செவ்வாய், 18 மார்ச், 2014

கர்த்தரின் பெயரால்.. - கூடுதல் விளக்கம்கர்த்தர் என்றால் படைத்தவன் என்று பொருளாம், ஆகவே அல்லாஹ் என்று வரும் இடத்தில் கர்த்தர் என்று சொன்னாலும் தவறில்லையாம், அப்படியானால் முருகன் என்றால் அழகன் என்று பொருள், அல்லாஹ்வும் அழகானவன். ஆகவே அல்லாஹ் என்று வரும் இடத்தில் இனி முருகன் என்று சொல்லலாமா? என்கிற செல்லரித்துப் போன, கேள்வியை கேட்டது கப்ர் வணங்கி கூட்டத்தின் தலைவர்களான ஜமாலியும் சைஃஃபுத்தீனும் தான்.

அழகன் என்பது முருகன் என்கிற சொல்லின் அர்த்தம், அல்லாஹ்வும் அழகன்., ஆகவே அல்லாஹ்வுக்கு பதில் முருகன் என்று சொல்லலாம் என்றால்,

அழகன் என்பது முருகன் என்கிற சொல்லின் அர்த்தம், மனிதனையும் அல்லாஹ் அழகாக தான் படைத்திருக்கிறான், ஆகவே இனி மனிதனை முருகன் என்று அழைக்கலாமா? என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

முருகன் என்பது அழகன் என்கிற பொருளில் இருந்தாலும் அது எப்படி மனிதன் என்கிற வார்த்தைக்கு மாற்று வார்த்தையாகாதோ, அது போல், இறைவன் என்பதற்கும் முருகன் என்பது மாற்று வார்த்தை ஆகாது.

எப்படி மனிதன் என்பது படைப்பினத்தை குறிக்கும் ஒரு குறிப்பு சொல்லோ அது போல் இறைவன், கடவுள், கர்த்தர், ரட்சகர், பரம்பொருள், ஆண்டவர் போன்ற வார்த்தைகளெல்லாம் படைத்த அல்லாஹ்வை குறிக்கும் குறிப்பு சொற்கள்.

முருகன் என்பது அவ்வாறான குறிப்பு சொல் அல்ல, இவர்களாக ஒரு கல்லை செதுக்கி வைத்துக் கொண்டு அதற்கு முருகன் என்று பெயர் சூட்டுகின்றனர்.

நாகூர் ஆண்டவர் என்று கூட தான் கப்ர் முட்டிகள் சொல்கின்றனர். ஷாஹுல் ஹமீது பாதுஷாவை கடவுளாக வணங்குகிறார்கள் என்பதற்காக இனி கடவுள் என்கிற சொல்லுக்கு பதில் ஷாஹுல் ஹமீது பாதுஷா என்று சொல்லலாமா? என்று கேட்டால் என்ன சொல்வோமோ அது தான் முருகனை பற்றிய கேள்விக்கும் பதில்.

முருகன், ஷாஹுல் ஹமீது என்பதெல்லாம் படைப்பினங்களின் பெயர். அந்த பெயரை, தாம் யாரை அல்லது எதை கடவுளாக நம்புகிறானோ அதற்கும் சூட்டிக் கொள்கிறான் மனிதன்.

அந்த கடவுளின் பெயர் முருகர், ஆகவே எனது பிள்ளைக்கும் முருகன் என்று பெயர் வைப்பேன், அந்த கடவுளின் பெயர் லட்சுமி, ஆகவே எனது பிள்ளைக்கும் லட்சுமி என்று பெயர் வைப்பேன் என்று ஒரு தாய் நினைக்கிறாள்.

அதுவே, கடவுளை கடவுள் என்று அழைக்கிறோம், ஆகவே எனது பிள்ளைக்கு இனி கடவுள் என்று பெயர் சூட்டுகிறேன் என்று யாரும் நினைப்பதில்லை, இறைவன் என்று சொல்கிறோம், ஆகவே எனது குழந்தைக்கு இறைவன் என்று பெயர் வைக்கிறேன் என்று யாரும் நினைப்பதில்லை.

இது தான் வேறுபாடு.

முருகன், கந்தன், சிவன், லட்சுமி பார்வதி என்றெல்லாம் மனிதனுக்கு பெயர் இருக்கும்.
கர்த்தர், இறைவன், கடவுள் என்றெல்லாம் மனிதனுக்கு பெயர் இருக்காது.

ஆகவே அறிவு என்பது எங்கே அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்று இப்போது அனைவருக்கும் புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக