வெள்ளி, 7 மார்ச், 2014

அம்பலப்படுத்தப்பட வேண்டிய கறுப்பு ஆடுகள்


இஸ்லாத்தை அழித்து ஒழிப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது பாஜக, சங் பரிவார் கூட்டத்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
இவர்கள் குறித்த பார்வை என்பது தங்கு தடையின்றி வெளிப்படையாய் அனைவருமே அறிந்து வைத்திருக்கின்ற ஒன்று என்பதால் இக்கும்பலை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கில்லை, நம்மோடு நேருக்கு நேராய் மோதுவதன் மூலம் தங்கள் சுயரூபத்தை இவர்களே வெளிக்காட்டிக் கொள்வர்.

ஆனால், நம்மில் சில கூட்டங்கள் உள்ளன, தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், மறைமுகமாக இஸ்லாத்தின் கண்ணியத்தை காற்றில் பறக்க விடுவதில் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொள்ளும் அளவிற்கு சுயநலன் மிக்கவர்களாய் உள்ளனர்.

இஸ்லாமிய சமுதாயத்தின் மானத்தை அடகு வைப்பதிலும், முஸ்லிம்களின் தன்மானத்தை இழக்க வைப்பதிலும் முன்னோடியாய் திகழும் இவர்களை, பாஜகவை நாம் எதிர்ப்பதை விடவும் கடுமையாய் எதிர்க்க வேண்டும்.

மக்கத்து காஃபிர்கள் யார் யார் என்பதை தெளிவாக அறிந்து கொன்ட நபிகள் பெருமானார், தம்மோடு இரண்டற கலந்து, பள்ளிவாசல்களிலும், இன்னபிற பொது இடங்களுக்கும் மக்களோடு மக்களாய் கலந்து இஸ்லாத்தை அழித்தொழிக்க முயற்சி செய்த நயவஞ்சகர்களை அறிந்து கொள்ளாமல் பல காலம் இருந்தார்கள்.

அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான், அத்தோடு, அவர்களுக்கு கடும் வேதனையையும் தயார் செய்திருப்பதாய் அல்லாஹ் பிரகடனப்படுத்தினான்.

நேருக்கு நேராய் மோதும் எதிரியை எதிர்கொள்வது எளிது. நம்மோடு இரண்டர கலந்த மார்க்க எதிரிகளை அறிந்து கொள்வது சிரமமென்பதால் அவர்களை வேரோடு களைய சில காலம் பிடிக்கத்தான் செய்யும்.

தேர்தல் காலங்களில், நாங்களும் முஸ்லிம்கள் தான், உங்கள் வீட்டு சகோதரர்கள் தான் என பச்சாதாபம் பேச வரும் இது போன்ற போலி முஸ்லிம் இயக்கங்களை அம்பலப்படுத்தி, மார்க்கத்திலும், உலக நடப்புகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாய் மாறி விட்ட நம் சமுதாய மக்கள் இவர்களிடம் ஏமாறி விடக்கூடாது என்பதில் நாம் அதிக அக்கறை எடுக்க‌ வேண்டும்.

தீயவற்றை களையெடுப்பதும் மார்க்க கடமை என்றெண்ணி இதை செய்ய துவங்கினால் இதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் நாம் படைத்தவனிடம் பெற்றுக் கொள்ளலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக