வியாழன், 13 மார்ச், 2014

நான் தான் தவ்ஹீத்வாதி


தவ்ஹீத்வாதியின் இலக்கணங்களை கவிதை நடையில் வடிவமைத்துள்ள இலங்கையை சேர்ந்த‌ கொள்கை சகோதரர் சகோ.  ரூஹுல் ரஸ்மியின் பதிவு

நாம் தாம் தௌஹீத் வாதி
நாதியற்ற இடத்திலும்
வாதியாய் நின்று போதிக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி

தடியால் அடித்தாலும்
தாடியை மழிக்கமாட்டோம்
மண்ணில் புதைத்தாலும்
சுன்னாவை கழிக்கமாட்டோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
பள்ளிப் பக்கம் வராதவன்
தொழும் எமைக் கண்டு
பக்கம் வந்து நின்று
எம் விரலை உடைத்தாலும்
தொழுகையை விடமாட்டோம்
உடைத்தவன் நேர்வழிவேண்டி
அழுகையை விடமாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

நாம் தாம் தௌஹீத் வாதி
நான்கு ஹதீஸ் தெரிந்துகொள்ள
நாற்திசையும் திரிந்துசெல்வோம்
திருமறையை அறிந்துகொள்ள
மறுமுறையும் வரிந்துகொள்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

குர்ஆனில் உள்ளதை
குறிபார்த்து ஏற்போம்
ஹதீஸில் உள்ளதை
சரிபார்த்து ஏற்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி

வேதப்படி வாதம் வைத்தால்
நீதப்படி நாதம் வைப்போம்
இஷ்டப்படி கட்டிச் சொன்னால்
நஷ்டப்பட விட்டுச் செல்வோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
சஹாபி சொன்னால்
கேட்காத நாம்
வஹாபி சொன்னால்
கேட்போமா நாம்?


பொய்சொல்லும் உலமாக்களை
போய்சொல்லி களமாக்குவோம்
போகாத உள்ளங்களை
வாய்ச்சொல்லில் ரணமாக்குவோம்.
நான் ஒரு தௌஹீத் வாதி

நடுநிலை எனக்கூறி
பக்கச் சார்பாக இருக்க
நிலைநடுக்கம் எம்மூளையில்
நிலைத்ததே இல்லை
நான் ஒரு தௌஹீத் வாதி

நடுநிலை நாமென்ற
தற்பெருமை எமக்கில்லை
தாழ்த்தாதே என்று சொல்லி
தாழ்த்தும் நிலை கொண்டதில்லை

நாம் தாம் தௌஹீத் வாதி
கொள்கையில் பிடிவாதம்
கொல்கையிலும் பிடிக்கும்
வீணரின் விதண்டாவாதம்
விடைசொல்லப் பிடிக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி

மணமான மானமும்
வாசமான ரோசமும்
இனத்துக்கும் எமக்கும்
கனக்கும் மகுடம்
நான் ஒரு தௌஹீத் வாதி

பொம்மலாட்ட அரசியலில்
நம்மலாட்டம் இருப்பதற்கு
பித்தலாட்ட மாமாக்களால்
பிறந்துகாட்ட முடியுமா?

நாம் தாம் தௌஹீத் வாதி
கொள்ளைப் பணம் எம்மை
கொள்ளையிட்டதே இல்லை
கொள்கைப் பாணம் எம்மை
விழவிட்டதே இல்லை

சண்டைக்கு வருவதை எதிர்ப்போம்
வந்த சண்டையில் துளிர்ப்போம்
விவாதத்தை விதியாக்கி விலாசுவோம்
வெற்றியை நமதாக்கி உரசுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

நாம் கண்ட விவாதக் களம்
யாரும் கண்டதில்லை
நாம் வெண்ட விவாதக் களம்
யாரும் வெண்டதில்லை

நாம் தாம் தௌஹீத் வாதி
காதியாணிக்கு ஆணியடித்தோர்
நாம்தாம்
கப்ர்வணங்கிக்கு கப்ர்கட்டியோர்
நாம்தாம்
கிறித்தவர்களை முறித்தவர்கள்
நாம்தாம்
நாத்திகனை மாத்திவிட்டோர்
நாம்தாம்
அஹ்லேகுரானை அகற்றிவிட்டோர்
நாம்தாம்
எம் அறைகூவலில் மறை கழன்றோரை
மாற்றியோசிக்க வைத்த
நான் ஒரு தௌஹீத் வாதி

எங்கள் இஸ்லாம் தனிவழியே
கலிமா சொல்லும் ஒருவழியே
மறுத்தவன் செல்வது மாற்றுவழியே
மாறாமல் இருப்பது மார்க்கம் ஒன்றே

எம்பணப்பை கட்டி
எமெக்கென தொழவென
மதீனத்து நபவி வேண்டும்
இணைவைப்பை வெட்டி
இருப்பதை அபகரிக்கும்
மக்கத்து ஹரமும் வேண்டும்.
நான் ஒரு தௌஹீத் வாதி

சட்டத்தை மக்களுக்கு சொல்லும்
திட்டத்தில் ஜமாஅத் செல்லும்
ஸகாத்தை மக்கள் அள்ளும்
பழக்கத்தில் ஜமாஅத் வெல்லும்

படுத்தவரை போர்த்திடவே
திட்டமிட்டுக் கொண்டிருக்க
அடுத்தவரை சேர்த்திடவே
திடவுறுதி கொண்டிடுவோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
தெரிந்ததை தெரிந்ததாகச் சொல்ல
எப்போதும் தயாராவோம்
தெரியாததை மறைக்க அடக்கமென்று
பொய்ப்பெருமை கொள்ளமாட்டோம்.

கேள்விக்கு பதில் இருப்பதை
பெருமையாகக் கருதமாட்டோம்.
பதிலிருக்கும் கொள்கையில் இருப்பதை
பெருமனதோடு ஏற்றுக்கொள்வோம்.
நான் ஒரு தௌஹீத் வாதி

சிக்கலுக்குள் மாட்டித் தவிக்கும்
மக்களுக்கு களம் இறங்குவோம்
அரசியல் போட்டித் தவிர்க்கும்
அரசியல் செய்து காட்டுவோம்

நேற்று நடந்ததை வைத்து
நாளையை கணக்கிடுவோம்
இன்றுகளுக்குள் சிக்கி
நாட்களை இழக்கமாட்டோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
ஜால்றா அடிப்பவன் எம்மோடு இருந்தால்
காலரைப் பிடித்து கசக்கி எறிவோம்
காலறா வந்தவன் சுட்டிக் காட்டினால்
காலறைத் துக்கி கட்டியணைப்போம்

இடஒதுக்கீடு உங்களுக்களித்து
இடரொதுக்கி வாழவைப்போம்
மருத்துவராய் மதிக்கப்பட
சிறையில்கூட மிதிபடுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக