வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : சீசன் வியாபாரிகள்


வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்களின் போது கடை விரித்தால் வியாபாரம் போணி ஆகும் என்று மிட்டாய்க்கடைகாரர் எண்ணுவது போல், 

ஹிஜ்ரா கமிட்டி என்கிற பெயரில் பிறை வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், ஒவ்வொரு வருடமும் ரமலானுக்கும் துல் ஹஜ்ஜுக்குமிடையே தங்கள் "கடையை" விரித்து வாடிக்கையாளர்களை கவர முடியுமா என்று முயற்சி செய்து வருவது வழமையாகி வருகிறது.

தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம், இவர்கள் கருதுவது போல் சிந்திக்காத கூட்டமாக இருந்திருந்தால் இவர்களது "வியாபாரமும்" போணி ஆகியிருக்கும் தான். 

ஆனால்,எந்த மார்க்க மசாயில்களையும் சுய சிந்தனை செய்து, ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு, உள்ளச்சத்துடன் பின்பற்றுகின்ற சமூகமாக இந்த சமூகம் மாறி விட்ட பிறகு, இது போன்ற "பகட்டு" வியாபாரங்களுக்கு முகவரியில்லாமல் போனது !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக