வெள்ளி, 13 செப்டம்பர், 2013

போராட்டத்தை நடத்துவது யார்?நமது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்பது எப்படி முக்கியமோ அதை விட முக்கியம், அதை எப்படி நடத்த வேண்டும் என்பது.

சீட்டியடிப்பதும், வேட்டியை மடித்துக்கட்டி ஆட்டம் போடுவதும் கூட போராட்டங்களின் பகுதியாகி விட்ட இந்த காலத்தில், 
குவாட்டர் சாராயத்திற்கும் பிரயாணி பொட்டலத்திற்கும் கூட்டம் கூடும் இந்த காலத்தில், 
போராட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த இயலாமல், கல்லெறிகள், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் என வரம்பு மீறி நடத்தப்படும் போராட்டங்களுக்கு மத்தியில்,
ஜனநாயக முறையில், எவரது உரிமை, உடமைகளுக்கும் சேதாரமில்லாமல் தான் நாம் நமது கோரிக்கைகளை, எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்பது பலரும் சரிவர விளங்காத உண்மையாக ஆகி விட்டது.

இத்தகைய வரம்புகளை தாண்டாத, கொண்ட கொள்கையில் வீரியத்துடன் செயல்பட்டு, இறுதி வரை அதில் அணு அளவும் பின்வாங்காமல் செயலாற்றப்படும் போராட்டங்களே வெற்றி பெறும்.

அத்தகைய மார்க்க வரம்பை மீறா வண்ணம் செயல்படும் ஒரே இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழ்வதால் தான் மக்கள் சாரை சாரையாக இந்த இயக்கத்திற்கு அதரவு தெரிவிக்கிறார்கள்.

ஆக, இட ஒதிக்கீடு கோரிக்கைகாக அக்டோபர் 8 அன்று குழுமுங்கள் என்று சொல்வதுடன், அதை நடத்துவது யார் என்று சேர்த்து சொல்வதும் அவசியமே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக