வியாழன், 13 மார்ச், 2014

தோற்றுப் போன ஜோதிடம்


வருங்காலத்தை அறிவதாக சொல்லும் ஜோதிட சாத்திரங்களும் மறைவானவற்றை அறியும் அற்புத சக்திகள் இருப்பதும் உண்மையென்றால் மலேசிய விமானம் என்றைக்கோ கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆறு நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்க இயலாமல் போனதிலிருந்தே, ஜோதிடம் என்பது பொய் என்றும் இதை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் அனைவருமே பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் மீண்டும் நிரூபணமானது.

தற்போது வேடிக்கையின் உச்சகட்டமாக சூனியக்காரர்களை அழைத்து வந்து விமானத்தை கண்டறிய பூஜை செய்யப்பட்டதாம்.

மேற்படி நபரும், தற்போது விமானம் நிலத்தில் இல்லை, வானத்திலோ அல்லது கடலுக்கு அடியிலோ தான் இருக்க வேண்டும் என்கிற உலக மகா கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்து சொல்லியுள்ளாராம்.

அட கூறு கெட்டவர்களே, நீங்கள் சூனியக்காரனின் மீது நம்பிக்கை கொண்டால், விமானம் எந்த நாட்டில், எந்த பகுதியில், அதன் latitude, longitude angle முதற்கொண்டு அனைத்தையும் துல்லியமாக சூனியத்தால் சொல்ல முடியும் என்கிற நம்பிக்கையாவது வேண்டும்.

ஆறு நாட்களாக எந்த தகவலும் இன்றி போனால், விமானம் கடலில் விழுந்திருக்க தான் வாய்ப்பு அதிகம் என்று சிறு குழந்தைக்கும் தெரியும். அதனால் தான் பல்வேறு நாட்டு கடற்படையினர் வங்காளக் கடலில் முகாமிட்டிருக்கின்றனர்.
தவிர்த்து, விமானம் கடத்தப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகமும் அரசால் எழுப்பப்பட்டிருக்கிறது.

எவைகளுக்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருப்பதாய் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதோ, அவைகளை தற்போது சூனியக்காரர் வெற்றிலையில் மை போட்டு கண்டுபிடித்தார் எனில், சூனியத்தின் லட்சணம் நமக்கு புரிகிறது !
எது ஏற்கனவே எல்லாராலும் சந்தேகிக்கப்படுகிறதோ அதையே சூனியமும் சொல்வதாக ஒப்புக் கொள்வதிலிருந்து, சூனியத்தை உண்மை என்று நினப்பவர்கள் கூட அதில் முழு நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் அறிய முடிகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக