செவ்வாய், 18 மார்ச், 2014

முதல் பிறையா கடைசி பிறையா?


மாதத்தை துவங்க முதல் பிறையை பார்க்க வேண்டுமா அல்லது கடைசி பிறையை பார்க்க வேண்டுமா? என்கிற புல்லரிக்கும் கேள்வியொன்றை சிலர் தற்போது எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

அதாவது, கேள்வி எவ்வளவு தான் மடத்தனமானது என்றாலும் அது சிலருக்கு கவலையில்லை, நானும் கேள்வி கேட்பேன் என்று காண்பிப்பது இவர்களுக்கு
அதை விட முக்கியம் ! ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல், கேள்விகளாக கேட்டு கேட்டு அனைத்திற்கும் நெத்தியடியாய் விடைகள் தரப்பட்ட பின்னரும், பழக்க தோஷம் விட மாட்டேன் என்கிறது இவர்களுக்கு !

இறந்து போனவர் செவியேற்க மாட்டார், நமக்கு பதிலளிக்க மாட்டார், அவ்வாறு நம்புவது பச்சை ஷிர்காகும் என்றெல்லாம் நாம் கூறுகையில், நம்மை எதிர்த்து கேள்வி கேட்பதாக எண்ணிக் கொண்டு,
எங்கிருந்து, எத்தனை பேர் அழைத்தாலும் அதை கேட்டு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
என்று பரேலவிகள் கேள்வி எழுப்பிய வரலாறை நாம் அறிந்திருக்கிறோம்..

அது போன்று தான் இவர்களது வீர சாகசமும் உள்ளது.

பிறை பார்ப்பது தொடர்பாக வரக்கூடிய எல்லா செய்திகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாதத்தின் துவக்கம் என்பது முதல் பிறையை அடிப்படையாக கொண்டு தான், என்கிற கருத்து உள்ளது.

உதாரணத்திற்கு,

அபுல் பக்தரி (ரலி) அறிவிக்கக்கூடிய முஸ்லிம் ஹதீஸொன்றில், மாதத்தை துவக்கும் பொருட்டு பிறை பார்க்க முயன்ற சஹாபாக்கள், இரண்டாவது பிறையையோ அல்லது மூன்றாவது பிறையையோ கண்டு தங்களுக்குள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததையும், இப்னு அப்பாஸ் அவர்கள், நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நீட்டி தந்துள்ளான் என்கிற நபி (ஸல்) அவர்களது கூற்றினை எடுத்து சொல்லி விளக்கமளித்தார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மாதத்தை துவக்க முதல் பிறையை தான் பார்க்க வேண்டும் என்கிற நிபந்தனையை அவர்கள் அறிந்து வைத்திருந்ததால் தான், தாங்கள் பார்ப்பது முதல் பிறையில்லை, அது இரண்டாம் பிறை, அது மூன்றாம் பிறை என்கிற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்கிற வார்த்தைப் பிரயோகங்களே, முதல் பிறை தான் நாம் கணக்கில் எடுக்க வேண்டிய பிறை என்பதை தெளிவாக்குகிறது !

சரி அதை விட,இறுதி பிறையை பார்த்து மாதத்தை துவக்க வேண்டும் என்று சொல்லப்படும் வாதத்தில் முதலில் அடிப்படை அர்த்தமாவது இருக்கிறதா?

இறுதி பிறை என்பது அமாவாசைக்கு முந்தைய நாள்.
அமவாசையை அடைவதற்கு முன் அது இறுதி பிறை என்று எவருக்காவது தெரியுமா? தெரியாது !
அது வானில் தென்படாமல் போகுமா? போகாது !
வாகனக்கூட்டம் பிறை செய்தியை அறிவிப்பதாக வரக்கூடிய திர்மிதி செய்தியில், மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை என்று அபு உமைர் அவர்கள் அறிவிக்கிறார்களே,
இதில் இவர்கள் சொல்லும் ஷவ்வால் பிறை என்பது ரமலான் முடிந்த பிறகு தோன்றும் முதல் பிறையையா அல்லது ரமலானின் கடைசி பிறையையா?
ரமலானின் கடைசி பிறை எப்படி ஷவ்வாலின் முதல் பிறையாகும்?
இரண்டும் எப்படி ஒன்றாகும்?
அது ரமலானின் கடைசி பிறை என்றால் அது எப்படி கண்களுக்கு தெரியாமல் போகும்?

கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்காது, நாம் எழுப்பும் எந்த கேள்விக்கும் விடை சொல்லவும் தெரியாது என்பதால் இது போன்றவர்களை வேறு பட்டியலில் தான் நாம் சேர்க்க வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக