வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பிரசாரத்தை வலுப்படுத்துவோம்



பிஜேபியை எதிர்ப்பது முஸ்லிம்களின் நிலையாக இது நாள் வரை இருந்தது, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில், அது நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒட்டு மொத்த இந்திய குடிமகன்களின் நிலையாக மாறி விடும்.

மத துவேஷம் கொண்ட ஒருவர், மிகக்கொடிய இன அழிவுக்கு மூலமாக செயல்பட்ட ஒருவர் நாட்டு பிரதமராவது என்பது, இந்தியாவிலுள்ள எந்த மதத்தினருக்கும் ஆரோக்கியமானதல்ல என்பதை நடுநிலை மதவாதிகள் புரிந்துள்ளனர். 

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை பொறுத்தவரை, எந்த நிலையிலும் ஜனநாயக ரீதியில் தங்கள் எதிர்ப்புகளை காட்டிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதே சமயம், எந்த தேர்தலிலும் பாஜக / சங் பரிவார கும்பல் தலை தூக்கி விடக்கூடாது என்று எப்போதும் நாம் காட்டும் வீரியம், இம்முறை இரு மடங்காக, மும்மடங்காக அதிகரிக்க வேண்டும்.

சங்பரிவார கும்பல் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது எப்படி முக்கியமோ அதை விட, மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது முக்கியம்.

இம்முறை இஸ்லாமியர்களின் தேர்தல் பிரசாரம் வீரியமாகவும், விவேகமாகவும் இருத்தல் வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு நானும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை கொள்ளும் தமிழ் இஸ்லாமிய இயக்கங்கள், இம்முறையாவது ஒற்றுமையாகவும், நியாயத்தின் பக்கமும் அணி திரள வேண்டும்.

தேர்தலில் போட்டியிடாத தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கின்ற மாபெரும் ஜனசக்தியை கொண்ட இயக்கம் அல்லாஹ்வின் பேருதவியால் தமிழகம் மற்றும் புதுவை கொண்டுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது. 

உளவுத்துறை இதை சரியான முறையில் ஆளும் வர்கத்தினர் காதுகளுக்கு எடுத்து சென்று, ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம்களின் ஆதரவை தக்க வைக்க என்ன செய்வது என்று மட்டுமே ஆளும் வர்கத்தினர் சிந்திக்கும் படி ஏவட்டும், 
வெற்றி அவர்களை வந்தடையும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக