பயணிகள் விமானத்தில் சிந்தும் உணவுப்பொருட்களை உண்பதிலேயே எலிகள் கவனமாக இருப்பதால் வயர்களைக் கடிக்கும் நிலைமையிலிருந்து அவை பொதுவாகத் தடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
(இது வேறயா.. ஆமா இவரு போய் பார்த்தாராக்கும்.. எலி எத கடிக்கும் எத கடிக்காதுன்னு..
டவுன் பஸ் ஓட்ட வேண்டியவங்க எல்லாம் விமானத் துறை நடத்துனா இதான் நிலைமை..)

"Only death should stop us"


"Only death should stop us"
மாவீரன் என்று அழைக்கப்படும் நெப்போலியன் தனது போர்ப்படையினரிடம் சொன்ன வாசகம் இது என்று எழுதியிருக்கிறார்கள்.
ஏக இறைவனை நம்பாதவர்களுக்கு இது வெறும் பசப்பு வார்த்தை தான். உண்மையில் இந்த வாசகத்திற்கு நூறு சதவிகிதம் பாத்தியம் பொருந்தியவர்கள் ஏக இறைவனை நம்பிய நாம் தான்.
துன்பங்களும் வேதனைகளும் ஒரு பக்கம் வந்து கொண்டே தான் இருக்கும்.
நீ அல்லாஹ்வை நம்ப வேண்டிய முறையில் நம்பினால் சோதனைகள் என்பது பள்ளத்தாக்கை நோக்கி ஓடி வரும் தண்ணீரைப் போன்று உன்னை விரைவாய் வந்தடையும் என்பது நபிமொழி !
ஆனால், அற்பமான இந்த சொற்ப வாழ்வில் அவையெல்லாம் எந்த விதத்திலும் நம்மை பாதிக்கவே கூடாது.
இறுதி இலக்கு மறுமை வெற்றி. அதை அடைவதற்கு நாம் நம் வாழ்வில் சந்திக்கும் எந்த சோதனையும் தடையாக இருக்கக்கூடாது.
அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பிற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோருக்கு செய்ய வேண்டியவை, உற்றார், உறவினர்களுக்கு செய்ய வேண்டியவை, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் புனிதமான அழைப்புப்பணி என எதிலும் தொய்வு வரக்கூடாது.
மரணத்தை தவிர வேறு எதுவுமே இவற்றை நம்மிடமிருந்து பிரிக்கக்கூடாது ! இந்த உறுதி இருந்தால்தான் இறுதி இலக்கினை அடைய முடியும் !!

சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்


சூனியத்தை உண்மையென நம்புகிறவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்கிற அபுதாவூத் ஹதீஸ், சூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸாய் நிற்கிறது.
ஆனால், எப்படியாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தே தான் தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கும் சூனியப்பிரியர்கள், இந்த ஹதீஸில், முஃமினும் பிஸிஹ்ர், அதாவது சூனியத்த்தின் மீது ஈமான் கொள்வதை தான் வழிகேடு என்று சொல்லப்பட்டுள்ளது, நாங்கள் சூனியத்தை ஈமான் கொள்ளவில்லை என்கிற அர்த்தமேயில்லாத உளரலை வியாக்கானமாக தருகின்றனர்.
சூனியத்தை ஈமான் கொள்ளுதல் என்றாலும் சூனியத்தை உண்மையென்று நம்புதல் என்றாலும் ஒரே பொருள் தான். உண்மையென்று நம்புவதை தான் ஈமான் கொள்ள முடியும், ஈமான் கொண்டால் அது உண்மையென்று நம்புவதாக தான் ஆகும்.
யார் நட்சத்திரத்தை நம்புகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று நபி (சல்) அவர்கள் கூறிய மற்றொரு ஹதீஸ் இதற்கு சான்றாய் நிற்கிறது.
அதிலும் இதே ஈமான் என்கிற சொல் வருகிறது . அதாவது முஃமினுல் கவாகிப்.
நட்சத்திரத்தை நம்புதல் என்றால்,நட்சத்திரத்தால் தான் மழை பொழிகிறது என்று நம்புதல்.
அதாவது நட்சத்திரத்தை ஈமான் கொள்ளுதல் !
நட்சத்திரத்தை நம்புதல் இணை வைப்பு என்று சொன்னால் வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது என்று நம்புவதை அது குறிக்காது. மாறாக நட்சத்திரத்திற்கு (மழை பெய்விப்பது போன்ற) நன்மை தீமைகளை செய்ய முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !
அது போல, சூனியத்தை நம்புவது ஷிர்க் என்றால் சூனியத்தின் மூலம் கெடுதல்கள் உண்டாக்க முடியும் என்று நம்புவதை தான் குறிக்கும்.
அப்படி நம்புவது இணை வைப்பு !
இதே போன்ற வார்த்தையமைப்பு குர் ஆனிலும் உள்ளது
வேதம் எனும் நற்பேறு வழங்கப் பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (4:51)
சிலைகளை அவர்கள் நம்புகின்றனர் என்றால் சிலை என்கிற ஒன்று உலகில் இருக்கிறது என்று நம்புவதை குறிக்காது.
சிலைகளும் நன்மை, தீமை செய்யும் என்று நம்புகின்றனர் என்று தான் இதற்கு அர்த்தம்,
அதாவது சிலைகளை உண்மையென நம்புகின்றனர் என்கிற பொருள் இதிலேயே ஒளிந்துள்ளது..!
சிந்திக்கும் திறன் கொண்ட எந்த பாமரனுக்கும் இது விளங்கும் !

பப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்


விவாதத்திற்கு அழைப்பது என்றால் கடிதம் எழுத வேண்டும் அல்லது சம்மந்தப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இது தான் விவாதத்திற்கு அழைப்பது என்பதன் பொருள்.
சிலர் இருக்கிறார்கள்..
நேற்று குளிக்கும் போது, குளியலறையில் இருந்து கொண்டு "விவாதத்திற்கு தயாரா?" என்று சத்தமிட்டேன். இதுவரை சம்மந்தப்பட்டவர் பதில் சொல்லவில்லை..
நேற்று அடுப்பாங்கரையில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த போது, விவாதத்திற்கு தயாரா? என்று சத்தமிட்டேன்.
சம்மந்தப்பட்டவர் பதிலே சொல்லவில்லை.
எனவே அவர் பயந்து விட்டார்.. என்னோடு விவாதிக்க அவருக்கு திராணியில்லை, அவருக்கு தெம்பில்லை.. முதுகெலும்பில்லை..
இப்படி பேசி திரிகிறது ஒரு கூட்டம்.
இவர்களைப் பார்த்து மிகவும் பரிதாபம் கொள்கிறோம்.
பப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான் இவை.
உடனே "மருத்துவம்" பார்த்தால் குணமாக வாய்ப்புண்டு !
அல்லாமல், ஆஹா.. என்னே இவரது அறிவு, என்னே இவரது திராணி என அல்லக்கைகள் இதற்கும் ஜால்ரா அடித்து திரிந்தால்..
நோய் முற்றி சகராத் தான் !!

சோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி


சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அவை நாம் பேசுவதை கேட்காது, நமக்கு பதிலும் தராது..
இதை இப்படி வெறுமனே சொல்லி விட்டு செல்லவில்லை இப்ராஹிம் நபி.
மாறாக, எந்த ஆற்றலுமற்ற அந்த சிலையிடம் நேருக்கு நேராக நின்று பேசுகிறார்கள்.
சாப்பிட்டீர்களா? என்கிறார்கள்.
ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்கிறார்கள்.
எதற்குமே அவற்றால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை, சிலைக்கு சக்தி இருப்பதாக நம்புகிற கூட்டத்தாரிடம் இவ்வாறு செய்து காட்டி தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதை அல் குர் ஆன் 37:91 இல் பார்க்கலாம்.
சாப்பிடும் ஆற்றலை கொண்டிராத சிலையிடம் சாப்பிடுமாறு சொன்ன இப்ராஹும் நபி இணை வைத்தவரா?
நாம் பேசுவதை கேட்கும் ஆற்றலை கொண்டிருக்காத சிலையிடம் பேசியதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றல் அந்த சிலைக்கும் இருப்பதாக தான் நம்பினார்களா?
நிச்சயமாக இல்லை !
இணை வைப்பை வேரோடு பிடுங்கி எறியும் காரியம் தான் இது !!
சிலைக்கு கேட்கிற ஆற்றல், சாப்பிடுகிற ஆற்றல் என எந்த ஆற்றலும் இல்லை என்பதை சோதனைக்கு உட்படுத்தி நிரூபித்துக் காட்டியவர்கள் தான் ஏகத்துவ தந்தை இப்ராஹிம் நபி !
சோதிக்கும் வாய்ப்பிருப்பவற்றை சோதித்து தான் நம்பவும் வேண்டும்,
சோதித்து தான் பிறருக்கு பிரச்சாரமும் செய்ய வேண்டும் !!

இனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு சொல்ல வேண்டுமா?


நாங்கள் தான் நேர்வழியில் இருப்பவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் சலஃபுகளின் சுய ரூபத்தை இங்கே
அம்பலப்படுத்த விரும்புகின்றோம்.
சகோ.பிஜெவின் சூனிய ஒப்பந்தத்தை பார்த்தேன் என்று கூறி நம்மை தொடர்பு கொண்டார் ஒரு சலஃபு நபர்.
தொடர்பு கொண்டவர், அதிலிருந்து மிகப்பெரிய கேள்வியொன்றினை கேட்பதாக நினைத்து கீழ்கண்டவாறு கேட்டார்.
"ஒரு வேளை பிஜே தற்கொலை செய்து கொண்டால் சூனியம் உண்மை என்று ஒப்புக் கொள்வீர்களா?"
மேலோட்டமாக சிந்தித்தால் இது பதில் சொல்ல வேண்டிய கேள்வி போல் தோன்றலாம். ஆனால், மார்க்க கண்ணோட்டத்துடன் ஆழமான சிந்தனையுடனும் இதை அணுகும்போது இதிலுள்ள அபத்தம் நமக்கு புரியும். !
இந்த ஒரு கேள்வியே அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விட்டது என்பதே உண்மை.
நடக்கவே நடக்காத, அல்லாஹ் அமைத்து தந்த இயற்கை விதிக்கு மாற்றாக ஒரு காரியம் குறித்து கேள்வி கேட்டால், அல்லாஹ்வின் விதியில் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தான் பொருளாகும்.
சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் துல்லியமாக இயங்குவது அல்லாஹ்வின் விதி. அந்த விதியானது உலக அழிவின் போது தான் மாறும், அது வரை சூரியன் தினமும் கிழக்கில் தான் உதிக்கும். ஒரு வேளை இந்த துல்லியமான ஓட்டம் மாறி, நாளைய தினம் சூரியன் மேற்கே உதிப்பதை நீங்கள் பார்த்தால் இஸ்லாம் பொய் என்று ஒப்புக் கொள்வீர்களா? என்று ஒருவன் கேட்டால் கேட்பவனிடம் ஈமான் இல்லை என்று பொருள்.
அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக ஒரு அணு அளவு காரியமும் நடக்காது.
நடக்காது என்றால், நடந்து விட்டால் என்ன..? என்கிற கேள்வியே அபத்தமான, மடமையான கேள்வி.
தஜ்ஜாலின் நெற்றியில் காஃபிர் என்று எழுதப்பட்டிருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான். ஒரு வேளை மூஃமின் என்று இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று ஒருவன் கேட்டால் அவன் தலையை தட்டி, அப்படி நடக்காது, போய் வேலையை பார் என்று சொல்வோம்.
அல்லாமல் அந்த கிறுக்குத்தனத்திற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம்.
அது போன்ற கிறுக்குத்தனத்தை தான் அறிவார்ந்த கேள்வி போல் நம்மிடம் கேட்டார், ஈமானை அடகு வைத்த சலஃபி.
சூனியம் வெற்றி பெறவே பெறாது, சூனியத்தின் விளைவாய் பிஜெ தற்கொலை செய்வது என்பது நிகழவே நிகழாது ! கடுகளவும் சந்தேகமில்லை !
இதை சொல்ல இன்ஷா அல்லாஹ் என்று கூட சொல்ல தேவையில்லை !!
இது தான் ஈமான் எனப்படும்.
அல்லாமல், நடந்து விட்டால் என்ன? என்று கேட்கும் காஃபிர்கள் அல்ல நாங்கள் .. என்பதை குஃரை கொள்கையாக கொண்ட சலஃபுகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால், இப்படி நம்மிடம் கேள்வியெழுப்பிய அந்த ஈமான்தாரியிடம் (?), சூனியத்தால் பிஜெ தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கிறீர்களா? என்று சும்மா கேட்டு பார்த்தேன், வாய்ப்பில்லை என்று சொல்வார் என்று நினைத்து..
ஆனால் என்னை உச்சகட்ட வியப்பில் ஆழ்த்தும் விதமாய் அவர் சொன்ன பதில் "ஆம், வாய்ப்பிருக்கிறது", என்பதாகும்.
இனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு சொல்ல வேண்டுமா?
கண்ட கண்ட பொறுக்கியும் காஃபிரரும், நான் தான் அல்லாஹ் என்று ஊரை ஏமாற்றி திரிகிறான்,
அவன் அவனது வீட்டில் இருந்து கொண்டு எதாவது செய்தால் அதனால் சென்னையில் இருக்கும் பிஜெவுக்கு பாதிப்பு ஏற்படும், அதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று ஒருவன் சொன்னால் அப்படி சொல்பவன் அந்த அகோரி மணிகண்டனின் சிஷ்யனாக தான் இருப்பானே தவிர முஸ்லிமாக இருக்க மாட்டான் !
தவளை தன் வாயால் கெடுவதை போல், நாங்கள் காஃபிர்கள் தான், நாங்கள் காஃபிர்கள் தான் என்று கூவி திரிகிறது ஒரு கூட்டம் !
இதற்கு எதற்குய்யா இஸ்மாயில் என்றும் மசூத் என்றும் அப்துர்ரஹ்மான் என்றும் பெயர் வைக்கணும் ?
பேசாமல் அய்யாசாமி, முருகன், ராமகோபாலன் என்று பெயர் வைத்து விட்டு சபரிமலைக்கு போக வேண்டியது தானே..
எதற்கு இஸ்லாத்தை களங்கப்படுத்துகிறீர்கள் ??

இல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்??


சூனியம் தொடர்பாக இன்னொரு அற்புத (?) கேள்வியையும் கேட்கின்றனர்.
அதாவது, சூனியம் என்பதே கிடையாது என்று சொன்னால், சூனியம் பெரும்பாவம் என்றெல்லாம் ஹதீஸ்களில் வருகின்றதே, அவற்றுக்கு என்ன பொருள்??
இல்லாத ஒரு விஷயம் எப்படி பெரும்பாவம் ஆகும்?? என்று கேள்வி எழுப்புகிறார்கள்..
இதுவும் அடிப்படையற்ற ஒரு வாதமாகும்.
சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று யாரும் சொல்லவில்லை. சூனியம் என்பது உண்டு, அது ஒரு தந்திர வித்தை தானே தவிர மாய மந்திரங்கள் இல்லை என்பது தான் நமது வாதம்.
பேச்சு கூட சூனியம் என்று நபி (சல்) அவர்கள் சொல்லித்தான் இருக்கிறார்கள், மூசா நபிக்கெதிராக எதிரிகள் சூனியத்தில் தான் போட்டி போடவே செய்தனர் என்று அல்லாஹ்வே சொல்கிறான் எனும் போது சூனியம் என்கிற ஒன்றே கிடையாது என்று எந்த முஸ்லிமாவது சொல்வானா???
சூனியம் என்பது உண்டு. ஆனால் இவர்கள் சொல்லும் அர்த்தத்தில் உள்ள சூனியம் அல்ல. மாய மந்திரங்கள், அற்புதங்கள் என்கிற அர்த்தத்தில் சூனியம் என்பது உலகில் இல்லை, கியாமத் நாள் வரை அதை காட்ட இயலாது.
மூசா நபிக்கு எதிராக ஃபிர் அவ்னின் கூட்டத்தார் செய்து காட்டியது கூட அற்புதமல்ல, கண்களை ஏமாற்றும் வித்தை என்று அல்லாஹ்வே சொல்கிறான்.
அப்படிப்பட்ட வித்தைகளை வெறும் தந்திரம் என்று சொல்லி செய்யாமல் அற்புதங்கள் என்று சொல்லி ஒருவன் செய்தால் அது மிகப்பெரிய பாவம் என்று தான் ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றன.
தந்திரத்தை தந்திரம் என்றே சொல்லி செய்து காட்டுவது குஃப்ர் இல்லை, தந்திரத்தை அற்புதம் என்பதாக கூறி மக்களை ஏமாற்ற முயல்வது தான் குஃப்ர் !!
விபச்சாரம் செய்தால் தண்டனை என்று சொல்லப்பட்டால் விபச்சாரம் என்கிற ஒன்று இருக்கிறது என்று தானே பொருள்? அது போல் தானே சூனியத்தையும் புரிய வேண்டும்? என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.
எல்லாவற்றையும் அப்படி புரிய முடியாது. இருப்பதை செய்வதற்கும் தண்டனை என்று சொல்லப்படும், இல்லாததை இருப்பதாக நம்பி அல்லது பிறரை நம்ப வைத்து செய்வதற்கும் தண்டனை என்று சொல்லப்படும்.
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது கூட பெரும்பாவம் தான்.
அல்லாஹ்வுக்கு இணையிருப்பதாக நம்பினால் கடும் தண்டனை என்று அல்லாஹ் சொல்லி விட்டான், எனவே அல்லாஹ்வுக்கு இணையாக உலகில் சில விஷயங்கள் இருக்கதான் செய்கின்றன என்று யாராவது புரிவோமா?
இல்லை !
அல்லாஹ்வுக்கு இணையில்லை தான், இணையிருப்பதாக நீ நம்பாதே என்று தான் பொருள் கொள்வோம்.
அது போல்,
சூனியத்திற்கு எந்த அற்புத ஆற்றலும் இல்லை, அவ்வாறு இருப்பதாக நீ நம்பாதே என்று தான் புரிய வேண்டும்!
எளிமையாக புரிவோம், நேர்வழி பெறுவோம் !!

ஷாத் வகை ஹதீஸ்


ஒரு கருத்தை பல அறிவிப்பாளர்கள் அறிவித்து, அதற்கு மாற்றமான கருத்தை குறைவான அறிவிப்பாளர்கள் அறிவித்தால், குறைவான எண்ணிக்கையிலுள்ள அத்தகைய அறிவிப்பாளர்கள் பலமானவர்களாக இருந்தாலும் அத்தகைய ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்பது ஹதீஸ் உசூல்.
இதற்கு "ஷாத்" வகை என்று பெயர்.
குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று நாம் கூறுகையில் நம்மை விமர்சனம் செய்து, நாம் ஹதீஸ்களையே மறுக்கிறோம் என்றெல்லாம் கூறி கேலி செய்கிறவர்கள் கூட மேலே உள்ள உசூலை அங்கீகரிக்கின்றனர் என்பது உலக மகா நகைச்சுவையும் முரண்பாட்டின் மொத்த உருவமுமாகும் !
ஐந்து (உதாரணத்திற்கு) பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்த செய்திக்கு மாற்றமாக ஒரு பலமானவர் ஒரு செய்தியை அறிவித்தால் அந்த செய்தியை ஏற்க கூடாது என்று இவர்கள் சொல்வார்களானால்
அந்த அறிவிப்பாளர் தான் பலமானவராயிற்றே? அவரது செய்தியை புறக்கணிப்பது மட்டும் ஹதீசையே மறுப்பதாக ஆகாதா?
பலர் கூறியதற்கு மாற்றமாக ஒரு பலமானவர் ஒன்றை அறிவிக்கிறார், அவரது அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறீர்கள் என்றால் உங்கள் கருத்துப்படி அவர் பொய்யரா?
அவர் பொய்யரில்லை என்றால் அவர் அறிவிப்பாளர் தரத்தில் பலமானவர் என்று பொருள். அறிவிப்பாளர் தரத்தில் பலமானவர் என்றால் இவர்கள் கருத்துப்படி அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று பொருள்.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இவர்கள் மட்டும் மறுக்கலாமோ ?
மறுக்கலாம் என்று விதி வகுத்துக் கொள்ளும் அளவிற்கு ஹதீஸ் விஷயத்தில் அலட்சியம் காட்டலாமோ?
என்பன போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்பதன் மூலம் இது போன்ற மூடர்களின் முரண்பாடுகளையும், தனி மனிதரின் பேரிலுள்ள வெறுப்பிற்காக மார்க்கத்தை கூட குழி தோண்டி புதைக்க தயங்காத இவர்களது கீழ்நிலையையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஐந்து பலமான அறிவிப்பாளர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு பலமானவர் அறிவித்தால் அதன் காரணமாக அவரையே புறந்தள்ளி விடலாமென்றால், ஆயிரக்கணக்கான சஹாபாக்கள் அறிவித்த குர்ஆனுக்கு மாற்றமாக ஐம்பது அறிவிப்பாளர்கள் ஒன்றை அறிவித்தால் கூட, அதை தூக்கிப்போட என்ன தயக்கம் ?

இருக்கு.. ஆனா இல்ல..


இருக்கு.. ஆனா இல்ல..
முன்னாடி இருந்துச்சு, ஆனா இப்போ இல்ல..
இப்போ இல்ல.. ஆனா அப்போ இருந்துச்சு..
அதால எத வேணாலும் செய்யலாம்.. ஆனா செய்ய முடியாது..
அதால சாகடிக்கவும் செய்யலாம்.. ஆனா சாகடிக்க முடியாது.
மனக்குழப்பத்த மட்டும் தான் ஏற்படுத்த முடியும்.. ஆனா அத கூட எல்லாருக்கும் செய்ய முடியாது.
யார் வேணாலும் செய்யலாம், ஆனா அத கூட அல்லாஹ் நாடுனா தான் செய்ய முடியும்.
கை கால எல்லாம் முடமாக்கலாம் ஆனா நபிமார்கள் காலத்துல யாரும் அப்படி செய்யல..
நபி ஆறு மாசம் மனக்குழப்பத்துல இருந்தாங்கங்கறது உண்மை தான்.. ஆனா மனக்குழப்பத்துல இல்ல..
ஆறு மாசமா ஒருவர் மனக்குழப்பத்துல இருந்தா அவர் பேசுறதுல நிறைய தவறு வரும் தான். ஆனா குர் ஆனுல எந்த தவறும் இல்ல‌
அவருக்கு யாரும் சூனியம் செய்யல‌னு அல்லாஹ் குர் ஆனுல சொல்றது சரி தான்.. ஆனா சூனியம் செஞ்சிருக்காங்க..
அப்படி நம்புறது பாவம் தான்.. ஆனா அப்படி தான் நம்பணும்.
சூனியத்த செய்றது ஷைத்தான் வேல.. ஆனா அத கத்து தந்தது மலக்கு\
மலக்கு அல்லாஹ்வுக்கு மாறு செய்யவே மாட்டாங்க சரி தான். ஆனா அல்லாஹ்வுக்கு எப்படி இணை வெக்கிறதுன்னு கத்துக்கொடுப்பாங்க..
புஹாரி இமாம் மனிதர் தான். ஆனா அவர்கிட்ட தவறே வராது.
---
---
---
---
---
---
---
இப்படியெல்லாம் அந்தர் பல்டி, ஆகாய் பல்டிகள் பல அடித்து, முரண்பாட்டின் மொத்த உருவமாய் காட்சி தருவதை விட..
குர் ஆனில் சூனியம் என்பது பொய் என்று அல்லாஹ் சொல்லி விட்டபடியால், சூனியம் உண்மை என்பதாக வரக்கூடிய ஹதீஸ்கள் பொய்யானவை என்று ஒதுக்கி விடுகிறேன்..
என்கிற ஒற்றை வரியை சொன்னால் போதுமானது !
மூளையும் குழம்பாது, இணை வைக்க வேண்டிய நிலையும் வராது !!

சூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டது என்கிற வாதம் சரியா?



கடலில் தத்தளிப்பவன், ஒரு சிறு துரும்பு கையில் கிடைத்தாலும் அதைக்கொண்டு தப்பிக்க முடியுமா என்று சிந்திப்பதை போல தான், சூனியப்பிரியர்களின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகிக்கொண்டே வருவதையடுத்து, தங்கள் கடைசி புகலிடமாக இந்த வாதத்தை வைக்கின்றனர்!
இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியொரு வாதம் இது நாள் வரை இவர்களால் பெருமளவில் வைக்கப்பட்டதேயில்லை!
இது நாள் வரை சூனியம் உண்டு எனவும், அல்லாஹ் நாடினால் இப்போதும் அது பலிக்கும் எனவும் சொல்லி வந்தவர்கள் என்றைக்கு பிஜெ தன் உயிரையே பணயமாக வைத்து சூனியத்தை பொய்ப்பிக்க இறங்கினாரோ அன்று முதல் சூனியம் என்பது அப்போ இருந்த, இப்போ இல்லை, எனவே பிஜெ தோற்க மாட்டார் என வெட்கமில்லாமல் பேசி, தங்கள் அப்பட்டமான, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டுகின்றனர் .
இப்போது நாம் கேட்பது என்னவென்றால், ஏற்கனவே சூனியம் இருக்கு இருக்கு என்று சொல்லி வந்தவைகளுக்கு இதுவரை ஆதாரம் காட்டாத இவர்கள், யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்த கதையாய், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூனியம் என்பது அழிந்தே போனது என புது கதை விடுகிறார்கள் எனும் போது,
இவர்கள் இப்போது இதற்கும் ஆதாரம் காட்டியாக வேண்டும்.
சூனியம் என்பது மூசா நபி காலத்தில் இருந்தது, முஹம்மது நபி காலத்தில் இருந்தது என்றெல்லாம் இவர்கள் முன்வைக்கும் குர்ஆன் ஹதீஸ் சான்றுகள் அனைத்தும் சூனியம் உண்மை என்று சொல்வதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட, அவை எதிலாவது இந்த கலை இத்தோடு அழிந்து விட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறதா?
இவர்கள் வாதப்படியே, சூனியக்கலையானது ஹாரூத் மாஃரூத் எனும் மலக்குகள் மூலம், இதை கற்று வழிகெட்டு விடாதீர்கள் என்கிற எச்சரிக்கை செய்யப்பட்டு மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கப் பட்டது என்று தானே புரிய வேண்டும்?
இப்போது அந்த கலை தொடர்ச்சி பெறவில்லை என்று அந்த வசனம் சொல்கிறதா?
இவர்களின் புரிதலின்படியாவது சொல்கிறதா? இல்லையே !
அப்படி இவர்கள் புரிவார்களென்றால் கற்றுக்கொடுக்க வந்த மலக்குமார்கள் தங்கள் வேலையை உருப்படியாக செய்யவில்லை என்கிற கருத்து தான் மிஞ்சும்!
இருந்தது என்பதற்கு எப்படி ஆதாரம் காட்ட வேண்டுமோ , அழிந்து விட்டது என்பதற்கும் ஆதாரம் காட்டத்தான் வேண்டும்.
இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு திரியலாம்.
ஆண்கள் கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கம் ஒரு காலம் வரை இருந்தது, இன்று அது அழிந்து போனது என்று ஒருவன் முக்காடையும் இட்டுக்கொண்டு மைக்கில் பேசுவான்.
முக்காடல்லவா போட்டிருக்கிறான், அப்படியானால் அவன் சொல்வது சரி தான் என்போமா அல்லது இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவன் தலையை தட்டிக் கேட்போமா?
எவ்வளவு தான் சாப்பிட்டாலும் மலஜலம் கழிக்கும் அவசியம் ஏற்படாத அளவிற்கு திறமைகளை ஒரு காலத்தில் மனிதன் வளர்த்து வைத்திருந்தான், இன்று அது அழிந்து போனது என்று கூட ஒருவன் சொல்வான்.
தாடியும் முக்காடும் வைத்துக் கொண்டால் என்ன வேண்டுமானாலும் உளரிக் கொட்டலாம், மக்கள் நம்பி விடுவார்கள் என்கிற எண்ணமே இதற்கெல்லாம் காரணம் !
தலையில் முக்காடு மட்டும் இருந்தால் போதாது தலைக்குள்ளே கூறும் இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துள்ளதால் இவர்களைப் போன்றோரின் எந்த வாதமும் சிந்திக்கும் சமூகத்தில் எடுபடாது !!

அல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்கிற வாதம் சரியா?



அல் குர்ஆன் 2:102 வசனத்தில் அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான்,
இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்.
இது நுனிப்புல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.
அடிப்படையில் அது சூனியத்தை பற்றி பேசவில்லை என்பது முதலில் நாம் புரிய வேண்டிய ஒன்று, அது கணவன் மனைவியை பிரிக்க பயன்படுத்தப்படும் வித்தையை தான் சொல்கிறது.
ஒரு வாதத்திற்கு அது சூனியத்தை பற்றி தான் பேசுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட அப்போதும் சூனியம் என்பதே கிடையாது என்பதற்கும் அவ்வாறு அல்லாஹ் நாடவே மாட்டான் என்பதற்கும் தான் அது ஆதாரமாக இருக்கிறது.
அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை என்பதற்கு தான் அது சான்று !!!
சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுகிறார்கள் பாருங்கள் இவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அல்லாமல் வேறு யார்???
ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறிக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு.. என்று சொன்னால் இதன் பொருள் என்ன?
பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா?? அல்லது அல்லாஹ் நாடினால் பூனை குறிக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???
அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான இந்த சூனியத்தை நம்பிய முஷ்ரிக்குகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
சரி, இது தான் இவர்கள் வாதம் என்றால், குர் ஆனில் வரக்கூடிய இன்னொரு வசனத்தை இதே போல இவர்கள் பொருள் செய்வார்களா??
அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?' (6:80)
இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள். அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.
இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராகிம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா?
அல்லது அல்லாஹ் நாடினால் சிலைகள் இப்ராஹிம் நபிக்கு தீங்கு செய்யும், சிலைகளுக்கும் சக்தி உண்டு என்று பேசுகிற வசனம் இது என்று கூறுவார்களா??
சூனியம் என்பது பொய், அது ஒரு இணை வைப்பு, அதைக்கொண்டு வெற்றியடைவதற்கு அல்லாஹ் ஒரு போதும் நாட மாட்டான் !
ஒரு காலத்திலும் அல்லாஹ் நாடாத ஒன்றை, அல்லாஹ் நாடாததால் நடக்கவில்லை , நாடியிருந்தால் நடந்திருக்கும் என்று சொல்வது அல்லாஹ்வையே கேலி செய்வதாகும் !!