வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஜாக்கின் சிக்கன திருமண குழப்பம் !




மண்டபத்தில் திருமணம் நடத்துவது ஆடம்பரம் என்றால் திருமணம், வலிமா என எதையும் மண்டபத்தில் நடத்தக்கூடாது.
மண்டபத்தில் திருமணம் நடத்தப்படுவதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்த காலத்தில் திருமணம், வலிமா என இரண்டையும் தான் ஆதரித்தது.

மண்டபம் என்பது ஆடம்பர செலவு என்று முடிவு செய்த பிறகு திருமணம், வலிமா என இரண்டில் எதை மண்டபத்தில் செய்தாலும் அது ஆடம்பரம் தான். இவ்வாறே தவ்ஹீத் ஜமாஅத் கூறி வருகிறது.

இரண்டில் எது சரி என்கிற விளக்கத்திற்கு நான் வரவில்லை, இரண்டில் எதை செய்தாலும் ஒரு அடிப்படையில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறது என்று தான் ஆகும்.

ஆனால், நாங்களும் தவ்ஹீத் சொல்கிறோம் என்று கூறுகிற ஒரு ஜமாஅத்தின் உலக அமீர், கடந்த வாரம் ஒரு விளக்கம் தந்திருந்தார்.

பள்ளிவாசலில் நடந்த திருமணம் ஒன்றை சிலாகித்து, திருமணம் என்றால் இப்படி தான் பள்ளிவாசலில் எளிமையாக நடத்தப்பட வேண்டும், அறியாமையால் பலர் மண்டபத்தில் திருமணம் செய்கின்றனர், இவர்களிடம் நாம் தாவா செய்து, திருமணத்தை எளிமையாக செய்வதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும், அடிக்க அடிக்க அம்மியும் நகரும், எறும்பூர கல்லும் தேயும் என்றெல்லாம் மிகவும் அழகாக பயான் செய்தார். - உண்மையில் அழகிய கருத்து தான்.

ஆனால், தொடர்ந்து பேசிய திருமண ஒருங்கிணைப்பாளர், இப்போது அருகிலிருக்கும் மண்டபத்தில் வலிமா நடைபெறும் என்று அறிவிக்கிறார் !!

இது முரண்பாடா இல்லையா என்பதே எமது கேள்வி.

திருமணம் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு பள்ளிவாசல் தான் அளவுகோல் என்றால், பள்ளிவாசலிலேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பள்ளிவாசலில் நிக்காஹ் முடிந்து அங்கேயே வலிமாவும் கொடுக்கப்பட்டிருந்தால், மண்டபத்தில் நடத்துவது எளிமை இல்லை, பள்ளிவாசலில் நடத்துவது தான் எளிமை என்கிற உலக அமீரின் வாதத்தில் நியாயமிருக்கும்.

பள்ளிவாசலில் திருமணம் முடிந்து, பின் மண்டபம் வாடகைக்கு பிடித்து வலிமா கொடுத்தோம் என்றால் இவரது பார்வையில் எளிமை எங்கே ? என்று புரியவில்லை. மண்டபத்தை எடுப்பவர்கள் வலிமாவுக்கு என்று தனி வாடகை ,நிக்காஹ் என்றால் கூடுதல் வாடகை என்று கொடுக்க வேண்டியுள்ளதா? இல்லையே !

இவர் பார்வையில் மண்டபத்தில் பெண் வீட்டு விருந்து கொடுப்பது தவறில்லை, திருமண செலவுகளை பெண் வீட்டார் செய்வதில் தவறில்லை, நிக்காஹ்வை மண்டபத்தில் நடத்துவது தான் தவறு..!!

பழுத்த மார்க்க அறிஞர், இந்த அளவிற்கு மேம்போக்கான, குழப்பமான வகையில் மார்க்க பிரசாரம் செய்வது வியப்பை தருகிறது. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக