திங்கள், 10 மார்ச், 2014

அன்வர் ராஜாவை விமர்சிக்கும் தகுதி எஸ்டிபிஐயிற்கு உள்ளதா?


இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் ஒரு முஸ்லிமும் எஸ்டிபிஐ சார்பில் அவரை எதிர்த்து இன்னொரு முஸ்லிமும் போட்டியிட இருக்கிறார்கள்.
தமுமுகவினர் எஸ்டிபிஐக்கும் 
தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதிமுகவுக்கும் வாக்களித்தால் முஸ்லிம் வாக்குகள் சிதறி, அது பாஜகவிற்கு தான் சாதகமாய் போய் முடியும் என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

அட, அட, அட ! என்னவொரு கவலை, என்னவொரு அக்கறை!
தமுமுவுக்கென எந்த வாக்கு வங்கியும் கிடையாது என்பது ஒரு புறமிருக்க,
இந்த வக்கணை இருப்பவர்கள், தங்கள் சொல்லில் உண்மையாளர்களாய் இருப்பார்களேயானால், ஏற்கனவே இஸ்லாமியர் ஒருவரை களமிறக்கியுள்ள அதிமுகவுக்கு எதிராக நாம் ஒரு முஸ்லிமை நிறுத்தி பாஜகவுக்கு சாதகமான நிலையினை நாமே உருவாக்கிக் கொடுக்க வேண்டாம் என்று சிந்தித்து, முஸ்லிம் என்கிற அடிப்படையில் அன்வர் ராஜாவை நாங்கள் ஆதரிப்போம் என்று இந்த ஜால்ரா கட்சிகளான எஸ்டிபிஐயும் மமகவும் முடிவெடுத்திருக்க வேண்டும். செய்தார்களா?

அல்லது, அதிமுகவை ஆதரிக்கும் ததஜவை விமர்சிக்க எடுக்கும் முஸ்தீபுகளில் சிறு அளவையாவது, அதிமுகவின் முஸ்லிம் வேட்பாளரை எதிர்க்கும் எஸ்டிபிஐயினரை விமர்சிப்பதற்கு எடுத்திருக்க வேண்டும். செய்தார்களா?

இவர்கள் முஸ்லிம் என்றும் பாராமல் அன்வர் ராஜாவை எதிர்த்து போட்டியிடுவார்களாம், அதுவே நாம் அன்வர் ராஜாவை ஆதரித்தால், அன்வர் ராஜா எப்படிப்பட்டவர் தெரியுமா, எம்ஜிஆரை ஈமான் கொண்டு அடிமை சேவனம் செய்தவராக்கும் என்று அவரை இகழ்வார்களாம்.

அன்வர் ராஜா இஸ்லாத்தை பேணாதவர் என்றே வைப்போம்,
இந்த பக்கம் மட்டும் என்ன சந்தனமும் ஜவ்வாதுமா மணக்கிறது ?

ஓட்டுக்காக கல்லுக்கும் மாலை அணிவிப்போம், கட் அவுட் வைப்போம், விநாயகரையும் கொண்டாடுவோம், இஸ்லாத்திற்கு எதிரான எல்லா காரியங்களிலும் வெட்கமின்றி ஈடுபடுவோம் என்கிற நிலைபாட்டை கொண்டவர்களுக்கு அன்வர் ராஜாவை விமர்சிக்க கடுகளவு தகுதியாவது உள்ளதா?

அன்வர் ராஜாவை கேட்டாலாவது தன்னை முஸ்லிம் என்று பெருமையுடன் சொல்வார், இவர்களுக்கு அந்த தகுதி கூட இல்லாமல், நாங்களெல்லாம் முஸ்லிம் இயக்கமேயில்லை என்பதைக் கூட பெருமையாய் சொல்கின்றனர் என்றால் வெட்கம் என்கிற உணர்வின் சிறு பகுதியாவது இவர்களிடம் உள்ளதா?

இவர்களையெல்லாம் இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக