புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (B)

மிர்சா சாஹிப் சுய சிந்தனையுள்ள‌ மனிதர் தானா?

Mirza Sahib subject (part 2)
-----------------------------------------------------------------------

ஒருவரை நபியென்று சொல்வதற்கு நீங்கள் வைத்த மூன்றாவது அளவுகோல், அவர் வாழும் காலத்தில் இறைவனால் அவர் தண்டிக்கப்பட்டாரா என்று பார்ப்பது, பொய் நபி என்றால் வாழ்கிற காலத்திலேயே அவர் தண்டிக்கப்பட்டிருப்பார், மிர்சா சாஹிப் அவ்வாறு தண்டிக்கப்பட்டாரா? என்று பார்க்க வேண்டும்..

என்பது உங்கள் அளவுகோல்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். வாழும் காலத்திலேயே தண்டிக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயமொன்றும் இல்லை, அல்லாஹ் அவ்வாறு சொல்லவுமில்லை என்று.

நீங்கள் ஒரு வசனத்தை காட்டியிருக்கிறீர்கள்.

69:45 அவர் எந்த சொல்லேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தி இருந்தால் நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கைய்யால் பிடித்திருப்போம். பின்னர் நிச்சயமாக நாம் அவருடைய பெரு நரம்புக்குழாயை தூண்டித்திருப்போம்.

இதிலிருந்து பொய் நபி யாராக இருந்தாலும் அவரை அல்லாஹ் தண்டிப்பான் என்கிற கருத்திருப்பதாக புரிவது தவறு.

இந்த வசனம் நபி (சல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் பேசும் வசனம். அவர்களை தன் தூதராக அல்லாஹ் தேர்வு செய்த பிறகு, தூதர் என்கிற கர்வத்துடன் சுயமாக அவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றி விடக்கூடாது, அப்போதும் அல்லாஹ்விடமிருந்து சட்டங்களை பெற்று தான் அறிவிக்க வேண்டும் என்கிற செய்தி தான் இதில் உள்ளதேயல்லாமல், பொய்யாக தன்னை நபியென கூறூவோர் பற்றி பேசும் வசனமல்ல !

அதே சமயம், பொய்யாக தன்னை நபியென கூறுவோரை அவர்களது மரணம் வரை விட்டு வைப்பதாக அல்லாஹ் சொல்லும் வேறொரு வசனத்தை நான் ஏற்கனவே காட்டியிருந்தேன்.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். 'உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாத வற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்). (6:93)

இந்த வசனத்தின் கருத்தை மறுத்த நீங்கள்,

////அல்லாகுவின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவர் களுக்குத்தான் தண்டனையை பற்றி கூறப்பட்டுள்ளது. மிர்சா சாஹிப் எதையும் இட்டுக்கட்டவில்லை///

///அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று மிர்சா சாஹிப் எதையும் கூறவில்லை. அதாவது குரான் ஹதீசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட மிர்சா சாஹிப் கூறவில்லை.///

என்று வேடிக்கையான பதிலொன்றை சொல்கிறீர்கள்.

உங்கள் வாதம் என்ன என்பதையே மறந்து விட்டு சம்மந்தமேயில்லாமல் விவாதம் செய்கிறீர்கள் என்பதற்கு உங்களது இந்த பதிலே சாட்சி.
நகைச்சுவை என்னவென்றால் இந்த பதிலிலேயே, அவர் பொய் நபி என்றால் அவர் மரணத்தின் போது தான் தண்டிக்கபடுவார் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.

மிர்சா சாஹிப் பொய்யராக இருந்தால் அவர் இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.. பொய் நபி உலகிலேயே தண்டிக்கப்படுவார் என்று அல்லாஹ் சொல்கிறான்.. என்பது தானே உங்கள் வாதம்?

இந்த வாதம் தவறு என்பதற்கு தான் மேலேயுள்ள 6:93 வசனத்தை நான் காட்டுகிறேன்.

பொய் நபி என்பதற்காகவெல்லாம் உடனுக்குடன் அல்லாஹ் தண்டித்து விட மாட்டான், அவர்களது மரண வேளையில் தான் அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் என்று அல்லாஹ்வே இந்த வசனத்தில் சொல்கிறான்.

இதற்கு பதில் சொல்லாமல், எங்கள் மிர்சா ஒன்றும் பொய் நபியில்லை என்று பதில் பேசுகிறீர்கள்.

மிர்சா பொய் நபி என்று இந்த வசனம் சொல்வதாக நான் சொல்லவில்லை. அவர் பொய்யராக இருந்தால் அதற்காக இவ்வுலகிலேயே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று தான் நான் சொல்கிறேன்.

மிர்சா பொய்யரா இல்லையா என்பதை தானே விவாதித்து கொண்டிருக்கிறோம்? அவர் பொய்யராக இருந்தால் இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே? என்கிற உங்கல் கேள்வி அர்த்தமற்றது என்பதை தான் இந்த வசனம் பேசுகிறது.

அவர் பொய் நபியாக இருந்தாலும் வாழும் போது தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார்.

அல்லது அவர் தண்டிக்கப்படவில்லை என்பதை வைத்தெல்லாம் அவர் உண்மை நபி என்று வாதிட முடியாது..

இது தானே விஷயம். எப்படிப் பார்த்தாலும் பொய் நபியென்றால் வாழும் போது தண்டிக்கப்படுவார் என்கிற கூற்றை அல்லாஹ் மறுக்கிறான் என்பது தெளிவு !

அதை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதும் தெளிவு!!
இன்னும் சொல்லப்போனால் நபி (சல்) காலத்திலுள்ள யூதர்கள் கூட அல்லாஹ்வின் பெயரால் வசனங்களை இட்டுக்கட்டி பொய்யுரைத்தனர் என்று அல்லாஹ் 3:78 வசனத்தில் சொல்கிறான்.

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். ''இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். 3:78

அவர்களும் மரணத்திற்கு பிறகு தான் தண்டிக்கப்படுவார்கள் என நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய வசனம் சொல்கிறது.

இப்போது, வாருங்கள் அவர் பொய் நபியா இல்லையா என்பதை தொடர்ந்து பேசுவோம்.

அடுத்து,

//மிர்சா சாஹிப், வஹீயாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தான் கூறினார் .
“அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' என்று இருப்பதால் இறைவன் அறிவிப்பதை, அறிவிக்கலாம் என்ற பொருள் இதில் இருக்கிறது.
எனவே நபி ஸல் அவர்களுக்கு பிறகு அல்லாஹு பேசுவான் என்பதற்கு இந்த வசனம் ஒரு சான்றாகும்.//

என்கிற புல்லரிக்கும் வாதமொன்றை வைக்கிறீர்கள்.

அல்லாஹ் அறிவிக்காததை அறிவித்ததாக சொல்வது தவறு என்று அல்லாஹ் சொல்வதால் அல்லாஹ் அறிவித்தால் அறிவிக்கலாம் என்று தான் புரியலாமே தவிர, அல்லாஹ் இனி அறிவிப்பான் என்று புரிய முடியாது.

அல்லாஹ் இனி அறிவிப்பான் என்று சொல்கிற வசனமல்ல இது.

நான் திருடாமல் இருக்கும் போது என்னை திருடன் திருடன் என்று நீ ஊர் முழுக்க பரப்புவாயானால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று நான் எச்சரிக்கை செய்கிறேன் என்று வைப்போம்.

இதற்கு என்ன பொருள்? என்னை திருடன் என்று சொல்லாதே, நான் திருடன் இல்லை என்று பொருள்.
நான் திருடினால் என்னை திருடன் என்று சொல் என்று வேண்டுமானால் இதற்கு அர்த்தம் கொடுக்கலாம்.

அல்லாமல், நான் இனி திருடுவேன், அப்போது என்னை திருடன் என்று நீ சொல் என்கீற அர்த்தம் வருமா? என்றால் வராது.

இந்த வசனத்தின் உண்மை பொருள் தான் என்ன?

இதில் மூன்று வகையான மனிதர்களை அல்லாஹ் மரணம் வரை விட்டுப் பிடிப்பான் என்று சொல்லப்படுகிறது.

1. அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன்
2. தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன்
3.அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன்.

இதில் இரண்டாவது சொல்லப்படும் தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன் தான் மிர்சா சாஹிபுக்கு பொருந்தும்.

மற்ற இரண்டும் மிர்சா சாஹிபுக்கு பொருந்துகிற மாதிரியே வேறு பலருக்கும் பொருந்தும்.

அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டக்கூடியவர்கள் உலகில் இல்லையா? எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் உள்ளன, எத்தனையோ போலி சாமியார்கள், பாவாக்கள் வலம் வருகின்றனர். அல்லாஹ்விடம் பேசுகிறேன், இறந்து போன உன் தாத்தாவிடம் அல்லாஹ்வின் உதவியால் இப்போது பேசுகிறேன் என்றெல்லாம் மக்களை மூடர்களாக்கும் கூட்டத்தார் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சாய் பாபா போன்ற பொய் கடவுள்கள், கடவுளிடம் உங்களை நெருங்க செய்கிறேன் என்று கூறி தானே ஊரை ஏமாற்றினார்கள். இது அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டுதல் அல்லாமல் வேறு என்ன?

ஆக, இது போன்ற எந்த பாவத்திற்கும் அல்லாஹ் உடனுக்குடன் தண்டனை அளிக்க மாட்டான். வஹி வராமல் வஹி வந்ததாக கூறீய மிர்சாவுக்கும் அவர் வாழும் போதே அல்லாஹ் தண்டிக்கவில்லை.

அவர் ஒன்றும் வஹி வராமல் வஹி வந்ததாக சொல்லவில்லையே? என்கிற உஙக்ல் வாதத்திலிருந்தே வஹி வராமல் வந்ததாக கூறினால் அவர் வாழும் காலத்திலேயே தண்டிக்கப்பட மாட்டார் என்கிற எனது வாதம் சரி தான் என்று உங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறீர்கள் என்று பொருளாகிறது.

அடுத்து,

///நபி ஸல் அவர்களை பின்பற்றி வந்த,மிர்சா சாஹிபும் உண்மையாளர் என்பதால் தான் அவருக்கு அல்லாஹு நீண்ட வாழ்க்கையை, அதாவது வாதம் செய்த பிறகு 33 ஆண்டுகாலம் வாழச்செய்தான்.

ஆனால் எல்லா பொய் நபியையும் அல்லாஹு உடனேயே அழித்துவிட்டான்.///

என்று மற்றுமொரு வேடிக்கையான வாதத்தை எழுப்புகிறீர்கள். 33 ஆண்டுகள் வாழ்ந்து விட்டால் அவர் நபியாகி விடுவாரா?

சரி, எல்லா பொய் நபிமார்களையும் அல்லாஹ் அழித்து விட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த பொய் நபிமார்களின் பட்டியலை தந்து, எந்த வருடம் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்கிற விபரத்தை தாருங்களேன் பார்ப்போம்.

உங்களால் தர முடியாது. பின் ஏன் இந்த ஆதாரமற்ற பேச்சுக்கள்?

அல்லாமல், 73 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்தார் என்பதால் அவர் நபி என்று சொல்வதெல்லாம் மிகவும் பாமரத்தனமான சிறூ பிள்ளை வாதங்கள் என்று கூட உங்களுக்கு புரியாதது நமக்கே வியப்பாக இருக்கிறது.

மிர்சா சாஹிபை நபியாக்க இந்த அளவிற்கு பலகீனமான வாதங்கள் தான் உங்களிடம் உள்ளதா?

எங்கள் ஊரில் கூட 101 வயது முதியவர் இருக்கிறார். அவர் நாளை தன்னை நபியென்று அறிவிப்பு செய்து விட்டால் என் சிறீய தந்தை ஓடோடி வந்து, ஆஹா 101 வயது !! எவ்வளவு நீண்ட ஆயுள், ஆகவே இவர் நபி தான் என்று அவரையும் நபியென்று ஒப்புக் கொண்டு விடுவார் போலும் !

என்ன கொள்கையோ, என்ன மதமோ, எனக்கு புரியவில்லை !!

அடுத்து,

///தெருவில் போகிற யாரோ ஒருவரை இவர் தான் நபி என்று யாரும் சொல்லமாட்டார்கள். அப்படி ஒரு மடையன் உன்னை பார்த்து சொல்லிவிட்டான் என்று வைத்துக் கொண்டால் கூட நீ நபிப் பொறுப்பை ஏற்று கொண்டுவிடுவாயா?///

என்று மிகவும் அழகான கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறீர்கள்.

ஆம், மடையன் சொன்னால் நிச்சயமாக ஏற்க மாட்டேன். மாறாக அவன் மடையன் என்று தான் நிரூபிப்பேன். அதை தான் பல சான்றுகளுடன் நிரூபித்தும் வருகிறேன்.

ஆக,
ஒருவர் தன்னை நபியென சொல்வது வரை உண்மையாளராக, நல்லவராக வாழ்ந்தாரா? என்று பார்க்க வேண்டும் என்பது உங்கள் முதலாவது அளவுகோல்.

நபியென அறிவிப்பு செய்த பிறகு அவரை எல்லாரும் திட்டினால் அவர் நபி தான் என்பது அதன் மூலம் நிரூபணமாகும் என்பது உங்கள் இரண்டாவது அளவுகோல்.

பொய்யான நபியென்றால் அவர் வாழும் போதே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உங்கள் மூன்றாவது அளவுகோல்.

மூன்று அளவுகோல்களும் அடிப்படையேயில்லாத, படித்தாலே சிரிப்பை வரவழைக்கக்கூடிய‌ அளவுகோல்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

ஆனால், நான் பல அளவுகோல்களை சொன்னேன்.

அவர் கொண்டு வந்த வேதம் மனித வார்த்தையா அல்லது அதை தாண்டிய அற்புதம் அதில் இருக்கிறதா என்று பார்ப்பது.

விஞ்ஞானிகளால் இன்றைக்கு கூட புரிய முடியாத பேருண்மைகளை அது தாங்கி நிற்கிறதா என்று பார்ப்பது..

அவர் சொன்ன முன்னறிவிப்புகள் நடந்தேறியனவா? என்று பார்ப்பது.

அவர் இறை செய்தி என கூறீயவை அர்த்தமற்ற உளரல்கலாக இல்லாமல் சிந்தனையை தூண்டக்கூடியதாக இருக்கிறதா? என்று பார்ப்பது.

வஹியில் முரண்பாடுகள் உள்ளனவா? என்று ஆராய்வது..

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அற்புதங்கள் எதையும் நிகழ்த்திக் காட்டினாரா என்று பார்ப்பது.

இவை தான் சரியான அளவுகோல்.

இந்த அளவுகோல்களின் படி தான் மிர்சாவையும் நான் எனது முந்தைய பதிவில் உரசினேன். 13 உரசல்களை உரசியிருந்தேன். அவற்றில் ஆறுக்கு மட்டும் சில மழுப்பல்களை செய்திருக்கிறீர்கள். மீதியை கண்டு கொள்ளவேயில்லை.

நீங்கள் மழுப்பியவைகளையும், கண்டு கொள்ளாமல் விட்டதையும், இன்னும், மிர்சாவின் வேறு புதிய‌ வண்டவாள‌ங்களையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக