சனி, 28 ஜூன், 2014

சஹாபாக்களை பின்பற்றுவோர் கவனிக்க..


சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்றால் அதன் பொருள் என்ன?

குர் ஆன் ஹதீசுக்கு உட்பட்ட விஷயங்களில் மட்டும் பின்பற்ற வேண்டுமா?

குர் ஆன் ஹதீசுக்கு முரணாக சஹாபாக்கள் எதுவுமே சொன்னதில்லையா?

சொல்லியிருந்தால் அதையும் (குர் ஆன் ஹதீசுக்கு முரணாக இருந்தாலும்) பின்பற்ற வேண்டுமா?

அல்லது, அவர்கள் முரணாக சொல்லியிருந்தாலும், எதையெல்லாம் குர் ஆன் ஹதீசுக்கு முரணில்லாமல் சொல்லியிருக்கிறார்களோ அதை மட்டும் பின்பற்ற வேண்டுமா?

அல்லது, குர் ஆன் ஹதீஸ் அனுமதிக்கவோ தடுக்கவோ செய்யாத அவர்களது தனிப்பட்ட சாதாரண உலக வாழ்க்கையையும் சுன்னத் என்று பின்பற்ற வேண்டுமா?

குர் ஆனுக்கு முரணில்லாத விஷயங்களில் மட்டும் தான் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்றால், உங்களை நான் பின்பற்றலாம், என்னை நீங்கள் பின்பற்றலாமே?
யாரும் யாரையும் பின்பற்றலாமே?
யாரை பின்பற்றினாலும் பின்ப‌ற்றுவதில் குர் ஆன், ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா என்று பார்ப்பது மட்டும் தானே நம் வேலை?

அப்படியிருக்க, சஹாபாக்கள் என்று அவர்களை மட்டும் தனியாக சொல்ல காரணம் என்ன?

குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்னை நீங்கள் எல்லாருமே பின்பற்றலாம், உங்கள் அனைவரையுமே நான் பின்பற்றுவேன்,

இதில் தவறில்லையே !

எல்லாரையும் எல்லாரும் பின்பற்றலாம் என்கிற ஒரு விஷயத்தில் சஹாபாக்களை மட்டும் குறிப்பாக்கி சொல்வது அறியாமை அல்லாமல் வேறென்ன??

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)


இரு தரப்பு ஆதாரங்கள்

ஈசா நபி மரணிக்கவில்லை (Part 1)
-----------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டதாக தவறான நம்பிக்கை கொள்பவர்கள் குர் ஆனையும் ஹதீஸையும் முழுமையாக அறியாத, மார்க்க ஞானம் அறவே இல்லாத, எதையுமே நுனிப்புல் வாரியாக மேய்ந்து விட்டு நிலைபாடுகளை எடுக்கும் கொள்கையற்றவர்கள் தான் என்பது இந்த தொடரில் கடுகளவு சந்தேகத்திற்கும் இடமில்லா வண்ணம் தெளிவாக்கப்படும்.

எதையுமே ஆணி வேரிலிருந்தே புரிந்து தெளிவு பெற்று விட்டோம் என்றால் எந்த தவறான கொள்கையும் நம்மை அசைக்காது.

ஈஸா நபி மரணிக்கவில்லை, அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள், கியாமத் நாளுக்கு சமீபமாய் மீண்டும் இவ்வுலகில் வருவார்கள்.
இது தான் குர் ஆன் கூறும் தெளிவான கூற்று.

இதை குர் ஆனைக் கொண்டே அடுக்கடுக்கான சான்றுகளுடன் நிரூபிக்கும் முன்பு, ஈஸா நபி இறந்து விட்டதாக இவர்கள் கூறுவதற்கு என்னன்ன சான்றுகளை முன் வைக்கிறார்கள் என்பதை முதலில் பார்போம்.

-‍‍-> நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற இறை வசனம்.

--> பூமியில் தான் வசிக்க முடியும், உணவு உண்ணாத உடலை எவருக்கும் அளிக்கவில்லை என்கிற இறை வசனம்.

--> முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

--> பொய் கடவுள்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

--> ஈஸா நபி தூதரே தவிர வேறில்லை, அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

இந்த ஐந்து சான்றுகளை தான் இந்த காதியானி மதத்தவர்கள் திரும்ப திரும்ப எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எங்கே, எத்தனை முறை ஈஸா மரணித்து விட்டார், மரணித்து விட்டார் என்று பேசி திரிந்தாலும், அதற்கு சான்றாய் இவர்கள் வைப்பது இந்த ஐந்து ஆதாரங்களை தான்.

இந்த ஐந்து போக, இவர்கள் இன்னும் வைக்காத இன்னொரு ஆதாரத்தையும் நான் இங்கே வைத்து, அதுவும் ஒரு சிலரால் ஈஸா நபி இறந்து விட்டதற்கு சான்றாய் முன்வைக்கப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறேன்.

--> ஈஸா நபியை அழைத்து அல்லாஹ் மறுமையில் விசாரிக்கும் போது, அவர்களுடன் இருந்த போது அவர்களை நான் கண்காணித்தேன், என்னை நீ கைப்பற்றி விட்ட பிறகு எனக்கு எதுவும் தெரியாது..
என்பதாக ஈஸா நபி சொல்வதாய் வரக்கூடிய வசனம்.
இங்கே "கைப்பற்றி விட்ட பிறகு" என்கிற இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் வஃபாத்.
ஆகவே ஈஸா நபி வஃபாத்தாகி விட்டார்கள் என்பது இதன் மூலம் இவர்கள் வைக்கும் வாதம்.

இந்த ஆறு சான்றுகள் தான் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு இவர்களானாலும் சரி, உலகில் எவர் அத்தகைய தவறான நம்பிக்கையை கொண்டிருந்தாலும் சரி, வைக்கும் ஆதாரங்கள்.

ஆனால், ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை, மீண்டும் இவ்வுலகிற்கு வந்த பிறகு தான் இறப்பார்கள் என்பதற்கு நாம் வைக்க இருக்கும் சான்றுகள் ஏராளம்.

--> எதிரிகளால் கொலை செய்யப்படுவதிலிருந்து அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான் என்கிற இறை வசனம்.

--> ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்

--> அவர் உணவு உண்பதால் அவர் கடவுள் இல்லை என்கிற இறை வசனம்

--> கியாமத் நாளுக்கு அடையாளமாக அவர் இருக்கிறார் என்கிற இறை வசனம்

--> அவர் இறப்பதற்கு முன்பாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்கிற இறை வசனம்

--> ஈஸா நபி வஃபாத் ஆனார்கள் என்கிற இறை வசனம்

--> ஈஸா நபி வானத்திலிருந்து இறங்கி வருவார்கள், தஜ்ஜாலை கொல்வார்கள், நீதமாக ஆட்சி புரிவார்கள் என்பதாக வரக்கூடிய ஏராளமான ஹதீஸ்கள்

என ஏழு வகையான ஆதாரங்கள், ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என்பதையும் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவார்கள் என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நமக்கு சொல்கிறது.

எதிர் கொள்கையுடையவர்கள் என்னன்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது, சத்தியத்தை தெளிவாக புரிந்து கொள்வதற்கு தேவையான முக்கியமான அடிப்படையாகும்.

அந்த வகையில், எதிர் கொள்கையுடையவர்கள் வைக்கும் ஆறு ஆதாரங்களையும் தெளிவான முறையில் நாம் புரிந்து கொண்டு விட்டு, அதன் பிறகு, ஈஸா நபி இறக்கவில்லை என்பதற்கு நாம் வைக்க இருக்கும் ஏழு ஆதாரங்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தொடர் முடியும் போது, ஈஸா நபி இறக்கவில்லை என்று நடுநிலையுடன் சிந்திக்கும் காதியானிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..

முற்றுகையிடுவோம் இலங்கை தூதரகத்தை..


உடன் பணிபுரியும் இலங்கை சகோதரர் இன்று பணிக்கு வரவில்லை, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தால் தேம்பி தேம்பி அழுகிறார்..

உறவினர்கள் மூவரை புத்த தீவிரவாத கும்பல் கொலை செய்திருக்கிறதாம்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

இவர் குடும்பமும் அந்த பகுதியில் உள்ள அனைவரும் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளார்களாம்..

ஏன்? அரசாங்கமும் காவல்துறையும் பாதுகாப்பு தரவில்லையா? என்று கேட்டதற்கு, 2 நாட்களாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தான் உள்ளனர், இருந்தும் எல்லாமே புத்தர்களுக்கு சார்பாய் நடக்கிறார்கள் என்றார்..

அங்கே பாதிக்கப்பட்ட ஒருவரின் அழுகைக்குரலை நேரடியாக கேட்ட கனத்த இதயத்தில் இதை இங்கே பகிர்கிறேன்.
இலங்கையில் அமைதி திரும்பி மக்கள் பாதுகாப்பு பெற அல்லாஹ் உதவி செய்வானாக..

நாளை தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் வெற்றியடைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்..

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் நாளை காலை நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் முன்பு அலைகடலாய் திரள வேண்டும்!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (M)


பகிரங்க நேரடி விவாத அழைப்பு

Mirza Sahib Subject (Part 13)
----------------------------------------------------------------------------

மிர்சா சாஹிபின் வண்டவாளங்கள் இத்துடன் முடிந்து விட்டதா? என்று எனது கையில் வைத்திருக்கும் பட்டியலை பார்க்கும் போது, இன்னும் ஏராளமான மசாலாக்கள் இங்கே பதியப்படாமல் மீதமிருப்பதை கவனிக்கிறேன்.

அவற்றையெல்லாம் இங்கே பதிவதாக இருந்தால் இன்னும் பல நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். ஈஸா நபி சப்ஜக்டை நான் இன்னும் துவக்கவேயில்லை என்பதால், இனியும் மிர்சா சாஹிபையே பேசி காலம் கடத்த வேண்டாம் என்று கருதி மிர்சா சாஹிப் சப்ஜக்டை இத்துடன் நிறுத்துகிறேன்.

இத்துடன் இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு நான் பக்கம் பக்கமாக ஒரு மாதம் எழுத, பிறகு நீங்கள் பக்கம் பக்கமாக எழுத.. இவ்வாறு எழுதிக் கொண்டே செல்வதில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எந்த பயனுமில்லை என்பது எனது கருத்து.

தவிர, இப்படியே சென்று கொண்டிருந்தால் எங்கேயும் இது முடிவும் பெறாது, நான் எழுதியதை மறுக்க நீங்கள், நீங்கள் எழுதியதை மறுக்க நான்.. என்று எல்லையற்று செல்லும்.

நீங்கள் நம்புகிறவற்றை நீங்கள் எழுதி விட்டீர்கள், நான் நம்புகிறவற்றை நான் எழுதி விட்டேன், அனைத்தும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அனைத்தையும் நான் தொகுத்தே வைத்திருப்பதால், இதையே பிரதிகளெடுத்து முகனூலில் வராத மக்களிடமும் பரவ செய்யும் எண்ணமும் இருக்கிறது.

ஆக, இந்த மிர்சா சாஹிப் சப்ஜக்டுக்கு நீங்கள் தொடராக பதில்கள் எழுதினாலும், அவற்றுக்கு நான் இனி மறுப்பு எழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

ஆனால், அதை விட சிறந்த முடிவொன்றினை தேர்வு செய்கிறேன்.

எழுத்து என்று வரும் போது, என்ன கேள்விக்கும் பதில் எழுதி விடலாம், எத்தகைய அறிவார்ந்த வாதத்திற்கும் மறுப்பு சொல்லலாம்.

நான் தான் மர்யமாக இருந்தேன், நானே கற்பமானேன், நானே பிரசவித்தேன் என்று அறிவுள்ளவர் சொல்வாரா? என்கிற எங்கள் கேள்விக்கு, மர்யம் என்றால் மர்யம் போன்று.. அவரது குணாதிசயத்துடன் ஒத்து இருத்தலை தான் சொல்கிறது..

என்று ஒரு பதிலை சொல்கிறீர்களே, அது போல..

மலக்குகள் புடை சுழ மர்யமின் மகன் ஈஸா வருவார், அவர் தஜ்ஜாலை கொல்வார் என்றெல்லாம் ஹதீஸ் சொல்கிறதே? என்று கேட்டால், ஈஸா என்றால் மிர்சா.. மர்யமின் மகன் என்றால் மிர்சா தான் மர்யமாகவும் இருந்தார்..

என்றெல்லாம் பதில் சொல்கிறீர்களே, அது போல..

இதற்கு மாற்று வழியாக, Nizar Mohamed ஆகிய உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினரையும் நேரடி விவாதத்திற்கு இதன் மூலமாக அழைப்பு விடுக்கிறேன்.

மிர்சா சாஹிப் நபியா அல்லது பொய்யரா? என்பதை நேரடியாக பேசி முடிவு செய்யலாம்.

அவர் எழுதிய நூல்களின் மேற்கோள்களுடன் அவர் பொய்யர் தான் என்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் அரபு, உருது மொழிப் புலமை கொண்டவர்களை அழைத்துக் கொண்டு இன்ஷா அல்லாஹ் நான் வருகிறேன்.

அவர் பொய்யர் இல்லை, நபி தான் என்பதை நிரூபிக்க நீங்கள் முன்வாருங்கள். நீங்கள் தான் வர வேண்டும் என்று நான் நிர்பந்தம் செய்ய மாட்டேன்.
உங்கள் மதத்தில் நீங்களே சிறந்த அறிஞராக கருதப்படுவீர்கள் என்றால் நீங்கள் வரலாம், அல்லது உங்களை விடவும் தலை சிறந்த அறிஞர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை வர சொல்லுங்கள்.
ஆனால், அவர்களையும் அழைத்துக் கொண்டு நீங்களும் முன்வருவதை நான் விரும்புகிறேன்.

நேரடி விவாதம் என்றால் முதலில் ஒப்பந்தம் இட வேண்டும்.

வருகின்ற நவம்பர் முதல் அடுத்த வருடம் ஜனவரி வரையுள்ள மூன்று மாத காலத்தில் உங்களுக்கு வசதியான ஏதேனும் இரண்டு வார கால அவகாசத்தை என்னிடம் தெரியப்படுத்துங்கள். அந்த இரு வார அவகாசத்தில் ஒரு தினத்தை நான் தேர்வு செய்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

இரு தரப்புக்கும் பொது இடமொன்றில் விவாத ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் வட இந்தியாவில் இருக்கிறீர்கள் என்பதால் அங்கே எங்களால் வர இயலாது.
இருவருக்கும் பூர்வீகம் தமிழகம் தான் என்பதால் தமிழகத்திலோ அல்லது அண்டை மாநிலமான‌ கேரளாவிலோ ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

எங்கே விவாதம், எப்போது, எப்படி விவாதம் என்பதையெல்லாம் ஒப்பந்தத்தில் பேசி முடிவு செய்து கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்.

ஒப்பந்தம் இட தயார் என்றால், நவம்பர் முதல் ஜனவரி வரையுள்ள மூன்று மாத காலத்தில் ஏதேனும் இரண்டு வார அவகாசத்தை தேர்வு செய்து
வருகின்ற ஜூன் 20 ஆம் தேதிக்குள் உங்கள் பதிலை தெளிவாக அறிவிப்பு செய்யுங்கள்.

எந்த இடத்தில் வைத்து ஒப்பந்தம் செய்யலாம் என்பதை அதன் பிறகு, (30 ஜூனுக்குள்) முடிவு செய்து விடலாம் இன்ஷா அல்லாஹ்.

இதை பகிரங்க அழைப்பாக உங்களுக்கு விடுக்கிறேன்.

மிர்சா சாஹிப் சப்ஜக்ட் இத்துடன் முடிகிறது..

அடுத்து ஈஸா நபி மரணித்து விட்டார்களா? என்கிற விஷயத்தை குர் ஆன் ஹதீஸ் ஒளியில் தொடராக பார்க்கலாம்..

தொடரும், இன்ஷா அல்லாஹ்

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (L)


காறி உமிழத் தகுதியான மிர்சாவின் கணக்குப்பாடம்

Mirza Sahib Subject (Part 12)
-----------------------------------------------------------------------------

மிர்சாவின் வண்டவாளங்களை ஒரு நிலையோடு முடித்து விட்டு, அடுத்த தொடரான ஈஸா நபி குறித்த தொடரை துவங்கலாம் என்று நானும் விரும்புகிறேன்.

ஆனால், அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் மிர்சா சாஹிபின் சாகச மேளங்கள் இன்னும் வந்த வண்ணம் உள்ளன.. அதை இங்கே எடுத்து காட்டாமல் அடுத்த தலைப்புக்குள் செல்ல மனம் வரவில்லை.

அந்த வகையில், இவரது உச்சகட்ட புளுகுகளில் ஒன்றான அப்ஜத் கணக்கை தற்போது பார்ப்போம்.

எந்த ஒரு காரியத்தையும், இதை எப்படிடா எனக்கு சாதகமாக ஆக்குவது, இதை எப்படிடா நான் நபி என்று மக்களை நம்ப வைப்பதற்காக பயன்படுத்துவது..

என்பது மட்டுமே இவரது ஒரே சிந்தனை.

தன் காலத்தில் பிளேக் நோய் பரவிய போதும் அதை தான் சிந்தித்தார்.
ஈஸா வருவார் என்று ஹதீஸில் சொல்லப்பட்டதையும் அதற்கே பயன்படுத்திக் கொண்டார்.

இதை முந்தைய பகுதிகளில் விளக்கமாக பார்த்தோம்.

அந்த வரிசையில், குர் ஆனின் வசனங்களை எடுத்து வைத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் எண்கள் கொடுத்து, அந்த எண்களை கூட்டிக்கழித்து பார்த்து அது தரும் விடையை வைத்து ஒரு ஜோசியம் சொல்வது என்கிற உலக மகா உளரலை கொள்கையாக வடித்து தந்த மாமேதையை (?) பற்றி இப்போது பார்ப்போம்.

அதாவது, நபி (சல்) அவர்கள் தான் இறுதி நபி என்பதாக ஏராளமான ஹதிஸ்கள் உள்ளன.

அப்படியானால் தன்னை எவரும் நபியாக ஏற்க மாட்டார்களே என்று சிந்தனை செய்த இந்த மிர்சா,
நபி (சல்) அவர்கள் ஷரியத் (அதாவது சட்ட திட்டங்கள்) கொண்டு வந்த நபிமார்களில் இறுதி நபி என்று தான் புரிய வேண்டும்..
புது ஷரியத் எதையும் கொண்டு வராத, நபி (சல்) அவர்களின் ஷரியத்தையே மீண்டும் புதுப்பிக்கும் நோக்கில் நபி வருவார்கள், அதை இந்த ஹதீஸ் தடுக்காது, அத்தகைய நபி தான் நான்..

என்று நிறுவுவது இவரது நோக்கம்.

நபி (சல்) அவர்களுக்கு பிறகு, அவர்கள் கொண்டு வந்த ஷரியத்தை புதுப்பிக்க வந்தவர் தான் மிர்சா என்பதை நிரூபிக்க வழக்கம் போல ஏதாவது குர் ஆன் வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தார்.

அந்தோ பரிதாபம், அப்படியான எந்த வசனமும் சிக்கவில்லை.

விடுவாரா மிர்சா ?

நானே மர்யம், நானே மர்யம் பெற்ற ஈஸா என்று மெய் சிலிர்க்கும் சாகசங்களையெல்லாம் நிகழ்த்தியவருக்கு இதை குர் ஆனில் நிறுவுவதா சிரமம்?

கண்டு பிடித்தார் ஒரு இறை வசனத்தை..

அது தான் 23:18 வசனம்.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (23:18)

வானத்திலிருந்து பூமியை நோக்கி வரக்கூடிய தண்ணீரை பூமியில் தேக்கியும் வைப்போம், அதை நீக்கி விடவும் அல்லாஹ்வுக்கு ஆற்றலுண்டு.. என்று சொல்கிற வசனம் இது.

இதில் தனது அறிவுத்திறனை காட்டிய மிர்சா, இங்கே "அதை போக்கிடவும் அவனுக்கு ஆற்றலுண்டு" என்று அல்லாஹ் சொல்வது குர் ஆனை தான், குர் ஆனை அழித்திடவும் அல்லாஹ்வுக்கு ஆற்றலுண்டு என்று தான் இதில் சொல்கிறான் என்று போட்டாரே ஒரு போடு.

அட ஞான சூனியமே, இதற்கும் குர் ஆனுக்கும் என்னய்யா சம்மந்தம்? என்று அவர் வாழும் காலத்தில் இவர் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க‌ எவனுக்குமே தெம்பு இல்லை போல..

சரி, இப்படி உளரிக்கொட்டியதோடு நிறுத்திருந்தால் பரவாயில்லை.
இங்கே பிரச்சனை, இந்த வசனம் குர் ஆனைப் பற்றி பேசுகிறதா இல்லையா என்பதும் அல்ல !

வேறு என்ன?

இவ்வாறு சொல்லி விட்டு, அந்த வசனத்திற்கு கணித மேதைகள் கூட தோற்றும் விடும் அளவிற்கு அற்புத (?) கணக்கு ஒன்றினை இடுகிறார் மிர்சா.

அந்த வசனத்தின் ஒவ்வொரு அரபு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்களை கொடுத்து, மொத்தத்தையும் கூட்டி, கூட்டுத்தொகை 1274 என்றார்.

சரி, இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்? என்று ஆர்வப்பட்டால்.. அடுத்து போட்டார் இன்னொரு போடு.

அதாவது, அந்த வசனம் இறங்கியதிலிருந்து 1274 வருடங்களில் குர் ஆனை புதுப்பிக்கப்படும். அதை புதுப்பிக்கும் நபராக நபியொருவர் வருவார் என்று இந்த வசனம் சொல்கிறது..

என்று சொன்னாரே பார்க்கலாம்..

அதாவது.. இப்படி உளரிக் கொட்டுகிறோமே, பார்ப்பவர்கள் தான் நம்மை என்ன நினைபபர்கள்? காறி உமிழ மாட்டார்களா? செல்லும் இடங்களிலெல்லாம் செருப்படி கிடைக்குமே.. என்கிற எந்த வெட்க உணர்வும் அற்றவர் இந்த மிர்சா.

எழுத்துகளுக்கு நம்பர் இட்டு, அந்த நம்பரை கூட்டி அந்த கூட்டுத்தொகை என்பது வருடங்களை குறிக்கிறது, அதன் பிறகு இன்னொரு நபி வருவார் என்பதை தான் இந்த கணக்கு சொல்கிறது என்று சொல்கிற ஒருவர் சுய சிந்தனையுள்ள, சராசரி மனித பண்புகளை கொண்ட மனிதன் தானா?

என்று நமக்கு சந்தேகம் வருவதில் எந்த வியப்புமில்லை.

இந்த உலக மகா தத்துவக் கணக்கை இஸாஹே அவ்ஹாம் எனும் நூலில் பக்கம் 464 இல் இவர் எழுதியிருக்கிறார்.

சரிங்க சார்.. நபி (சல்) அவர்களுக்கு பிறகு கிட்டத்தட்ட‌ 1400 வருடங்கள் கழித்தல்லவா நீங்கள் வந்திருக்கிறீர்கள்,

நீங்களோ 1274 வருடங்கள் என்று கணக்கு போடுகிறீர்களே? கணக்கு எங்கேயோ இடிக்கிறதே என்று அவர் காலத்தில் வாழ்ந்த எந்த சிந்தனையுள்ளவனோ கேள்வி எழுப்பியிருக்கிறான் என்றூ எண்ணுகிறேன்..

உடனே அதற்கும் அடித்தார் ஒரு பல்டி.

அதாவது தான் 1274 என்று சொன்னது சூரிய கணக்கின் படியுள்ள நாட்களாம்.

அதையே சந்திரக் கணக்கோடு மாற்றி அமைத்தால் 1274 என்பது 1400 ஆக கிடைக்கும்.

ஆகவே நான் தான் அடுத்த நபி என்பது சரி தான்.

என்று அரை வேக்காட்டுத்தனமாக பேசி அந்த சமுதாயத்தை ஏமாற்றிய உத்தமர் தான் இந்த மிர்சா சாஹிப்.

அந்த வசனம் குர் ஆனை பற்றி பேசுகிறதா? என்கிற கேள்விக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது என்பது ஒரு புறமிருக்க..

ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு அதன் எழுத்துகளுக்கு நம்பர் இடும் வழக்கம் நபி காட்டித் தந்த வழக்கமா?

அந்த நம்பரின் கூட்டுத் தொகை என்பது அர்த்தமுள்ள எந்த செய்தியையாவது சொல்லுமா?

இதை எந்த மனித அறிவாவது ஏற்கிறதா?
அப்படி பார்க்கப்போனால், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று அல்லாஹ் சொல்லி விட்டான்.
இந்த ஆயத்தின் கூட்டுத் தொகை 1350.

ஆகவே 1350 முறை தான் அல்லாஹ்வை ஒரு மனிதன் புகழ வேண்டும், அதற்கு மேல் புகழக்கூடாது என்று எந்த கிறுக்கனாவது இனி தத்துவம் பேச புறப்படுவான்.

அவனை கிறுக்கன் என்றெல்லாம் யாரும் சொல்லி விடக்கூடாது, மாறாக அவரை நபியென போற்றிப் புகழ வேண்டும்.

தப்பத் யதா அபீ லஹபின் வ தப்.. என்று அல்லாஹ் சொல்கிறான்..

ஒவ்வொரு எழுத்துக்கும் நம்பரை கொடுத்து கூட்டிப் பாருங்கள், 467 வருகிறது என்று எதையாவது ஒரு நம்பரை சொல்லி
ஆகவே அபு லஹபை அல்லாஹ் 467 முறை தண்டிப்பான்..

என்று எந்த கூறு கெட்ட குப்பையாவது தத்துவம் சொன்னால், அவனை அப்படியெல்லாம் திட்டக் கூடாது, மாறாக வாருங்கள் நபியே.. என்று சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும்..

போங்கய்யா நீங்களும் உங்க நபியும்..

உங்களால் இந்த சமுதாயத்திற்கே கேவலம் என்பதை இன்னுமாவது புரிந்து கொள்ளுங்கள்.

வண்டவாளம் இன்னும் தொடரும்..இன்ஷா அல்லாஹ் !

முகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி


அது ஏனோ தெரியல.. 

ஒவைசி பாராளுமன்றத்தில் பேசுவதை கேட்கும் போதெல்லாம் எங்க மாநிலத்திற்கும் இது போன்ற ஒரு எழுச்சி வீரர் வர மாட்டாரா என்றொரு ஏக்கம்..

சட்டென்று மனதில் நிழலாடியது அந்த வெறி கொண்ட ஆவேசப்பேச்சு..

""சச்சின் ஒரு பந்தில் தான் சிக்சர் அடிப்பார், ஆனால் முதல்வர் அவர்கள் எதிர்கொண்ட எல்லா பந்துகளிலுமே சிக்சர் அடித்து விட்டார்!""

எங்களிடம் இல்லையா தன்மான சிங்கங்கள்..?

ஒவைசியாம் ஒவைசி ...

கால்பந்து பைத்தியம்


கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கூட்டத்தை காண்கிற போது இப்படியுமா பைத்தியமாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றும். 
நாமே அதன் தீவிர ரசிகராக இருந்த காலத்தில் எதிலுமே அவ்வாறு அதீத வெறி எதையும் காட்டக்கூடாது என்பதை சரியாக விளங்கி வைத்திருக்கவில்லை.

இன்று இந்த கால்பந்து போட்டிக்கு மக்கள் அடிமையாகி கிடப்பதை பார்க்கிற போது, கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என தோன்றுகிறது.

கிரிக்கெட் ரசிகனாவது தத்தமது நாட்டு அணியை ஆதரிப்பவனாக இருக்கிறான். அது ஒரு போலி தேசப்பற்று என்றாலும் அதிலொரு லாஜிக் இருந்தது.

ஆனால் இன்று உலகக்கோப்பை கால்பந்தை ரசிக்கிறோம் என்கிற பெயரில் எந்த நாட்டுக்காரனோ எந்த நாட்டுக்காரனையோ ரசிக்கிறான், அவன் மீது பைத்தியம் கொள்கிறான். அவன் கோல் அடிக்கவில்லை என்றால் கையை கீறிக் கொண்டவன் கூட இருக்கிறான்.

மேலும், ஐபிஎல் போட்டிகள் போன்ற சில விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்கிற தகுதியை இன்னும் இழக்கவில்லை.

களத்தில் விளையாடும் வீரர்கள் ஆனாலும், ரசிக்கும் ரசிகர்கள் ஆனாலும், ஒப்பீட்டளவில் நோக்கும் போது, ஒழுக்கத்துடன் தான் இருக்கின்றனர்.

ஆனால் கால்பந்து போட்டிகளில் ஒழுக்கக்கேடுகள் மலிந்து கிடக்கின்றன எனலாம்.
ஆடுகளத்தில் அடிதடி ரகளைகளுக்கு பஞ்சமில்லை ; பார்வையாளர்கள் கூட்டத்தில் நிர்வாண ஆட்டங்களுக்கும் குறைவில்லை !

தான் விரும்பும் வீரர் அல்லது விரும்பும் நாட்டின் வெற்றியோ தோல்வியோ, கிரிக்கெட் ரசிகன் பாதிப்படைவதை விட கால்பந்து ரசிகன் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறான்.
தற்கொலை, கொலை என்கிற அளவிற்கு கூட கால்பந்து போட்டியின் முடிவு மக்களை தள்ளுகிறது என்பதையெல்லாம் சிந்திக்கையில்..

இரண்டரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்பதை தவிர கால்பந்தை ரசிப்பதால் கேடுகளே அதிகம் என்று புரிய முடிகிறது !

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (K)


நோய் கிருமி பிளேக் இல்லை, மிர்சா தான் !

Mirza Sahib Subject (Part 11)
---------------------------------------------------------------

மிர்சா சாஹிப் என்பவர் கடைந்தெடுத்த பொய்யர் என்பதற்கும், தன்னை நபியென காட்டிக் கொள்வதற்காக பல்வேறு போக்கிரித்தனங்களை செய்துள்ளார் என்பதற்கும் சான்றாக 13 ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தேன்.
அவைகளில், ஏழு ஆதாரங்களுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சில சமாளிப்புகளை எழுதியிருந்தீர்கள்.

மீதமுள்ள ஆறு ஆதாரங்களை கண்டு கொள்ளவேயில்லை.

நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டாலும், அந்த ஆதாரங்களை கூட அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட வேண்டும் என்கிற அடிப்படையில்,

மசீஹ் வரும் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்றும் அவ்வாறு குர் ஆனிலேயே இருக்கிறது எனவும் இந்த மிர்சா சாஹிப் அடித்த புருடா ஒன்றைக் குறித்து பார்ப்போம்.

இப்படி குர் ஆனில் இருப்பதாக பொய் சொல்லியிருக்கிறாரே, குர் ஆனில் எங்கே இருக்கிறது? என்று கேட்டதற்கு துவக்கத்தில் எந்த பதிலையும் சொல்லாமல், கடைசியில் 27:82 வசனத்தில் உனக்கு புரிவது என்ன? என்று கேட்டிருந்தீர்கள்.

அந்த வசனத்தில் மிர்சா என்றும் இல்லை, மசீஹ் என்றும் இல்லை, பிளேக் நோய் என்றூம் இல்லை, எனக்கு அவ்வாறு எதுவும் புரியவில்லை, அந்த கருத்தை தான் தருகிறது என்றால் அதை நீங்கள் விளக்குங்கள் என்று எனது முந்தைய வாய்ப்பின் போது கேட்டிருந்தேன்.

நீங்கள் மூச்சு விடாத ஆறு ஆதாரங்களில் இதையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டீர்கள். எனது கேள்விக்கு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.

இருந்தாலும், இதற்கு என்ன சமாளிப்பை நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு முன்னரே தெரியும் என்பதால் அந்த சமாளிப்பு என்ன என்பதையும் அது அறிவுக்கு உகந்த சமாளிப்பு தானா? என்பதையும், இது குறித்து மிர்சா சாஹிப் கொண்டிருந்த கொள்கை என்ன என்பது பற்றியும் விலாவாரியாக பார்ப்போம்.

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும். (27:82)

இது தான் அந்த வசனம்.

இந்த வசனத்தில் பூமியிலிருந்து ஒரு உயிரினம் வெளிப்படும் என்று அல்லாஹ் சொல்கிறானே அந்த உயிரினம் பிளேக் கிருமியாக்கும்..

என்பது தான் உங்கள் கைவசம் இருக்கும் ஒரே சமாளிப்பு. இதை இன்னும் நீங்கள் பதிலாக சொல்லவில்லை என்ற போதிலும், நானே இதை சொல்லி இது குறித்த தெளிவான மறுப்பையும் இங்கே தருகிறேன்.

மிர்சா சாஹிபை பொறுத்தவரை தன்னை நபியென ஊரை ஏமாற்ற துவங்கிய ஆரம்ப காலத்தில், இஸ்லாமிய கொள்கைகளில் பலவற்றை மாற்றி பிரச்சாரம் செய்யவில்லை.

ஈஸா நபி இறக்கவில்லை என்று தான் அவரும் நம்பி வந்தார். அதை தனது நூலில் எழுதியும் இருக்கிறார் (பார்க்க மிர்சா சப்ஜக்ட் பாகம் 3,4)

தன்னைப் பார்த்து ஈஸா, ஈஸா என்று அல்லாஹ் அழைத்த போது கூட ஈஸா மரணிக்கவில்லை, மீண்டும் வருவார் என்று தான் நம்பினார்.

எங்கே பிரச்சனையாகியது என்றால், தன்னை நபியென மக்களிடம் பிரச்சாரம் செய்த போது, இறுதி நபி முஹம்மது (சல்) அவர்கள் தான் என அனைவரும் தெளிவாக புரிந்து வைத்திருந்த காரணத்தால் இவர் பொய்யர் என எளிதாக அடையாளம் காணத் துவங்கினர்.

அதை உடைக்க வேண்டுமானால், ஈஸா நபி வருவார் என்று ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை தனக்கு சாதகமாக ஆக்க வேண்டும் என்பது மிர்சா சாஹிபின் திட்டம்.

அந்த திட்டத்தின் வெளிபாடு தான், மர்யம் என்றாலும் நான் தான், ஹதீஸில் சொல்லப்படும் மர்யமின் மகன் என்றாலும் நான் தான் என்கிற இவரது பினாற்றல்.

மர்யமும் நான் தான், மர்யம் பெற்ற ஈஸாவும் நான் தான் என்று சொல்கிற போது ஈஸா நபி மீண்டும் வருவார் என்று ஹதீஸ் சொல்வது தன்னைப்பற்றி தான் என்று நிறுவி விடலாம் என்கிற சபலம் இவருக்கு.

இது இவரது சபலத்தின் ஒரு வகை.

தன்னை நபியாக காட்டிக் கொள்ள இவர் கொண்ட இன்னொரு சபலப்புத்தி தான் இந்த பிளேக் நோய் விஷயம்.

எப்படியென்றால், இவர் வாழ்ந்த காலத்தில் இவரது ஊரில் பிளேக் நோய் பரவியது.
இதை எப்படி தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது என்று கணக்குப் போட்ட மிர்சா சாஹிப், மசீஹ் வரும் போது பிளேக் நோய் பரவும் என்று குர் ஆனில் இருக்கிறது, இதோ பிளேக் நோய் வருகிறது, ஆகவே குர் ஆன் சொன்ன மசீஹ், ஈஸா நான் தான் !!

இது தான் இவரது திட்டம். குர் ஆனில் இருக்கிறது என்றோ ஹதீஸில் இருக்கிறது என்றோ விட்டடித்தால் எவரும் ஆதாரம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை தனக்கு சாதகமாய் ஆக்கிக் கொண்டார் இந்த மனிதர்.

இது விஷயமாக இவர் எந்த அளவிற்கு தில்லு முல்லு வேலை செய்துள்ளார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

1891 ஆம் ஆண்டு இஸாலே அவ்ஹாம் எனும் நூலொன்றை இவர் எழுதி வெளியிடுகிறார். அதில் பக்கம் 370 இல் குர் ஆனின் 27:82 வசனத்திற்கு ஒரு விளக்கமொன்றை தருகிறார்.

அது என்ன விளக்கம்?

அந்த வசனத்தில் வரக்கூடிய "தாப்பத்" என்பது உலமாக்களைக் குறிக்கும்.
மனிதர்கள் எல்லாம் மிருக வாழ்க்கை வாழத் துவங்கும் போது அந்த சமுதாயத்தை சீராக்க மார்க்கம் படித்த உலமாக்கள் தோன்றுவார்கள், அதை தான் அந்த வசனம் சொல்கிறது என்று எழுதுகிறார்.
அதே வசனத்தில் அது பேசும் என்று அல்லாஹ் சொல்வது, இந்த உலமாக்கள் மக்களிடையே செய்யும் பிரச்சாரத்தை தான்.. என்றும் அதே நூல் அதே பக்கத்தில் விளக்கம் கொடுக்கிறார்.

ஆக, 27:82 வசனத்திற்கு இந்த மிர்சா சாஹிபின் விளக்கம் "உலமாக்கள்" என்பதாகும்.

1902 ஆம் ஆண்டு இவரது ஊரில் பிளேக் நோய் பரவியிருக்கும் போல..

இதை தனக்கு எப்படி சாதகமாய் ஆக்கிக் கொள்வது என்று சிந்தித்த இந்த பொய்யர்,மசீஹ் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்று குர் ஆனிலேயே இருக்கிறது என்று பொய் மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். (கிஸ்தி நூஹ் என்கிற நூல், பக்கம் 9)

நான் ஏற்கனவே சொன்னது போல், குர் ஆனில் இருக்கிறது என்று அந்த கால மக்களிடம் சொன்னால் உடனே தேடிப்பார்த்து கேள்வியெல்லாம் கேட்டு விட மாட்டார்கள்.

நமது முந்தைய தலைமுறை வரை கூட, குர் ஆன் என்றால் அறிஞர்களுக்கு மட்டும் உரியது, நாமெல்லாம் படித்து புரிந்து கொள்ள முடியாது என்று தானே பிரச்சாரம் செய்யப்பட்டது?

அப்படியிருக்கும் போது, 120 வருடங்களுக்கு முன்னுள்ள சமுதாயம் எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் எளிதில் யூகிக்கலாம்.

அப்படி, குர் ஆனில் அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான் என்று இவர் சொன்ன அந்த காலகட்டத்திலும் இந்த 27:82 வசனத்திற்கு உலமாக்கள் என்பது தான் அர்த்தம் என்கிற நிலைபாட்டினை தான் கொண்டிருந்தார்.

பிளேக் பரவும் என்று குர் ஆனில் இருக்கிறது என்று இவர் சொன்ன போது கூட, அந்த வசனம் இது தான் என்று அவர் அப்போது சொல்லவில்லை.

மாறாக 1909 ஆம் ஆண்டு தான் அதை சொல்கிறார்.

அதாவது, மசீஹ் காலத்தில் பிளேக் நோய் பரவும் என்று சொல்லி விட்டோமே, அதற்கு குர் ஆனில் ஆதாரம் காட்ட வேண்டுமே, எந்த வசனத்தை காட்டலாம் என்று பல வருடங்கள் யோசித்து கடைசியில் அவருக்கு சிக்கியது அந்த 27:82 வசனம்.

பல வருடங்கள் யோசனை செய்து, எந்த வசனத்தை இத்துடன் கோர்த்து விடலாம் என்று இவர் மண்டையை குடைந்து, முன்பு எந்த வசனத்திற்கு "உலமாக்கள்" என்று அர்த்தம் வைத்தாரோ, அதே வசனத்தை தனது கூற்றிற்கு ஆதாரமாய் திரித்து பிரச்சாரம் செய்ய துவங்கினார்.

தாப்பத் என்றால் உலமாக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், தாப்பத் என்றால் பிளேக் கிருமி என்று மாற்ற ஆரம்பித்தார்.
பேசும் என்று அல்லாஹ் சொல்கிறானே? என்றால் அது உலமாக்கள் பேசுவார்களே, அதைதான் அல்லாஹ் சொல்கிறான் என்று அது நாள் வரை சொல்லி வந்தவர், அப்போது, பேசும் என்றால் அந்த கிருமி கடிக்குமே அதை தான் அல்லாஹ் சொல்கிறான் என்று மாற்ற ஆரம்பித்தார்.

பேசுவதெல்லாம் பொய், ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என்பது இந்த வடிகட்ட புளுகர் விஷயத்தில் நிரூபணமானது இந்த பிளேக் விஷயத்தில் தான்.

தாப்பத் என்றால் அகராதி அர்த்தம் நிலத்தில் ஊர்ந்து செல்வதாகும். உலமாக்கள் என்று இதற்கு அர்த்தம் வைத்திருந்த காலத்தில் இவரது மூளை எந்த அளவிற்கு காய்ந்திருந்தது என்று நமக்கு புரிகிறது.

அல்லாஹ்வின் வசனம் என்ன சொல்கிறது என்று கூட புரியாத அளவிற்கு, அதுவும் அகராதிப்படி நிலத்தில் ஊர்ந்து செல்லும் ஒன்று எப்படி உலமாக்கள் ஆக முடியும் என்பதை கூட சிந்திக்க துப்பு கெட்டவராய் தான் பல வருடங்கள் கழித்திருக்கிறார்.

இந்த யோகியவான் நபியாம்.

ஒரு வாதத்திற்கு தாப்பத் என்றால் பிளேக் நோய் என்று வைத்துக் கொண்டால் கூட, பல வருடங்களாக , அது கிருமி இல்லை, உலமாக்களாக்கும் என்று இவர் புரிந்து வைத்திருந்தார் என்பதே இவர் நபியில்லை என்பதற்கு சான்றாக நிற்கிறது.

இன்னொரு புறம்,அது பிளேக் நோய் தான் என்று இவர் அறிவிப்பு செய்த பிறகும் அதற்கும் பிளேக் நோய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பது மிகவும் எளிமையாக புரியக் கூடிய வகையில் குர் ஆன் ஆகி விட்ட இந்த காலத்தில் எல்லாருக்கும் தெரிந்து விட்டது.

பிளேக் நோய் ஊர்ந்து செல்லாது, அது பேசாது. பேசும் என்றால் கடிக்கும் என்று கூமுட்டை தான் அர்த்தம் வைப்பானே தவிர நபி இப்படி அர்த்தம் வைக்க மாட்டார்.

அத்தோடு, மசீஹ் வரும் காலத்தில் தான் அது நிகழும் என்று அந்த வசனம் சொல்லவில்லை.

மசீஹ் என்று அந்த வசனம் சொல்லவில்லை,
பிளேக் என்று அந்த வசனம் சொல்லவில்லை,
அது கடிக்கும் என்றும் அந்த வசனம் சொல்லவில்லை.

மாறாக கியாமத் நாளுக்கு சமீபமாய் உலகில் தோன்றும் ஒரு அதிசயப்பிராணியை தான் அல்லாஹ் சொல்கிறான்.

புகை மூட்டம், தஜ்ஜால், அதிசயப்பிராணி ஆகிய மூன்று விஷயங்களைப் பற்றி உங்கள் இறைவன் எச்சரிக்கை செய்கிறான் என்று நபி (சல்) அவர்கள் சொன்னதாக அபு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியில் பதிவாகியுள்ளது.

இதை அந்த வசனத்தின் முன்பின் வசனங்களே தெளிவாக விளக்குகிறது.

27:80,81 வசனங்களில், இந்த சத்தியக் கொள்கையை காது கொடுத்து கேட்காதவர்கள், செவிடர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

சொல்லி விட்டு, தனது இந்த சத்தியக்கொள்கையை ஏற்காதவர்களிடம் பேசுகிற வகையில் பூமியிலிருந்து ஒரு உயிரினத்தை நாம் வெளிப்படுத்துவோம் என்கிறான்.
அல்லாஹ்வின் வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.(27:82)

தொடர்ந்து, யாரெல்லாம் அவ்வாறு தமது வசனத்தை உறுதி கொள்ளாமல் இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் இறுதி நாளில் நாம் நிறுத்துவோம் என்று சொல்லி விட்டு,
எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று (இறைவன்) கேட்பான்.

என்றும் அல்லாஹ் தொடர்ச்சியாக சொல்கிறான்.

இதற்கும் பிளேக் நோய்க்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட புரிந்து கொள்வான். அத்தனை தெளிவு இந்த வசனங்கள்.

ஆக, அண்டப்புளுகர், ஆகாசப்புளுகர் தான் இந்த மிர்சா சாஹிப் என்பது இதன் மூலமும் வெட்ட வெளிச்சமாகிறது !

வண்டவாளம் தொடரும், இன்ஷா அல்லாஹ்
 

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (J)


மிர்சா எனும் போலி சாமியார்

Mirza Sahib Subject (Part 10)
--------------------------------------------

மர்யமோடு ஒப்பாக தான் எங்கள் மிர்சா சாஹிப் ஆக்கப்பட்டிருக்கிறார், எல்லா முஃமீன்களும் கூட மர்யமோடு ஒப்பாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள், அப்படியானால் முஃமீன்கள் எல்லாம் பெண்கள் என்று சொல்வீர்களா? என்கிற ஒரு கேள்வியை கேட்கின்றனர்.

இது அர்த்தமற்ற கேள்வி மட்டுமல்ல, இவர்களது கொள்கைக்கே வேட்டு வைக்கும், இவர்களை முரண்பட்டவர்களாக காட்டுகிற கேள்வி.

மர்யமோடு மிர்சா ஒப்பாக ஆக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோமே, அதனால் அவர் எப்படி பெண்ணாக ஆனார் என்பது உங்கள் கேள்வியல்ல, அது எனது கேள்வி.

இந்த கேள்வியை தான் இத்தனை நாட்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மர்யமை போல ஒழுக்கமானவர் மிர்சா, மர்யமை போல இறையச்சம் கொண்டவர் மிர்சா என்பது தான் அல்லாஹ் சொல்கிற ஒப்புமை என்பது உண்மையென்றால்

நானே மர்யமாக இருந்தேன், நானே க‌ற்பமானேன் என்று சொல்வது உளரல் தானே? இது தானே எனது கேள்வி?

மர்யமைப் போல மிர்சாவும் இருக்கிறார் என்று உவமையாக சொல்லி விட்டால் அதன் காரணமாக நான் ஒரு காலத்தில் மர்யமாக இருந்தேன் என்று அவர் சொன்னது மடமையில்லையா?
ஒப்புமையாக சொல்லப்பட்டால் அது எப்படி அவராகவே ஆகி விடுவார்?

சிங்கம் போல வீரன் இவன் என்று ஒருவனை பார்த்து சொன்னால்..உடனே ஆமாம் நான் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தேன், வாலெல்லாம் இருந்தது, காட்டில் தான் சுற்றித்திரிந்தேன் என்று பினாற்றினால் அது அறிவுள்ள வாதமாக இருக்குமா அல்லது உளரலின் உச்சமாக இருக்குமா?

இன்னும் சொல்லப்போனால், மர்யமை எல்லா முஃமீன்களோடும் அல்லாஹ் ஒப்புமையாக்குகிறான்.

அல்லாமல் மிர்சாவோடு மட்டுமல்ல.

////எனவே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் சிறு வயதிலிருந்தே அல்லாகுவின் மீதும் நபி ஸல் அவர்கள் மீதும் மிகவும் நேசம் உடையவர்களாகவும், உண்மையாளர்களாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் விளங்கினார்கள். அதனடிப்படையில் அவர்கள் மர்யமின் சிஃபத்தை கொண்டவர்களாக விளங்கினார்கள். இதனடிப்படையில் என்னை மர்யமே என்று அல்லாஹு அழைத்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.///

என்று சொல்கிறீர்கள்.

ஒரு வாதத்திற்கு மர்யமின் சிஃபத்தை மிர்சா சாஹிப் கொண்டிருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட, மர்யமின் சிஃஃபத்தை மிர்சா மட்டும் தான் கொண்டிருந்தாரா?
ஒட்டு மொத்த உலகிலும் அவர் மட்டும் தான் மர்யமை போல் இருந்தாரா?

நபி (சல்) அவர்கள் இல்லையா? அவர்களது சஹாபாக்கள் இல்லையா?

அவர்களையெல்லாம் பார்த்து நீ மர்யமே என்று அல்லாஹ் ஏன் அழைக்கவில்லை?

மர்யமின் சிஃபத்தை கொண்டிருந்தது தான் இதற்கு காரணம் என்று சொல்வீர்களானால், அந்த காரணம் உலகில் உள்ள எண்ணற்ற மூஃமீன்களுக்கு பொருந்துமே.. இதுவா வாதம்??

/////இவ்வாறு மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறுகின்ற போது, அவர்களின் ஆன்மா வளர்ச்சி அடைகிறது. எப்படி கருவில் சிசு வளர்ச்சியடைகிறதோ, அதே போன்று ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பக்கம் வளர்ச்சி அடைந்து கொண்டே சென்று, கடைசியில் ஒரு புது மனிதனாக, ஈசாவின் சிஃபத்தை கொண்ட மாமனிதராக, அதாவது ஒரு நபியாக ஆகிவிடுகிறார்./////

என்று அடுத்ததாக சொல்கிறீர்கள்.

அதாவது, ஆன்மா, பரமாத்மா.. என்று ஹிந்துக்கள் உளரிக் கொட்டுவதற்கு சற்றும் சளைப்பின்றி நீங்களும் பேசுகிறீர்கள்.

இது கதையா அல்லது அர்த்தமுள்ள சிந்தனையா?

மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறினால் மர்யமின் மகனின் சிஃபத்தை பெற்று விடுவாராம்.

என்னங்க கதையடிக்கிறீங்க? பேசாமல் ஏதாவது ஆன்மீக சினிமா எடுக்க செல்லலாமே..

மர்யமின் குணங்களை எல்லா முஃமீன்களுக்கும் அல்லாஹ் உதாரணமாக்கி சொல்கிறான்.
அப்படியானால் அவரது சிஃபத் எல்லா முஃமின்களிடமும் தென்பட வேண்டும்.

அவரது சிஃபத்தைக் கொண்டு இறை வழியில் முன்னேறியதால் மிர்சா ஈஸாவை போல் ஆனார் என்பது உண்மையென்றால்

உலகில் எண்ணற்ற மக்கள் ஈஸாவாக ஆகியிருக்க வேண்டும், என்ணற்ற மக்கள் மர்யமாக ஆகி அவரது ஆன்மாவோடு ஒத்துப்போய், கடைசியில் நபியாக அனைவருமே ஆகியிருக்க வேண்டும்.

என்ன வாதம் புரிகிறீர்கள் என்று நமக்கு புரியவில்லை.

நான் திரும்பவும் கேட்பது ஒரே கேள்வி தான். மர்யமின் சிஃபத்தை உலகிலேயே மிர்சா மட்டும் தான் கொண்டிருக்கிறாரா?
இல்லையென்றால் அவர் மட்டும் எப்படி மர்யம் ஆனார்? அவர் மட்டும் எப்படி ஈஸாவானார்?

ஒருவரின் சிஃபத்தை கொண்டிருப்பதால் அவர் அவராகவே ஆகி விடுவார் என்பது கிறுக்குத்தனம் அல்லாமல் வேறு என்ன?

இன்று ஹிந்து போலி சாமியார்கள் இதை தானே சொல்லி ஊரை ஏமாற்றுகின்றனர்?
நான் கடவுளின் அவதாரம் என்றும் கடவுளை தியானம் செய்து வாழ்வை கழித்தால் கடவுள் தன்மை தனக்கும் வந்து விடும் என்று உதார் விட்டுக் கொண்டு ஃப்ராஃட் செய்து வரும் போலி சாமியாருக்கும் இந்த மிர்சாவுக்கும் என்ன வேறுபாடு??

சரி அனைத்தையும் ஒரு பக்கம் வைப்போம்.

மிர்சா தான் ஈஸா.. சரி.. இப்னு மர்யம் என்று ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் மிர்சாவை தான் சரி..

இப்னு மர்யம் பற்றி ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

அவர் கியாமத் நாளுக்கு சமீபமாய் வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மலக்குகள் புடை சூழ வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அவர் ஒட்டு மொத்த உலகையும் ஆள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தஜ்ஜாலை அவர் கொலை செய்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மிர்சா வாழ்ந்து மரணித்து, மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனர ஒருவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் தஜ்ஜால் வந்தானா? அவர் ஒட்டு மொத்த உலகையும் ஆண்டாரா?

என்ன சொல்ல வருகிறீர்கள்?

அல்லது, இறந்து மண்ணோடு மண்ணாக போன எங்கள் மிர்சா மீண்டும் இவ்வுலகில் வருவார் என்கிறீர்களா?

சொல்வதில் எந்த ஒன்றாவது அர்த்தமுள்ள வாதமாக இருக்கின்றதா?

அடுத்து, மிகவும் அபத்தமான வாதமொன்றினை வைத்திருக்கிறீர்கள்.

////இவ்வசனத்தில் fa nafahna feehi min roohina ( நாம் அவளுக்கு ரூகை ஊதினோம் ) என்ற சொல்லில், ஆண்பால் சொல்லை, அதாவது பீஹி என்ற வார்த்தையை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. அதாவது நாம் அவருக்கு ( அவள் என்று இல்லை ) ரூகை ஊதினோம் என்று கூறுகின்றான்.///

அந்த வசனத்தில் மர்யம் என்று அல்லாஹ் சொல்லும் போது ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறானாம்.. ஆகவே அல்லாஹ் சொல்ல வருவது மிர்சாவை தானாம்.

மொழியறிவு இல்லாதவர்கள் எல்லாம் விவாதம் செய்ய வந்தால் இது தான் பிரச்சனை !

அந்த 66:12 வது ஆயத்தின் ஆரம்பத்திலேயே மர்யம் (அலை) பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, 'அவருடைய கற்பை' என்ற வாசகத்தில் வரும் 'அவருடைய' என்பதற்கு அல்லாஹ் 'هَا' என்று பெண்பாலில்தான் குறிப்பிட்டுள்ளான்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا - "இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார்".

அதைத் தொடர்ந்து வரக்கூடிய அடுத்த வாசகத்தில்தான், "ஃபீஹி" - فِيه என்ற ஆண்பால் சொல் இடம்பெற்றுள்ளது.

فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا - "அவரிடம் நமது உயிரை ஊதினோம்"

இதில் 'அவரிடம்' என்பதற்கு فِيهِ என்ற ஆண்பாலுக்கான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது, 'மர்யம்' என்ற பெண்மணியைக் குறிப்பதல்ல! மர்யம் அவர்களின் #கருப்பை க்குள்ளே ஈஸா(அலை) அவர்களின் ரூஹை ஊதியதைதான் ஆண்பாலில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அரபியில் 'கருப்பை' என்பது ஆண்பால் சொல் (الرحم)

இந்த ஆயத்திலே கருப்பைக்குரிய அந்த வார்த்தை நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும், 'அவரிடம் ஊதினோம்' - 'அவர்களுக்கு உள்ளே' - என்று சொல்லும்போது, ஊதப்பட்ட அந்த இடமான கருப்பைதான் ஆண்பாலில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மர்யம் என்ற நபரே ஆண்பாலாக குறிப்பிடப்படவில்லை.

மேலும் அந்த ஆயத்திலேயே அடுத்தடுத்து வரக்கூடிய வார்த்தைகளும் இதை இன்னும் தெளிவாக உறுதிப்படுத்துகிற‌து.

وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ - "அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்". இதில்,

- 'உண்மைப்படுத்தினார்' என்று அல்லாஹ் குறிப்பிடும் صَدَّقَتْ என்ற சொல் பெண்பால்.

- 'தமது இறைவனின்' என்று குறிப்பிடப்படும் رَبِّهَا என்ற சொல் பெண்பால்.

- 'அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்' என்று சொல்லப்பட்டிருக்கும் كَانَتْ مِنَ الْقَانِتِينَ என்ற வாசகமும் பெண்பாலே!

இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு வார்த்தையிலும் மர்யம்(அலை) அவர்களை நோக்கி பெண்பாலுக்கான சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கும்போது, கருப்பை என்ற உறுப்பு அரபி மொழியில் ஆண்பாலில் பயன்படுத்தப்படும் என்றுகூட புரியாமல், அந்த ஆயத் தனக்கு சாதகமாக இருப்பதாக நினைத்து இவர்கள் கதையளந்து வருகின்றனர்.

மொழியறிவு இல்லையென்றால் அமைதியாக மெளனம் காத்திருக்கிஅ வேண்டும். அல்லாமல், இப்படி எதையாவது பேசி சிரிப்பு உண்டாக்கி, உங்கள் கொள்கையின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்க வேண்டாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம்:

'மர்யம்' என்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் இந்த ஆயத்தின் ஆரம்ப வார்த்தையிலேயே குறிப்பிட்டு விட்டான்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ - "இம்ரானின் #மகள் மர்யம்"

இதில் ابْنَت என்பது "மகள்" என்ற பெண்பால் சொல்லாகும்.

மர்யம் ஆண்பாலாக அல்லாஹ் சொல்கிறான், ஆகவே மர்யம் என்றால் மிர்சா என்று இந்த வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது என்கிற உலக மகா தமாஷை செய்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இம்ரானின் மகன் என்று இருக்கிறதா அல்லது இம்ரானின் மகள் என்று இருக்கிறதா?

. பிறகு فِيهِ என்பதற்கு அவர்கள் விளக்கம் சொல்லட்டும்.

”வ மர்யம பிந்த் இம்ரான் அல்லத்தி” இதில் வருகின்ற அல்லத்தி என்கிற சொல் ஒரு இனைப்புச் சொல் ஆகும்.
அல்லதி(அதாவது அலிஃப்,லாம்,தால்) என்பது ஆண்பாலுக்கும் அல்லத்தி(அலிஃப்,லாம்,தே) என்பது பெண்பாலுக்கும் உரியவை.

அல்லாஹ் இங்கே அல்லத்தி என்கிற சொல்லைப் பயன்படுத்துவதால், இந்த வசனம் ஒரு பெண்ணைப் பற்றித் தான் பேசுகிறது என்பது தெளிவு.

இரண்டாவது, “நஃபஹ ஃபீஹி” என்கிற சொற்றொடரில் வருகிற ஃபீஹி என்கிற சொல் மர்யமைக் குறிக்காது மாறாக கற்பத்தைக் குறிக்கக்கூடியது.

அல்லாஹ் கற்பத்தைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் இந்த ஃபீஹி என்கிறச் சொல்லைத் தான் கையாளுகிறான்.

சூரத்துஸ் ஸஜ்தாவில் 9 ஆவது வசனத்தில் கூட “வ நஃபஹ ஃபீஹி மிர்ரூஹிஹி” என்கிற சொற்றொடரில் ஃபீஹி என்று தான் பயன்படுத்துகிறான்.

எனவே ஃபீஹி என்பது பெண்ணின் உள்ளிருக்கும் கர்பத்தை ஆண்பாலாக அல்லாஹ் பாவிப்பதால் சொல்லப்படுவது ஆகும்.

என்ன வாதம் புரிந்து குட்டிக்கரணம் அடித்தாலும் மிர்சா சாஹிப் என்பவர் இன்றைய நவீன போலி சாமியார்களுக்கு நிகராக, ஆன்மா, ஆத்மா.. பேராத்மா என்று உளரிக்கொட்டிய அரைக்கிறுக்கராக தான் கருதப்படுகிறார் என்பது உங்கள் வாதத்தின் மூலமாகவே புலனாகிறது.

இலக்கணம்.. மொழியறிவு என்று நீங்கள் சமாளித்தவைகளும் கூட புஸ்ஸென்று ஆகி, அறியாமை உங்களிடம் தான் இருக்கிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

வண்டவாளங்கள் இன்னும் தொடரும்..இன்ஷா அல்லாஹ்!

நாத்திகம் என்பது பகுத்தறிவா?


நாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் நாத்திகர்கள் இருப்பது வரை நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது என்பது உறுதி !

சரி நான் கேட்கிறேன், பகுத்தறிவென்ன கடவுள் இருக்காரா இல்லையா என்பதை ஆராய்வதற்கு மட்டும் தான் அவசியமா என்ன?

பகுத்தறிவு என்பது நல்லவைகளிலிருந்து கெட்டவைகளை பிரித்தறியும் ஆற்றல் கொண்ட எல்லாவருக்கும் சொந்தமானது, எல்லா துறைகளிலும் அது பிரதிபலிக்கக்கூடியது.

மிருகங்களிடமிருந்து வேறுபட்டு ஒரு மனிதன் செய்யும் எல்லா காரியமுமே அவனுள் இருக்கும் பகுத்தறிவின் பிரதிபலிப்பு தான் எனும் போது, எல்லா காரியத்தோடும் தன்னிடமிருக்கும் பகுத்தறிவை அவன் மேற்கோள் காட்டி பார்க்க வேண்டும்.

ஆனால் நாத்திகம் பேசுகிற எவரும் அப்படி பொருத்திப் பார்ப்பது கிடையாது.

கடவுள் நம்பிக்கை என்று வருகிற போது மட்டும், நான் பகுத்தறிவை பயன்படுத்துபவனாக்கும்.. என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவன் பயன்படுத்தும் சாதனத்தை மேன்மைப்படுத்துகிறான் என்றால்..

மனிதன் பலகீனமானவன். குறைகளை சகித்துக் கொள்ள பழகிக் கொள்ளாதவன்.

எந்த காரியத்திற்கு பகுத்தறிவை பயன்படுத்த வேண்டுமோ அதில் அவன் தோற்கும் போது அவனையும் அறியாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

பகுத்தறிவை பயன்படுத்தினால் கிடைக்கும் விடைக்கு மாற்றமான நிலைபாடு தான் கடவுள் மறுப்பு என்பது பட்டவர்த்தனமான உண்மையாக இருக்கும் போது, எல்லா காரியத்திலும் பகுத்தறிவை பயன்படுத்துகிற நான் இதில் மட்டும் தோற்று விட்டேனே என்கிற குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, தான் தோல்வியுற்றதை மறைக்க அவனை போராட செய்கிறது.

அதனால் தான் நான் கடவுள் மறுப்பாளன் என்று சொல்வதோடு சேர்த்து நான் பகுத்தறிவாளன் என்பதையும் இணைத்து சொல்லும் கட்டாயம் அவனுக்கு.

ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று சொன்ன விஞ்ஞானம் தான் பெரு வெடிப்புக்கு முன்பாக ஒரு அணு இருந்தது என்றும்,
அது தான் வெடித்து சிதறியது எனவும், அந்த வெடிப்புக்கு தேவையான ஆற்றல் கூட தானே உருவானது எனவும் முரண்பட்டு பேசுகிறது எனும் போது,

பகுத்தறிவு என்பது விஞ்ஞானம் கூறும் உண்மையையும் தாண்டிய அந்த‌ ஆற்றலை நம்புவது தான்.

இந்த நம்பிக்கையை கொண்டு விட்டால் பகுத்தறிவு தனக்கு இருப்பதாக வேண்டுமானால் பொருளாகுமே தவிர, இது நாள் வரை கடவுளை மறுத்து வந்த தமக்கு அது பாதகமான இலக்கை நோக்கி தான் இழுக்கும் என்பதால் தான் கடவுள் இல்லை எனவும் பகுத்தறிவு தனக்கு இருக்கிறது எனவும் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரு சேர இணைக்கிறான் நாத்திகன்.

எப்போதும் கற்புடன் இருக்கும் பெண், தான் கற்புடையவள் என்று சொல்லிக் கொண்டே இருப்பது கிடையாது.

விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு அந்த குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாய், எங்கே இத்தனை நாளாய் கற்புடையவள் என்று தான் கட்டிக்காத்த மாண்பு பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில், நான் விபச்சாரம் செய்தேன் என்பது உண்மை தான், எனவே நான் கற்புடையவள் என்று முரண்பட்ட இரு விஷயங்களை இணைத்து பேச ஆரம்பிக்கிறாள்.

நான் பகுத்தறிவாளன் என்று தன்னை தானே சொல்லிக் கொள்வதும் ஒருவித அச்ச உணர்வின் வெளிப்பாடு தான் - Guilty Conscience !!

புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (I)


ஈஸா தான் மிர்சா என்பது உவமையா உளரலா?

Mirza Sahib Subject (Part 9)
-----------------------------------------------------------------

மிர்சா சாஹிப் தன்னை ஈஸா என்று மூன்று விதங்களில் கூறுகிறார்.

நான் தான் மர்யம்
மர்யமாகிய நான் கற்பமாகி ஈஸாவை பெற்றெடுத்தேன்
நான் தான் ஈஸா

அதாவது
ஈஸா வருவார், ஈஸா சாப்பிடுவார், ஈஸா பேசுவார்..
என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஈஸா என்றால் ஈஸாவை போன்ற மிர்சா சாப்பிடுவார், ஈஸாவை போன்ற மிர்சா வருவார்..

என்று இதை புரிய வேண்டும் என்று எந்த கிறுக்கனும் ஒப்புக் கொள்ள மாட்டான் என்பதை முந்தைய தொடரில் பார்த்தோம்.

மிர்சா சாஹிபின் இந்த கூற்றினை நியாயப்படுத்த ஆதாரங்கள் என்கிற பெயரில் பல நகைச்சுவைகளை செய்து காட்டியிருக்கிறீர்கள்.

நிஜமாகவே நகைச்சுவை தானா அல்லது நான் மிகைப்படுத்தி சொல்கிறேனா என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நெஞ்சில் கை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

சிந்தனைக்கும் இவர்களுக்கும் எள்ளளவுக்கும் தொடர்பிருக்கிறதா? என்பது இவர்கள் அடித்துள்ள நகைச்சுவையின் மூலம் நிரூபணமாகும்.

அதாவது,

////ஈஸா அலை அவர்கள் அதிகமாக உவமையாக பேசியுள்ளார்கள் என்று நியூ testament லிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.////

ஈஸா என்றால் மிர்சா என்பதற்கு நீங்கள் வைத்துள்ள முதல் சான்று இது தான்.
அதாவது ஈஸா நபி உவமையாக பேசுவாராம். அது நியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.

இதில் பல நகைச்சுவைகள் உள்ளன.

ஈஸா நபி உவமையாக பேசுவார் என்பதற்கும் ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்??

முஸ்தஃபா பணம் வாங்க வந்தார் என்று நான் சொல்கிறேன்.

இதை கேட்கும் நிசார் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், முஸ்தஃபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார், முஸ்தஃபா என்றால் முஸ்தபா போன்று தோற்றமளிக்கும் ஹனீஃபா தான்.
ஹனீஃபாவை தான் முஸ்தபா என்று நாஷித் சொல்லியிருக்கிறார் என்று நான் சொல்லாத விளக்கத்தை என் சார்பாக அவர் சொல்கிறார் என்று வைப்போம்.

அதெப்படிப்பா? முஸ்தபா என்றால் முஸ்தபா என்று தானே புரிய வேண்டும்? முஸ்தபா எப்படி ஹனீஃபா ஆவார்? என்று எதிர் கேள்வி கேட்டால்,

இந்த நிசார் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

முஸ்தபா என்றால் ஹனீஃபா தான்.
இதோ பார், முஸ்தஃபா பல இடங்களில் உவமையாக பேசக் கூடியவர் !!

இதை கேட்டதும் கேள்வி கேட்டவர் அரைக்கிறுக்கன் ஆகாமல் இருந்தால் சரி.

ஒரு பேச்சுக்கு முஸ்தஃபா உவமையாக பேசுபவர் என்று வைத்துக் கொண்டால் கூட, இங்கே முஸ்தா வந்தார் என்று முஸ்தஃபாவேவா சொன்னார்? நாஷித் அல்லவா சொல்கிறார்?
வாதம் வைத்து நியாயப்படுத்துவதாக இருந்தால் நாஷித் உவமையாக பேசுவார் என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்?

என்று நிசார் அவர்களை நோக்கி எதிர் கேள்வி தான் கேட்க வேண்டும்.

ஈஸா உவமையாக பேசுவதற்கும், ஈஸா வருவார் என்று அல்லாஹ் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்??

ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போல இருக்கும் மிர்சா வருவார் என்று அல்லாஹ் உவமையாக சொல்கிறான் என்று வைக்கப்படும் வாதத்திற்கு,

ஈஸா உவமையாக பேசுவார் என்று சொல்லப்படும் பதில் எப்படி சான்றாகும்??

சரி, அப்படியே ஈஸா உவமையாக பேசுபவர் என்றாலும், அதை நீங்கள் குர் ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ அல்லவா காட்ட வேண்டும்?

நியூ டெஸ்டமென்டில் இருக்கிறதாம்.. இது இவர்களுக்கு ஆதாரமாம்.

நியூ டெஸ்டமென்டில் பல விபச்சார கதைகள் கூட தான் இருக்கின்றன.. அவையெல்லாம் சரியென்று ஆகி விடுமா?

ஆதாரம் என்கிற பெயரில் பைபிளை காட்டும் அவல நிலையில் இருப்பவர்கள் தான் மிர்சா எனும் பொய்யரை தூக்கிப்பிடிப்பவர்கள்.

அடுத்து.. இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள். அதாவது..

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருக்கிறதாம்.
ஆகவே, ஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டுமாம்..
ஆகவே ஈஸா என்றால் மிர்சா என்பது நிரூபணமாகிறதாம் !!

ஆஹா.. பலே பலே !! என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு நிரூபணம் !!

இப்படியெல்லாம் கூட ஒரு காரியத்தை நிரூபிக்க முடியும் என்றால் நாட்டில் சிந்தனையாளர்களுக்கு எல்லாம் பெரும் சவால் விட்டு விட உங்களால் முடியும் !!

ஈஸா நபி சப்ஜக்ட் இன்னும் துவங்கவில்லை, இந்த மிர்சாவின் வண்டவாளங்கள் முடிந்து ஈஸா நபி சப்ஜக்ட் துவங்கும் போது, ஈஸா நபியை பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்? அவர் மரணிக்கவில்லை என்பது எப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாக இருக்கிறது என்பதெல்லாம் அக்கு வேறு ஆணி வேராய் தெளிவாக்கப்படும்.

குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று நிரூபணமாகும் போது, ஹதீஸில் வரக்கூடிய மர்யமின் மகன் ஈஸா நபி தான் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவாகப்புரியும்.

சரி நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு, ஈஸா நபி இறந்து விட்டார் என்றே வைப்போமே..

ஈஸா நபி வருவார் என்று ஹதீஸில் சொல்லப்படுவது ஈஸா நபியைப் போன்ற இன்னொருவர் என்று கூட வைப்போமே..

அந்த இன்னொருவர் மிர்சா தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

இதை சொன்னீர்களா?

இதற்கு ஆதாரம் காட்டினீர்களா?

எதை உங்கள் அடிப்படை நிலைபாடாய் வைக்கிறீர்களோ அதற்கு ஆதாரம் காட்டாத நீங்கள் தான் என்னுடைய ஆதாரத்தை பற்றி பேசுவதா?

குர் ஆனில் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று இருப்பதால் ...

ஈஸா நபி வருவார் என்றால் ஈஸா நபியை போன்ற ஒருவர் வருவார் என்று புரிய வேண்டும் என்பதால்..

ஈஸா என்றால் மிர்சா என்பது எப்படி நிரூபணமாகும்?

கேள்வி புரிகிறதா?

ஈஸா வருவார் என்றால் ஈஸாவை போன்ற ஒருவர் வருவார் என்றால் அந்த ஈஸாவை போன்றவர் ஏன் எங்கள் ஊர் அப்துல் காதராக இருக்கக்கூடாது?
ஏன் அது ஒரு ஜஃபருல்லாஹ்வாக இருக்கக்கூடாது?

இதற்கு தங்களிடம் இருக்கும் ஒரே பதில், அந்த ஈஸா என்பது நான் தான் என்று மிர்சாவே சொல்லி விட்டார் என்பது தான் !!

இது எப்படி இருக்கிறது என்றால், நான் தான் கடவுள் என்று சாய் பாபாவே சொல்லி விட்டபடியால் அவர் கடவுள் என்று நான் நம்புகிறேன் என்று சொல்பவன் போல் இருக்கிறது.

இது கடவுளின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது என்று கிறித்தவர்கள் வாதம் புரிவது போல் இருக்கிறது.

குர் ஆன், ஹதீஸை கொண்டு விவாதம் புரிய வந்து விட்டு, ஈஸா என்றால் மிர்சா என்று மிர்சாவே சொன்னார் என்று சொல்வது விவாதமா அல்லது கேலிக் கூத்தா?

ஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருக்கிறானா?

அதை காட்டுங்கள்.

ஈஸா என்றால் மிர்சாவை தான் அது குறிக்கிறது என்று நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா?

அதை எடுத்துக் காட்டுங்கள்.

இதுதான் வாதம் செய்யும் முறையே அல்லாமல், மிர்சா சொன்னார், என்று சொல்வது கேலிப்பேச்சு.

நான் நபி என்று கூட தான் மிர்சா சொல்லியிருக்கிறார்.. அது உண்மையா அல்லது உளரலா? என்று தானே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்? அல்லாமல், தான் நபி என்று மிர்சாவே சொல்லி விட்டபடியால் இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எவராவது சொன்னார்களா?

////நீங்களோ, ஈஸா வஃபாத்தை பற்றி பேச வேண்டாம், மிர்சா சாகிபை பற்றி பேசுவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் அடிப்படையான கருத்தாகிய ஈசாவின் வஃபாத்தை முதலில் பேசவேண்டும் என்று கூறுகிறோம்.
ஏனென்றால் அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று உவமையாக கூறப்பட்டதை உங்களால் புரியமுடியும்.//////

என்கிறீர்கள்.

ஏன்? நான் இதை அப்படியே உல்டாவாக கூட சொல்வேனே?

நாங்கள் அடிப்படை கருத்தான மிர்சா ஒரு புளுகர் என்பதைபற்றி முதலில் பேச வேண்டும் என்று சொல்கிறோம். அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று கூறபட்டது உவமையுமல்ல, அது மிர்சா என்கிற புளுகருமல்ல, ஈஸா என்றால் ஈஸா தான் என்று உங்களால் புரிய முடியும் !

அடுத்ததாக, ஈஸா என்பது மிர்சா தான் என்பதற்கு ஆதாரம் என்கிற பெயரில், அற்புதமான, உலகில் எவராலும் கற்பனை கூட செய்ய இயலாத அசாத்திய திறமையொன்றை காட்டியிருக்கிறீர்கள்.

அதாவது, ஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்களாம்.

மிர்சாவையும் நாம் தூற்றுகிறோமாம்.

எனவே ஈஸா தான் மிர்சா !!

என்னே ஒரு சிந்தனை, என்னே ஒரு அறிவாற்றல் !! அஹமத்தியா ஜமாஅத்தினரின் இது போன்ற சிந்தனையும் வாதமும் உங்களுக்கு பெருமையை தருகிறதா அல்லது தலைகுனிவை ஏற்படுத்துகிறதா? என்பதை அறிய, உங்களது இது போன்ற வாதங்களையெல்லாம் நடு நிலையான மக்களிடம் கொடுத்து வாசிக்க சொல்லிப்பாருங்கள்.

உங்களுக்கு தலைகுனிவோ என்னவோ, இந்த அளவிற்கு பலகீனமான வாதம் வைப்பவர்களுடன் நான் நேரம் செலவிடுகிறேன் என்று எண்ணுகையில் எங்களுக்கு வெட்கமாக தான் இருக்கிறது !

ஈஸா நபி எதிரிகளால் தூற்றப்பட்டார்கள்.

மிர்சாவையும் நாம் தூற்றுகிறோம்.

எனவே ஈஸா தான் மிர்சா !!

சினிமா நடிகையுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு கையும் களவுமாய் பிடிபட்ட நித்தியானந்தா என்கிற சாமியாரை கூட தான் நாங்கள் தூற்றுகிறோம்.

நான் கடவுளின் அவதாரம் என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த சாய் பாபாவை கூட தான் நாம் தூற்றுகிறோம்.

ஈஸாவை எதிரிகள் தூற்றினார்கள், நித்தியானந்தாவை நாஷித் தூற்றுகிறார்.
ஆகவே ஈஸா என்றால் அது நித்தியானந்தா தான் என்று எவனாவது நாளை வாதம் வைத்து உங்கள் கொள்கையுடன் மோதலுக்கு வந்து விடப்போகிறான் கவனம்..

அடுத்து, ஈஸா என்றால் மிர்சா தான் என்பதற்கு இன்னொரு வாதமொன்றை வைக்கிறீர்கள்.
வாதம் வைக்கிறீர்கள் என்று சொல்வதை விட வாதம் வைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.
காரணம், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உங்களுக்கும் புரியவில்லை, நீங்கள் எழுதியதை படிக்கும் எவருக்கும் புரியவில்லை.

அதாவது 66:11 வசனத்தில் இரண்டு பெண்களை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்கிறான்.

ஒன்று, ஃபிர் அவ்னின் மனைவி

இன்னொருவர் ஈஸாவின் தாயார் மர்யம்.

சரி, இந்த வசனத்தை காட்டி இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது..

//////இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு மூமின், இந்த 2 பெண்களுடைய ஏதாவது ஒரு பண்பை பெற்றவராகவே விளங்க முடியும் என்பதாகும்./////

ஆம், சரி தான்.

நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த இரு பெண்களும் முன்னுதாரணம் என்றால் இந்த இரு பெண்களிடம் இருக்கும் ஈமானை போல, இந்த இரு பெண்களிடமும் இருக்கும் இறையச்சத்தைப் போல், இந்த பெண்களிடம் இருக்கும் ஒழுக்கத்தை போல் நாமும் இருக்க வேண்டும் என்று பொருள்.

சரி, அதனாலென்ன? இதன் மூலம் என்ன தாம் சொல்ல வருகிறீர்கள்? என்று நீங்களே விளக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம் !!

ஆனால், வழக்கம் போல் இந்த வசனத்திற்கும் சில அபத்தமான விளக்கங்களை மட்டும் தவறாமல் கொடுத்துள்ளீர்கள்.
அபத்தமான புரிதல், அபத்தமான விளக்கம் போன்றவை தான் அஹமத்தியா மதத்திற்கு சர்வ சாதாரணமாச்சே !!

////இரண்டு பெண்களை, மூமின்களான ஆண்களுக்கு உதாரணமாக கூறியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது, பெண்களுக்கு அல்ல. ஏன்?/////

என்று கேட்டிருக்கிறீர்கள்.

ஆண்களுக்கு என்று அல்லாஹ் சொல்லவில்லை. ஈமான் கொண்டவர்களுக்கு, என்று தான் சொல்கிறான்.

இந்த வாதம் தவறானது.

////முஸ்லிம் உம்மத்திலே நபி ஸல் அவர்களின் மிகவும் நேசத்திற்குரிய ஹஸ்ரத் கதீஜா, ஆயிஷா ரலி, பாத்திமா ரலி, மற்றும் இறையடியர்களான பல பெண்கள் இருக்க, யூத சமுதாயத்தை சார்ந்த 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூற வேண்டியதன் நோக்கம் என்ன?/////

என்று இல்லாத ஜாதியை இஸ்லாத்தில் நுழைக்கிறீர்கள்.

சொல்வதில் அர்த்தமும் இல்லை.

ஆயிஷா, கதீஜா போன்றோர் முஸ்லிம் உம்மத்தாம்.
மர்யமும் ஃபிர் அவ்ன் மனைவியும் யூத உம்மத்தாம்.

நல்லா இருக்குதுங்க உங்க வாதம்.

முஸ்லிம் உம்மத் என்றால் என்ன என்று உங்களுக்கு யாரும் சொல்லி தரவில்லை என்று எண்ணுகிறேன்.

கதிஜாவும் ஆயிஷாவும் முஸ்லிம் உம்மத் தான், நான் மறுக்கவில்லை.
எதன் அடிப்படையில் முஸ்லிம் உம்மத் என்கிறோம்?

முஸ்லிம் உம்மத் என்று ஏதோ முதலியார் செட்டியார் போன்று சாதியாக பாவிக்கிறீர்களே.. இதென்ன கேலிக்கூத்து?

அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர் முஸ்லிம்.
அல்லாஹ் அனுப்பிய தூதரை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம்.

இது தானே விஷயம்.

ஆயிஷா அவர்கள் முஸ்லிம் என்றால் மர்யமும் முஸ்லிம் தான்.

அடிப்படை விஷயங்களை கூடவா நான் சொல்ல வேண்டும்?

/////நீங்கள் ஒருபுறம் நபி என்றும் மேலும் உங்களையே எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறிகிறீர்கள். ஆனால் மறுபுறம் மர்யமை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்களே?

இது என்ன பைத்தியக்காரத்தனம்?/////

என்று ஒரு யூதன் கேட்பானாம்.

அவன் கேட்டால் அந்த கேள்வி தான் பைத்தியக்காரத்தனம் என்று அவனது மண்டையை தட்டி பதில் சொல்வோம். அல்லாமல், இதை வைத்தெல்லாம் நபி (சல்) அவர்களை பொய்ப்படுத்த முடியாது.

காரணம், இந்த இரு பெண்களை அல்லாஹ் முன்னுதாரணமாக ஆக்கி விட்டு அதற்கான காரணத்தையும் அந்த வசனத்திலேயே விளக்கியும் விடுகிறான்.

அதாவது, ஃபிர் அவ்னின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு முன்னுதாரணமாக அல்லாஹ் ஆக்கினான். ஏன்?

ஏனென்றால், ஃபிர் அவ்னின் கொடுமைகளை அவர் சகித்து, இதற்கு பிரதிபலனாக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டி தா அல்லாஹ், என்று அவர் பிரார்த்தனை செய்தார். (பார்க்க 66:11)

இந்த விஷயத்தில் நமக்கு படிப்பினையும் ஈமானை மேம்படுத்திக் கொள்ளும் பாடமும் இருக்கிறது.

மர்யமை முன்னுதாரணமாக ஆக்கி கொண்டான். காரணம் அவர் கற்பொழுக்கமுள்ள பெண்ணாக வாழ்ந்தார். (பார்க்க 66:12)

ஆக, காரணங்களை கூறி, இன்னின்ன விஷயங்களில் இவர்களை முன்னுதாரணமாக கருதிக் கொள் என்றால், அதெப்படி, நபி (சல்) அவர்கள் நமக்கு முன்னுதாரணமில்லையா என்று யூதன் ஒருவன் கேட்பது கூமுட்டைத்தனம் என்று அவனுக்கு புரிய வைப்போம்.

அதே போல்,

///இப்போது ஒரு கிறிஸ்தவன் கேட்கிறான், முஹம்மத் அவர்களே எங்களின் ஆத்மீக அன்னையான ஹஸ்ரத் மர்யமை, மூமின்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று நீங்கள் உங்கள் குரானில் எழுதி உள்ளீர்கள்.
மறுபுறம் நீங்கள் நபி என வாதம் செய்கிறீர்கள். இது முரண்பாடாக தெரிய வில்லையா?////

என்று அடுத்து கூறுகிறீர்கள்.

மர்யம் எடுத்துக்காட்டாய் இருப்பதற்கும், நபி (சல்) அவர்கள் தன்னை நபி என்று பிரகடனப்படுத்தியதற்கும் என்ன சம்மந்தம்? அது எப்படி முரண்பாடாகும்?

மர்யம் என்ன, எல்லா நபிமார்களையும் தான் அல்லாஹ் நமக்கு முன்னுதாரணமாக்கியிருக்கிறான். இப்ராஹிம் நபியை கூட தான் நமக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக்கியிருக்கிறான், அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூட தான் சொல்கிறான்.

ஆக இது ஒரு வாதமாகுமா? எல்லா நபிமார்களும் முஃமீன்களுக்கு முன்னுதாரணம் தான் என்பதால் நபி (சல்) அவர்கள் நபியில்லை என்று ஆகி விடாது, இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆக, நீங்கள் எழுப்பிய எந்த வாதமும் உருப்படியாய் இல்லை என்பது இதை படிக்கும் எவரும் புரியலாம்.

நானே மர்யம், நானே ஈஸா என்கிற மிர்சா சாஹிபின் உளரலை இன்னும் நாம் விடுவதாக இல்லை...

தொடர்ந்து, இந்த இரு பெண்களை முன்னுதாரணமாக அல்லாஹ் சொல்லியதற்கும் மிர்சா மர்யமாக ஆனதற்கும் உண்டான தொடர்பு பற்றி நீங்கள் எழுதியுள்ள மேலும் சில அபத்தங்கள் சிலவற்றை தொடர்ந்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அத்தோடு, மர்யம் பற்றி வரக்கூடிய வசனத்தில் ஆண்பாலை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று நீங்கள் கூறியிருக்கும் விளக்கமானது எந்த அளவிற்கு உங்களை மொழியறிவற்றவராக காட்சி தருகிறது என்பதையும், இலக்கண‌ ரீதியாக உங்கள் கூற்று எவ்வாறு பிழை என்பதையும் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ் !

அம்மா சாராயம்


குடித்து விட்டு மனைவியை அடித்துக்கொன்றதாக செய்தி..

அம்மா உணவகம் என்றால் பெருமை.
அம்மா குடிநீர் என்றால் பெருமை.
இன்று அம்மா உப்பு என்கிற புது அறிமுகம்..

மக்களுக்கு அரசு வழங்கும் எந்த பொருளையும் அம்மா பெயரோடும் அம்மா புகைப்படத்தோடும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்ளும் முதல்வர், இதே பெருமிதத்தை அம்மா சாராயம் என்று பெயர் சூட்டி அடைந்து கொள்ள வேண்டியது தானே?

உப்பையும் தண்ணீரையும் போல் சாராயத்தையும் அரசு தானே வழங்கி வருகிறது ?

மற்றவைகளுக்கு பெருமை அடைவீர்கள், சாராய பாட்டிலில் தன் புகைப்படத்தை இடுவதில் மட்டும் சங்கூஜம் கொள்வீர்களோ?

தன் பெயரை இட வெட்கப்படுவீர்கள், ஆனால் அதை நீங்களே வியாபாரம் செய்வீர்கள்;

அதை குடிப்பது உடலுக்கு கேடு என்பீர்கள், ஆனால் அதை வைத்தே வருமானம் பார்ப்பீர்கள்.

பல்லாயிரம் கோடி இலாபம் பார்ப்பீர்கள், ஆனால் இது எனது வியாபாரம் தான் என்று வெளிப்படையாக சொல்ல மாட்டீர்கள்,

மனிதனுக்கு கேடு விளைவிக்கிற, குடும்பங்கள் கெட்டு சீரழிய காரணமாய் அமைந்த, உங்கள் பெயரையும் புகைப்படத்தையும் இடுவதற்கு கூட சங்கூஜம் அடையக்கூடிய ஒரு வியாபாரம் தேவை தானா?

அனைத்தையும் நிறைவேற்றி விட்டு சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கும் நாள் கூட வரலாம்;

அப்போது உங்கள் ஆட்சிகாலத்தை நீங்கள் பின்னோக்கி பார்க்கும்போது உங்களுக்கே பெருமிதமாய் தான் இருக்க வேண்டுமேயல்லாமல் பல குடும்பங்கள் சீரழிய நாம் காரணமாய் இருந்தோம் என்கிற உறுத்தல் இருக்கக்கூடாது !!

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (H)


மிர்சா சாஹிப் ஆணா அல்லது பெண்ணா? அல்லது இரண்டுமா? அல்லது இரண்டுமேயில்லையா?

Mirza Sahib Subject (Part 8)
-------------------------------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டார், ஈஸா நபி இறந்து விட்டார் என்று, அஹமதிய்யா மதத்தவர்கள் அதை ஒரு பெரிய வாதமாக எல்லா இடங்களிலும் வைத்த வண்ணம் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

நபி (சல்) அவர்களுக்கு பிறகு இன்னொரு நபி வருவார், அவர் தான் மிர்சா.. இது இவர்களது கொள்கை.

இங்கே எங்கிருந்து ஈஸா நபி வந்தார்? நபிக்கு பிறகு இன்னொரு நபி வருவார் என்கிற புது மதத்தை உருவாக்கும் இவர்களுக்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற கொள்கையை நிறுவ வேண்டிய அவசியம் என்ன?

என்று பலரும் எண்ணலாம்.

பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிய துவங்கிய காலகட்டங்களில் நான் கூட இதை எண்ணி வியப்படைந்ததுண்டு.

ஆனால், மிர்சா சாஹிபை நபியாக ஆக்குவதற்கும் ஈஸா நபி மரணித்து விட்டார் என்று வாதம் புரிவதற்கும் நிறைய தொடர்புகள், சம்மந்தங்கள் உள்ளன.

இதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.

தான் ஒரு நபி என்பதை நிறுவுவதற்கு இந்த மிர்சா சாஹிப் பல தந்திர வித்தைகளையும், பொய் புரட்டுகள் பலவற்றையும் செய்தார் என்பதை ஒவ்வொன்றாக நாம் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில், தான் நபி என்று மக்களை நம்ப வைக்க இவர் கையில் எடுத்த ஆயுதங்களில் ஒன்று தான் ஈஸா நபியின் மரணம்.

இறக்காத ஈஸா நபி இறந்து விட்டார் என்று சொல்வதன் மூலம் தன்னை நபியென, சிந்திக்காத மக்களை நம்ப வைக்க முடியும்.

அதாவது, குர் ஆனில் நேரடியாக ஈஸா நபி இறக்கவில்லை என்று இல்லை.
இதை ஒரு ஆதாரமாக எடுத்து வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா, குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று இல்லை, மாறாக எல்லா மனிதர்களும் இறப்பார்கள், நீடித்து வாழும் வாழ்க்கை எவருக்கும் இல்லை என்று தான் அல்லாஹ் பொதுவாய் சொல்கிறான்..

ஆகவே ஈஸா நபியும் இறந்து விட்டார் என்கிற மிகவும் பாமரத்தனமான வாதமொன்றை இந்த மிர்சா சாஹிப் பிரச்சாரம் செய்து வந்தார்.

(((ஈஸா நபி இறக்கவில்லை என்பதை ஈஸா நபியின் சப்ஜக்டின் போது குர் ஆனை கொண்டே தெள்ளத்தெளிவாக நிரூபிப்பொம், இன்ஷா அல்லாஹ்)))

சரி சாஹிபே, அப்படியானால், ஹதீஸ்களில் மர்யமின் மகன் ஈஸா இவ்வுலகில் மீண்டும் வருவார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதே அது எப்படி?

என்று இவரிடம் எதிர் கேள்வி கேட்ட போது, அதற்கு இவர் சொன்ன பதில் தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
அந்த பதிலின் மூலம் தான் தன்னை நபியென நிறுவுகிறார் இந்த சாஹிப்.

அதாவது ஹதீஸ்களில் அல்லாஹ் ஈஸா என்று உவமையாக சொல்கிறானாம்.
அவன் ஈஸா என்று சொல்வது தன்னை தானாம்.
ஆகவே ஈஸா என்றால் மிர்சா குலாம் அஹமதாகிய நான் தான் !

இது தான் இவரது வாதம் !

சரி சார், அங்கே வெறும் ஈஸா என்று வரவில்லையே, மர்யமின் மகன் ஈஸா என்றல்லவா வருகிறது என்று கேட்கப்பட்டதற்கு..

ஆம்.. அதற்கு காரணம் " நான் முதலில் மர்யமாக இருந்தேன்"
மர்யம் என்றாலும் நான் தான்.

பின் நானே கற்பமானேன்.. நான் தான் ஈஸாவை பெற்றெடுத்தேன்.

மர்யம் என்றாலும் நான் தான், மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் அது நான் தான்"
எனவே மர்யமின் மகன் என்றாலும் நான் தான் "

இது தான் இந்த சாஹிபின் உயரிய தத்துவம். இந்த தத்துவ முத்தை தான் தோண்டியெடுத்து சீராட்டி வருகின்றனர் இவரை சார்ந்த மதத்தவர்கள்.

அதாவது, ஹதீஸில் ஈஸா வருவார் என்று உள்ளது, அதை எப்படி தனக்கு சாதகமாக ஆக்குவது? என்று சிந்தித்திருக்கிறார் இந்த மிர்சா.

சிந்தனையின் முடிவாக இவருக்கு கிடைத்த பதில், குர் ஆனில் ஈஸா நபி இறக்கவில்லை என்று எந்த வசனமும் இல்லை என்பதை பிரச்சாரம் செய்து ஈஸா நபியை கொலை செய்து விடுவோம், பிறகு ஹதீஸில் வரக்கூடிய ஈஸா என்பது நான் தான் என்று சொல்லி விடலாம்..

இது தான் இவரது விஷமமான சிந்தனை.

சரி இப்போது இப்போது விஷயத்திற்கு வருவோம்.

நானே ஈஸா, நானே மர்யம் என்கிற இவரது உளரல்களையும் அதற்கு இந்த அஹமதியா மதத்தவர்கள் கொடுக்கும் முட்டுகளையும் விரிவாக காண்பதற்கு முன்னால்,

மிர்சா சாஹிபின் இன்னொரு வரலாறை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

அதாவது, துவக்க காலத்தில் ஈஸா நபி இறந்து விட்டார் என்பது இவரது கொள்கை கிடையாது. இதை அவரே சொல்லியும் இருக்கிறார்.
எல்லா முஸ்லிம்களை போல நானும் ஈஸா நபி இறக்கவில்லை, வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன் என்று தனது நூலில் அவரே சொல்லியும் இருக்கிறார்.
அல்லாஹ் ஒரு நாள் இவரை பார்த்து ஈஸாவே ஈஸாவே என்று அழைத்தானாம்..

அப்போதும், இவருக்கு புரியவில்லையாம்.. ஏதோ வேறு அர்தத்தில் அழைப்பதாக இவர் எண்ணினாராம்.
தொடர்ந்து பல முறை அவ்வாறு அழைத்த போதும் அதை புரியாத இவர், கடைசியாக மழை போல் வஹி வர துவங்கியப் பிறகு தான் ஓஹோ இது நாள் வரை தன்னை ஈஸா ஈஸா என்று அல்லாஹ் அழைத்ததற்கு காராணம், தன்னை ஈஸா என்று உவமைப்படுத்தியிருக்கிறான் என்று புரிந்து கொண்டாராம்.

அன்றிலிருந்து, ஈஸா இறந்து விட்டார்.. ஹதீஸில் வரும் ஈஸா என்பது தன்னை குறிக்கும் என்று நிலைபாட்டினை மாற்றி கொண்டார் இந்த சாஹிப்.

இது தான் அவரது நிலைபாட்டின் வரலாறு. (இதை Mirza Sahib Subject பாகம் 4இல் விலாவாரியாக காணலாம்.)

இப்போது, இந்த நானே ஈஸா, நானே மர்யம் என்கிற உளரல்களுக்கு நீங்கள் சொல்லும் உப்புக்கு சப்பான சமாளிப்புகளை பார்ப்போம்.

இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று அல்லாஹ் சொல்வதை நேரடியாக புரியக் கூடாது, இது உவமை என்கிறீர்கள்.

இதற்கு ஆதாரம் என்கிற பெயரில் 3:7 இறை வசனத்தை காட்டுகிறீர்கள்.

உறுதி செய்யப்பட்ட வசனங்களும் குர் ஆனில் உள்ளன.இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன என்று சொல்கிற வசனம் இது.

நேரடியாக புரியும் வசனங்களும் உள்ளன, இரண்டு அர்த்தங்களை கொண்ட, சிந்தனையுடையவர்கள் சிந்திக்கும் போது அது எந்த அர்த்தம் என்று புரிகிற அளவிலான வசனங்களும் உள்ளன என்பது இந்த வசனத்தின் பொருள்.

இதை வைத்துக் கொண்டு ஈஸா என்று சொன்னால் ஈஸா இல்லை அது இரு அர்த்தம் கொண்ட வசனம் என்று சொன்னால் இது நியாய உணர்வுள்ளவர் வைக்கும் வாதம் தானா?

நேரடி அர்த்தமும் இருக்கும், இரு வேறு அர்த்தம் கொண்டதும் இருக்கும் என்று சொன்னால்,

நேரடியாக சொல்லப்பட்டவை எவை, இரு அர்த்தத்துடன் சொல்லப்பட்டவை எவை என்பதை கண்டு கொள்ள முடியும் என்பது பொருள்.

நேரடியாக சொல்லப்பட்டதை நேரடியாக புரிய வேண்டும். இரு அர்த்தம் கொடுக்கும் வகையிலான வழிவகை அத்தகைய நேரடியாக சொல்லப்படும் வசனங்களுக்கு இருக்காது.

உதாரணமாக, பணம் கேட்டு முஸ்தஃபா என்னிடம் வந்தார் என்று சொல்வது நேரடி பொருள்.

இதற்கு முஸ்தஃபா நான் இருக்கும் இடத்திற்கு வந்தார் என்கிற நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும்.

அதுவே, மரண செய்தி கேட்டு வளைகுடாவிலிருந்து முஸ்தஃபா ஓடோடி வந்தார் என்று சொன்னால், இங்கே வளைகுடாவிலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்தார் என்று பொருள் கொள்ளக் கூடாது.

மாறாக, விரைவாக வந்ததை தான் ஓடி வந்தார் என்கிற அர்தத்தில் சொல்லப்படுகிறது என்று புரிய வேண்டும்.

இது தான் இரண்டு அர்த்தம் தரும் பேச்சு என்பது.

குர் ஆனிலும் இது போன்ற சில வசனங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு நீ எறிந்த போது அதை நீ எறியவில்லை, நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இது நேரடி பொருளை கொண்ட வசனமல்ல.

அல்லாஹ்வின் உதவி என்கிற அர்தத்தில் சொல்லப்படும் வசனம் தான் இது.

இதை நேரடியாக அல்லாஹ்வே போர்களத்தில் வந்து போரிட்டான் என்று படிக்கும் எவருமே புரிய மாட்டோம்.
அனைவருக்குமே தெரியும், இது நேரடி அர்த்தம் கொண்ட வசனமல்ல என்பது.

இதை நான் எதற்கு விளக்குகிறேன் என்றால், நேரடி அர்த்தம், இரு வேறு அர்த்தம் என இந்த காதியானிகள் கூறி, அதை வைத்து ஈஸா என்றால் மிர்சா தான் என்று பொருள் செய்வது எந்த அளவிற்கு அபத்தமானது என்பதை புரிய வைக்க தான்.

நேரடியாக எல்லாருக்கும் புரியக்கூடிய வசனங்கள் என்றைக்கும் நேரடியானவை தான்.

இரு வேறு அர்த்தங்கள் உள்ள வசனங்களும் குர் ஆனில் இருக்கின்றன என்பதால் தங்களுக்கு சாதகமான எல்லா வசனங்களையும் இது இரு பொருள் தரும் வசனம், அது இரு பொருள் தரும் வசனம், என்று சொல்லிக் கொண்டே சென்று விடலாமா?

ஈஸா, மூஸா, இப்ராஹிம் என்றெல்லாம் தனி தனி நபர்களை கொண்ட வசனங்களையெல்லாம் இரு பொருள் தரும் வசனம் என்று எந்த மூடரும் ஒப்புக் கொள்ள மாட்டார்.

அப்படியானால், மூஸா நபி கைத்தடியை போட்டார் என்றால் மூஸா நபி இல்லை, அது ஆதம் நபியை தான் அல்லாஹ் சொல்கிறான் என்று உளரலாம்.

இப்ராஹிம் நபி சிலையை உடைத்தார்கள் என்றால் அது இப்ராஹும் என்று நேரடியாக புரியக் கூடாது, சுலைமான் நபியை தான் அல்லாஹ் இங்கே இப்ராஹிம் நபி என்று சொல்கிறான் என்று தத்துவ மழை பொழியலாம்.

நூஹ் நபி கப்பல் செய்தார்கள் என்றால் அது நேரடி வசனமல்ல, அது இரு பொருள் தரும் வசனமாக்கும், இங்கே நூஹ் நபி என்றால் நபி (சல்) அவர்களின் தோழர் அபுபக்கர் சித்தீக்கை தான் அல்லாஹ் சொல்கிறான்..

என்று கதையளக்கலாம்.

இப்படியெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டால், இதோ 3:7 வசனம் என்ன சொல்கிறது? குர் ஆனில் நேரடி அர்த்தம் கொண்ட சொல்லும் இருக்கிறது, இரு பொருள் தரும் வசனமும் இருக்கிறது என்று அல்லாஹ்வே சொல்கிறான் பார்த்தீர்களா, அதனால் தான் இப்படி சொல்கிறேன்..

என்று அவர் சொன்னால் அவரை சிந்தனையற்றவர் என்று தான் நாம் சொல்வோம்.
அஹமதியா மதத்தவர்கள் அதை தான் செய்து வருகிறார்கள்.

ஈஸா நபி வருவார்கள், ஈஸா நபி அதை செய்வார்கள்,ஈஸா நபி இதை செய்வார்கள்

என்றெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, ஈஸா என்றால் மிர்சா என்று புரிய வேண்டுமாம்.

அதிலும், மர்யமின் மகன் ஈஸா என்று தெளிவாக, நேரடியாக அல்லாஹ் சொல்லும் போது, மர்யம் என்றாலும் மிர்சா தான், மர்யம் பெற்ற ஈஸா என்றாலும் மிர்சா தான் என்று புரிய வேண்டுமாம்.

எங்களுக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி பைத்தியக்காரத்தனமாய் புரிவதற்கு?

நீங்கள் இப்படி தான் புரிவீர்கள், கண்டவனையும் நபி என்று சொல்லி அவன் பின்னால் செல்பவர்களுக்கு இது போன்ற பைத்தியக்காரத்தனங்கள் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

முஸ்லிம்களாகிய நாங்கள் அப்படியல்ல என்பதை இங்கே சொல்லி கொள்கிறோம்.

////இதற்கு, வரக்கூடியவர் நபியாக இருப்பார், மேலும் அவர் பண்பிலும் ஆற்றலிலும் (மரணித்து போன) ஈசாவை ஒத்திருப்பார் என்பதே பொருளாகும்.////

என்று சொல்கிறீர்கள்.

அதாவது, இப்ராஹிம் நபி என்று அல்லாஹ் எங்காவது சொன்னால், அது எங்க பக்கத்து வீட்டு இப்ராஹிமையாக்கும் அல்லாஹ் சொல்கிறான், இந்த இப்ராஹிம் அந்த இப்ராஹிம் நபியை போல இருப்பான் என்று இதன் பொருள்

என்று உலக மகா தத்துவத்தை உதிர்க்கலாம்..

மூஸா நபி என்று அல்லாஹ் சொல்லும் இடத்திலும் இது போன்று எதையாவது உளரித்தள்ளலாம்.

சரி, ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?

நான் சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிற நீங்கள், இங்கே வைக்கும் எந்த வாதத்திற்காவது ஆதாரத்தை சமர்ப்பித்திருக்கிறீர்களா?

ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று தான் பொருள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானா? நபி (சல்) அவர்கள் அப்படி விளக்கம் கொடுத்தார்களா?

நீங்களாக எதையாவது சொல்லி திரிந்தால் அதை கேட்டு ஆமாம் என்று தலையாட்ட நாங்கள் என்ன அஹமதிய்யா மதத்தவர்களா??

சரி நான் கேட்கிறேன், ஈஸா என்றால் பண்பிலும் ஆற்றலிலும் ஈஸாவை போன்றவர் என்று பொருள் என்றால், மிர்சா சாஹிபின் எந்த பண்பு ஈஸா நபியை ஒத்ததாக இருந்தது?
மிர்சா சாஹிபின் எந்த ஆற்றல் ஈஸா நபியின் ஆற்றல் போல் இருந்தது?

ஈஸா நபி இறந்தவர்களை உயிர்ப்பித்தார்கள், பார்வையில்லாதவர்களுக்கு பார்வை கொடுத்தார்கள்.

மிர்சாவும் இதையெல்லாம் செய்தார் என்று சொல்ல வருகிறீர்களா? நீங்கள் சொன்னாலும் சொல்வீர்கள்.

இதில் உச்சகட்ட வேடிக்கை என்ன தெரியுமா?

அல்லாஹ் ஈஸா என்கிறான்..

அது நான் தான் அது நான் தான் என்று ஓடோடி வருகிறார் இந்த மிர்சா சாஹிப்.

சரிப்பா.. அதே அல்லாஹ், மர்யமின் மகன் ஈஸா என்கிறானே?

என்று கேட்டால்..

அப்போதும் சிறு தயக்கமுமின்றி.. அதுவும் நானே நானே என்கிறார்.

அது எப்படி என்று கேட்டதற்கு தான், ஒரு காலத்தில் நான் மர்யமாக இருந்தேன், நான் கருவுற்றேன்.. என்கிற சினிமாக்கதை.

சரி அதுவும் போகட்டும், 66:12 வசனத்தில் இம்ரானின் மகன் மர்யம் என்று அல்லாஹ் சொல்கிறானே.. இப்போ என்ன சொல்கிறீர்கள்?

ஈஸா என்றாலும் நான், ஈஸாவை பெற்ற மர்யம் என்றாலும் நான் என்று சொன்னவருக்கு, அந்த மர்யமை பெற்ற இம்ரான் என்றாலும் நான் தான் என்று சொல்வதற்கு மட்டும் நேரமா ஆகும்?

அல்லது, அதை கூட உலக மகா தத்துவமாக எடுத்து வந்து, எம்மோடு வாதம் புரிய உங்களுக்கு வெட்கமோ சங்கூஜமோ இருக்குமா என்ன?

ஆக, மர்யமின் மகன் என்றால் மர்யமும் நானே, மகனும் நானே என்பவர்,
66:12 வசனத்தின் படி,
இம்ரானும் நானே,
இம்ரான் பெற்ற மர்யமும் நானே,
மர்யம் பெற்ற ஈஸாவும் நானே

என்று தத்துவ மழை பொழிந்தாக வேண்டும்.

வேடிக்கை இத்தோடு நிற்கவில்லை.

மிர்சா எப்படி மர்யமானார்.. அவர் எப்படி ஈஸாவானார்.. என்பதற்கு குர் ஆனை கொண்டே..(?*&*^$*) அதி பயங்கர ஆதாரங்களையெலலம் காட்டி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.

அவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து பார்க்கலாம்..

தொடரும், இன்ஷா அல்லாஹ்

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)


ஐந்து வயது குழந்தையின் முதிர்ச்சியை கூட பெற்றிராத‌ மிர்சா சாஹிப்
Mirza Sahib Subject (Part 7)
----------------------------------------------------------------------------------

ஆயிரம் சாபம் என்பதை ஒரு சாபம், இரண்டு சாபம், மூன்று சாபம் என்று கூறுகிறவர் விவரமுள்ள மனிதராக இருக்க மாட்டார். 
அப்படி சிறுபிள்ளைத்தனம் காட்டுகிறவராக மிர்சா சாஹிப் இருந்ததை நாம் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய போது,

ஏன்? சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று 33 தடவை சொல்வதில்லையா?

என்று இதை கொண்டு அதை நியாயப்படுத்தும் பதிலொன்றை சொல்லியுள்ளீர்கள்.

இது நபி (சல்) அவர்களின் கூற்றினையே கேலி செய்வதாகும் என்பதை கூட புரிய மாட்டீர்களா?

அல்லாஹ்வின் மீது 33 தடவையல்ல, ஆயிரம் முறை, லட்சம் முறை திக்ர் சொன்னாலும் ஒவ்வொரு திக்ருக்கும் நன்மை.
நாம் சொன்னால் ஒவ்வொரு திக்ருக்கும் அல்லாஹ் நன்மை தருவான், ஆகவே தான் சொல்கிறோம்.
அதை நபியவர்கள் சொல்லுமாறு நமக்கு கட்டளையிட்டதால் சொல்கிறோம்.

இதை சொல்வதால், ஒருவரை உலக விஷயங்களை கருத்தில் கொண்டு ஏசும் பொருட்டும், திட்டுவதற்காகவும், ஒரு சாபம், இரண்டு சாபம் என்று ஆயிரம் வரை சொல்வது அர்த்தமுள்ளதாகி விடுமா?

70 சஹாபாக்களை எதிரிகள் கொலை செய்த போது அதற்காக மிகவும் வருந்திய நபி (சல்) அவர்கள், அந்த மக்கத்து காஃபிர்களுக்கு எதிராக நாள்தோறும் அல்லாஹ்வின் சாபம் வேண்டி குனூத் ஓதினார்கள் ; மிகவும் மன உளைச்சலுக்கு ஆலாகியிருந்தார்கள்.

நபிக்கு மன உளைச்சல் என்பதால் அல்லாஹ்விடம் அவர்கள் துஆ செய்த முறை இப்போது மிர்சா சாஹிப் செய்தது போல் தானா?

அந்த காஃபிர்களுக்கு எதிராக இப்படி தான் துஆ செய்தார்களா?

லஃனத் உண்டாகட்டும் என்பது நாம் செய்யும் துஆ.

சுப்ஹானல்லாஹ் என்பது துஆ அல்ல. அது அல்லாஹ்வை புகழும் வார்த்தை. அவன் தூயவன் என்று அவனை போற்றும் வார்த்தை.

சுப்ஹானல்லாஹ் என்று ஒரு முறை சொன்னாலும் லட்சம் முறை சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கிறது.

அதே போன்ற அர்த்தம் சாபம் விடும் போதும் தொனிக்க வேண்டுமென்றால், ஆயிரம் முறை சபிக்கிறேன், ஆயிரம் முறை சபிக்கிறேன் என்று வேண்டுமானால் ஆயிரம் முறையோ லட்சம் முறையோ சொல்லிக் கொண்டிருக்கட்டும், அது தவறில்லை.

ஆனால், ஒரு முறை சபிக்கிறேன், இரண்டு முறை சபிக்கிறேன், மூன்று முறை சபிக்கிறேன்..... ஐம்பத்தி ஆறு முறை சபிக்கிறேன்......

நூற்றி எண்பது முறை.. இருனூற்றி ஆறு முறை, எழுனூற்றி முப்பத்தி ஏழு முறை..
என்று ஆயிரம் வரை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, மாறாக அது ஒரு வகையான மன நோய் என்கிற முடிவை தான் சொல்கிறது.

அடுத்து, இந்த ஆயிரம் சாபம் என்கிற கேலிக்கூத்தை நியாயப்படுத்த குர் ஆனையே ஆதாரமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.
அதாவது, 55 ஆம் அத்தியாயத்தில் ஃபபி அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து கத்திபான்..

என்று அல்லாஹ் திரும்ப திரும்ப சொல்கிறானாம்..

அப்படி அல்லாஹ் திரும்ப திரும்ப சொல்வது போல தான் ஒரு சாபம், இரண்டு சாபம் என்று சொல்வதும்.. என்று அஹமதிய்யா ஜமாஅத்தினரின் அறிவாற்றலை ஒற்றை சான்றின் மூலம் நிரூபணம் செய்துள்ளீர்கள் !

ஃபபி அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து கத்திபான்.. என்றால் ""உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?""

என்பது அர்த்தம்.

ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு ஒரு சாபம், இரண்டு சாபம் என்று ஆயிரம் வரை எழுதுவதற்கு இந்த இறை வசனத்தை சான்றாக காட்டுகிறீர்கள் என்றால், அல்லாஹ்வும் இந்த அத்தியாயத்தில் இந்த வசனத்தை தொடர்ச்சியாக..

உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டும்..

அப்படி இடையில் எந்த வாசகங்களையும் சேர்க்காமல் தொடர்ச்சியாக இதை மட்டுமே சொல்லிக் கொண்டே இருந்தால்.. நீங்கள் சொல்வதிலும் சிறிதேனும் அர்த்தமிருக்கும்.

ஆனால், அந்த அத்தியாயத்தில் அப்படியா அல்லாஹ் சொல்கிறான்?

பூமியை பார், வானத்தை பார்.. செடி கொடிகளை பார் என்று தனது படைப்பின் அதிசயத்தை பட்டியலிட்டு விட்டு பின் உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
என்கிறான்.

பின், மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பற்றி சொல்லி, நெருப்பினால் உருவாக்கப்பட்ட ஜின்களைப் பற்றி சொல்லி அதற்கும் உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இரண்டு கிழக்கு திசை, இரண்டு மேற்கு திசை என்கிற வியத்தகு அறிவியல் உண்மையொன்றினை சொல்லி விட்டு பிறகு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்கு புலப்படாத திரையொன்று இருக்கிறது என்கிற விஞ்ஞான பேருண்மையை கூறி விட்டு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று சொல்கிறான்.

கியாமத் நாள் என்கிற ஒரு நாள் வரும், அன்று அனைவருமே அழிவீர்கள், அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பான் என்கிற அச்சத்தை ஊட்டி விட்டு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இவ்வாறு, அதை பார், அதை பொய்யென கருதுவாயா?

இதோ இதை பார்.. இதை வைத்து அல்லாஹ்வை மறுப்பாயா?

அந்த படைப்பினை பார், இந்த அறிவியல் உண்மையை பார்..

இதை சிந்தித்து பார்த்து அல்லாஹ்வை உன்னால் மறுக்க முடியுமா?

என்று கேட்பதற்கும்,

ஒரு சாபம்
இரண்டு சாபம்
மூன்று சாபம்
..
..
..
ஐம்பத்தி மூன்று சாபம்

அறுனூற்று எண்பத்தி எட்டு சாபம்

தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டு சாபம்..
..
..
ஆயிரம் சாபம்

என்று ஒருவர் சொல்வதும் சமமானதா?

அதே போன்று 2: 160 வசனத்தில் (ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும்6 வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

என்று அல்லாஹ் சொல்வதை எடுத்துக் காட்டி, இங்கே அல்லாஹ் சபிக்கிறான்,
வானவர்கள் சபிக்கிறார்கள், மனிதர்கள் சபிக்கிறார்கள் என்றெல்லாம் தனித்தனியே ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும்?
என்கிற கேள்வியையும் கேட்கிறீர்கள்.

நீங்கள் வைக்கும் எந்த சான்றாவது பொருளுள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்று சற்றே நடு நிலையுடன் சிந்தித்துப் பார்க்கவும்.

அல்லாஹ் சபிக்கிறான், பின் வானவர்கள் சபிக்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் சபிக்கிறார்கள் என்று சொல்வதும்,

ஒரு சாபம், இரண்டு சாபம், நூறு சாபம், ஐனூறு சாபம் என்று சொல்வதும் சமமா?

அப்படித்தான் உங்கள் அறிவுக்கு புலப்படுகிறதா? என்றால் உங்கள் முடிவுக்கே இதை விட்டு விடுகிறேன்.

அல்லாஹ் சபிக்கிறான், வானவர்கள் சபிக்கிறார்கள் என்று சொல்வது போல தான் இதுவும் என்றால்..

இதிலும் அதே போன்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.

உன்னை நான் சபிக்கிறேன்
உன்னை எனது மகன் சபிக்கிறான்
உன்னை எனது மனைவி சபிக்கிறாள்
உன்னை எனது பாட்டி சபிக்கிறாள்
உன்னை எனது பக்கத்து வீட்டுக்காரன் சபிக்கிறான்

என்று அவரொரு பட்டியலை தந்திருந்தால் தான் இந்த வசனத்தை அதற்கு உங்களால் முட்டுக் கொடுத்திருக்க முடியும்.

ஒரு வாதத்திற்கு இந்த இறை வசனத்தை அல்லது முந்தைய வசனமான எதை பொய்யென கருதுகிறீர்கள் என்கிற வசனத்தை
கூட எப்போது நீங்கள் உங்கள் கொள்கைக்கு சான்றாக காட்டலாம் என்றால்..

இந்த சாபத்தினை கூட ஒவ்வொரு காரியத்தையும் சொல்லி சொல்லி பின் சாபமிட்டார் என்றால் அப்போது இது சரி.
எப்படி?

அன்று என்னிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றினாயே, உனக்கு சாபம்.
என்னைப் பற்றி அவதூறு சொல்லி திரிந்தாயே, உனக்கு சாபம்
வியாபாரத்தில் மோசடி செய்தாயே, உனக்கு சாபம்
ஊழல் செய்தாயே, உனக்கு சாபம்

இவ்வாறு அவன் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி சபித்தார் என்றால் அப்போது மிர்சாவை நாம் முட்டாள் என்று சொல்ல மாட்டோம்.

ஒரு காரியத்திற்கு ஒரு சாபம். அந்த காரியத்தை சொல்லி சபிக்கிறார் என்றால் அது தான் அர்த்தமுள்ளது.

அல்லாமல், பள்ளிக்கூடம் செல்லும் எல்கேஜி குழந்தை, நான் டென் டைம்ஸ் உனக்கு ஃப்ரென்ட்,
நீ 100 டைம்ஸ் எனக்கு எனிமி..

என்றெல்லாம் சொல்வது போன்ற சிறுபிள்ளைத்தனம் தான் இந்த ஒரு சாபம், இரண்டு சாபம் என்பதும்..

இன்னும் சொல்லப்போனால், அந்த எல்கேஜி குழந்தை கூட 10 டைம்ஸ் ஃப்ர்ன்ட் என்று தான் சொன்னதே தவிர, 1 டைம் ஃப்ர்ன்ட், 2 டைம்ஸ் ஃப்ரென்ட், 5 டைம்ஸ் ஃப்ர்ன்ட்.. என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் செய்யாது.

அதை விடவும் சிறுபிள்ளைத்தனம் தான் இந்த மிர்சாவின் செயல்.

குழந்தைகள் செய்தால் குழந்தைதனம், மழலை பருவம் என்று ரசிக்கலாம்.

வளர்ந்து ஆளான ஒருவர் சொன்னால் மூளை வளர்ச்சி குன்றியவர் என்று தான் சொல்ல முடியும்.

கேட்டால், நபி (சல்) அவர்களையும் எதிரிகள் பைத்தியக்காரர் என்று தான் சொன்னார்கள் என்கிற ரெடிமேட் பதிலை மட்டும் எல்லாவற்றுக்கும் வைத்திருக்கிறீர்கள்.

அதாவது, நான் ஏற்கனவே சொன்னது போல், கீழ்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவன் ஒரு நாள் திடீரென வந்து நான் தான் அல்லாஹ்வின் நபி என்று சொன்னால்
இந்த காதியானி மதத்தவர்கள் அதை ஏற்று விடுவார்கள்.

என்னப்பா? கீழ்பாக்கத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறவரை நபி என்கிறாயே? என்று காரணம் கேட்டால், நபி (சல்) அவர்களை கூட எதிரிகள் பைத்தியக்காரர் என்று தானே சொன்னார்கள்? என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.

நல்லா இருக்குதுங்க உங்க கொள்கை !!

தொடர்ந்து, நானே மர்யம், நானே மிர்சா..
நானே ஈஸா, ஈஸாவே நான்.
அவன் தான் நான், நான் தான் அவன்
அவள் தான் நான், நான் தான் அவள்
அவனை பெற்றெடுத்தவன் நான்.
ஆனால் நான் பெண்

என்றெல்லாம் மிர்சா சாஹிப் உளரித்தள்ளியதையும், அதை கூட நியாயப்படுத்தி இஸ்லாத்தை விட்டும் வெகு தொலைவில் நிற்கும் உங்கள் அஹமத்தியா மதத்தின் லட்சணத்தையும் வரிக்கு வரி அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

இந்த ஒரு கூற்று ஒன்றே போதும், இது போன்ற கேடுகெட்ட மதம் இந்த உலகில் இல்லை என்பதை புரிய..

ஹிந்து மதத்தை விடவும் கீழ்த்தரமான, இஸ்லாத்திற்கு நேர் எதிரான கொள்கையை தான் இந்த மிர்சா சாஹிப் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்பது இந்த " நானே ஈஸா, நானே மர்யம்" என்கிற இவரது உளரல்களின் மூலம் இன்ஷா அல்லாஹ் நிரூபணம் ஆகும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்