திங்கள், 10 மார்ச், 2014

சமுதாய அக்கறையா சுயநல அரசியலா?


அதிமுக சார்பாக இராமனாதபுரம் தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஓட்டுக்களை பிரித்து சுய நல அரசியல் செய்யாமல், முஸ்லிம் வெற்றி பெறட்டும் என்கிற நோக்கில் அன்றைக்கே போட்டியிலிருந்து விலகியிருக்க வேண்டும் எஸ்டிபிஐ.

அது போல், இன்று திமுகவும் தன் சார்பாக முஸ்லிம் ஒருவரை நிறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே தான் அதிமுக ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்து விட்டாரே, இப்போது, நீங்கள் இன்னொரு முஸ்லிமை நிறுத்தி இஸ்லாமியர்களுக்கிடையே பிரிவினை உருவாக்க பார்க்கிறீர்களா?
என்று கொந்தளித்து, இதன் காரணமாக திமுக ஆதரவு நிலையை மறு பரிசீலனை செய்யபோகிறோம் என்று சொல்லும் திராணி தமுமுகவிற்கு இல்லை.

குறைந்த பட்சம், இந்த ஒரு தொகுதியில் மட்டும் நாங்கள் அதிமுகவின் முஸ்லிம் வேட்பாளரை தான் ஆதரிப்போம் என்று கூறி, வெறும் வாயளவில் பம்மாத்து காட்டி திரியும் சமூக ஒற்றுமை எனும் நாடகத்தை இவர்கள் மெய்யாக்கி இருக்க வேண்டும். அதை செய்தார்களா? என்று பார்த்தால் அதுவும் இல்லை.

முஸ்லிம் வெற்றி பெற வேண்டும் என்கிற அக்கறையை விட, தான் வெற்றி பெற வேண்டும் என்கிற அக்கறை தான் அரசியல் எனும் சாக்கடையில் கால் விட்ட எவரது எண்ணமாகவும் இருக்கும் என்பதால், இத்தகைய பெருந்தன்மையையெல்லாம் இது போன்ற சாக்கடையிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதற்கும், முஸ்லிம் வெற்றி பெற்றால் போதும், என்கிற பரந்த எண்ணம் கொண்டவர்களும் இல்லை என்பதற்கும் மற்றுமொரு சான்று, எஸ்டிபிஐ கட்சி தேசிய அளவில் நிற்க போகும் தொகுதிப் பட்டியலை அறிவித்த இந்த செய்தியாகும்.

பார்க்க http://sdpi.in/portal/story/sdpi-contest-42-lok-sabha-seats

இதில், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளில் (மொத்தமே 20 தொகுதி தான் !) எஸ்டிபிஐ தான் போட்டியிடும் என்று அறிவித்திருக்கின்றனர்.கேரளாவில் அதிக இஸ்லாமிய ஆதரவுடன் இருக்கும் முஸ்லிம் லீக் இவர்கள் கண்களுக்கு தெரிந்தார்களா? ஏதேனும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றால் போதும், பாஜகவை எதிர்ப்பது மட்டும் தான் எங்கள் நோக்கம் என்றெல்லாம் படம் காட்டித் திரிவது உண்மையெனில், கேரளாவில், முஸ்லிம் லீகுக்கு ஆதரவு என்று தான் இவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல், 20 தொகுதிக்கும் தமது ஆட்களை நிறுத்தி தாங்கள் கடைந்தெடுத்த சுயனலவாதிகள் தான் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கின்றனர் இவர்கள் !

மேலும், ஹிந்துக்களின் ஆதரவை பெறுவதற்காக ஆரத்தி எடுத்து ஹிந்து மத சடங்குகளை செய்வதற்கு கூட தயாராகும் கேடு கெட்ட கூட்டத்தினர் தான் இந்த எஸ்டிபிஐ என்பதற்கான சான்றையும் இங்கே தருகிறோம்.
பார்க்க https://www.facebook.com/photo.php?v=166743160183884

ஹிந்து ஓட்டுக்கள் பெற்று எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கங்கணத்துடன் மார்க்கத்தை குழி தோண்டி புதைக்கவும் தயாராகும் இந்த கூட்டம் நாளை பாஜக அனுதாபிகளின் ஓட்டுக்கள் பெற பாஜகவை கூட ஆதரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக