வெள்ளி, 7 மார்ச், 2014

போராட்டங்களில் பெண்கள்


போராட்டங்ளுக்கு முஸ்லிம் பெண்களை அழைக்கக்கூடாது என்கிற தவறான பிரச்சாரம் சில மார்க்க ஞானமற்றவர்களால் பரப்பபடுகிறது.

இட ஒதிக்கீடு போன்ற போராட்டங்கள் என்பது அவசியமற்ற, நேர விரயத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல. 
அவை, இந்த சமூகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான, அவசியமான ஒரு கோரிக்கையாகும்.

நமது உரிமைகள் பறிக்கப்படும் போது, நமக்கு தீங்குகள் இழைப்பப்படும் போது அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் கடமையாக்கப்பட்ட ஒன்று தான்.

தவறு செய்யும் அரசனுக்கு எதிராக சத்தியத்தை போதிப்பது கூட ஜிஹாதாகும் என்கிற பெருமானரின் அறிவுரை கூட பெண்களுக்கும் சேர்த்து தானே தவிர, இதில் பெண்கள் உட்படாது என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை.

நன்மையை ஏவுவதலும் தீமையை விட்டும் தடுப்பதும் முஸ்லிமான அனைவருக்கும் பொதுவாக அல்லாஹ் இட்டுள்ள கட்டளை தானே தவிர ஆண்களுக்கு மட்டுமான கட்டளையல்ல !

இது ஒரு புறமிருக்க, நபி (சல்) அவர்கள் காலத்தில்

பெண்கள் போர்களங்களிலும் சென்றிருக்கிறார்கள் (புஹாரி 324)

ஆண்களும் பெண்களும் ஒன்றாக தொழுகைக்கான ஒளு செய்துள்ளார்கள் (புஹாரி 193)

பெருநாள் தொழுகையில் பெண்கள் கலந்திருக்கிறார்கள் (புஹாரி 351)

மார்க்க உரைகளில் கலந்து கொண்டு கேள்வியும் கேட்டிருக்கிறார்கள் (புஹாரி 979)

ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். (புஹாரி 6228)

இதற்கெல்லாம் வெளியில் செல்ல அனுமதி இருக்கும் போது, தீமைக்கெதிராக குரல் கொடுப்பதற்கு பெண்கள் வெளியில் செல்லக் கூடாது என்று இஸ்லாம் நிச்சயம் தடை விதிக்காது என்பதோடு, போராட்டங்களில் கலந்து கொள்வது என்பது அவர்கள் மீதும் கடமையாகத்தான் உள்ளது, என்பதை நாம் புரிய வேண்டும்.

பொது இடங்களிலும் அன்னிய ஆடவர்கள் மத்தியிலும் இஸ்லாம் சொல்லக்கூடிய ஆடை ஒழுங்கை பேண வேண்டும் என்று பெண்கள் மீது விதியாக்கப்பட்டிருக்கிறது என்பது தனி விஷயம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக