வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஆடை சுதந்திரம்



ஒரு காலம் இருந்தது. பெண்கள் சேலை அணிவது கண்ணியமாகவும் அது முற்ப்போக்கு சமுதாயத்தின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வந்த காலம்.

பின், கீழ்ஜாதி பெண்கள் மேல் சட்டை (ஜேக்கட்) அணிவது மேல் குலத்தினரால் தடை செய்யப்பட்டது.

இதற்கு எதிராக பல போராட்டங்கள், பேனா முனைகள், பல சீர்த்திருத்தவாதிகள்..!

இன்றோ, எந்த பெண் சமுதாயம் அன்றைக்கு மேல் சட்டை அணிய தடை விதித்ததை எதிர்த்ததோ அந்த சமுதாயம் இன்று யாருடைய நிர்பந்தமுமின்றி மேல் ஆடையையும் கீழாடையையும் கழற்றி, இது எங்கள் சுதந்திரம் என்கிறது !

இந்த சுதந்திரத்தை தானே அன்றைய உயர் ஜாதி இவர்களுக்கு அளித்தது? அப்போது பெண் அடக்குமுறையாக தென்பட்ட அந்த செயலானது இன்று எவருடைய திணிப்புமின்றி சுயமாக செய்யப்படும் நிலையை அடைந்ததால் அது பெண்ணுரிமை என்றும் சுதந்திரம் என்றும் முற்ப்போக்கு கலாச்சாரம் என்றும் வாய் கிழிய புகழப்படுகிறது !

நாளை இதே "முற்ப்போக்குத்தனம்" முற்றிப் போய் பெண்கள் ஆடை அணியவும் செய்யலாம், ஆடையின்றி நிர்வாணமாகவும் திரியலாம் என்கிற நிலை வரும்முன் இந்த சமுதாயம் விழித்துக் கொள்வது நல்லது.

இல்லையெனில், அதுவும் பெண்ணுரிமை தான் என்று பேசுவதற்கு மாதர் சங்கங்களும், பெண்கள் அவர்கள் விரும்பியவாறு வாழும் உரிமையை சமூகம் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஊடக புகழ் விரும்பிகளும் மேசை தட்ட துவங்கி விடுவார்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக