சனி, 1 மார்ச், 2014

அல்லாஹ் யாரிடம் பேசினான் ?


கீழ்வானில் அல்லாஹ் இறங்குகிறான் என்று வரக்கூடிய ஹதீஸின் அர்த்தமானது, அல்லாஹ்வே வானத்தில் இறங்கி வருகிறான் என்கிற கருத்திலும்,
அல்லாஹ்வின் அருள் அல்லது அல்லாஹ்வின் ரஹ்மத் நம்மை நெருங்குகிறது என்கிற கருத்திலும் மக்களால் புரியப்படுகிறது.

இது ஒரு உவமை சொற்றொடர் தான் என்றும், இது போலவே குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் பயன்படுத்தும் உவமைகளான கட்டிடங்களுக்கு அடியில் அல்லாஹ் வருவது, மேகத்திற்கு மேல் அல்லாஹ் வருவது போன்றவை அதன் நேரடி அர்த்தமான அல்லாஹ்வே வருதல் என்கிற கருத்துக்களில் புரியப்படுவதில்லை.

அந்த வகையில், உவமையாகவே இதையும் புரிய வேண்டும் என்று நாம் விளக்கம் கொடுக்கிறோம்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் கருத்து, அந்த ஹதீஸின் மறு பகுதியிலேயே உள்ளது.

இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி 1145

இது தான் சம்மந்தப்பட்ட ஹதீஸ்.

இந்த ஹதீஸில் இரண்டு செய்திகள் உள்ளன.

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்பது ஒரு செய்தி.
என்னிடம் பிரார்த்தனை செய்பவர்கள் இருக்கிறீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான் என்பது அடுத்த செய்தி.

ஒரு விஷயத்தை அதன் நேரடி அர்த்தத்தில் தான் விளங்க வேண்டுமென்றால் அது போல வரக்கூடிய எல்லா விஷயங்களையும் நேரடியாக தான் விளங்க வேண்டும் என்கிற அடிப்படையில்,

அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்பதை நேரடி அர்த்தத்தில் புரிய வேண்டும் என்று சொல்பவர்கள், என்னிடம் பிரார்த்தனை செய்பவர்கள் இருக்கிறீர்களா என்று அல்லாஹ் கேட்கிறான் என்பதையும் அதன் நேரடி அர்த்தத்தில் தான் புரிய வேண்டும்.

அப்படி தான் புரிவார்களா? அப்படி புரிவது இங்கே பொருந்துமா? அப்படி புரிவது அல்லாஹ்வின் சிஃபத்திற்கு உகந்தது தானா?

என்பதையெல்லாம் நாம் சிந்திக்கையில், ஒவ்வொரு இரவும் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்கள் இருக்கிறீர்களா என்று அல்லாஹ்வே ஒவ்வொரு இரவும் வந்து, வந்து கேட்டு, கேட்டு செல்கிறான் என்கிற புரிதல் அல்லாஹ்வை கேலி செய்யும் வகையிலான புரிதல் என்கிற முடிவுக்கு தான் வர முடியும்.

அத்துடன், அல்லாஹ் வந்து, வந்து, பேசி பேசி செல்கிறான் என்றால் அவன் பேசியது நமக்கு கேட்க வேண்டும். நம் எவருக்கும் என்றைக்கும் கேட்டதேயில்லை எனும் போது, தினமும் வந்து வந்து பேசி பேசி செல்கிறான் என்பது அல்லாஹ்வின் தன்மையை, அவனது மகத்துவத்தையெல்லாம் சிறுமைப்படுத்தும் குறுகிய விளக்கமேயன்றி வேறில்லை.

அல்லாஹ் பேசுகிறான் என்பது எப்படி அல்லாஹ்வே வந்து பேசுவது என்கிற பொருளில் இல்லையோ, அல்லாஹ் வந்தான் என்பதும் அல்லாஹ்வே வந்தான் என்கிற பொருளில் இல்லை !

புரிய வேண்டிய முறையில் புரிகையில் மார்க்கம் எளிமையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக