புதன், 11 ஜூன், 2014

வெற்றியை நோக்கி நடிகை மோனிகா


பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவுகிற போது, அவர்களை அபிமானிகளாகவும் அவர்களை ரசிக்கும் ரசிகர்களாகவும் உலா வரும் ரசிகர்களுக்கு அந்த செய்தி, சிந்தனை தூண்டுதலாக இருக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவுகிற செய்திகள் பரப்பபட வேண்டும்.

மற்றபடி, முதல் மனிதரான ஆதம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் கூட, இஸ்லாம் மகத்தான மேன்மைமிக்க மார்க்கம் தான் !

இன்று நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். 20 வருடங்களுக்கும் மேலாக பணமும் புகழும் தந்த சினிமாத்துறையை விட்டு விடுவதற்கு கூட, அதிலும் இந்த இள வயதில், அத்தகைய பேர், புகழை உதறித் தள்ளும் அளவிற்கு ஒரு மனமாற்றம் வழி வகுத்திருக்கிறது என்றால் அது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

அதே சமயம், இது தான் இயல்பு, இது தான் நிதர்சன உண்மை !

இயற்கை மார்க்கம் நம் உள்ளத்தில் ஆழமாக பதிந்தால் அந்த மார்க்கத்தை முழுமையாக பேணாமல் எவராலும் இருக்க முடியாது.
அந்த மார்க்கத்தில் இருந்து கொண்டே அதற்கு எதிரான காரியங்களில் ஈடுபட முடியாது !

இத்தனை வருடங்கள் தவறான பாதையில் இருந்தபடியால், அத்தகைய வாழ்வை தந்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டியதில்லை, அதை எண்ணி மகிழ்ச்சி கொள்ள வேண்டியதும் இல்லை என்கிற செய்தியை மட்டும் நடிகை மோனிகாவுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

பணமும் பெயரும் நிலைக்காது.. பொய் வாழ்வின் பூரணமாக நிற்பது இறந்த பிறகு நாம் செல்லும் இடத்திற்காக நாம் இன்று சேர்த்து வைக்கும் சொத்து ஒன்று தான் !

அந்த வகையில் இஸ்லாத்தை தன் சொத்தாக தேர்வு செய்த நடிகை மோனிகா வெற்றியை நோக்கி திரும்பி விட்டார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக