புதன், 11 ஜூன், 2014

இப்ராஹீம் நபி சொன்ன பொய்


சிலைகளை உடைப்பதற்கு ஊரார் முழுக்க திருவிழா சென்ற சமயத்தை தேர்வு செய்த இப்ராஹிம் நபி, தக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள்.
நீயும் எங்களுடன் திருவிழாவிற்கு வா என ஊர் மக்கள் அழைத்த போது, தமக்கு உடல் நிலை சரியில்லை என்கிற காரணத்தை சொல்லி தவிர்த்து கொண்டார்கள்.

இது அல்லாஹ் குர் ஆனில் சொல்லும் செய்தி.. 

இது இப்ராஹிம் நபி சொன்ன பொய் என்று அனைவருமே அறிந்து தான் வைத்திருக்கிறோம்.

முஸ்லிம்கள் மத்தியில் அதிகமான மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இவ்விஷயத்தில் இல்லை.

ஆனால், இதை விமர்சிக்க புகுந்திருக்கும் காதியானி மதத்தை சேர்ந்தவர்களில் சிலர், இதிலும் மார்க்க அறிஞர் பிஜெவை இழுத்திருக்கிறார்கள் !

அதாவது, இப்ராஹிம் நபி பொய் சொன்னதாக பிஜே சொன்னாராம்.

அட அறிவிலிகளே, இதை பிஜெ என்ன, ஊரே சொல்கிறதே, ஒட்டு மொத்த உம்மத்தே சொல்கிறதே..

எதை ஒட்டு மொத்த உம்மத்தும் அங்கீகரித்திருக்கிறதோ அதை விமர்சிக்கும் போதும் கூட‌ பிஜே என்கிற மனிதரை குறை சொல்லி தான் உங்கள் வயிறுகளை வளர்க்க வேண்டுமா?

சரி, அந்த இறை வசனத்திற்கு பிஜே தரும் விளக்கம் சரியா என்றே பார்போமே..

37:89 வசனத்தில், "நான் நோயாளி" என்று இப்ராஹிம் நபி சொன்னார்கள் என்று தான் உள்ளது, அதை பொய்யாக சொன்னார் என்று குர் ஆனில் இல்லை என்பது சரி தான்.
குர் ஆனுக்கு விளக்கவுரை தான் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.
இந்த வசனத்திற்கும், இப்ராஹிம் நபியை பற்றிய ஏனைய செய்திகளாகவும் நபி (சல்) அவர்கள் சொல்லும் போது,

இந்த பதிலை இப்ராஹிம் நபி பொய்யாக தான் சொன்னார்கள் என்று தெளிவாக விளக்குகிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத்தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் விஷயத்தில் சொன்னவையாகும்.
அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘நான் நோயுற்றிருக்கிறேன்” என்று கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், ‘இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது,’ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும். 3. கொடுங்கோல் மன்னனிடம் தமது துணைவியாரை சகோதரி என்று கூறியது..

(முழு ஹதீஸின் சுருக்கமான‌ கருத்து)

இந்த ஹதீஸ் புஹாரி 3358, முஸ்லிம் 4371 ஆகிய ஹதீஸ்களாக பதியப்பட்டுள்ளன.

பிஜேவை சுரண்டி பிழைப்பு நடத்துவோர், குர் ஆன் ஹதீஸை சிந்திப்பதற்கும் நேரத்தை செலவிடட்டும் என்று இதன் வாயிலாக அறிவுரை கூறிக் கொள்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக