சனி, 1 மார்ச், 2014

தமுமுக குறித்த அடிப்படையற்ற சந்தேகம்


அப்துல் பாசித் - முஸ்லிம் லீக் - வாணியம்பாடி 
ஷேக் தாவூத் - முஸ்லிம் லீக் - நாகப்பட்டினம் -
அல்தாப் ஹுசைன் - முஸ்லிம் லீக் - துறைமுகம் 
ஹசன் முகமது அலி ஜின்னா - திமுக- ஆயிரம் விளக்கு 
உபையதுல்லா - திமுக - தஞ்சாவூர் 
கௌஸ் பாஷா - திமுக - மதுரை மத்திய தொகுதி 
சையது - காங்கிரஸ் - கிருஷ்ணகிரி 
முஹம்மத் யூசுப் - வி.சி - உளுந்தூர்பேட்டை 

இராமனாதபுரத்தில் ஏற்கனவே மூன்று கட்சியினர் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள போது அவர்களை எதிர்த்து தமுமுக அந்த தொகுதியில் களமிறங்குமா?

என்கிற சந்தேகம் தப்பித் தவறி கூட எவருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் மேலே உள்ள பட்டியல்.

இந்த முஸ்லிம் பெயர் பட்டியல், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தமுமுகவினர் களமிறங்கி தோற்கடித்த முஸ்லிம்களாவர்.

தங்கள் சுய நலனையும், அரசியல் லாபத்தையும் மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் இவர்கள், தம்மை எதிர்த்து நிற்பது யாரென்றெல்லாம் கவனிக்க மாட்டார்கள் என்பதால் இது போன்ற அர்த்தமற்ற சந்தேகத்திற்கு எவரும் உள்ளாக வேண்டாம்.

இதற்கு பிறகும், நாங்கள் முஸ்லிம்கள், ஆகவே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூட நா கூசாமல் ஓட்டு கேட்டும் வருவார்கள் இவர்கள்.
அதிலும் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

எஸ்டிபிஐ கட்சியை பொறுத்தவரை, நாங்கள் முஸ்லிம்களுக்கான கட்சியில்லை, ஓட்டு பொறுக்க விநாயகரையும் கும்பிடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டமையால் அவர்கள் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுவதை நாம் குறை சொல்லவில்லை !
பாஜக கூட தான் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது !

பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக