வெள்ளி, 7 மார்ச், 2014

இஸ்லாத்திற்கு விரோதமான எஸ்டிபிஐ
உங்கள் இயக்கத்தை இஸ்லாமிய இயக்கம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொள்கிறீர்கள், இன்னொரு பக்கம் இஸ்லாத்திற்கு விரோதமான, இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துகிற விதங்களிலெல்லாம் பல காரியங்களை உங்கல் இயக்கம் செய்து வருகிறதே என்று எஸ்டிபிஐ அமைப்பினரை நோக்கி நாம் கேட்கையில், கேட்கப்படும் கேள்விக்கு விடை வருகிறதோ இல்லையோ, எஸ்டிபிஐ என்பது இஸ்லாமிய அமைப்பு என்று நாங்கள் சொல்லவில்லை என்கிற விடையை மட்டும் அழகாகவும் (?) எந்த வெட்கமுமின்றியும் சொல்கின்றனர்.

இது இவர்களுக்கு கண்ணியம் தருகின்ற விடையா அல்லது இழிவுக்குரிய விடையா என்பதை கூட சிந்திக்கும் அடிப்படையற்றவர்களாய் இந்த இயக்கத்தவர்கள் இருக்கின்றனர்.

இஸ்லாமிய அரசை நிறுவப்போகிறோம் என காற்றிலே கூடாரம் கட்டி, சிந்தனை மழுங்கியவர்களாய் தேடிப்பிடித்து இயக்கம் வளர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்த இந்த கூட்டத்தார் இறுதியில், வினாயகர் சதுர்த்திக்கும் பொங்கல் விழாவுக்கும் வாழ்த்து தெரிவிப்பதில் கொண்டு நிறுத்தி இஸ்லாமிய அரசை தூக்கி நிறுத்தி சாதனை (?) புரிந்த வரலாறை கண்டு ஊரே இவர்களை காறி உமிழ்ந்து வருகிறது.

இவர்களது கட்சியின் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் கந்தனையும் முருகனையும் பெருமாளையும் சேர்த்து வைத்துக் கொண்டு நாங்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று பீலா விட்டுத் திரிந்தால் இந்த சமுதாயத்தை இவர்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ?

ஓட்டுக்காக எத்தகைய கீழ் நிலைக்கும் இவர்கள் இறங்குவார்கள் என்கிற உண்மையே இந்த புகைப்படம் மூலம் நாம் புரிகின்ற ஒன்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக