சனி, 1 மார்ச், 2014

உண்ணாவிரதம் இருப்பவருக்கு துஆ செய்யலாமா?


உண்ணாவிரதம் இருக்கும் சகோதரரின் உடல்நலம் மோசமாக உள்ளது, எனவே அவருக்காக துஆ செய்யுங்கள் என்று நமக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இதற்கெல்லாம் துஆ செய்ய சொல்லி கேட்கவே கூடாது . 

சம்மந்தப்பட்டவரின் நோக்கம் நேரானது எனில் அதை நாம் குறை சொல்லவில்லை, 
அதே நேரம், அதற்காக அவர் தேர்வு செய்த இந்த வழிமுறை இஸ்லாத்தில் இல்லாதது, இஸ்லாத்திற்கு எதிரானது.

இந்த கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றால், கோரிக்கை நிறைவேறாது போனால் இப்படியே இறந்து போவேன் என்பது இதன் உள்ளர்த்தம்.
தன்னையே வருத்திக் கொள்ளும் எந்த செயலையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாய் எதிர்க்க தான் செய்தார்கள்.

சாகும் வரை உண்ணாவிரதம் என்பது தற்கொலை முயற்சியே தவிர வேறில்லை.
சாப்பிடாமல் தற்கொலைக்கு தயாராகும் ஒருவருக்கு உடல்நலம் மோசமாகத்தான் செய்யும்.

அவர் இந்த தவறான வழிமுறையை விட்டு விடுவதற்கு தான் பிரார்த்திப்போமே தவிர இந்த நிலையில் அவரது உடல் நலத்துக்காக பிரார்த்திக்க மாட்டோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக