வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சிக்கனத்தை பற்றி யார் யாரிடம் பேசுவது ?எங்கே பயணம் சென்றாலும் முன்னால் எட்டு கார், பின்னால் பத்து கார் புடை சூழ்கிறது,
ஆடம்பர பங்களா, நீச்சல் குளம், இலவச முதல் வகுப்பு ரயில் பயணம், இலவச விமான பயணம், என சொகுசுக்கு மேல் சொகுசு..

இப்படி மக்கள் வரிப்பணத்தில் ஆட்டம் போடும் இந்திய அரசியல்வாதிகள், நடுத்தர வர்க்கத்தினரை நோக்கி சிக்கனத்தையும் இந்திய பணவீக்கத்தையும் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.

இந்த சுகங்களை அனுபவிக்கும் இவர்கள், பாராளுமன்றத்தில் வந்து தூங்கினாலும் கூட அன்றைக்கான அலவன்ஸ் கிடைத்து விடும்.
எங்கள் நடுத்தர வர்க்கம் ஒரு நாள் பணிக்கு செல்லவில்லை என்றால் அவன் வீட்டில் அன்றைக்கு அடுப்பெரியாது !

சிக்கனத்தை பற்றி யார் யாரிடம் பேசுவது ?

எம்பி பேட்டா எம்எல்ஏ பேட்டா, அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், என எங்கள் பணத்தில் இவர்கள் அனுபவிக்கும் சொகுசுகளை நிறுத்த சொல்லுங்கள், இந்திய பண மதிப்பு உயரும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக