வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : மெட்ராஸ் கபே
சர்ச்சைக்குரிய எந்த திரைப்படமானாலும், அது எந்த மதத்தையோ இனத்தையோ புண்படுத்தும் என்றாலும் அத்தகைய திரைப்படங்களை தடை செய்யத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இருப்பினும், விஸ்வரூபம் என்கிற பெயரில் முஸ்லிம்கள் மீது வரம்பு மீறியதை கருத்தில் கொண்டு, மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் விரும்ப தேவையில்லை.

எனது மதத்தை புண்படுத்திய போது சிரித்துகொண்டிருந்தவர்களுக்காக நான் இப்போது குரல் கொடுக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இஸ்லாமிய அடிப்படையிலும் இல்லை, தார்மீக ரீதியாகவும் அதை எவரும் எதிர்பார்க்க முடியாது.

இன்னும், விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் தான் என்பதே முஸ்லிம்களின் உறுதியான கருத்து எனும்போது அதை சித்தரித்து திரைப்படமாக வெளியிடுவதில் தனிப்பட்ட முறையில் நமக்கு எந்த வஞ்சமும் இல்லை.

பொய்களையும் புரட்டுகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமலஹாசனின் படம் அனுமதிக்கப்படும் இந்த நாட்டில், உண்மைகள் படமாவதில் எந்த தவறுமில்லை.

இது இயக்கம் சாராத எனது தனிப்பட்ட கருத்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக