ஞாயிறு, 30 மார்ச், 2014

பள்ளிவாசலில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது தவறா?


கடையந‌ல்லூர் தவ்ஹீத் பள்ளியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதை விமர்சனம் செய்வோருக்கு இந்த மறுப்பு விளக்கம்


அறியாமையில் இருப்பது பலகீனம் என்றால், அதிலிருந்து கொண்டே பிறரை கேலி செய்வது மிகப்பெரிய மடமையாகும்.
பள்ளிவாசல் என்பது தொழுகைக்கும் திக்ருக்கும் மட்டும் உரியது என்று கருதுவோர் குர் ஆன், ஹதீஸ் குறித்த போதிய ஞானமில்லாதவர்களாவர்.

நபி (சல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல் என்பது தொழுகைக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை ;
மாறாக அது தான் ஆட்சியின் தலைமைப்பீடம்.
அது தான் கைதிகளை சிறைப்பிடிக்கும் இடமாகவும் இருந்தது (பார்க்க புஹாரி 4372)
நபி முன்னிலையில் பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன (பார்க்க புஹாரி 988)
தொழுகைக்கு பிறகு, அறியாமைக்கால செயல்கள் குறித்த பழைய கதைகளையெல்லாம் சஹாபாக்கள் பள்ளிவாசலில் அமர்ந்தவாறே பேசியிருக்கிறார்கள், அதை நபி (சல்) அவர்கள் கேட்டு ரசித்திருக்கிறார்கள் (பார்க்க முஸ்லிம் 4641)
நபி (சல்) அவர்கள் காலத்தில் சஹாபாக்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே தூங்கவும் செய்திருக்கின்றனர் (பார்க்க புஹாரி 440)

இதையெல்லாம் செய்யலாம் என்றால் நம்மை ஆட்சி செய்யப்போவது யார் என்பது குறித்து முடிவு செய்ய மஷூரா நடத்துவதும் கூடும்.

சில விதிவிலக்குகள் தவிர, பொது காரியங்களாக பள்ளிவாசலுக்கு வெளியே எவையெல்லாம் நமக்கு ஹலாலோ அவை அனைத்தும் பள்ளிவாசலுக்கு உள்ளேயும் ஹலால் தான் !

இந்த பொது விதியில் பெண்களை (மனைவியை) தீண்டுவது விதிவிலக்கு பெற்றது, ஆகவே பள்ளிவாசலுக்குள் அது கூடாது (பார்க்க 4:43)

இந்த பொது விதியில் மாதவிடாய் பெண்கள், குளிப்பு கடமையானோர் விஷயத்தில் விதிவிலக்கு உள்ளது, அவர்கள் உள்ளே நுழையக் கூடாது (பார்க்க 4:43)

தனிப்பட்ட வியாபாரங்கள் விதிவிலக்கு பெற்றது ஆகவே அதை பள்ளிவாசலுக்குள் செய்வது கூடாது (பார்க்க திர்மிதி 296)

(எனினும் பைத்துல்மால் போன்ற‌ பொது நலம் சார்ந்த வியாபாரமெனில் அதை செய்ய அனுமதியும் உள்ளது ‍ பார்க்க புஹாரி 2097)

காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு, இணை வைப்பாளராக இருந்த‌ ஒருவர் (பின்னாளில் இஸ்லாத்தை தழுவிய சுமாமா என்கிற சஹாபி) சிறைப்பிடிக்கப்பட்டு பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்கப்பட்டதாய் வரக்கூடிய
ஹதீஸ் சான்றாகும் (பார்க்க புஹாரி 4372)

பள்ளிவாசலில் பயான் செய்ததை கேட்டு உள்ளம் உருகியதாக கூறிய ஜுபைர் (ரலி) அவர்கள் (அப்போது இஸ்லாத்தை தழுவாத நிலையில் இருந்தார் !) அறிவிக்கும் புஹாரி 4854 ஹதீஸும் இதற்கு சான்றாய் இருக்கிறது !

ஆக, காஃபிர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம், பள்ளிவாசலுக்குள் நமது அவசியத் தேவைக்காக உலக நடப்புகளை பேசவும் செய்யலாம்.

இறுதியாய் இவர்கள் கேட்பது, ஹிஜாபிடாத மாற்று மத பெண்கள் முன்னிலையில் அமரலாமா? என்பதாகும்.

இதுவும் பள்ளிவாசலுக்கு வெளியே என்ன சட்டமோ அது தான் பள்ளிவாசலுக்கு உள்ளேயும், என்று நாம் சொல்கிறோம்.

காஃபிர்களோடு கலந்து வாழக்கூடிய சமூகத்தில், அவர்களே பெரும்பான்மையாய் இருக்கும் ஒரு சமூகத்தில், அவர்களை சந்திக்க வேண்டிய, அவர்களோடு பேச வேண்டிய அவசியத் தேவைகள் நமக்கு வரத்தான் செய்யும், அவை நிர்பந்தமான நிலை தான்.

பள்ளிவாசலுக்கு வெளியே, இது போன்று மாற்று மத பெண்களோடு பேச வேண்டிய, அவர்களை நேருக்கு நேராக காண வேண்டிய சந்தர்ப்பம் ஒருவருக்கு வந்தால் இப்போது நம்மை விமர்சிப்பவர்கள் அவருக்கு என்ன ஃபத்வா வழங்குவார்களோ அதை தான் பள்ளிவாசலுக்கு உள்ளே காண்பதற்கும் வழங்க வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் இவ்வாறு அமரக்கூடாது என்பவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியேயும் அவ்வாறு அமரக்கூடாது என்று சொல்வார்களா?
மாற்று மத பெண்களை பார்க்கவே கூடாது என்று சொல்வார்களா?

அப்படி சொல்வதாக இருந்தால் அது போன்ற வேடிக்கையான ஃபத்வா வேறு இருக்க முடியாது என்பதையும், நம்மை எதிர்ப்பதற்காக எத்தகைய முரண்பாடான நிலைபாட்டினையும் இவர்கள் கொள்வார்கள் என்பதையும் அப்போது நாம் நிரூபிப்போம், இன்ஷா அல்லாஹ் !




புதன், 19 மார்ச், 2014

ஜெயலலிதாவிடம் காணப்படும் வியத்தகு மாற்றம் !



ஒரு காலத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு பற்றி வாய் திறக்கவே தயங்கிய அரசியல்வாதிகள்..

அதை கோரிக்கையாக வைத்தால் கூட, மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றே இரு பெரும் திராவிட கட்சிகளும் சொல்லி வந்தன ஒரு காலத்தில்..

இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்கிற நிலையில், அந்த ஓட்டுக்களை தக்க வைப்பதற்காக வேண்டா வெறுப்பாக தான் இரு திராவிட கட்சிகளும் இட ஒதுக்கீடு அளிக்க சம்மதித்தன என்பதை மறுப்பதற்கில்லை.

கொடுத்த இட ஒதுக்கீட்டினை உயர்த்திக் கேட்ட போது, அதை குறித்து வெறும் வாயளவில் வேண்டுமானால் சொல்கிறேன், தேர்தல் அறிக்கையில் சொன்னால் சாதிக் கட்சிகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்று அதை கூட எழுத மறுத்தனர் ஒரு காலத்தில்..

கடந்த 2011 சட்டசபை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது, ஒட்டு மொத்த தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஒரு மாத கால ஒட்டு மொத்த பிரச்சார சுற்றுப்பயணத்தில், திருச்சியில் நடைபெற்ற ஒரேயொரு கூட்டத்தில், ஒரேயொரு வரியில் இட ஒதுக்கீடு பற்றி பேசினார்.
நாளை, நானும் தான் பேசினேனே, என்று காட்டிக் கொள்ள அது உதவும் என்கிற எண்ணம் தான் அவருக்கு இருந்ததே தவிர, உண்மையில் சட்டமாக்குகிற எண்ணம் அப்போது அவருக்கு இல்லை !

ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழ் ! பாசிச சிந்தனை, இஸ்லாமியர்களை வெறுப்பவர் என்றெல்லாம் கூறப்பட்ட ஜெயலலிதா குறித்து நாம் நிஜமாகவே வியப்படைகின்ற அளவிற்கு அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன !

இயக்க விருப்பு, வெறுப்புகளின்றி நடுனிலையுடன் இதை சிந்திக்கையில், அவரது சமீபத்திய பிரச்சார அணுகுமுறையானது, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கத் தான் போகிறார் என்பதினை உறுதியுடன் நமக்கு சொல்கிறது.

இட ஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்தார். அத்தோடு நிற்கவில்லை.

இட ஒதுக்கிடு விஷயத்தில் முஸ்லிம்களை தாம் ஏமாற்றவில்லை என்றும், கலைஞர் தான் ஏமாற்றுவார் என்றும்,
இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் கமிஷனை தான் முதலில் அமைக்க வேண்டும் என்றும்,
கலைஞரும் அதை தான் செய்தார் என்றும்,
தன் பிரச்சாரத்தை துவக்கிய காஞ்சீபுரம் தொகுதி கூட்டத்திலேயே கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் இதை மட்டுமே பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அந்த ஒரு கூட்டத்தோடு நிறுத்தாமல், காஞ்சிபுரத்திலிருந்து, சென்னை மீனம்பாக்கம், நாகர்கோவில் துவங்கி இன்று அவர் கலந்து கொண்டிருக்கும் சங்கரன்கோவில் பிரச்சாரக் கூட்டம் வரை முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஒரு ஐந்து நிமிடமேனும் பேசுகிறார் என்றால்,

முந்தைய நிலைமை அல்ல இது !
முன்பு போல் நம்மை ஏமாற்ற எண்ணுகிற‌ ஜெயலலிதாவும் இது அல்ல !

ஓட்டுக்காக தான் இதை செய்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், சொல்லி விட்டு ஏமாற்றும் நோக்கத்துடன் சொல்பவையாக இவை நிச்சயம் தெரியவில்லை.
சொல்லி விட்டு பின்னர் ஏமாற்றுவது நோக்கமாக இருக்குமானால், 2011 இல் திருச்சியில் சொல்லி விட்டு கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வந்தாரே அது போல் ஏதேனும் ஒரு ஊரில் சும்மா பேருக்கு பேசி முடித்திருப்பார்.

அதே சமயம், இட ஒதுக்கீடு என்கிற ஒரு விஷயம் தவிர, வேறு எதற்காகவும் நாம் அவரை ஆதரிக்க மாட்டோம், அவரை புகழ மாட்டோம், அவரது பாசிச ஆதரவு சிந்தனைக்கு வக்காலத்து வாங்க மாட்டோம், நாளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்றெல்லாம் எந்த உறுதியும் தர மாட்டோம்.

இட ஒதுக்கீடு விஷயத்தில் அவர் மாறியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

நாம் எதை கோரிக்கையாக இத்தனை மாதங்களாய் முழங்கி வந்தோமோ,
எதற்காக வெளிநாடுகளில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை வாரி இறைத்தோமோ,
எதற்காக உடல் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் கொளுத்தும் வெயிலில் போராட்டக் களம் கண்டோமோ,
எதற்காக முதியோர் முதல் பச்சிளங்குழந்தைகள் வரை கால் கடுக்க பல தொலைவுகள் நடந்தோமோ,
அந்த தியாகங்கள் அனைத்திற்கும் கை மேல் பலனாய் தான் இந்த இட ஒதுக்கீடு !

அதை தருவதற்குரிய எல்லா சாத்தியக்கூறுகளும் தற்போது உருவாகியுள்ளன என்பது தான் நிதர்சனமான உண்மை !

வாக்குறுதியோடு நிற்காமல், அதற்கான ஆணையம் அமைத்ததே அதை உறுதி செய்ய போதுமானது என்றாலும் கூட, முஸ்லிம்களின் ஆதரவை பெறும் பொருட்டு, செல்லும் இடங்களிலெல்லாம் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்று பேசுவது ஜெயலலிதாவுக்கு புதிது !

அவர் வாயால் அதை நாம் கேட்பது அதை விட புதிது !

இன்னும் இரண்டு வருடங்களில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால், இன்ஷா அல்லாஹ், ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டத்தை அவர் இயற்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிக பிரகாசமே !!

ஓட்டுக்காக தான் அனைத்தையும் செய்கிறார் என்றாலும், நாம் கேட்டதை தருவதற்கு தயாராகி விட்ட ஜெயலலிதாவுக்கு இம்முறை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் !

வாக்களியுங்கள் அ.இ.அதிமுகவிற்கே !

கேரளாவில் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு


கேரளாவில் மாநில அளவில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் முஸ்லிம் லீக் இருக்கிறது, 

காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பிறகு, மூன்றாவது பெரிய கட்சியாக திகழும் முஸ்லிம் லீகை ஆதரித்தால் 25% முஸ்லிம் ஜனத்தொகையை கொண்ட அம்மாநிலத்தில் இஸ்லாமிய ஒற்றுமை தழைத்தோங்கும் தானே?

இஸ்லாமியர்களின் முன்னேற்றம், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு, முஸ்லிம் ஒற்றுமை என்று வாய் கிழிய பேசும் எஸ்டிபிஐ என்கிற இஸ்லாமிய துரோகிகள் தங்களை நேர்மையாளர்களாக காட்ட எண்ணினால், அங்கே முஸ்லிம் லீகிற்கு முழு ஆதரவை அளித்திருக்க வேண்டும். செய்தார்களா?

மாநிலத்தின் மொத்த பாராளுமன்ற தொகுதிகளான 20 தொகுதிகளிலும் முஸ்லிம் லீகிற்கு எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவிப்பு செய்து தங்கள் அரசியல் சுய நலனை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் அந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்காக விட்டுக் கொடுத்தோம், இந்த தொகுதியில் மமகவுக்கு விட்டுக் கொடுத்தோம் என்று படம் காட்டித் திரிவதெல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டுப் பொறுக்க இவர்கள் நடத்தும் கபட நாடகமேயன்றி வேறில்லை.

இவர்களுக்கு ஒத்து ஊதும் மானங்கெட்ட தமுமுகவினருக்காவது, முதலில் நீ கேரள முஸ்லிம் லீகிற்கு ஆதரவு கொடு, பிறகு இங்கே வீர வசனம் பேசு, என்று எச்சரிக்கும் முதுகெலும்பு இருக்கிறதா?

அதுவும் இல்லை, ஏனெனில் இவர்கள், எஸ்டிபிஐயினரையும் விஞ்சுகிற சுய நலவாதிகள் !

சமுதாய ஒற்றுமை, சமுதாய அக்கறை, மண்ணாங்கட்டியெல்லாம் இவர்கள் விடும் வெற்று சவடால்கள் என்பதையும், ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் பெற வேண்டும் என்பது மட்டும் தான் இவர்கள் இலக்கு என்பதையும் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் !

செவ்வாய், 18 மார்ச், 2014

கர்த்தரின் பெயரால்.. - கூடுதல் விளக்கம்



கர்த்தர் என்றால் படைத்தவன் என்று பொருளாம், ஆகவே அல்லாஹ் என்று வரும் இடத்தில் கர்த்தர் என்று சொன்னாலும் தவறில்லையாம், அப்படியானால் முருகன் என்றால் அழகன் என்று பொருள், அல்லாஹ்வும் அழகானவன். ஆகவே அல்லாஹ் என்று வரும் இடத்தில் இனி முருகன் என்று சொல்லலாமா? என்கிற செல்லரித்துப் போன, கேள்வியை கேட்டது கப்ர் வணங்கி கூட்டத்தின் தலைவர்களான ஜமாலியும் சைஃஃபுத்தீனும் தான்.

அழகன் என்பது முருகன் என்கிற சொல்லின் அர்த்தம், அல்லாஹ்வும் அழகன்., ஆகவே அல்லாஹ்வுக்கு பதில் முருகன் என்று சொல்லலாம் என்றால்,

அழகன் என்பது முருகன் என்கிற சொல்லின் அர்த்தம், மனிதனையும் அல்லாஹ் அழகாக தான் படைத்திருக்கிறான், ஆகவே இனி மனிதனை முருகன் என்று அழைக்கலாமா? என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

முருகன் என்பது அழகன் என்கிற பொருளில் இருந்தாலும் அது எப்படி மனிதன் என்கிற வார்த்தைக்கு மாற்று வார்த்தையாகாதோ, அது போல், இறைவன் என்பதற்கும் முருகன் என்பது மாற்று வார்த்தை ஆகாது.

எப்படி மனிதன் என்பது படைப்பினத்தை குறிக்கும் ஒரு குறிப்பு சொல்லோ அது போல் இறைவன், கடவுள், கர்த்தர், ரட்சகர், பரம்பொருள், ஆண்டவர் போன்ற வார்த்தைகளெல்லாம் படைத்த அல்லாஹ்வை குறிக்கும் குறிப்பு சொற்கள்.

முருகன் என்பது அவ்வாறான குறிப்பு சொல் அல்ல, இவர்களாக ஒரு கல்லை செதுக்கி வைத்துக் கொண்டு அதற்கு முருகன் என்று பெயர் சூட்டுகின்றனர்.

நாகூர் ஆண்டவர் என்று கூட தான் கப்ர் முட்டிகள் சொல்கின்றனர். ஷாஹுல் ஹமீது பாதுஷாவை கடவுளாக வணங்குகிறார்கள் என்பதற்காக இனி கடவுள் என்கிற சொல்லுக்கு பதில் ஷாஹுல் ஹமீது பாதுஷா என்று சொல்லலாமா? என்று கேட்டால் என்ன சொல்வோமோ அது தான் முருகனை பற்றிய கேள்விக்கும் பதில்.

முருகன், ஷாஹுல் ஹமீது என்பதெல்லாம் படைப்பினங்களின் பெயர். அந்த பெயரை, தாம் யாரை அல்லது எதை கடவுளாக நம்புகிறானோ அதற்கும் சூட்டிக் கொள்கிறான் மனிதன்.

அந்த கடவுளின் பெயர் முருகர், ஆகவே எனது பிள்ளைக்கும் முருகன் என்று பெயர் வைப்பேன், அந்த கடவுளின் பெயர் லட்சுமி, ஆகவே எனது பிள்ளைக்கும் லட்சுமி என்று பெயர் வைப்பேன் என்று ஒரு தாய் நினைக்கிறாள்.

அதுவே, கடவுளை கடவுள் என்று அழைக்கிறோம், ஆகவே எனது பிள்ளைக்கு இனி கடவுள் என்று பெயர் சூட்டுகிறேன் என்று யாரும் நினைப்பதில்லை, இறைவன் என்று சொல்கிறோம், ஆகவே எனது குழந்தைக்கு இறைவன் என்று பெயர் வைக்கிறேன் என்று யாரும் நினைப்பதில்லை.

இது தான் வேறுபாடு.

முருகன், கந்தன், சிவன், லட்சுமி பார்வதி என்றெல்லாம் மனிதனுக்கு பெயர் இருக்கும்.
கர்த்தர், இறைவன், கடவுள் என்றெல்லாம் மனிதனுக்கு பெயர் இருக்காது.

ஆகவே அறிவு என்பது எங்கே அடகு வைக்கப்பட்டிருக்கிறது என்று இப்போது அனைவருக்கும் புரிகிறது.

கர்த்தரின் பெயரால்


கர்த்தரின் பெயரால் .. என்று சொல்வது கூடாது என்றும், அப்படியானால் அல்லாஹ்வுக்கு பதில் முருகன், சிவன் என்கிற பெயரையோ பயன்படுத்துவீர்களா? என்றும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.

இது போல் ஒரு மடத்தனமான வாதம் வேறு இல்லை. 

கிறித்தவர்கள் கர்த்தர் என்று சொல்வதும் ஹிந்துக்கள் முருகன் என்று சொல்வதும் ஒன்றல்ல.

கர்த்தர் என்பது கடவுள் என்பதன் திரிபு சொல்.
முருகன், சிவன் என்பதெல்லாம் அந்த கடவுளுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர்.

சரி, இவர்கள் பாணியிலேயே நாம் கேட்கிறோம்,

மனிதன் என்று சொல்வதை போல் ஜனம் என்றும் சொல்லலாம்.. இரண்டும் அர்த்தம் ஒன்று தான்.
இப்போது முருகன் என்றால் அழகன் என்று பொருள், சிவன் என்றால் உயிருள்ளவன் என்று பொருள்.

அழகன் என்றாலும் உயிருள்ளவன் என்றாலும் இரண்டுமே மனிதனை தான் குறிக்கும் என்று ஒரு அறிவாளி ஆய்வு செய்து விட்டு, ஆகவே இன்று முதல் மனிதன் என்று வரக்கூடிய எல்லா இடங்களிலும் முருகன் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்துவேன் என்று முடிவெடுத்தால் அந்த முடிவின் லட்சணம் என்ன என்பதை சிந்திக்கும் போது இது போன்ற வாதங்களிலுள்ள அபத்தம் நமக்கு விளங்குகிறது.

கர்த்தர் என்பதன் அகராதி அர்த்தமே கடவுள், ரக்ஷிக்கக்கூடியவன் தான். கடவுள் என்றாலும், இறைவன் என்றாலும், எல்லாம் ஒன்று தான்.

முருகன், கந்தன் என்பதெல்லாம் இவர்கள் சூட்டிக்கொண்ட புனைபெயர்கள்.

இவர்கள் இதே வாதப்படி சொல்வதாக இருந்தால் கடவுள் என்றும் சொல்லக்கூடாது என்று கூற வேண்டும். இறைவன் என்றும் சொல்லக்கூடாது என்று சொல்ல வேண்டும் !

மறைவானவவைகள் நபிக்கு தெரியுமா?


எனக்கு மட்டும் மறைவானவை தெரிந்திருக்குமானால், அதிகமதிகமாக நன்மைகளை நான் செய்திருப்பேனே, எந்த தீங்கும் என்னை நேராதவாறு என்னை காத்துக்கொண்டிருப்பேனே, என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதாக அல்லாஹ் (7:188 ) வசனத்தில் சொல்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சில மறைவான விஷயங்களை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அல்லாஹ் சொல்லிக்கொடுத்தான் அடிப்படையில் அறிவித்திருக்கிறார்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் தெரியாது.

சிலவற்றை சொல்லிக்கொடுத்துள்ளான் என்பதை நாமும் மறுக்கவேயில்லை. அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளானா? என்பது தான் எனது கேள்வி.

அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளான் என்றால் மேலே நான் குறிப்பிட்டுள்ள இறை வசனத்திற்குரிய‌ பதிலை நீங்கள் தர வேண்டும்.

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் யுத்தத்தின் போது அவர்களுக்கு கடவாய்ப்பற்கள் உடைக்கட்டிருக்குமா ?
உடைக்கப்பட்டிருக்காது. !
அப்படி தான் 7 :188 வசனத்தில் அவர்கள் சொல்கிறார்கள்!!

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தூரத்தில் ஏற்ப்பட்ட சத்தம் எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக இரவோடு இரவாக குதிரையில் பயணப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஏன் சென்றார்கள்? வீட்டிலிருந்தவாறே சொல்லியிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் சஹாபாக்களை கொலை செய்யத்தான் அழைக்கிறார்கள் என்பதை அறியாமல் எதிரிகளுடனான உடன்படிக்கைக்கு சஹாபாக்களை ஏன் அனுப்பினார்கள்? தெரிந்தே தான் அனுப்பினார்கள் என்று சொல்ல வருகிறீரா?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் , ஆயிஷா அம்மா மீது அவதூறு சொல்லப்பட்ட போது, அதை நினைத்து அவர்கள் சொல்லனா மனவேதனையை ஏன் அடைய வேண்டும்?
இவ்வாறு அவதூறுகள் பரவும் என்பது முன்கூட்டிய அவர்களுக்கு தெரியும் எனும் போது, ஆயிஷா அம்மாவையும் தன்னுடனே அவர்கள் அழைத்துக்கொண்டே சென்றிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தன் மனைவி மீது அவதூறு கிளம்பியதும், அதை அறிவதற்காக ஆயிஷா அம்மாவின் பணிப் பெண்ணிடமேல்லாம் இதை குறித்து ஏன் விசாரிக்க வேண்டும்? தம் மனைவி மீதே ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும் ?

அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்து விட்டார்கள் என்கிற ஒரு ஹதீஸை இதற்கு ஆதாரமாக காட்டுகிறீர்கள். அது பலகீனமான் செய்தி என்பது ஒரு புறம் இருக்கட்டும் .
ஒரு வாதத்திற்கு சரியான அறிவிப்பு என்றே வைப்போம், மறைவான, இனிமேல் நடக்கப்போகிற எல்லா விஷயங்களையும், நாளை நடக்கப்போகிற விஷயங்களையும் , கியாமத் நாள் வரை உள்ள சம்பவங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொல்ல வேணடுமானால், தமது வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
அவர்கள் காலத்தில், ஆப்ரிகா கண்டத்தில் வசிக்கக்கூடிய ஒரு எறும்பு இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறது தெரியுமா? என்று அதையும் அவர்கள் சொல்ல வேண்டும்.
அதுவா அதற்கு அர்த்தம்?

சொர்கதிற்குரிய , நரகத்திற்குரிய ஒவ்வொரூ நபரையும் பெயர் குறிப்பிட்டு, இவர் நரகத்திற்கு செல்வார், இவர் சொர்கத்திற்கு செல்வார் என்று சொல்ல துவங்கினால், தமது நபித்துவ வாழ்வில் பெரும்பகுதியை இதை அறிவிப்பதற்கு தான் அவர்கள் செலவிட்டிருக்க வேண்டும்.

இதை மறுத்து, இல்லை, எல்லாவற்றையும் இல்லை, அவசியமான செய்திகளை மட்டும் சொன்னார்கள் என்று நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றால், அவசியமான சில செய்திகள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, மற்ற எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டவராவீர் !

உள்ளுணர்வு தனித்து இயங்குமா?


Consciousness என்கிற கடவுள் எந்த உடலையும் மனதையும் சார்ந்து இராமல் Pure Consciousness ஆக மட்டுமே இருக்கிறார்.

என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால், எதையுமே சாராத உங்கள் கான்சியச்னஸ் எது? என்பதை எனக்கு விளக்க வேண்டும். கான்சியச்னஸ் என்பது காலத்திற்கு அப்பாற்ப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும், எதையுமே சாராமல் தனித்து இயங்கும் வகையில் அது நம்மிடம் இருக்கிறதா? எவரிடமாவது இருக்கிறதா? 

கான்சியச்னஸ் என்பது உருவமற்ற ஒரு அலை வடிவு என்று சொன்னாலும் அது இயங்குவதற்குரிய ஒரு physical entity வேண்டும். அதுவும் தான் விஞ்ஞானம்.

நான் விழிப்பது வரை எதையுமே உணராத நம் கான்சியச்னஸ், கண்களை நாம் திறந்த பிறகு இந்த உலகை உணருகிறது என்றால், அங்கே உணர்ந்தது கான்சியச்னஸ் என்றாலும் உணர்த்தியது கண் என்கிற physical entity .
உடல் என்கிற திடப்பொருளின் உதவியுடன் சிந்திக்கிற அறிவுடனும் மூளையின் உதவியுடனும் தான் கான்சியச்னஸ் இயங்கும்.

அதனால் தான் உயிருடன் இருக்கும் எனக்கு கான்சியச்னஸ் இருக்கிறது என்கிறோம், உயிரற்று போன ஒரு உடலுக்கு கான்சியச்னஸ் இல்லை என்கிறோம்.
அதனால் தான் விழித்திருக்கும் போது என் உடல் சோர்வு, கை கால் வலி ஆகியவற்றை அறிகிற எனது கான்சியச்னஸ், நான் தூங்கும் போது அவற்றை அறிவதில்லை!

அல்லாமல், கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த physical entity யின் உதவியும் தேவையில்லை என்று நீங்கள் சொன்னால், தூங்குகிற போது எனது கான்சியச்னஸ் என் கை கால் வலியை ஏன் உணரவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

உங்கள் வாதப்படி கான்சியச்னஸ் என்பது தனித்து இயங்கும், அதற்கு என்று எந்த உருவ அமைப்பும் தேவையில்லை , அது தான் விஞ்ஞானமும் சொல்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.
அதனால் நீங்கள் அனைத்தையுமே விஞ்ஞானத்தின் படி நம்பி விட்டீர்கள் என்றாகி விடுமா?
உருவமில்லாத கான்சியச்னஸ் குறித்து சொல்லும் விஞ்ஞானம், அது எப்படி முதலில் தோன்றியது என்று சொல்கிறதா ? இல்லையே!
அந்த கான்சியச்னஸ் எப்படி நம்மை படைத்தது என்று சொல்கிறதா? இல்லையே.
நான் பேசுவதையும் கேட்பதையும் அது கவனிக்கும் என்று சொல்கிறதா? இல்லையே.

இதையெல்லாம் விஞ்ஞானம் சொல்லாத போதும் கூட கடவுள் பரம்பொருள், அவர் அனைத்தையும் கவனிப்பார், என்று நீங்களும் தானே நம்புகிறீர்கள்?

எதற்கு உங்களிடமே பதில் இல்லையோ அதை பிறரிடம் கேள்வியாக கேட்க கூடாது என்பது சாதாரண விதி!

- மாற்று மதத்தவருடனான உரையாடலில் ஒரு பகுதி

முதல் பிறையா கடைசி பிறையா?


மாதத்தை துவங்க முதல் பிறையை பார்க்க வேண்டுமா அல்லது கடைசி பிறையை பார்க்க வேண்டுமா? என்கிற புல்லரிக்கும் கேள்வியொன்றை சிலர் தற்போது எழுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

அதாவது, கேள்வி எவ்வளவு தான் மடத்தனமானது என்றாலும் அது சிலருக்கு கவலையில்லை, நானும் கேள்வி கேட்பேன் என்று காண்பிப்பது இவர்களுக்கு
அதை விட முக்கியம் ! ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல், கேள்விகளாக கேட்டு கேட்டு அனைத்திற்கும் நெத்தியடியாய் விடைகள் தரப்பட்ட பின்னரும், பழக்க தோஷம் விட மாட்டேன் என்கிறது இவர்களுக்கு !

இறந்து போனவர் செவியேற்க மாட்டார், நமக்கு பதிலளிக்க மாட்டார், அவ்வாறு நம்புவது பச்சை ஷிர்காகும் என்றெல்லாம் நாம் கூறுகையில், நம்மை எதிர்த்து கேள்வி கேட்பதாக எண்ணிக் கொண்டு,
எங்கிருந்து, எத்தனை பேர் அழைத்தாலும் அதை கேட்டு பதிலளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
என்று பரேலவிகள் கேள்வி எழுப்பிய வரலாறை நாம் அறிந்திருக்கிறோம்..

அது போன்று தான் இவர்களது வீர சாகசமும் உள்ளது.

பிறை பார்ப்பது தொடர்பாக வரக்கூடிய எல்லா செய்திகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாதத்தின் துவக்கம் என்பது முதல் பிறையை அடிப்படையாக கொண்டு தான், என்கிற கருத்து உள்ளது.

உதாரணத்திற்கு,

அபுல் பக்தரி (ரலி) அறிவிக்கக்கூடிய முஸ்லிம் ஹதீஸொன்றில், மாதத்தை துவக்கும் பொருட்டு பிறை பார்க்க முயன்ற சஹாபாக்கள், இரண்டாவது பிறையையோ அல்லது மூன்றாவது பிறையையோ கண்டு தங்களுக்குள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததையும், இப்னு அப்பாஸ் அவர்கள், நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நீட்டி தந்துள்ளான் என்கிற நபி (ஸல்) அவர்களது கூற்றினை எடுத்து சொல்லி விளக்கமளித்தார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மாதத்தை துவக்க முதல் பிறையை தான் பார்க்க வேண்டும் என்கிற நிபந்தனையை அவர்கள் அறிந்து வைத்திருந்ததால் தான், தாங்கள் பார்ப்பது முதல் பிறையில்லை, அது இரண்டாம் பிறை, அது மூன்றாம் பிறை என்கிற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்கிற வார்த்தைப் பிரயோகங்களே, முதல் பிறை தான் நாம் கணக்கில் எடுக்க வேண்டிய பிறை என்பதை தெளிவாக்குகிறது !

சரி அதை விட,இறுதி பிறையை பார்த்து மாதத்தை துவக்க வேண்டும் என்று சொல்லப்படும் வாதத்தில் முதலில் அடிப்படை அர்த்தமாவது இருக்கிறதா?

இறுதி பிறை என்பது அமாவாசைக்கு முந்தைய நாள்.
அமவாசையை அடைவதற்கு முன் அது இறுதி பிறை என்று எவருக்காவது தெரியுமா? தெரியாது !
அது வானில் தென்படாமல் போகுமா? போகாது !
வாகனக்கூட்டம் பிறை செய்தியை அறிவிப்பதாக வரக்கூடிய திர்மிதி செய்தியில், மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை என்று அபு உமைர் அவர்கள் அறிவிக்கிறார்களே,
இதில் இவர்கள் சொல்லும் ஷவ்வால் பிறை என்பது ரமலான் முடிந்த பிறகு தோன்றும் முதல் பிறையையா அல்லது ரமலானின் கடைசி பிறையையா?
ரமலானின் கடைசி பிறை எப்படி ஷவ்வாலின் முதல் பிறையாகும்?
இரண்டும் எப்படி ஒன்றாகும்?
அது ரமலானின் கடைசி பிறை என்றால் அது எப்படி கண்களுக்கு தெரியாமல் போகும்?

கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்காது, நாம் எழுப்பும் எந்த கேள்விக்கும் விடை சொல்லவும் தெரியாது என்பதால் இது போன்றவர்களை வேறு பட்டியலில் தான் நாம் சேர்க்க வேண்டும் !!

இறை நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு ஹாஜரா அம்மையார்


இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வலிமையாக இருந்தால் எத்தகைய சோதனைகளையும் வெல்ல முடியும் என்பதற்கு அன்னை ஹாஜரா அவர்களின் வரலாறானது மிகப்பெரிய‌ சான்றாகும். 

மனிதர்கள், தண்ணீர், விலங்குகள், விவசாயம் எதுவுமே இல்லாத பாலைவனத்திலே இன்றைய கஅபா அமைந்துள்ள இடத்திலே கைக் குழந்தையோடு மனைவியை விட்டு விட வேண்டுமென இறைவன், இப்ராஹீம் நபி அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

ஏகத்துவத்தின் தந்தையான இப்ராஹிம் நபி, துளியும் சஞ்சலப்படாமல் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்க தயாராகிறார்கள். மனைவி, குழந்தையை சுடும் பாலைவனத்தில் விட்டு விடுகிறார்கள்.
அப்போது நடந்த சம்பவங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்குவதை பாருங்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜரா அம்மையார் இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேற்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள்.
அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூட கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள்.

அவர்களுக்கு அருகே பேரிச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, "இப்ராஹீமே! மனிதரோ வேறெந்த பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.
இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள்.

ஆகவே, அவர்களிடம் ஹாஜரா (அலை) அவர்கள், "அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?'' என்று கேட்க, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள்.

அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், "அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லி விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். (புகாரி 3364)

சுப்ஹானல்லாஹ் ! என்ன ஒரு இறை நம்பிக்கை !!

இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது (60:4)

தேர்தல் நிலைபாட்டில் எது சரி?


சவால் என்றால் இவர்கள் எதற்கெடுத்தாலும் சவால் விடுவார்கள் என்கிறார்கள் ; 
விவாதிக்க தயாரா? என்று கேட்டால் விவாதம் செய்வதே இவர்களுக்கு பிழைப்பு என்கிறார்கள் ;
சரி, நீ எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிப்பு செய்து விட்டு பின் எனது கேள்விகளுக்கு விடை சொல்லத் தயாரா? என்று கேட்டால் எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்கிறார்கள்.

இப்படி நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டமெடுக்கும் அதி புத்திசாலிகள் தான் நாம் கண்டு கொள்ளாத மற்ற இடங்களில் நம்மை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ததஜவின் அரசியல் நிலைபாடு தவறு என்று கூறும் யாரானாலும் எங்களுடன் பேச முன் வரட்டும்.

இது தான் எனது நிலை, இது தான் சரி, இந்த கட்சிக்கு ஆதரவளிப்பது தான் நன்மை பயக்கும், அல்லாமல் ததஜவின் நிலைபாடு தவறு என்பதாக பேச எவர் முன்வருகிறாரோ அவரை இங்கே அழைத்து வாருங்கள்.

அதிமுகவும் இஸ்லாத்திற்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதும், அவர்களிடமும் ஏராளமான குற்றங்குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.
இருப்பினும் தற்போதைய சூழலில் அதிமுகவை ஆதரிப்பது தான் சரி என்று, அனைவருமே ஒப்புக் கொள்ளும் வகையில் எங்களால் நிரூபிக்க முடியும், இன்ஷா அல்லாஹ்.

முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக்கொண்டு அதிமுகவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருக்கும் யாரிடமும் முரண்பாடும் மார்க்கத்திற்கு எதிரான காரியங்களும் பெருமளவில் நிரம்பி நிற்கின்றன என்பதும் நிரூபிக்கப்படும் !

கண்ணியமாக பேசுவோருடன் அதே கண்ணியம் பேணப்படும்.

அதே சமயம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்க விஷயங்களில் நூறு சதவிகிதம் சரி ஒரு பக்கமும் நூறு சதவிகிதம் தவறு இன்னொரு பக்கமும் இருப்பது போல் அரசியல் நிலைபாடுகளில் அவ்வாறு பிரித்தறிய இயலாது.

அரசியல் என்பதே ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொண்டு, அதன் வரம்புகளில் நின்று கொண்டு தான் நாம் எவரையும் ஆதரிப்போம் ;
நாம் ஆதரிப்பவர்கள் ஆதரிப்பதற்கு நூறு சதவிகிதம் தகுதியானவர்கள் என்று யாரும் நம்பவில்லை, அப்படி நம்பவும் கூடாது !

மறுமையை இலக்காக கொண்டவர்களுக்கு இவையெல்லாம் அற்பத்திலும் அற்பமானவை ! இதை புரிந்து செயலாற்றுவோம் !!

தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்


"தற்பெருமை, மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அஹ்மத் 21356

1. கடுகளவு தற்பெருமை இருந்தாலும் நாம் சொர்க்கம் செல்ல முடியாது !

தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் (148

2. மோசடி செய்வது நயவஞ்சகனின் குணமாகும் !

"பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி (33)

3. அது போன்று, கடன் வாங்குவதால் ஒருவன் பொய் சொல்கிறான், நம்பிக்கை துரோகம் செய்கிறான் என்று நபியவர்கள் சொன்னார்கள் (பார்க்க புஹாரி 2397)

பிறருக்கு கெடுதல் செய்து அதை சரி செய்யாமலேயே இறந்து போனவர் நாளை மறுமையில் திவாலாக போவார் என்றும் பெருமானார் (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (பார்க்க முஸ்லிம் 5037)

கடனாளியாக இறந்து விட்ட ஒருவருக்காக ஜனாசா தொழுகை கூட நபியவர்கள் நடத்தவில்லை (பார்க்க புஹாரி 2289)

ஏகத்துவக் கொள்கையில் இருப்பவர்களை இணை வைப்பின் மூலம் இனி ஷைத்தானால் வழி கெடுக்க முடியாது என்கிற போது, அவன் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த மூன்று தான் !
இதில் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !

மாத்தி யோசி


கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் வேறு எதையோ பதிலாக சொல்வது என்று பொழுது போக்காய் சிலர் விளையாடுவர்.

காலையில் என்ன சாப்பிட்டாய் ? என்று கேட்டால் இந்த சட்டை நீல கலர் என்று பதில் சொல்ல வேண்டும்.
நேற்று பள்ளிக்கூடம் போனாயா? என்று கேட்டால் ரசத்தில் உப்பில்லை என்று பதில் சொலல் வேண்டும்.

கிட்டத்தட்ட, இது போன்ற ஏறுக்கு மாறான பதில்களை தான் தவ்ஹீதுக்கு எதிரானவர்கள் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் வைக்கும் கேள்வியையும், அவர்கள் அதற்கு சொல்லும் விடையையும் எந்த காலத்திலும் பொருத்தவே இயலாது !

((இந்த கேள்வியும் பதிலும் உண்மையாகவே இணை வைப்பாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினருடனான விவாதங்களின் போது சொன்னது தான் !!))

கேள்வி : மத்ஹப் என்கிற பெயரில் இவ்வளவு அசிங்கங்களை எழுதி வைத்துள்ளீர்களே, இதை எப்படி பின்பற்றுவது ?

பதில் : இவர்கள் இமாம்களை இழிவுப்படுத்துகிறார்கள்

கேள்வி : வஹீ மட்டும் தான் மார்க்கம், சஹாபாக்களுக்கு வஹீ வருமா?

பதில் : சஹாபாக்களை இவர்கள் திட்டுகிறார்கள்

கேள்வி : மவ்லூத் என்கிற பெயரில் இணை வைப்பு பாடல்களை பாடுகிறீர்களே, இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கா?

பதில் : நபி (ஸல்) அவர்களை புகழ்வது குற்றமா?

கேள்வி : மீலாது விழா நபி காலத்தில் இருந்ததா?

பதில் : நபியை புகழ்ந்தாலே இவர்களுக்கு பிடிக்காது !

கேள்வி : இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்கு என்ன ஆதாரம் ?

பதில் : டாக்டரிடம் மருத்துவத்திற்கு செல்கிறோமே !

கேள்வி : செத்துப் போனவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் ?

பதில் : இறை நேசர்களுக்கு பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

கேள்வி : தர்கா கட்டலாம் என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : மூசா நபி தன் கப்ரில் தொழுததை நபி (சல்) அவர்கள் மிஹ்ராஜின் போது பார்த்தார்கள்.

கேள்வி : ஒற்றுமையாக இருக்க சொல்லி குர் ஆனில் எங்கே சொல்லப்பட்டுள்ளது ?

பதில் : அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி : சூனியத்தால் எத்தகைய அற்புதத்தையும் நிகழ்த்த முடியும் என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : சூனியத்தின் மூலம் கணவன் மனைவியை பிரிக்கலாம் என்று அல்லாஹ் சொல்கிறான்.

புஹாரி, முஸ்லிம் போன்ற கிதாபுகளிலும் பல தவறான செய்திகள் உள்ளதே, இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

பதில் : அப்படியானால் புஹாரி இமாம் காஃபிரா?

கேள்வி : கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப சகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில் : எந்த இமாமாவது இதை சொல்லியிருக்கிறாரா?

கேள்வி : மார்க்கம் என்கிற பெயரில் தொப்பி அணிதல், இன்னும் நபி காட்டித்தராத ஏராளமான காரியங்களை செய்கிறீர்களே, இவை பித் அத் இல்லையா?

பதில் : பிறகு ஏன் நீங்கள் காரில் பயணம் செய்கிறீர்கள் ?

கேள்வி : இரவுத் தொழுகை 20 ரக்காஅத் என்று நிர்ணயம் செய்திருக்கிறீர்களே, இதற்கு நபியின் வழிகாட்டுதல் உண்டா?

பதில் : அதிகமாக தொழுதால் தவறா?

கேள்வி : அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் ?

பதில் : அவனைப் போல எதுவும் இல்லை

அனைத்தையும் விட ஹைலைட் இதோ..

கேள்வி : எங்கிருந்து, எத்தனை பேர் அழைத்தாலும் அவ்லியா கேட்டு பதில் சொல்வார் என்பதற்கு என்ன ஆதாரம் ?

பதில் : கூகுளில் எத்தனை பேர், ஒரே நேரத்தில் சேர்ச் செய்தாலும் விடை தருகிறதல்லவா !

தற்கொலை ஓர் பாவச்செயல்


தன் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை செய்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

வாழ்வில் தான் சந்திக்கும் துன்பங்களை சகித்துக் கொள்ள இயலாமல் போவதால் ஒருவன் தற்கொலை செய்வதில்லை.

மாறாக, அந்த துன்பங்களை தம்மால் சகித்துக் கொள்ள இயலாது என்று அவன் எண்ணுவதால் தான் தற்கொலை செய்கிறான்.

இந்த நுணுக்கமான வேறுபாடு தான் ஒரு இறை நம்பிக்கையாளனை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது.

வாழ்வில் ஏதும் துன்பம் ஏற்பட்டால் அதை நமக்கு வழங்கியிருப்பது நம்மை படைத்த இறைவன் என்று உளமாற நாம் நம்பும் போது, எத்தனை துன்பங்களையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அந்த ஒரு நொடி இறை நம்பிக்கையே நமக்கு வழங்கி விடும்.

ஒருவரால் சகித்துக் கொள்ளவே இயலாத எந்த துன்பத்தையும் இறைவன் அவருக்கு கொடுப்பதில்லை எனவும்
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்க உதவுகின்றன என்றும்,
இறை நம்பிக்கையுடையவனை, அவனது நம்பிக்கையின் அளவுக்கு ஏற்றவாறு துன்பங்கள் சென்று சேரும் என்று இஸ்லாம் சொல்கிறது.

இவ்வுலக வாழ்வை துச்சமாகவும், மறுமையில் நமக்கு கிடைக்கும் பேறினையே மகத்தானதாகவும் கருதும் ஒருவர், எந்த நிலையிலும் துன்பங்களை எதிர்கொள்வதில் சோர்வடைய மாட்டார்.

தற்கொலை செய்தால் அவன் நிரந்தர நரகத்திற்கு தள்ளப்படுவான் எனும் போது, அந்த நரகத்தை எதிர்கொள்வதை விட, இவ்வுலகில் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்களை எதிர் கொண்டு விட்டு போகலாமே !

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அதுவும் பெற்றெடுத்த பிள்ளைகளை கூட பலி கொடுக்கும் அளவுக்கு நெஞ்சில் உரம் பெற்றவர்கள், அந்த உரத்தினை, தான் சந்தித்த துன்பத்தை எதிர்கொள்வதற்காக‌ பயன்படுத்தக் கூடாதா?

இஸ்லாத்தில் இதற்கு அருமருந்திருக்கிறது என்கிற பேருண்மையை இவ்வுலகம் விளங்கிக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை !

வியாழன், 13 மார்ச், 2014

நிரூபணமான எஸ்டிபிஐயினரின் நயவஞ்சகம்



நயவஞ்சகர்களின் குணாதிசியங்களில் ஒன்றாக 9:58 வசனத்தில் அல்லாஹ் சொல்கிற போது, தங்களுக்கு இலாபமெனில் ஒன்றை அனுசரிப்பர், நட்டமெனில், ஆத்திரம் கொள்வர் என்கிறான்.

இந்த வசனத்திற்கு அப்படியே பொருந்திப் போகிற ஒரு நயவஞ்சக கூட்டமாக எஸ்டிபிஐ என்கிற இஸ்லாமிய துரோகிகள் திகழ்வதை கண் கூடாக நாம் காணலாம்.

இவர்களுக்கு இலாபமெனில் அனுசரிப்பர்.

முஸ்லிம் ஓட்டுக்கள் பெற வேண்டிய நிலை வரும் போது, ஆமாம் நாங்கள் முஸ்லிம் தான், நாங்களும் 24 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பில் இருக்கிறோம் என்பர்.
ஆர்எஸ்எஸை எதிர்க்க போகிறோம் என்கிற முழக்கம் எழுப்பப்படும் போது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள், நாங்கள் இஸ்லாமிய பாதுகாவலர்கள் என தங்களை அப்போது முஸ்லிமாக காட்டிக் கொள்வர்.
அதில் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது என்பதால் அப்போது அனுசரிப்பர்.

அதுவே, இந்த கூற்றுகள் தங்களுக்கு இழுக்கை தரும் பட்சத்தில், அதை விட்டும் விரண்டு ஓடுவர். அதை எதிர்ப்பர், அதற்கெதிராக ஆத்திரம் கொள்வர்.

என்னப்பா முஸ்லிம் என்கிறாய், கோவில் கும்பாபிஷேகம் செய்வதை ஆதரிக்கிறாய், முஸ்லிம் கூட்டமைப்பில் இருக்கிறேன் என்கிறாய், கல்லுக்கு மலர் வளையம் வைத்து கொண்டாடுகிறாய் என்று நாம் கேட்கும் போது

ஆஹா, முஸ்லிம் என்று நம்மை சொல்வதாக இருந்தால் இப்படியெல்லாம் செய்யக் கூடாதே, ஆனால், இதை செய்யாமல் ஹிந்து ஓட்டுக்களை பெறவும் முடியாதே.. என்கிற இக்கட்டான (?) நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்
அத்தகைய இக்கட்டான நிலையில், நாங்கள் முஸ்லிம்களே இல்லை, நாங்கள் எங்களை இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லிக் கொள்ளவேயில்லை நாங்கள் அனைவருக்கும் பொது..
என வெட்கமின்றி தங்கள் நிலைபாட்டையே மாற்றிக் கொள்வர் ; அதை விட்டும் விரண்டோடுவர் !

அப்துர்ரஹ்மான் மிஸ்பஹி தலைமையில் தமிழகத்தில் செயல்படும் சிறு சிறு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒரே கூட்டமைப்பின் கீழ் வருகின்றன.
அந்த கூட்டமைப்பின் பெயர் பட்டியல் தான் இங்கே இணைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் மான ரோஷமுள்ளவர்களாக இருந்தால், இந்த கூட்டமைப்பை விட்டும் நாங்கள் வெளியேறுகிறோம், யாரடா எங்களை இந்த இஸ்லாமிய பட்டியலில் சேர்த்தது என்று கொந்தளிக்க வேண்டும்.

புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் இருக்கும் இந்த கூட்டமைப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது கண்டனத்தை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.

செய்வார்களா?
அல்லாஹ் சுட்டிக்காட்டும் நய வஞ்சகர்கள் தாங்கள் இல்லை என்பதை நிரூபிப்பார்களா?

நிச்சயம் மாட்டார்கள் !

அப்படி செய்தால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறி இனி பல்லிளித்துக் கொண்டு வர முடியாது.

பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கப் போகிறோம் என்று கொடி தூக்கி வர முடியாது,

பாஜகவிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கப்போகிறோம் என்று ஊரை ஏமாற்றி திரிய முடியாது..

அரசியல் இலாபத்திற்காக, தங்கள் நய வஞ்சக போக்கினை தொடர்வதை தவிர இவர்களுக்கு வேறு வழியேயில்லை !

தோற்றுப் போன ஜோதிடம்


வருங்காலத்தை அறிவதாக சொல்லும் ஜோதிட சாத்திரங்களும் மறைவானவற்றை அறியும் அற்புத சக்திகள் இருப்பதும் உண்மையென்றால் மலேசிய விமானம் என்றைக்கோ கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆறு நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்க இயலாமல் போனதிலிருந்தே, ஜோதிடம் என்பது பொய் என்றும் இதை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் அனைவருமே பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் மீண்டும் நிரூபணமானது.

தற்போது வேடிக்கையின் உச்சகட்டமாக சூனியக்காரர்களை அழைத்து வந்து விமானத்தை கண்டறிய பூஜை செய்யப்பட்டதாம்.

மேற்படி நபரும், தற்போது விமானம் நிலத்தில் இல்லை, வானத்திலோ அல்லது கடலுக்கு அடியிலோ தான் இருக்க வேண்டும் என்கிற உலக மகா கண்டுபிடிப்பை (?) கண்டுபிடித்து சொல்லியுள்ளாராம்.

அட கூறு கெட்டவர்களே, நீங்கள் சூனியக்காரனின் மீது நம்பிக்கை கொண்டால், விமானம் எந்த நாட்டில், எந்த பகுதியில், அதன் latitude, longitude angle முதற்கொண்டு அனைத்தையும் துல்லியமாக சூனியத்தால் சொல்ல முடியும் என்கிற நம்பிக்கையாவது வேண்டும்.

ஆறு நாட்களாக எந்த தகவலும் இன்றி போனால், விமானம் கடலில் விழுந்திருக்க தான் வாய்ப்பு அதிகம் என்று சிறு குழந்தைக்கும் தெரியும். அதனால் தான் பல்வேறு நாட்டு கடற்படையினர் வங்காளக் கடலில் முகாமிட்டிருக்கின்றனர்.
தவிர்த்து, விமானம் கடத்தப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகமும் அரசால் எழுப்பப்பட்டிருக்கிறது.

எவைகளுக்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருப்பதாய் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதோ, அவைகளை தற்போது சூனியக்காரர் வெற்றிலையில் மை போட்டு கண்டுபிடித்தார் எனில், சூனியத்தின் லட்சணம் நமக்கு புரிகிறது !
எது ஏற்கனவே எல்லாராலும் சந்தேகிக்கப்படுகிறதோ அதையே சூனியமும் சொல்வதாக ஒப்புக் கொள்வதிலிருந்து, சூனியத்தை உண்மை என்று நினப்பவர்கள் கூட அதில் முழு நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் அறிய முடிகிறது !

கல்லா நிரப்பிய தர்கா கமிட்டி


உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருக்கடியில் தண்ணீர் குழாய் ஒன்றை இணைத்து, கப்ருக்கடியிலிருந்து அற்புத நீரூற்று ஒன்று உருவாகியுள்ளது என்று புரளி கிளப்பினால்,

அதில் அடங்கியுள்ள அவ்லியாவின் சிறு நீர் தான் அது என்று குடத்துடன் வரிசையில் காத்திருக்கும் அறிவிலி கூட்டம் இன்னும் இருக்கத் தான் செய்கின்றன.

செத்துப் போனவர் எப்படிடா சிறு நீர் கழிப்பார்? என்கிற அடிப்படை மார்க்க அறிவோ ஈமானின் சுவடோ கூட இவர்களுக்கு இல்லை என்பது ஒரு பக்கம்..

ஒரு வாதத்திற்கு அது அந்த அவ்லியாவின் சிறு நீர் தான் அது என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்லியாவின் சிறு நீர் என்பதால் அது மட்டும் என்ன தேனாட்டம் இனிக்கவா போகிறது? என்கிற அடிப்படை அறிவும் அற்றவர்கள் தான் இன்றைக்கும் கப்ரை முட்டி நரகத்திற்கு தங்கள் இடத்தை முன் பதிவு செய்து வரும் சமுதாயத்தவர்.

இன்று தக்கலை பீரப்பா தர்காவிலுள்ள மரத்திலிருந்து தண்ணீர் ஒழுகியதாம், அதை பார்க்கவும், டம்ளரில் ஏந்திக் கொள்ளவும் ஒரு கூட்டம் !

தர்கா கமிட்டியின் கல்லா நிறைந்தது, நரகத்திற்கான முன்பதிவும் அதிகரித்தது !!

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள். (25:44)

முகனூல் பதிவுகள் : சுண்டிப் பேசும் திறன்


சுண்டிப் பேசும் திறமைக்கு கட்சித் தலைமை மதிப்பளிக்காததில் ஆச்சர்யமில்லை. 

ஒரு தொகுதியோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம் என்று பேசி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஒரு தொகுதி அரசியலுக்கு ஓட்டுப் பிச்சை கேட்டு வந்திருக்கிறாய்?

உன் தலைமைக்கு தான் வெட்கமில்லையென்றால் உனக்கும் வெட்கம், மானமெல்லாம் கிடையாதா? என்று தொகுதி மக்கள் சுண்டி கேட்டு விடுவார்கள் என்கிற அச்சம் நியாயமானது தான் !

எது எப்படியோ, சுண்டுகிற திறமையுடையவரை விட (பணத்தை) சுருட்டுகிற திறமையுடையவர் தானே நமக்கு வேண்டும் !!

அற்புதங்களுக்கு துஆ செய்வோம்


இறை நம்பிக்கை அதிகமிருப்பதாய் வாயால் சொல்கிறோம், ஆனால் நம்மில் பலரது நடவடிக்கையானது, அந்த நம்பிக்கையின் முழு பரிணாமத்தையும் கொண்டிருக்கிறதா? என்றால் இல்லை !

நம் தகுதியை மீறி நாம் பிரார்த்தனை செய்யக்கூடாது என்று நாம் நினைக்கிறோம்.

மனித சக்திக்கு உட்பட்டு எவையெல்லாம் சாத்தியம் என்று நாம் கருதுகிறோமோ அந்த வரைமுறையை தாண்டி நாம் என்றைக்காவது இறைவனிடம் கோரிக்கை வைத்திருக்கிறோமா?

வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் நாம், ஊரில் நமது கடன்கள் எல்லாம் தீர வேண்டும், நான் கட்டிக்கொண்டிருக்கும் வீடு அதிக செலவில்லாமல் முடிந்து விட வேண்டும் என்கிற குறுகிய வட்டத்துடன் துஆ செய்து முடித்துக் கொள்கிறோம்.

நான் வேலை செய்யும் நிறுவனம் போல் ஒரு நிறுவனத்தை நான் துவங்க வேண்டும் என்று நாம் பிரார்த்தித்திருக்கிறோமா? இல்லை !

80 வயதில் நம் பெற்றோர் சக்கராத் நிலைக்கு சென்றால், அது தான் 80 வயது ஆகி விட்டதே , இனி இறப்பது தானே அல்லாஹ்வின் விதி என்று நாமாக ஒரு வட்டத்தை வைத்து, அதன் பிறகு 100 வயது வரை வாழ வை என்று யாருமே துஆ செய்வதில்லை.
ஏன், அல்லாஹ் நாடினால் ஒருவருக்கு 200 ஆண்டுகள் கூட ஆயுள் வழங்க முடியாதா?

குழந்தையில்லாத சகரிய்யா நபி தள்ளாத வயதில் துஆ செய்ததை அல்லாஹ் 19:3 வசனத்தில் சொல்கிறான்,

தகுதியை மீறிய பிரார்த்தனை என்று தான் நாம் இதை கருதுவோம், ஆனால் அல்லாஹ் இதற்கும் பதிலளித்தான் என்றால் நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா!

மனித சக்திக்கு உட்பட்டதை தான் அல்லாஹ்விடமும் கோரிக்கையாக வைப்பேன் என்றால் அப்படி ஒரு இறைவன் நமக்கு அவசியமேயில்லையே?

மனிதனுக்கு இயலாத, அவன் கற்பனையில் கூட அடங்காத அற்புதங்களை நிகழ்த்தும் பேராற்றல் கொண்டவன் தான் நம்மைப் படைத்த இறைவன் !

அற்புதங்களுக்கு துஆ செய்வோம் !!

இறை நினைவால் தான் அமைதி


நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. 
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

முக்கியமான செய்தி என நாம் கருதுபவற்றை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் வழக்கம் மனிதர்களிடம் இருப்பது போல் இந்த வசனத்தில் அல்லாஹ்வும் தான் எதை முக்கிய செய்தியாக கருதுகிறானோ அதை இரண்டு முறை இங்கே தெளிவாக்குகிறான்.

ஒரு கட்டம் வரை ஈமான் என்றும், அல்லாஹ்வின் நினைவால் இருக்கிறேன் என்றும் சொல்லும் மனிதன், நிலைமை அவன் கட்டுப்பாட்டையும் மீறி செல்கையில் நிலை குலைந்து போகிறான்.

மருத்துவரிடம் செல்கிறோம், கேன்சர் என்கிறார்கள், அதற்கு சிகிட்சை செய்யலாம் என்று மருத்துவர் உறுதி தருகிறார் என்றால், அந்த உறுதியின் பெயரில் ஆறுதலைடைந்து, அதன் பிறகு அல்லாஹ்வை சார்ந்திருக்கும் நிலை தான் மனித இயல்பாய் இருக்கிறது.

அதுவே, எந்த மருத்துவத்தாலும் இதை குணமாக்க முடியாது, இவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று மருத்துவம் கை விரித்து விட்ட நம் குடும்பத்தார் விஷயமாக, மனிதன் அதே இறை சார்பு நிலையை கொள்வானா என்றால் பெரும்பான்மை மனிதர்கள் இந்த இடத்தில் வீழ்ந்து விடுவார்கள்.

ஆனால், அல்லாஹ் எதிர்பார்ப்பது இத்தகைய பலகீனமான ஈமானை அல்ல !

ஒட்டு மொத்த உலகமும் நம்மை கை விடும் விடும் போது, அல்லாஹ் தான் கதி என்கிற நிலையை ஒருவன் அடைவானே, அந்த நிலையிலும், என் ரப்பு என்னை கைவிட மாட்டான் என்கிற நம்பிக்கையை உள்ளத்தில் ஏந்திக் கொள்கிறோமே, அத்தகைய‌ ஈமானின் உயர்ந்த தரஜாவை தான் அவன் மனிதனிடம் எதிர்பார்க்கிறான்.

மனித அறிவின் படி பார்க்கையில், தப்பிக்க எந்த வழியுமே இல்லை என்கிற இறுதி கட்டத்தை அடைந்த பிறகும் கூட, இந்த இடத்திலும் அல்லாஹ் நம்மை காபபற்றுவான் என்று ஹிஜ்ரத் பயணத்தின் போது எதிரிகள் கண்ணில் படாமல் சவ்ர் குகையில் ஒளிந்திருந்த பெருமானார் கொண்டிருந்தார்களே, அந்த ஈமான் !

அயர்ந்து தூங்கிய நேரம் பார்த்து அருகில் வைத்திருந்த வாளை எதிரி ஒருவன் கையில் எடுத்து தம் கழுத்தருகே கொண்டு வந்து, இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? என்று கேட்கையில், அந்த இறுதி கட்டத்திலும் கூட, சிறு சஞ்சலமும் இல்லாமல், என் இறைவன் என்னை காப்பாற்றுவான் என்று உரைத்தார்களே, நபி (சல்) அவர்களது அத்தகைய ஈமானில் நமக்கு படிப்பினை இருக்கிறது.

முன்னே கடல், பின்னே எதிரிக் கூட்டம் என்றால், மனித மூளை நாம் சாகப் போவது உறுதி என்று தான் சொல்லும். ஆனால், மனித கற்பனைக்கே அடங்காத நிலையிலும் கூட, இந்த சூழலிலும் என் இறைவன் எனக்கு வழி காட்டுவான் என்று ஈமானை ஓங்கி ஒலித்தார்களே முசா நபி, அந்த ஈமானை தான் அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

அந்த ஈமானை நாம் கொண்டிருந்தால் நம்மை விட இவ்வுலகில் மகிழ்ச்சியானவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது,

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன.
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன !!

யார் உண்மை தவ்ஹீத்வாதி?


தவ்ஹீத்வாதியை இழிவுப்படுத்தும் விதமாய் கவிதை ஒன்றை வடித்த்த எதிரிகளுக்கு நபி வழியில், அந்த பாணியைக் கொண்டே அழகிய மறுப்பொன்றை கொள்கை சகோதரர் முனீப் அபுஇக்ரம் அவர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். அந்த பதிவு தான் இது

//நான் ஒரு தௌஹீத் வாதி
தாடி இல்லை கேட்க நாதி இல்லை
ஐந்து வேளை தொழுகை பேண
வில்லை
நான் ஒரு தௌஹீத் வாதி//

தாடியின் விளக்கதை அகராதியில்
பார்த்தேன் தௌஹீத்வாதியென்றே
அருஞ்சொற் பொருள்.
தொழுகையென்றால் என்னவென்றறியா இளைஞர் குலாம்
தொழுகின்றார் தொழ வைக்கின்றார். வெள்ளியன்று
சும்மாவா! ஜும்மா நிகழ்த்துகின்றார்.
நாங்கள் தௌஹீத்வாதி

//அறிந்துகொள் தெரிந்துகொள்
நான்கு ஹதீத் தெரிந்தால் போதும்
நான் ஒரு தௌஹீத் வாதி.//

புத்தகத்தில் புதைக்கப்பட்ட ஹதீத் வைரத்தை
மக்கள் உள்ளத்தில் ஏற்றியவன் தௌஹீத்வாதி!

//குர்ஆனில் இருந்தாலும் ஏற்க
மாட்டோம்
திரு நபி சொன்னாலும் ஏற்க
மாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

ஏற்காத ஒரு கூட்டம்
ஏமாற்ற இன்னொரு கூட்டம்
பார்க்காமல் கொள்ளாமல்
அரபு பணத்திற்கு ஒரு கூட்டமென
கூட்டங்கள் பல உண்டு.
பார்த்து ஆய்ந்து பதறுகளை
புறம் தள்ளி வஹியை மட்டும்
பின்பற்றும் வழித் தோண்றலை
வார்த்தெடுப்பவன் தௌஹீத்வாதி!

//அவர் சொன்னால்
ஏற்றுக்கொள்வோம்
வேறு எவர் சொன்னாலும் ஏற்க
மாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்
அவர் சொல்வதைப் போன்று ஆய்ந்து சொன்னால்
அவர் உருவாக்கிய தௌஹீத்வாதி!

//தப்பு தப்பாக பொய்யுரைதாலும்
தப்பில்லை
வார்த்தைகளால்
பிறரை வார்த்தெடுதாலும்
தப்பில்லை
நான் ஒரு தௌஹீத் வாதி//

தப்பாகப் பொய்யுரைத்தால் அது மெய்யன்றோ?!
இரண்டு தப்பான பொய் கடுமையான மெய்.
கடுமையிலும் களங்காது மெய் சொல்வான்
களம் கண்டெடுத்த தௌஹீத்வாதி!
வார்த்தைதனை கொண்டு வார்த்தெடுதோம்
ஏகத்துவத்தைக் கொண்டு ஏற்றம் செய்தோம்
தப்பில்லை! தரமான தௌஹீத்வாதி

//பெருமை இல்லை என்றுகூறி
பெருமைப்படுவோம்
அடுத்தவனை எப்பவும்
தாழ்த்தியே பேசுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

மறையது தந்த இறையவன் கொள்கை
ஏற்றதிலே, என்றைக்கும் இறுமாந்தோம்.
பெறுமை மட்டுமல்ல பேருவகை கொண்டோம்,
அது ஏற்கா அற்பத்தை, சமுதாய சர்ப்பத்தை
தாழ்த்துவோம் அன்றி, வாழ்த்தோம் தௌஹீத்வாதி!

//கோபம் வந்தால்
தொலைத்து விடுவோம்
கேள்வி கேட்டால்
சொன்னதையே திருப்பி சொல்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விளங்கா வீனர்களும் வீன் ஜம்பக்காரர்களும்
வினாக விவாதிப்பின், திரும்ப சொல்லி சொல்லி
திருத்த முயற்ச்சிப்பது வருத்தம் வருவதெனில்
கருத்த மனங்களின் குனமதுவென்று பொறுத்துக்
கொள்பவன் தௌஹீத்வாதி!

//பிடிவாதம் விதண்டாவாதம்
எங்களின் குணம்
மானமில்லாத ரோஷமில்லாத
எங்களின் ஜனம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அல்லாஹ் ஒருவனென்பது அடிப்படை வாதம்
அதன் வழியே, வஹி மொழியே, நபி வழியே
எங்கள் பிடிவாதம்- வாதமதில் சங்கமித்த சந்தனங்கள்
எங்கள் மனம் அல்ஹம்துலில்லாஹ்
நான் ஒரு தௌஹீத்வாதி!

//பித்தலாட்டம்
தில்லு முல்லு எங்கள் இனம்
வாய் சவடால் வீர
வசனமே எங்களின் கனம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

பித்தம் தலைக்கேறி பிதற்றியோர் மத்தியிலே
சத்தியம் இதுவென்று சங்க நாதமிட்டார்.
கைகளில் தள்ளினால் மார்கமாய் மார்கம் சொன்ன
கழிசடைகள் மத்தியிலே வீட்டுக்கொரு அறிஞனை
விதைத்தெடுத்தார் தௌஹீத்வாதி!

//அன்று வளர
வைத்தது வெளிநாட்டுப் பணம்
இன்று எங்களை வளர
வைக்கிறது அரசியல் பணம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அன்றல்ல இன்றல்ல என்றும் தேவையில்லை பணம்
பினமாக வீழ்ந்தாலும் வீழ்வானே தவிர பணம் பார்த்து
பல்லிளிக்கான் தௌஹீத்வாதி!

//சண்டைக்கு வருவதை
எதிர்ப்பார்ப்போம்
வந்த சண்டையை விடமாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

சாக்கடைகள் வருகைதனை எவன் பார்ப்பான்
வந்துவிட்ட சாக்கடையை வரவேற்ப்பானா?
இரண்டுமில்லை செயல் செய்வான் தௌஹீத்வாதி!

//விவாதம் என்று ஒப்பந்தம்
செய்வோம்
அதைவைத்தே அலைக்கழிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விவாதிக்க பயந்ததில்லை. வேண்டுமான வரலாறு....
தமிழில் விவாதமென்றால் தௌஹீத்!
வேண்டுமென்றால் ஆய்வு செய்!
அலைவது கழிப்பதும் பின்னர்
அரண்டு ஒழிவதுவும் அவனன்றோ
நாமில்லை. நாங்கள் தௌஹீத்வாதி!

//விவாதத்திற்கு வா வா என்று
அரைகூவல் விடுவோம்
வந்து விட்டால்
அரை டௌசரோடு ஓடிவிடுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அழைத்தோம் வந்தார்கள் அறிவு பெற்றுச் சென்றார்கள்
அறிவிலிகள் வந்தார்கள், அழுது சென்றார்கள்.
அரை வேக்காடுகள் வந்தார்கள் அறிவில்லை என்றார்கள்.
ஆகட்டும் போய் அறிவு பெற்று வா என்றோம்
நாங்கள் தௌஹீத்வாதி!

//எங்கள் வழி இஸ்லாத்தில் தனி வழி
மறுத்தவறேல்லாம் காஃபிரின் வழி
நான் ஒரு தௌஹீத் வாதி//

இஸ்லாமிய வழியே தனி வழி!
இதை ஏற்காதவனை புறக்கனி!
அவன் காஃபிர் என்பதே மறைமொழி!
அதுவே தௌஹீத்வாதி உயிர்மொழி!

//ஊருக்கு ஒரு பள்ளிவாசல் தனியாக நிறுவுவோம்
இல்லையன்றால்
பள்ளிவாசலை அபகரிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

கட்டடத்தை பள்ளியென்றார் - கன்னியரிடம்
காசு வாங்கி திருமணங்கள் செய்து வைத்தார்!
பிச்சைக்காரராக பெண் வீட்டில் உண்டிட்டார்!
கட்டளைக்கு மாறு செய்து காஃபிரன்ன நடக்கின்றார்.
இத்துனையும் செய்யுமிடம் பள்ளியென்று எவன் சொன்னான்?
ஊருக்கொரு பள்ளி செய்வோம்! இறைவழி செய்வோம்!
எங்கள் பள்ளியே பள்ளியென்போம் தௌஹீத்வாதி!

//அல்லாஹுவின் சட்டமெல்லாம்
அத்துப்புடிங்க
எங்களினடமிருந்து எல்லோரும்
கத்துக்கிடுங்க
நான் ஒரு தௌஹீத் வாதி//

இத்துப் போன சட்டமதை இஸ்லாமென்று
சொன்ன, அறிவு செத்துப் போன கூட்டமிடை
உண்மையை சொல்லும் ஆசிரியன் தௌஹீத்வாதி!

//ஜகாத்தை நாங்க
நினைச்சா கொடுப்போம்
தொழுகையை எங்கள்
விருப்பம்போல தொழுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

ஜக்காத்தும் சதக்காவும் சரியான நெறியறிந்து
முறையான வழிகளிலே சமுதாய முன்னேற்றம்
காண்பதற்கு அழகான வகை செய்து அமல் செய்பவன்
தௌஹீத்வாதி!
அல்லாஹ்வின் விருப்பமும் அண்ணாலரின் நெருக்கமும்
அவ்வுலகில் வேண்டுமென்று, வரி வரியாய் நபி மொழியாய்
தொழுகையை வழக்கமாக கொண்டு வந்தான் தௌஹீத்வாதி!

//பெருநாளை தனியாக கொண்டாட
தனி விருப்பம்
யாரவது சேர்ந்து விட்டால்
எங்களுக்கு வெறுக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி//

பிறை பார்ப்பான் முஃமின்
முறை பார்ப்பன் வம்பன்
குதிரைக் கொட்டத்தில் கழுதைக்கு இடமில்லை
கொள்கைக் கூட்டத்தில் முஸ்லிமுக்கு இடமுண்டு
நாங்கள் தௌஹீத்வாதி!

//என்ன கேள்வி கேட்டாலும் பதில்
சொல்வோம்
தெரியாது என்பது எங்க
அகராதியிலே கிடையாது
நான் ஒரு தௌஹீத் வாதி//

புகழனைத்தும் ஒருவனுக்கே
எதிரியையும் புகழச் செய்த உம் கருணை
என் சொல்வேன்
நான் ஒரு தௌஹீத்வாதி!

//விளக்கும் ஆற்றல் இல்லாமல்
விளக்குமாறை எடுப்போம்
சொந்த
விசயங்களை மேடைப்போட்டு
விவரிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விளக்கும் ஆற்றல் விரிவு செய்து
விளங்கிய மக்களை சாட்சியாக்கிய
வின் முட்டும் கோசங்களும் கண் கலங்க
கூட்டங்களும் சாட்சியன்றோ!
எல்லை மீறி தொல்லை தந்தால் கொல்லைப் பேச்சின்றி
மக்கள் மன்றத்தில் நீதி கேட்பான் தௌஹீத்வாதி!

//அரசியல் பக்கமே போகமாட்டோம்
ஆனால் எங்களுடைய
பொழுது போக்கே அரசியல்தான்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அரசுக்கும் இயல் செய்து அடிப்படை
உரிமைதனை அழகாக கொடுக்க வகை
செய்த ஆசிரியன் தௌஹீத்வாதி!

//அவன்
நாட்டு நடப்பை வைத்து அரசியல்
நடத்துறான்
நாங்கள்
நாளை நடப்பை வைத்து அரசியல்
நடத்துறோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//
நாட்டுக்கும் நம் வீட்டுக்கும் பாலம்
ஒன்றமைத்து பகைமை வென்றெடுத்து
இனிய இஸ்லாமியனை இந்தியாவிற்கு
ஈன்றெடுத்துக் கொடுப்பவன் தௌஹீத்வாதி!

//ஜால்ரா அடிப்பவர்களை எங்களோடு
வைத்துக்கொள்வோம்
மீறுபவர்களை ஜாக்கிரதையாக
வைத்துக்கொள்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

காலாரா வந்த ஜாலாராக்கள் காது
செவிடாகி கண் குருடாகி வீனான
வார்த்தை தனை விளையாட்டாய் சொன்னாலும்
முறையாய் பதில் கொடுத்து முகத்தை உடைப்பவன்
தௌஹீத்வாதி!

//எல்லோரும் எங்களை நல்ல
மதிக்கணும் என்போம்
மீறினால் நாங்க
உங்களை மிதிக்கணும் என்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

மிதித்தவனையும் மதித்தவனையும்
அடித்தவனையும் அரவனைத்தவனையும்
பிடித்தவனையும் வெறுத்தவனையும்
தன் பிள்ளையென மதித்துப் போற்றுபவன் தௌஹீத்வாதி!

//எனக்கு எம்புட்டு பெருமை நான்
ஒரு தௌஹீத் வாதி.//

இத்துனையும் செய்ய ஏகத்துவம் தந்த
அற்புதனே! அருள் மழையே! மறை மலரே!
முழு நிலவே! துதியனைத்தும் உனக்கின்றி வேறில்லை
உன் அடிமையென நான் சொன்னால்
அது எனக்கு பெருமையன்றே வேறில்லை
நான் ஒரு தௌஹீத்வாதி!

யார் உண்மை தவ்ஹீத்வாதி?

தவ்ஹீத்வாதியை இழிவுப்படுத்தும் விதமாய் கவிதை ஒன்றை வடித்த்த எதிரிகளுக்கு நபி வழியில், அந்த பாணியைக் கொண்டே அழகிய மறுப்பொன்றை கொள்கை சகோதரர் முனீப் அபுஇக்ரம் அவர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். அந்த பதிவு தான் இது

//நான் ஒரு தௌஹீத் வாதி
தாடி இல்லை கேட்க நாதி இல்லை
ஐந்து வேளை தொழுகை பேண
வில்லை
நான் ஒரு தௌஹீத் வாதி//

தாடியின் விளக்கதை அகராதியில்
பார்த்தேன் தௌஹீத்வாதியென்றே
அருஞ்சொற் பொருள்.
தொழுகையென்றால் என்னவென்றறியா இளைஞர் குலாம்
தொழுகின்றார் தொழ வைக்கின்றார். வெள்ளியன்று
சும்மாவா! ஜும்மா நிகழ்த்துகின்றார்.
நாங்கள் தௌஹீத்வாதி

//அறிந்துகொள் தெரிந்துகொள்
நான்கு ஹதீத் தெரிந்தால் போதும்
நான் ஒரு தௌஹீத் வாதி.//

புத்தகத்தில் புதைக்கப்பட்ட ஹதீத் வைரத்தை
மக்கள் உள்ளத்தில் ஏற்றியவன் தௌஹீத்வாதி!

//குர்ஆனில் இருந்தாலும் ஏற்க
மாட்டோம்
திரு நபி சொன்னாலும் ஏற்க
மாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

ஏற்காத ஒரு கூட்டம்
ஏமாற்ற இன்னொரு கூட்டம்
பார்க்காமல் கொள்ளாமல்
அரபு பணத்திற்கு ஒரு கூட்டமென
கூட்டங்கள் பல உண்டு.
பார்த்து ஆய்ந்து பதறுகளை
புறம் தள்ளி வஹியை மட்டும்
பின்பற்றும் வழித் தோண்றலை
வார்த்தெடுப்பவன் தௌஹீத்வாதி!

//அவர் சொன்னால்
ஏற்றுக்கொள்வோம்
வேறு எவர் சொன்னாலும் ஏற்க
மாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்
அவர் சொல்வதைப் போன்று ஆய்ந்து சொன்னால்
அவர் உருவாக்கிய தௌஹீத்வாதி!

//தப்பு தப்பாக பொய்யுரைதாலும்
தப்பில்லை
வார்த்தைகளால்
பிறரை வார்த்தெடுதாலும்
தப்பில்லை
நான் ஒரு தௌஹீத் வாதி//

தப்பாகப் பொய்யுரைத்தால் அது மெய்யன்றோ?!
இரண்டு தப்பான பொய் கடுமையான மெய்.
கடுமையிலும் களங்காது மெய் சொல்வான்
களம் கண்டெடுத்த தௌஹீத்வாதி!
வார்த்தைதனை கொண்டு வார்த்தெடுதோம்
ஏகத்துவத்தைக் கொண்டு ஏற்றம் செய்தோம்
தப்பில்லை! தரமான தௌஹீத்வாதி

//பெருமை இல்லை என்றுகூறி
பெருமைப்படுவோம்
அடுத்தவனை எப்பவும்
தாழ்த்தியே பேசுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

மறையது தந்த இறையவன் கொள்கை
ஏற்றதிலே, என்றைக்கும் இறுமாந்தோம்.
பெறுமை மட்டுமல்ல பேருவகை கொண்டோம்,
அது ஏற்கா அற்பத்தை, சமுதாய சர்ப்பத்தை
தாழ்த்துவோம் அன்றி, வாழ்த்தோம் தௌஹீத்வாதி!

//கோபம் வந்தால்
தொலைத்து விடுவோம்
கேள்வி கேட்டால்
சொன்னதையே திருப்பி சொல்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விளங்கா வீனர்களும் வீன் ஜம்பக்காரர்களும்
வினாக விவாதிப்பின், திரும்ப சொல்லி சொல்லி
திருத்த முயற்ச்சிப்பது வருத்தம் வருவதெனில்
கருத்த மனங்களின் குனமதுவென்று பொறுத்துக்
கொள்பவன் தௌஹீத்வாதி!

//பிடிவாதம் விதண்டாவாதம்
எங்களின் குணம்
மானமில்லாத ரோஷமில்லாத
எங்களின் ஜனம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அல்லாஹ் ஒருவனென்பது அடிப்படை வாதம்
அதன் வழியே, வஹி மொழியே, நபி வழியே
எங்கள் பிடிவாதம்- வாதமதில் சங்கமித்த சந்தனங்கள்
எங்கள் மனம் அல்ஹம்துலில்லாஹ்
நான் ஒரு தௌஹீத்வாதி!

//பித்தலாட்டம்
தில்லு முல்லு எங்கள் இனம்
வாய் சவடால் வீர
வசனமே எங்களின் கனம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

பித்தம் தலைக்கேறி பிதற்றியோர் மத்தியிலே
சத்தியம் இதுவென்று சங்க நாதமிட்டார்.
கைகளில் தள்ளினால் மார்கமாய் மார்கம் சொன்ன
கழிசடைகள் மத்தியிலே வீட்டுக்கொரு அறிஞனை
விதைத்தெடுத்தார் தௌஹீத்வாதி!

//அன்று வளர
வைத்தது வெளிநாட்டுப் பணம்
இன்று எங்களை வளர
வைக்கிறது அரசியல் பணம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அன்றல்ல இன்றல்ல என்றும் தேவையில்லை பணம்
பினமாக வீழ்ந்தாலும் வீழ்வானே தவிர பணம் பார்த்து
பல்லிளிக்கான் தௌஹீத்வாதி!

//சண்டைக்கு வருவதை
எதிர்ப்பார்ப்போம்
வந்த சண்டையை விடமாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

சாக்கடைகள் வருகைதனை எவன் பார்ப்பான்
வந்துவிட்ட சாக்கடையை வரவேற்ப்பானா?
இரண்டுமில்லை செயல் செய்வான் தௌஹீத்வாதி!

//விவாதம் என்று ஒப்பந்தம்
செய்வோம்
அதைவைத்தே அலைக்கழிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விவாதிக்க பயந்ததில்லை. வேண்டுமான வரலாறு....
தமிழில் விவாதமென்றால் தௌஹீத்!
வேண்டுமென்றால் ஆய்வு செய்!
அலைவது கழிப்பதும் பின்னர்
அரண்டு ஒழிவதுவும் அவனன்றோ
நாமில்லை. நாங்கள் தௌஹீத்வாதி!

//விவாதத்திற்கு வா வா என்று
அரைகூவல் விடுவோம்
வந்து விட்டால்
அரை டௌசரோடு ஓடிவிடுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அழைத்தோம் வந்தார்கள் அறிவு பெற்றுச் சென்றார்கள்
அறிவிலிகள் வந்தார்கள், அழுது சென்றார்கள்.
அரை வேக்காடுகள் வந்தார்கள் அறிவில்லை என்றார்கள்.
ஆகட்டும் போய் அறிவு பெற்று வா என்றோம்
நாங்கள் தௌஹீத்வாதி!

//எங்கள் வழி இஸ்லாத்தில் தனி வழி
மறுத்தவறேல்லாம் காஃபிரின் வழி
நான் ஒரு தௌஹீத் வாதி//

இஸ்லாமிய வழியே தனி வழி!
இதை ஏற்காதவனை புறக்கனி!
அவன் காஃபிர் என்பதே மறைமொழி!
அதுவே தௌஹீத்வாதி உயிர்மொழி!

//ஊருக்கு ஒரு பள்ளிவாசல் தனியாக நிறுவுவோம்
இல்லையன்றால்
பள்ளிவாசலை அபகரிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

கட்டடத்தை பள்ளியென்றார் - கன்னியரிடம்
காசு வாங்கி திருமணங்கள் செய்து வைத்தார்!
பிச்சைக்காரராக பெண் வீட்டில் உண்டிட்டார்!
கட்டளைக்கு மாறு செய்து காஃபிரன்ன நடக்கின்றார்.
இத்துனையும் செய்யுமிடம் பள்ளியென்று எவன் சொன்னான்?
ஊருக்கொரு பள்ளி செய்வோம்! இறைவழி செய்வோம்!
எங்கள் பள்ளியே பள்ளியென்போம் தௌஹீத்வாதி!

//அல்லாஹுவின் சட்டமெல்லாம்
அத்துப்புடிங்க
எங்களினடமிருந்து எல்லோரும்
கத்துக்கிடுங்க
நான் ஒரு தௌஹீத் வாதி//

இத்துப் போன சட்டமதை இஸ்லாமென்று
சொன்ன, அறிவு செத்துப் போன கூட்டமிடை
உண்மையை சொல்லும் ஆசிரியன் தௌஹீத்வாதி!

//ஜகாத்தை நாங்க
நினைச்சா கொடுப்போம்
தொழுகையை எங்கள்
விருப்பம்போல தொழுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

ஜக்காத்தும் சதக்காவும் சரியான நெறியறிந்து
முறையான வழிகளிலே சமுதாய முன்னேற்றம்
காண்பதற்கு அழகான வகை செய்து அமல் செய்பவன்
தௌஹீத்வாதி!
அல்லாஹ்வின் விருப்பமும் அண்ணாலரின் நெருக்கமும்
அவ்வுலகில் வேண்டுமென்று, வரி வரியாய் நபி மொழியாய்
தொழுகையை வழக்கமாக கொண்டு வந்தான் தௌஹீத்வாதி!

//பெருநாளை தனியாக கொண்டாட
தனி விருப்பம்
யாரவது சேர்ந்து விட்டால்
எங்களுக்கு வெறுக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி//

பிறை பார்ப்பான் முஃமின்
முறை பார்ப்பன் வம்பன்
குதிரைக் கொட்டத்தில் கழுதைக்கு இடமில்லை
கொள்கைக் கூட்டத்தில் முஸ்லிமுக்கு இடமுண்டு
நாங்கள் தௌஹீத்வாதி!

//என்ன கேள்வி கேட்டாலும் பதில்
சொல்வோம்
தெரியாது என்பது எங்க
அகராதியிலே கிடையாது
நான் ஒரு தௌஹீத் வாதி//

புகழனைத்தும் ஒருவனுக்கே
எதிரியையும் புகழச் செய்த உம் கருணை
என் சொல்வேன்
நான் ஒரு தௌஹீத்வாதி!

//விளக்கும் ஆற்றல் இல்லாமல்
விளக்குமாறை எடுப்போம்
சொந்த
விசயங்களை மேடைப்போட்டு
விவரிப்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

விளக்கும் ஆற்றல் விரிவு செய்து
விளங்கிய மக்களை சாட்சியாக்கிய
வின் முட்டும் கோசங்களும் கண் கலங்க
கூட்டங்களும் சாட்சியன்றோ!
எல்லை மீறி தொல்லை தந்தால் கொல்லைப் பேச்சின்றி
மக்கள் மன்றத்தில் நீதி கேட்பான் தௌஹீத்வாதி!

//அரசியல் பக்கமே போகமாட்டோம்
ஆனால் எங்களுடைய
பொழுது போக்கே அரசியல்தான்
நான் ஒரு தௌஹீத் வாதி//

அரசுக்கும் இயல் செய்து அடிப்படை
உரிமைதனை அழகாக கொடுக்க வகை
செய்த ஆசிரியன் தௌஹீத்வாதி!

//அவன்
நாட்டு நடப்பை வைத்து அரசியல்
நடத்துறான்
நாங்கள்
நாளை நடப்பை வைத்து அரசியல்
நடத்துறோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//
நாட்டுக்கும் நம் வீட்டுக்கும் பாலம்
ஒன்றமைத்து பகைமை வென்றெடுத்து
இனிய இஸ்லாமியனை இந்தியாவிற்கு
ஈன்றெடுத்துக் கொடுப்பவன் தௌஹீத்வாதி!

//ஜால்ரா அடிப்பவர்களை எங்களோடு
வைத்துக்கொள்வோம்
மீறுபவர்களை ஜாக்கிரதையாக
வைத்துக்கொள்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

காலாரா வந்த ஜாலாராக்கள் காது
செவிடாகி கண் குருடாகி வீனான
வார்த்தை தனை விளையாட்டாய் சொன்னாலும்
முறையாய் பதில் கொடுத்து முகத்தை உடைப்பவன்
தௌஹீத்வாதி!

//எல்லோரும் எங்களை நல்ல
மதிக்கணும் என்போம்
மீறினால் நாங்க
உங்களை மிதிக்கணும் என்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி//

மிதித்தவனையும் மதித்தவனையும்
அடித்தவனையும் அரவனைத்தவனையும்
பிடித்தவனையும் வெறுத்தவனையும்
தன் பிள்ளையென மதித்துப் போற்றுபவன் தௌஹீத்வாதி!

//எனக்கு எம்புட்டு பெருமை நான்
ஒரு தௌஹீத் வாதி.//

இத்துனையும் செய்ய ஏகத்துவம் தந்த
அற்புதனே! அருள் மழையே! மறை மலரே!
முழு நிலவே! துதியனைத்தும் உனக்கின்றி வேறில்லை
உன் அடிமையென நான் சொன்னால்
அது எனக்கு பெருமையன்றே வேறில்லை
நான் ஒரு தௌஹீத்வாதி!

நான் தான் தவ்ஹீத்வாதி


தவ்ஹீத்வாதியின் இலக்கணங்களை கவிதை நடையில் வடிவமைத்துள்ள இலங்கையை சேர்ந்த‌ கொள்கை சகோதரர் சகோ.  ரூஹுல் ரஸ்மியின் பதிவு

நாம் தாம் தௌஹீத் வாதி
நாதியற்ற இடத்திலும்
வாதியாய் நின்று போதிக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி

தடியால் அடித்தாலும்
தாடியை மழிக்கமாட்டோம்
மண்ணில் புதைத்தாலும்
சுன்னாவை கழிக்கமாட்டோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
பள்ளிப் பக்கம் வராதவன்
தொழும் எமைக் கண்டு
பக்கம் வந்து நின்று
எம் விரலை உடைத்தாலும்
தொழுகையை விடமாட்டோம்
உடைத்தவன் நேர்வழிவேண்டி
அழுகையை விடமாட்டோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

நாம் தாம் தௌஹீத் வாதி
நான்கு ஹதீஸ் தெரிந்துகொள்ள
நாற்திசையும் திரிந்துசெல்வோம்
திருமறையை அறிந்துகொள்ள
மறுமுறையும் வரிந்துகொள்வோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

குர்ஆனில் உள்ளதை
குறிபார்த்து ஏற்போம்
ஹதீஸில் உள்ளதை
சரிபார்த்து ஏற்போம்
நான் ஒரு தௌஹீத் வாதி

வேதப்படி வாதம் வைத்தால்
நீதப்படி நாதம் வைப்போம்
இஷ்டப்படி கட்டிச் சொன்னால்
நஷ்டப்பட விட்டுச் செல்வோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
சஹாபி சொன்னால்
கேட்காத நாம்
வஹாபி சொன்னால்
கேட்போமா நாம்?


பொய்சொல்லும் உலமாக்களை
போய்சொல்லி களமாக்குவோம்
போகாத உள்ளங்களை
வாய்ச்சொல்லில் ரணமாக்குவோம்.
நான் ஒரு தௌஹீத் வாதி

நடுநிலை எனக்கூறி
பக்கச் சார்பாக இருக்க
நிலைநடுக்கம் எம்மூளையில்
நிலைத்ததே இல்லை
நான் ஒரு தௌஹீத் வாதி

நடுநிலை நாமென்ற
தற்பெருமை எமக்கில்லை
தாழ்த்தாதே என்று சொல்லி
தாழ்த்தும் நிலை கொண்டதில்லை

நாம் தாம் தௌஹீத் வாதி
கொள்கையில் பிடிவாதம்
கொல்கையிலும் பிடிக்கும்
வீணரின் விதண்டாவாதம்
விடைசொல்லப் பிடிக்கும்
நான் ஒரு தௌஹீத் வாதி

மணமான மானமும்
வாசமான ரோசமும்
இனத்துக்கும் எமக்கும்
கனக்கும் மகுடம்
நான் ஒரு தௌஹீத் வாதி

பொம்மலாட்ட அரசியலில்
நம்மலாட்டம் இருப்பதற்கு
பித்தலாட்ட மாமாக்களால்
பிறந்துகாட்ட முடியுமா?

நாம் தாம் தௌஹீத் வாதி
கொள்ளைப் பணம் எம்மை
கொள்ளையிட்டதே இல்லை
கொள்கைப் பாணம் எம்மை
விழவிட்டதே இல்லை

சண்டைக்கு வருவதை எதிர்ப்போம்
வந்த சண்டையில் துளிர்ப்போம்
விவாதத்தை விதியாக்கி விலாசுவோம்
வெற்றியை நமதாக்கி உரசுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி

நாம் கண்ட விவாதக் களம்
யாரும் கண்டதில்லை
நாம் வெண்ட விவாதக் களம்
யாரும் வெண்டதில்லை

நாம் தாம் தௌஹீத் வாதி
காதியாணிக்கு ஆணியடித்தோர்
நாம்தாம்
கப்ர்வணங்கிக்கு கப்ர்கட்டியோர்
நாம்தாம்
கிறித்தவர்களை முறித்தவர்கள்
நாம்தாம்
நாத்திகனை மாத்திவிட்டோர்
நாம்தாம்
அஹ்லேகுரானை அகற்றிவிட்டோர்
நாம்தாம்
எம் அறைகூவலில் மறை கழன்றோரை
மாற்றியோசிக்க வைத்த
நான் ஒரு தௌஹீத் வாதி

எங்கள் இஸ்லாம் தனிவழியே
கலிமா சொல்லும் ஒருவழியே
மறுத்தவன் செல்வது மாற்றுவழியே
மாறாமல் இருப்பது மார்க்கம் ஒன்றே

எம்பணப்பை கட்டி
எமெக்கென தொழவென
மதீனத்து நபவி வேண்டும்
இணைவைப்பை வெட்டி
இருப்பதை அபகரிக்கும்
மக்கத்து ஹரமும் வேண்டும்.
நான் ஒரு தௌஹீத் வாதி

சட்டத்தை மக்களுக்கு சொல்லும்
திட்டத்தில் ஜமாஅத் செல்லும்
ஸகாத்தை மக்கள் அள்ளும்
பழக்கத்தில் ஜமாஅத் வெல்லும்

படுத்தவரை போர்த்திடவே
திட்டமிட்டுக் கொண்டிருக்க
அடுத்தவரை சேர்த்திடவே
திடவுறுதி கொண்டிடுவோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
தெரிந்ததை தெரிந்ததாகச் சொல்ல
எப்போதும் தயாராவோம்
தெரியாததை மறைக்க அடக்கமென்று
பொய்ப்பெருமை கொள்ளமாட்டோம்.

கேள்விக்கு பதில் இருப்பதை
பெருமையாகக் கருதமாட்டோம்.
பதிலிருக்கும் கொள்கையில் இருப்பதை
பெருமனதோடு ஏற்றுக்கொள்வோம்.
நான் ஒரு தௌஹீத் வாதி

சிக்கலுக்குள் மாட்டித் தவிக்கும்
மக்களுக்கு களம் இறங்குவோம்
அரசியல் போட்டித் தவிர்க்கும்
அரசியல் செய்து காட்டுவோம்

நேற்று நடந்ததை வைத்து
நாளையை கணக்கிடுவோம்
இன்றுகளுக்குள் சிக்கி
நாட்களை இழக்கமாட்டோம்

நாம் தாம் தௌஹீத் வாதி
ஜால்றா அடிப்பவன் எம்மோடு இருந்தால்
காலரைப் பிடித்து கசக்கி எறிவோம்
காலறா வந்தவன் சுட்டிக் காட்டினால்
காலறைத் துக்கி கட்டியணைப்போம்

இடஒதுக்கீடு உங்களுக்களித்து
இடரொதுக்கி வாழவைப்போம்
மருத்துவராய் மதிக்கப்பட
சிறையில்கூட மிதிபடுவோம்
நான் ஒரு தௌஹீத் வாதி


திங்கள், 10 மார்ச், 2014

சமுதாய அக்கறையா சுயநல அரசியலா?


அதிமுக சார்பாக இராமனாதபுரம் தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஓட்டுக்களை பிரித்து சுய நல அரசியல் செய்யாமல், முஸ்லிம் வெற்றி பெறட்டும் என்கிற நோக்கில் அன்றைக்கே போட்டியிலிருந்து விலகியிருக்க வேண்டும் எஸ்டிபிஐ.

அது போல், இன்று திமுகவும் தன் சார்பாக முஸ்லிம் ஒருவரை நிறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே தான் அதிமுக ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்து விட்டாரே, இப்போது, நீங்கள் இன்னொரு முஸ்லிமை நிறுத்தி இஸ்லாமியர்களுக்கிடையே பிரிவினை உருவாக்க பார்க்கிறீர்களா?
என்று கொந்தளித்து, இதன் காரணமாக திமுக ஆதரவு நிலையை மறு பரிசீலனை செய்யபோகிறோம் என்று சொல்லும் திராணி தமுமுகவிற்கு இல்லை.

குறைந்த பட்சம், இந்த ஒரு தொகுதியில் மட்டும் நாங்கள் அதிமுகவின் முஸ்லிம் வேட்பாளரை தான் ஆதரிப்போம் என்று கூறி, வெறும் வாயளவில் பம்மாத்து காட்டி திரியும் சமூக ஒற்றுமை எனும் நாடகத்தை இவர்கள் மெய்யாக்கி இருக்க வேண்டும். அதை செய்தார்களா? என்று பார்த்தால் அதுவும் இல்லை.

முஸ்லிம் வெற்றி பெற வேண்டும் என்கிற அக்கறையை விட, தான் வெற்றி பெற வேண்டும் என்கிற அக்கறை தான் அரசியல் எனும் சாக்கடையில் கால் விட்ட எவரது எண்ணமாகவும் இருக்கும் என்பதால், இத்தகைய பெருந்தன்மையையெல்லாம் இது போன்ற சாக்கடையிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதற்கும், முஸ்லிம் வெற்றி பெற்றால் போதும், என்கிற பரந்த எண்ணம் கொண்டவர்களும் இல்லை என்பதற்கும் மற்றுமொரு சான்று, எஸ்டிபிஐ கட்சி தேசிய அளவில் நிற்க போகும் தொகுதிப் பட்டியலை அறிவித்த இந்த செய்தியாகும்.

பார்க்க http://sdpi.in/portal/story/sdpi-contest-42-lok-sabha-seats

இதில், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளில் (மொத்தமே 20 தொகுதி தான் !) எஸ்டிபிஐ தான் போட்டியிடும் என்று அறிவித்திருக்கின்றனர்.கேரளாவில் அதிக இஸ்லாமிய ஆதரவுடன் இருக்கும் முஸ்லிம் லீக் இவர்கள் கண்களுக்கு தெரிந்தார்களா? ஏதேனும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றால் போதும், பாஜகவை எதிர்ப்பது மட்டும் தான் எங்கள் நோக்கம் என்றெல்லாம் படம் காட்டித் திரிவது உண்மையெனில், கேரளாவில், முஸ்லிம் லீகுக்கு ஆதரவு என்று தான் இவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.
அதை செய்யாமல், 20 தொகுதிக்கும் தமது ஆட்களை நிறுத்தி தாங்கள் கடைந்தெடுத்த சுயனலவாதிகள் தான் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கின்றனர் இவர்கள் !

மேலும், ஹிந்துக்களின் ஆதரவை பெறுவதற்காக ஆரத்தி எடுத்து ஹிந்து மத சடங்குகளை செய்வதற்கு கூட தயாராகும் கேடு கெட்ட கூட்டத்தினர் தான் இந்த எஸ்டிபிஐ என்பதற்கான சான்றையும் இங்கே தருகிறோம்.
பார்க்க https://www.facebook.com/photo.php?v=166743160183884

ஹிந்து ஓட்டுக்கள் பெற்று எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கங்கணத்துடன் மார்க்கத்தை குழி தோண்டி புதைக்கவும் தயாராகும் இந்த கூட்டம் நாளை பாஜக அனுதாபிகளின் ஓட்டுக்கள் பெற பாஜகவை கூட ஆதரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை !

ஒற்றுமைக்கான இலக்கணம்


ஒற்றுமைக்கான தேடல் என்பது நெளிவு சுளிவுடன் கூடிய கடினமான பாதையில் மேற்கொள்ள வேண்டிய பயணமல்ல; மிகவும் இலகுவான இலக்கு தான் ஒற்றுமை என்பது.

தவறு எங்கே நிகழ்கிறது என்றால் ஒற்றுமையை விரும்பும் எவரும் அந்த இலக்கை அடைவதற்கான வழியிலும் ஒற்றுமை வேண்டும் என விரும்புவதில்லை. 

இலக்கு எப்படி முக்கியமோ அது போல் அதை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் பயணமும் முக்கியம் என்பதை புரியாத காரணத்தால் தான் இன்று ஒற்றுமைக்கான இலக்கணம் இது போன்றவர்களால் கேலிக்குரியதாக்கப்படுகிறது !

நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன், நீயும் போட்டியிடுகிறாய், ஆகவே நாமிருவரும் ஒற்றுமையாய் இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அபத்தம் !
ஒரே காரியத்தை இருவர் செய்வதால் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதாக அர்த்தமில்லை.

சரி, நானும் பாஜகவை எதிர்க்கிறேன், நீயும் எதிர்க்கிறாய் என ஒரே இலக்கை கொண்டிருந்தாலாவது அது ஒற்றுமையாகுமா? என்றால் அதுவும் தவறே!
ஹிந்துவும் நாத்திகத்தை மறுக்கிறான், முஸ்லிமும் மறுக்கிறான் என்பதால் கொள்கையளவில் இருவரும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பொருள் வருமா?அப்படி யாராவது கருதுவோமா?

தேர்வு செய்யும் வழியை ஒன்றிணைக்கவில்லையெனில் அவரவர், தான் சார்ந்திருக்கும் வழியின் படி தான் இலக்கை அடைய முயற்சிப்பர்.

சில வழிகள் கடினமானதாக இருக்கும், சில வழிகள் மயிலிறகால் வருடுவது போலிருக்கும்.
சில வழிகளில் நேர்மை, நாணயம் இருக்கும், சிலவற்றில் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும்.
மார்க்கத்தை விட்டும் தடம் புரளாத வழிகள் இருக்கும், மார்க்கத்தை அடகு வைத்து பயணிக்கும் வழிகளும் இருக்கும்.

அனைத்தும் சமமல்ல ! அனைத்தும் இலக்கை சரியாய் அடைவதற்கு உதவி செய்பவையுமல்ல !

ஒரே புள்ளியிலிருந்து துவங்குங்கள்,
ஒரே பாதை வழியாக செல்லுங்கள் ..
ஒற்றுமை எனும் இலக்கு வெகுதூரமில்லை !!

கேள்விக்கு பிறந்த கூட்டம்


கேள்விக்கு பிறந்த கூட்டமொன்று உள்ளது. நடு நிலை என்கிற தனி மதத்தில் இது ஒரு வகை சாதியினர். இவர்களுக்கு கேள்வி மட்டுமே கேட்க தெரியும். 
அந்த சாதியை சேர்ந்த ஒருவர் வழக்கம் போல் ஜெயா நாளை மோடியை ஆதரித்தால் உங்களை என்ன செய்வது? என்று தனி மெஸேஜில் நம்மிடம் கேள்வியெழுப்பினார். 
கேள்விக்கு பிறந்த ஜாதி என்று இவரைப்பற்றி தெரியாத நிலையில், மோடிக்கு எதிராக மிகப்பெரிய மாற்று அரசியல் திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நினைத்து, எனக்கு தெரிந்து எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல, நீங்கள் இதற்கு மாற்றாக யாரை ஆதரிக்க சொல்கிறீர்கள்? என்று கேட்டேன்.

இந்த சாதாரண கேள்விக்கு விடை சொல்ல இயலாமல் முக்கி, மோதி, பின் நம்மை கெட்ட வார்த்தைகளால் வசை பாடி இவர் அடித்த பல்டிகளை கண்ட போது தான் புரிந்தது, இவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பது.

ஜெயலலிதா மோடியை ஆதரித்தால் என்ன செய்வது என்று கேட்கும் கூட்டத்தார் இது நாள் வரை செவ்வாய் கிரகத்தில் இருந்து, நேற்று தான் தரையிறங்கியிருக்கிறார்களா?
இவர்கள் எந்த கட்சியை சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் இதற்கு முன் பாஜகவை ஆதரித்ததேயில்லையா?
அல்லது அதிமுகவுக்கு தூது விட்டதேயில்லையா?

இவர்கள் சார்ந்திருக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் கூட போயஸ் தோட்டத்தில் காவல் கிடந்ததும், அம்மையார் இவர்களை மதிக்காததால் பின் வெளியேறி சுயமரியாதை பீறிட்ட வரலாறுகள் நமக்கு தெரிதாதா?

இந்தியாவில் எந்த கட்சியும் பாஜக பக்கம் செல்லாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது என்பதே உண்மை.
இவர்கள் வக்காலத்து வாங்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை குறித்து கூட அந்த உத்திரவாதம் கிடையாது.

சம்மந்தப்பட்ட கேள்விக்கு பிறந்தவர், தனிப்பட்டமுறையில் எனக்கு அனுப்பிய கேள்விகளை பொதுவில் வைத்துக் கேட்கட்டும் பார்க்கலாம், அதை நாம் இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்.

இன்னும் சொல்லப்போனால், தற்போதைய அரசியல் சூழலில், இருக்கின்ற கட்சிகளிலேயே பாஜக பக்கம் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பது அதிமுகவுக்கு தான் என்பதே உண்மை !

தங்கள் சுய லாபத்திற்காக அரசியல் நடத்துபவர்களுக்கும், செவ்வாய்க் கிரகத்திலிருந்து நேற்று குதித்து வந்த அரைகுறைகளுக்கும் இது புரியாததில் வியப்பேதுமில்லை !

இட ஒதுக்கீடு - தமுமுக கடந்து வந்த பாதை


கடந்த 1998 ஆம் ஆண்டு : 
இந்த கூட்டத்தை வைத்து சுய இலாபம் அடைய மாட்டோம் என்று, இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்காக திரண்ட லட்சக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இன்று வரை கட்டிக்காத்து வருகின்றனர்.
தமுமுக அதை காற்றில் பறக்க விட்டது. அதற்கு இட ஒதுக்கீடு என்கிற சமூக நலனை விட, அரசியல் ஆதாயம் என்கிற சுய நலனே பிரதானமானது.

தவ்ஹீத் ஜமாஅத், அன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்கே முக்கியத்துவம் அளித்தது. இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக திரண்ட மக்களை காட்டி விலை பேசுவது பெரும் பாவம் என்பதில் உறுதியாய் நின்றது !

2006 :
ஒட்டு மொத்த தமிழகமும் கிடுகிடுங்கும் அளவிற்கு இட ஒதுக்கீடுக்காக மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்தி தங்களுக்கு சமுதாய நலன் மட்டுமே உயிர் மூச்சு என்பதை மீண்டும் பறைசாற்றியது தவ்ஹீத் ஜமாஅத்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காரணத்தால் போராட்டம் நடத்தி அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற சுய நலனை கருத்தில் கொண்டு
மாநிலத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரமே இல்லை என்று நா கூசாமல் புளுகியது தமுமுக.

இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்தார் என்கிற ஒரே பொது நலனை மைய்யப்படுத்தி அந்த வருட சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அத்தனை வருடங்கள் கூட்டணியில் இருந்து, அது நாள் வரை இட ஒதுக்கீட்டுக்காக எந்த துரும்பையும் கலைஞர் நகர்த்தவேயில்லை என்று அப்பட்டமாக தெரிந்தும் கூட, வாரியப்பதவி, ஆளுனர் பதவி, தூதர் பதவி என அற்ப ஆசைகளுக்காக அந்த தேர்தலிலும் திமுகவிற்கே தமுமுக ஆதரவு தெரிவித்தது.

2007 :
மக்கள் எழுச்சியை கண்டு திமுக அரசு இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினாலும், தரப்பட்ட 3.5% கூட முறையாக முஸ்லிம்களுக்கு சென்று சேரவில்லை என்கிற குறையை சமூக நலனுடன் பல முறை தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சியிலுள்ளவர்களுக்கு எடுத்து சொன்னது. அதற்காகவும் போராட்டங்கள் பல நடத்தியது.

இட ஒதுக்கீடு கிடைப்பதை விடவும் கலைஞரின் அரவணைப்பை பிரதானமாக கருதிய தமுமுகவோ, அது ரோஸ்டர் முறையில் தலைமுறை கடந்த பிறகு தான் கிடைக்கும் என்று பொய் கூறி திமுகவிற்கு அப்பட்டமாக அடிமை சாசனம் எழுதினர், சமுதாயத்தை காவு கொடுத்தனர்.

2009 :
எத்தனையோ கோப தாபங்கள் இருந்த போதும், நம் சமூகத்திற்காக இட ஒதுக்கீடு தந்தார் என்பதற்காக, கலைஞருக்கு நன்றி செலுத்தும் முகமாய் 2009 தேர்தலில் எந்த பிரதிபலனுமின்றி திமுகவை ஆதரித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்ற இட ஒதுக்கீடு குறித்த அக்கறையில்லாத தமுமுகவினரோ அந்த நன்றியை மறந்து, எந்த சமுதாயக் காரணமுமின்றி (தங்களுக்கு அதிக சீட் தருவார் என்பதற்காக) அதிமுகவை ஆதரித்து, தங்களது பச்சோந்தித்தனத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டினர்.

2011 :
சட்டமன்ற தேர்தலில், ஏற்கனவே அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கையுடன் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத், இரு திராவிட கட்சிகளையும் சம தூரத்தில் வைத்து, தங்கள் கோரிக்கைக்கு யார் செவி சாய்க்கிறார்கள் என பார்த்தது.

இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது பற்றி தேர்தல் அறிக்கையில் கூட ஜெயலலிதா வாய் திறக்காத நிலையில், கலைஞரோ அதை தமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அதிமுகவை விட திமுக தான் சமூகத்திற்கு சிறிதேனும் நன்மை செய்யும் என்கிற அன்றைய நிலையில், அந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து தாங்கள் என்றைக்கும் சமுதாய நலனிற்காக முடிவு செய்யக்கூடியவர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது தவ்ஹீத் ஜமாஅத்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் சாதி ஓட்டுக்கள் கிடைக்காது என்று ஜெயலலிதா கூறியும் கூட அதை பொருட்படுத்தாமல் தங்களது சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் ஆசைப்பட்டு, ஆதரிப்பதற்கு எந்த நியாயமுமில்லாத போதும், அதிமுகவை ஆதரித்து தாங்கள் சுய நலவாதிகள் தான் என்பதை மீண்டும் நிரூபித்தது தமுமுக.

2014 :
ஏற்கனவே அமலிலிருக்கும் இட ஒதுக்கீட்டை இந்த முறையாவது எவரேனும் உயர்த்தி தருவார்களா? என்கிற எதிர்பார்ப்பில் தவ்ஹீத் ஜமாஅத், தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் வரை காத்திருந்தது. அதிமுக அரசு கடந்த 2006 இல் செய்தது போல் இட ஒதுக்கீட்டுக்காக ஆணையம் அமைத்ததை அடுத்து, அதிமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அதே சமயம், இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படுமா அதிகரிக்கப்படாதா? யார் அதிகரித்து தருவார்? யார் ஏமாற்றுவார்? என்கிற சிந்தனை துளியும் இல்லாத தமுமுகவோ, தங்களுக்கு ஒரு சீட்டையாவது யார் தருவார் என்பதை அடிப்படையாக கொண்டு பேரம் நடத்தியது. அதிமுக ஒன்றை கூட தராது என்று முடிவானதும், உடனே சென்று கலைஞருக்கு ஆதரவு என்று திமுக பக்கம் சாய்ந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக, தவ்ஹீத் ஜமாஅத், இந்த சமுதாய நலனை மட்டுமே மைய்யப்படுத்தி செயலாற்றி வந்ததையும், தமுமுகவோ, ஒரு முறை கூட, ஒரே ஒரு முறை கூட இட ஒதுக்கீடு என்கிற சமுதாயக் கோரிக்கையை மைய்யப்படுத்தி தங்களது அரசியல் நிலைபாட்டினை அமைத்துக் கொண்டதேயில்லை என்பதையும் வரலாறு தெளிவாக பேசிக் கொண்டிருக்கிறது !

மனித நேயம், மக்கள் உரிமை என்பதெல்லாம் சுத்த பேத்தல் என மக்கள் விளங்கி பல வருடங்கள் ஆகி விட்டன !

இது போன்ற சமுதாயத்தின் துரோகிகளை இனம் கண்டு அவர்களை வேரோடு வீழ்த்த இந்த சமுதாயம் தயாராக வேண்டும் !!