திங்கள், 10 மார்ச், 2014

சபலப்பேர்வழிகளுக்கு ஓர் எச்சரிக்கை


ஜெயலலிதா நாளை பிஜேபியை ஆதரிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம் என்று கேள்வி கேட்டு விட்டால், ஏதோ உலக மகா அறிவாளியாக முகனூலில் நம்மை மதிப்பார்கள் என்று சிலர் சபலப்படுவதை காணும் போது, இது போன்ற சபலங்களிடம் நாம் சிலவற்றை கேட்க வேண்டியுள்ளது.

அதிமுக நாளை பாஜகவிடம் சேர்வதற்கு சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது, ஏதோ 2014 இல் தான் இந்த பேருண்மையை கண்டுபிடித்ததை போன்று எழுதுவது வேடிக்கை. ஜெயலலிதாவின் துவக்கமே பாசிச ஆதரவு சிந்தனை தான். வாழ்வுரிமை மாநாட்டில் முஸ்லிம்களிடம் கொடுத்த வாக்குறுதியை, தொடர்ந்து வந்த தேர்தலிலேயே மீறியவர் அவர். ஆகவே இதன் காரணமாக அவரை ஆதரிக்கக்கூடாது என்போர் 2001 இலிருந்தே இந்த கொடியை தூக்கி வந்திருக்க வேண்டும். செய்தார்களா?

எப்போதெல்லாம் தங்களுக்கு சாதகமான முஸ்லிம் பெயர் தாங்கி கட்சிகள் அம்மாவிடம் அடைக்கலம் புகுந்தார்களோ அப்போது இந்த வீர முழக்கத்தை இட்டார்களா?
இது நாள் வரை அம்மா எதிர்கொண்ட அனைத்து பந்தும் சிக்ஸர் எனவும் அதிமுக எனும் சுனாமியில் அனைவரும் அடித்து செல்லப்படுவீர் எனவும் வாங்கிய் காசை விட அதிகமாக கூவியவர்கள் அம்மாவுடன் இருக்கையில் இந்த வீர முழக்கங்கள் இடும் சபலங்கள் எங்கே போயிருந்தார்கள்?

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்து முடியாததால் தனியே போட்டி என்று சொல்லியிருக்கும் சட்டிப்பீக்களை இந்த சபலங்கள் இதே போல் விமர்சனம் செய்தார்களா?

சரி அது போகட்டும், இந்த உலக மகா கேள்வி என்ன அதிமுகவுக்கு மட்டும் தான் பொருந்துமா? அது திமுகவிற்கு பொருந்தாதா? அதனுடன் கூட்டணி அமைத்து அடிமை சேவனம் நடத்திக் கொண்டிருப்பவர்களிடம் இந்த சபலங்கள் கேள்வி எழுப்பியதா?

அதுவும் போகட்டும், பாசிச எதிர்ப்பு கொள்கை என்பது ஏதோ இவர்கள் ஒட்டு மொத்த‌ குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது போல் பீற்றி வரும் எஸ்டிபிஐயினருக்கு இந்த கேள்வி பொருந்தாதா?

மாரியம்மாவை குல தெய்வமாக வணங்குபவர்களின் ஓட்டு பிச்சை கிடைக்கும் என்பதற்காக மாரியம்மாவுக்கு கூழ் ஊற்றுவார்கள், கேட்டால் நாங்கள் என்ன முஸ்லிம் கட்சி என்றா சொன்னோம்? என்று மறு கேள்வி கேட்பார்கள்.

ஹிந்து, கிறித்தவர்களின் ஓட்டு பிச்சை கிடைக்கும் என்றால் கல்லை வணங்குவார்கள், மலர் வளையம் இடுவார்கள், இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கும் எல்லா காரியங்களையும் செவ்வனே செய்வார்கள், கேட்டால், நாங்கள் என்ன இஸ்லாமியர்களுக்கான இயக்கம் என்றா சொன்னோம்? என்று எதிர் கேள்வி எழுப்புவார்கள் என்றால்,

நாளை இதே ஓட்டு எனும் பிச்சைக்காக மோடியை இவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?
இதோ, பாஜகவுக்கு 15 தொகுதி, எங்களுக்கு 25, நாங்கள் தான் கூட்டணியின் தலைமை, மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தாலும் பாராளுமன்றத்தில் எஸ்டிபிஐயின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று அதற்கு ஒரு உலக மகா காரணங்களை கூறி, ஏற்கனவே கூறு கெட்டு இவர்கள் பின் அணிவகுக்கும் மூடர்களை திருப்திப்படுத்த இவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதிருக்காதே, அதை செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

முஸ்லிம் ஓட்டு வேண்டும் என்கிற அக்கறை கொண்ட திராவிட கட்சிகள் தான் பாஜக பக்கம் சாய யோசிக்கும், நாங்கள் முஸ்லிம்களே இல்லையென பட்டவர்த்தனமாக அறிவிப்பு செய்து ஓட்டுக்காக எந்த தரத்திற்கும் இறங்குவோர், பாஜக பக்கம் சாய மாட்டார்கள் என்று எந்த நிச்சயமும் இல்லை !

சபலப்பேர்வழிகள், இதற்கு முதலில் கவலை கொள்ளுங்கள்,
கல்லை வணங்கினாலும் பரவாயில்லை, ஒற்றுமை தான் முக்கியம், கூத்து கும்மாளம் அடித்து தேர்தல் பணி செய்தாலும் பரவாயில்லை, ஒற்றுமை தான் முக்கியம் என தரங்கெட்டு திரியும் இவர்களுக்கு கொள்கைக்காக வாழும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சனம் செய்ய கடுகளவும் தகுதியில்லை !

இதை இவர்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம்.. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக