புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (A)


மிர்சா குலாம் சுய சிந்தனையுள்ள‌ மனிதர் தானா?

(மிர்சா குலாம் Subject ‍- பாகம் : 1)

-----------------------------------------------------------------------

உங்களது வாய்ப்புகளின் போது, ஈஸா நபியின் மரணத்தை முதலில் எழுதி, பின் நபிக்கு பிறகு இன்னொரு நபி வரலாம் என்று இரண்டாவது கூறி, மிர்சா சாஹிப் நபியா என்கிற தலைப்பை கடைசியாக எடுத்திருக்கிறீர்கள்.

கடைசியாக நீங்கள் எடுத்த தலைப்பில், நான் எழுப்பிய எல்லா வாதங்களுக்கும் பதிலை சொல்லியிருக்கிறீர்களா? என்றால் இல்லை.

மிர்சா சாஹிப் என்பவர் நபியாக அல்ல, உங்களையும் என்னையும் போன்ற சராசரி மனிதராக இருக்கக் கூட தகுதியற்ற ஒருவர் தான் என்பதற்கு 13 சான்றுகளை எனது முந்தைய பதிவில் தந்திருந்தேன்.

13 இல், ஆறு சான்றுகளுக்கு பதில் என்கிற பெயரில் சமாளிப்போ சமாளிப்பு என உலக மகா சமாளிப்புகளை நிகழ்த்தி, உங்களை சார்ந்தவர்களை திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.

மீதமுள்ள ஏழு சான்றுகளை நீங்கள் கண்டுகொள்ளவேயில்லை.

நீங்கள் பதில் என்கிற பெயரில் சமாளித்துள்ள ஆறு மசாயில்கள் குறித்த நிலையை விலாவாரியாகவே பார்த்து விடுவோம்.

அதற்கு முன், இந்த விவாதத்தின் போக்கினை சற்று விளக்க வேண்டியுள்ளது.

ஒருவரைப் பார்த்து, இதோ போகிறாரே, அவர் தான் நபி என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள்.

நியாயப்படி நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதோ போகும் அந்த நபர் இன்னின்ன காரணங்களால் நபி என்று காரணங்களை அடுக்கிகூறி, சான்றுகளை முன் வைத்து நிரூபிக்க வேண்டும்.

அதை நீங்கள் செய்திருக்கிறீர்களா? மிர்சா என்பவர் நபி தான் என்பதற்கு ஒரு சான்றையாவது முன் வைத்திருக்கிறீர்களா? என்று உங்கள் மொத்த பதிவுகளையும் உளவுப்படையை விட்டு தேட சொன்னாலும் ஒரு சான்றைக் கூட அவர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

ஆனால நான் என்ன செய்கிறேன்? அதோ போகிறாரே அவரை நீங்கள் காரணமேயில்லாமல் நபி, நபி என்கிறீர்கள், ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் அண்டப்புளுகர், ஆகாசப்புளுகர்..
அவர் ஒரு ஏமாற்றுப்பேர்வழி, என்று கூறுகிறேன்.

கூறுவதோடு நிற்காமல், எனது கூற்றுகளுக்கு 13 சான்றுகளையும் காட்டுகிறேன்.

நீங்கள் இதற்கு என்ன செய்கிறீர்கள்? அவர் பொய் சொல்கிறார் என்று நான் சொன்னவைகளை எடுத்து வைத்து,
இல்லை இது ஒன்றும் பொய் இல்லை,
இது ஒன்றும் புரட்டு இல்லை, இதை இப்படி புரியக்கூடாது,
இதை அப்படி தான் புரிய வேண்டும் ..இதை கற்பனை என்று புரிய வேண்டும், இதை கனவு என்று புரியவேண்டும், அந்த ஆணை பெண் என்று புரிய வேண்டும்,
அந்த பெண்ணை ஆண் என்று புரிய வேண்டும். நாய் என்று சொன்னால் நாய் என்று புரியக் கூடாது, மனிதர் என்று புரிய வேண்டும்,

என்று ஒவ்வொன்றுக்கும் அறிவுப்பூர்வமான (???) விளக்கம் தந்து அவர் பொய்யர் என்று நான் சொன்னதற்கு பதில் சொல்லி, அவர் பொய்யர் இல்லை என்று நிரூபிக்கப்பார்க்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு, எனது 13 மசாலாக்களுக்கும் நீங்கள் மிக சரியான‌ விளக்கங்களை கூறி அவர் பொய்யர் என்கிற எனது நிலைபாடினை முறியடித்திருந்தால் கூட, அவர் பொய்யரில்லை என்பது தான் நிரூபணமாகியிருக்குமே தவிர, அப்போதும் அவர் நபி என்பது நிரூபணமாகுமா? என்றால் ஆகாது.

அவர் பொய்யரில்லை, உங்களையும் என்னையும் போன்ற நல்ல குடும்பத்தில் பிறந்த மனிதர் தான் என்று தான் நிரூபணமாகும்.
அல்லாமல்,
அந்த நல்ல குடும்பத்து நபர் தான் நபி என்றால் நபிக்குரிய காரணங்களை நீங்கள் தான் முன் வைக்க வேண்டும்.

நபியில்லை எனபதற்குரிய சான்றுகளாக நான் முன்வைப்பவற்றுக்கு வெறுமனே பதில் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது என்பதை இங்கே நினைவூட்டி விட்டு,

அவர் பொய்யர் என்பதற்கு நான் வைத்த சான்றுகளையும், மிர்சாவுக்கு முட்டுக் கொடுக்க நீங்கள் அடித்துள்ள அந்தர் பல்டி, ஆகாய பல்டி, மார்க்க விஷயங்களில் உங்களது அறியாமை, என அனைத்தையும் ஒவ்வொன்றாக விளக்குவோம்.

இறுதியில், அவர் உங்களையும் என்னையும் போல நல்ல குடும்பத்தில் பிறந்த சாதாரண மனிதர் என்று கூட சொல்ல முடியாது என்பதும், தரங்கெட்ட வளர்ப்பினால் தறுதலையாக சென்று, தன்னை நபியென சொல்லி ஊரை ஏமாற்றி நரகின் கொள்ளிக்கட்டையாக ஆனவர் தான் இந்த மிர்சா சாஹிப் என்பதும் தெளிவாக நிரூபணமாகும்.

உங்களது எந்த சால்ஜாப்பும் உங்கள் கொள்கையை தூக்கி நிறுத்தவே நிறுத்தாது.

விஷயத்திற்கு வருவோம்.

ஒருவரை நபியென சொல்வதாக இருந்தால் அவர் கூறிய முன்னறிவிப்புகள் மெய்யாகவே நடந்தேறின என்று காட்ட வேண்டும், நபியென ஏற்கலாம்.

அவர் இறை செய்தி என்று சொல்பவை உண்மையில் இறை செய்திக்குரிய தகுதியுடையதாக இருக்க வேண்டும், மனிதனால் சிந்திக்க முடியாத, மனித சக்திக்கு அப்பாற்பட்ட செய்திகளை கொண்டதாக அந்த செய்திகள் இருக்க வேண்டும், நபியென ஏற்கலாம்.

அல்லது, அவர் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும், அப்போதும் நபியென நம்பலாம்.

முஹம்மது நபியை நபியென்று எப்படி நம்புகிறாய் என்கிற பாமரத்தனமான, இஸ்லாத்தின் எல்கேஜி கேள்வியொன்றை பலமுறை கேட்டு வருகிறீர்கள்.

இதோ மேலே உள்ள அளவுகோலின் படி தான் நம்புகிறேன்.

அவர்கள் அறிவித்த முன்னறிவிப்புகள் நிகழ்ந்தன, எனவே அவர்கள் நபி !

அவர்கள் வேதம் என்று கொண்டு வந்த குர் ஆன், மனித வார்த்தைகளை கொண்டதல்ல என்று தனக்கு தானே சான்று பகர்ந்து, ஒட்டு மொத்த உலகத்திற்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது, எனவே அவர்கள் நபி !!

அவர்கள் பால் அற்புதங்களும் நிகழ்ந்துள்ளன, ஆகவே அவர்கள் நபி !

இந்த அளவுகோல் கொண்டு தான் எவரையும் நாம் உரசிப்பார்க்க வேண்டும்.

இதையே தான் மிர்சா சாஹிப் விஷயத்திலும் நாம் செய்கிறோம்.

ஆனால் அந்தோ பரிதாபம், அவரை உரசினால் அவர் ஒரு பொய்யர் என்பது தான் நிரூபணமாகிறதே தவிர,அவர் நபியென நிரூபணமாகவில்லை.

அவர் வஹி செய்தி என்று சொல்பவை, ஏதோ ஒரு போதை தலைக்கேறி பேசுபவனின் உளரல்களாக தான் இருக்கின்றனவே அல்லாமல், நபியின் கூற்றாக நிச்சயம் இல்லை.

அவரிடம் மனித தன்மைக்கு அப்பாற்பட்ட எந்த அற்புதத்தையும் காண முடியவில்லை.

ஆகவே, நபி என்பதற்குரிய அளவுகோல்கள் மிர்சா விஷயத்தில் பொருந்தவில்லை.

தொடர்ந்து,
நீங்கள் மூன்று அளவுகோல்களை முன்வைத்திருந்தீர்கள். அந்த அளவுகோலை வைத்து மிர்சா சாஹிபை உரசிப்பார்ப்பதற்கு முன்பாக, அந்த அளவுகோல் அர்த்தமுள்ள அளவுகோலா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.

நீங்கள் வைத்த முதல் அளவுகோல், அவரது முந்தைய காலத்தில் அவர் நல்லவராக இருந்தார், உண்மையாளராக இருந்தார், நபியென தன்னை சொல்லப்பட்ட பின்னர் தான் அவரை மக்கள் ஏசுகிறார்கள்

என்பதாகும்.

இது எப்படி அர்த்தமுள்ள அளவுகோலாகும்?
தன்னை நபியென சொல்லிக் கொள்வதற்கு முன்பாக நல்லவராக இருந்தால் நம் சொத்தை எழுதி கொடுக்கலாம், நம் வீட்டு பெண்களை அவருக்கு திருமணம் வேண்டுமானால் செய்து வைக்கலாம்,
நம் வியாபார கணக்கு வழக்கை கவனிக்கும் பொறுப்பை வேண்டுமானால் கொடுக்கலாம்..

நபியென்று எப்படி அழைப்பது?? இது தானே கேள்வி !

ஒருவர் நல்லவராக வாழ்வதனால் அவர் நபியாக ஆகிவிடுவாரா? இது என்ன அர்த்தமற்ற அளவுகோல்??

அப்படியானால் நாட்டில் நல்லவர்கள் எவர் என்றாலும், அவர் தன்னை நபியென்று அறிவிப்பு செய்து விட்டால் உடனே ஒப்புக் கொண்டு விடலாமா? என்ன பேசுகிறீர்கள் என்று புரிந்து தான் பேசுகிறீர்களா?

அடுத்ததாக, நீங்கள் வைத்த இரண்டாவது அளவுகோல்,
மிர்சா சாஹிபின் வண்டவாளங்களை நாம் எடுத்துக் காட்டும் போது, பாருங்கள், இப்படி தான் முஹம்மது நபியையும் திட்டினார்கள், ஆகவே மிர்சா சாஹிப் நபி தான் என்பது நிரூபணமாகிறது என்கிறீர்கள்.

உங்கள் வாதங்களை நினைத்து சிரிப்பதா அழவா என்று எனக்கு புரியவில்லை.

அவரை நான் திட்டுகிறேனாம், யூதர்களும் முஹம்மது நபியை திட்டினார்களாம், எனவே முஹம்மது நபியை போல் இவரும் நபிதானாம்.

இது என்னப்பா கேலிக்கூத்தாக இருக்கிறது? திட்டு வாங்கிறவனெல்லாம் நபியா?

இவர் திட்டு வாங்குகிறார் என்றால், திட்டு வாங்குகிற விதமாக நடந்து கொண்டார், எனவே திட்டு வாங்குகிறார். முஹம்மது நபியை காரணமேயில்லாமல் திட்டினார்கள். இரண்டும் சமமா?

அப்படியானால் எந்த தெருப்பொறுக்கியும் தன்னை நபி என்று வாதிடலாம் என்று சொல்ல வருகிறீர்களா?
என்னடா நீ நபியா? நேற்று கூட தன்ணியடித்து விட்டு தெருவில் விழுந்து கிடந்தே? நீ நபியா?

என்று கேட்டால்..

ஹா.. பார்த்தீர்களா, யூதர்கள் முஹம்மது நபியை திட்டினார்கள், நீங்கள் என்னை திட்டுகிறீர்கள். ஆகவே நான் நபி, நான் நபி !!

என்று ஒருவர் சொன்னால் அவரை அறிவுள்ள மனிதராக தான் நீங்கள் காண்பீர்களா?

திட்டு வாங்குவதெல்லாம் ஒருவரை நபியாக்காது. திட்டுக்கு ஏதும் காரணமிருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

முஹம்மது நபியை, இப்போது மிர்சா சாஹிபை நாங்கள் திட்டுவது போல தான் யூதர்கள் திட்டினார்களா? என்றால் இல்லை.

முஹம்மது நபியை அவர்கள் மறுத்தார்கள், மனமுரண்டாக மறுத்தார்கள்.
அவர்கள் அறிந்து கொண்டே வேண்டுமென்றே தான் மறுத்தார்கள்.
இதை அல்லாஹ்வும் குர் ஆனில் சொல்கிறான்.

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர். (2:75)

வேண்டுமென்றே மறுத்த காரணத்தால் அவர்களால் சான்றுகளை காட்டி மறுக்க முடியவில்லை.
சான்றுகளை காட்டி மறுக்க முடியாவிட்டாலும் மறுக்க வேண்டும். ஆகவே தான் எந்த சான்றையும் முன்வைக்காமல் நபியை பைத்தியக்காரர் என்றார்கள், பொய்யர், கவிஞர் என்றார்கள், சூனியம் செய்யப்பட்டவர் என்றார்கள்.

ஆனால், மிர்சா சாஹிபை நாம் மறுக்கிறோம் என்றால் அவரை மறுப்பதற்குரிய காரணங்களை காட்டி மறுக்கிறோம்.
அவர் பொய்யர் என்பதற்கு இதோ சான்றுகள் என காட்டி பொய்யர் என்கிறோம்.

எனவே, இது போன்ற அளவுகோல் கொண்டு மிர்சாவை உரசிப்பார்க்க முடியாது.

மிர்சாவுக்கு தனி வேதனூல் உள்ளது என்று நான் எழுதி விட்டேனாம்.. அதை காட்ட முடியுமா என்று சவால் விடுகிறீர்க்ள்.

என்ன எண்ணிக்கொண்டு இந்த சவாலை விட்டீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

அவர் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்று சொன்னாரா அல்லது அதில் தற்போது உங்களுக்கே சந்தேகம் வந்து விட்டதா?

அல்லாஹ்வின் செய்தி தனக்கு கிடைக்கிறது என்றால் அது தான் வேதம்.

வேதம் என்று நூல் வடிவில் இல்லையே என்று அடுத்து வாதம் வைத்தாலும் வைப்பீர்கள் போல..

மிர்சாவின் வண்டவாளங்களுக்கு நீங்கள் செய்துள்ள உலக மகா சமாளிப்புகளை பார்க்கையில் (அனைத்திற்கும் அடுத்தடுத்த தொடர்களில் விரிவான பதில்கள் வரும்)
இது போன்ற பதிலை சொல்வது ஒன்றும் உங்களுக்கு சிரமமில்லை தான் !

நாவை அடக்கிப் பேசு என்றெல்லாம் எனக்கு அறிவுரை (எச்சரிக்கை) செய்திருந்தீர்கள்.
சிறிய தந்தை என்கிற முறையில் அறிவுரை (எச்சரிக்கை) எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு.
ஆனால், அது மார்க்க காரியங்களில் அல்ல.

இந்த விவாதம் துவங்குவதற்கு முன்னர் நான் சொன்னதையே இங்கே மீண்டும் சொல்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது, அது என்றைக்கும் இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
ஆனால், நீங்கள் ஏற்றிருக்கும் கொள்கை மீதோ நீங்கள் நபியென கூறும் மனிதர் மீதோ எனக்கு துளியும் மரியாதை இல்லை.
அதை மதிக்ககூடாது என்பது தான் எனக்கு அல்லாஹ் இட்டிருக்கும் மார்க்க கட்டளை.
அதை புரிந்து கொண்டால் இவ்வாறு அறிவுரைக்கு தேவையிருக்காது.

ஒருவரை நபியென சொல்வதற்கு நீங்கள் வைக்கும் மூன்றாவது அளவுகோல் என்ன? அதாவது அர்த்தமுள்ள அளவுகோல் தானா? என்பதை அடுத்து பார்க்கலாம்.
அத்துடன், மிர்சா சாஹிபின் வண்டவாளங்களையும், அதற்கு நீங்கள் செய்திருக்கும் சமாளிப்புகளையும் விலாவாரியாக தொடர்ந்து பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.

ஒரே பதிவில் மிக நீளமாக எழுதுவதை விட, பல பதிவுகளாக பிரித்து எழுதினால் வாசிப்பவர்களுக்கும் சோர்விருக்காது என்பதால் பல பதிவுகளாக இன்ஷா அல்லாஹ் வெளிவரும்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக