ஞாயிறு, 19 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 29)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 29
                                                                      (நிறைவு பாகம்)



வரட்டு வாதங்களும் தக்க பதில்களும் :

இதுவரை நாம் எழுப்பிய எந்த வாதங்களுக்கும் ஆக்கப்பூர்வமான சான்றுகளை முன்வைத்து பதிலளிக்க இயலாதவர்கள், வெறுமனே தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களை கேலிச்சித்தரம் வரைந்தும், அசிங்கமான கார்டூன்கள் வரைந்தும் தங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.
இவர்கள் இது போன்ற இழி செயல்களில் ஈடுபடுவதிலிருந்து ஒரு விஷயம் உறுதியாகின்றது.
நாம் முன்வைத்த எந்த வாதத்திற்கும் இவர்களிடம் பதில் இல்லை.
நாம் வைத்த வாதங்கள் தவறாக இருந்து, அவைகளுக்கு இவர்களிடம் தக்க மறுப்புகள் இருந்திருக்குமேயானால், அதை வெளியிட்டு நம்மை பொய்யர்களாக்கியிருப்பார்கள்.
ஆனால், அவர்கள் வழிகேட்டில் இருப்பதால் நமக்கு எந்த மறுப்பையும் சொல்ல இயலவில்லை.
வழிகேட்டில் இருப்பவர்களுக்கு எந்த ஆதாரமும் இருக்காது என்று குர் ஆன் கூறுகின்ற உண்மைக்கு சான்றாக இவர்கள் திகழ்கின்றனர்.

சில உப்புச்சப்பில்லாத வாதங்களை தான் இவர்கள் நமக்கெதிராக முன்வைப்பார்கள்.
அவை என்னென்ன காரணங்களினால் தவறு என்பதை இங்கே ஒவ்வொன்றாக காணலாம்.



1. முரணில்லாததையும் முரண் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்களே !

முதலில், அறிஞர்கள் பல குர் ஆனுக்கு முரண் என்று கூறி ஹதீஸ்களை மறுத்திருக்கிறார்கள் என்பதை முந்தைய தலைப்பில் தொடர்ச்சியாக நாம் சான்றுகளுடன் முன்வைத்தோம்.
அதற்கு தக்க முறையில் எந்த பதிலையும் சொல்ல இயலாத இந்த சலஃபுகள், பலகீனமான ஹதீஸையும், குர் ஆனுக்கு முரணில்லாததை முரண் என்று தவறாக அந்த அறிஞர்கள் புரிந்த ஹதீஸ்களையும் தான் நாம் முன்வைத்தோம் என்று விமர்சிக்கின்றனர்.

எல்லா ஹதீஸ்களும் அப்படியில்லை என்ற போதிலும், ஒரு சில ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அந்த அறிஞர்கள் தான் தவறாக புரிந்தார்களே தவிர, உண்மையில் அவை குர் ஆனுக்கு முரணில்லை என்பது உண்மை தான்.
ஆனால், நாம் அவற்றை சுட்டிக்காட்டியதன் நோக்கம், அறிஞர்கள் கொண்டிருந்த அடிப்படை கொள்கையை காட்டுவதற்கு தான்.

முரணில்லாததை முரண் என்று அவர்கள் தவறாக சில ஹதீஸ்களைப் பற்றி எண்ணியிருந்தாலும் அடிப்படையில், குர் ஆனோடு உரசிப் பார்த்து தான் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்பதே அவர்களது அடிப்படை கொள்கையாக இருந்தது.
அதனால் தான் இத்தகைய பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

அதை சுட்டிக்காட்டுவதே நமது நோக்கம்.
அந்த அடிப்படையில், அவற்றை நாம் இங்கு ஆதாரமாக காட்டியதில் தவறில்லை.
வைத்த வாதங்களுக்கு தக்க முறையில் பதிலை சொல்லி, இப்படி அந்த அறிஞர் குர் ஆனோடு உரசிப்பார்க்கவில்லை, அப்படி அவர் எந்த ஹதீஸையும் மறுக்கவில்லை என்று வாதம் வைத்து நமக்கு மறுப்பு சொல்ல இயலாதவர்கள், இது போன்ற அர்த்தமற்ற பதில்களையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.



இரு சஹாபாக்களின் சாட்சியம் :

ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக பரப்பப்ப‌ட்ட அவதூறு செய்திக்காக தண்டனை அனுபவித்தவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, அவர்களது சாட்சியத்தை ஒரு போதும் ஏற்கக் கூடாது என்று சொல்கிறான் (24:4).
ஆனால், அதை தொடர்ந்து வரக்கூடிய வசனத்தில், அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு செய்தாலே தவிர.. என்று அல்லாஹ் சொல்கிறான்.
அப்படியானால் அவர்கள் தவ்பா செய்து விட்டால் அவர்கள் சாட்சியத்தை ஏற்கலாம் தானே?

என்று ஒரு வாதம் வைக்கிறார்கள்.

இது மேலோட்டமாக பார்க்கும் போது சரியான வாதமாக தெரிந்தாலும், அந்த வசனத்தை ஆழமாக இவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

24:4 வசனத்தில் அல்லாஹ் மூன்று செய்திகளை சொல்கிறான்.
1. அவர்களுக்கு 80 கசையடி கொடுங்கள்.
2. அவர்களது சாட்சியத்தை ஒரு போதும் ஏற்காதீர்கள்.
3. அவர்கள் மறுமையில் பாவிகள்.

இந்த மூன்றையும் சொல்லி விட்டுத் தான் "அவர்கள் பாவமன்னிப்பு கேட்டாலே தவிர" என்கிறான்.

அப்படியானால், இந்த மூன்றில் எதைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்?

அவர்களுக்கு 80 கசையடி கொடுங்கள், அவர்கள் பாவமன்னிப்பு கேட்டாலே தவிர.. என்பது அதன் அர்த்தமாக இருக்க முடியுமா?
நிச்சயம் முடியாது.
குற்றம் புரிந்தவர்கள் அனைவருமே தண்டனையென்று வரும் போது மனம் திருந்தி விட்டேன் என்று சொல்லத் தான் செய்வார்கள்.
அப்படியானால் எந்த குற்றவாளிக்கும் தண்டனையே கொடுக்க இயலாது.
ஆக, இதை அல்லாஹ் சொல்லவில்லை.

அவர்களது சாட்சியத்தை ஏற்காதீர்கள், அவர்கள் பாவமன்னிப்பு கேட்டாலே தவிர என்பதும் பொருத்தமற்றது.

ஏனெனில், "அபதா" ‍ ஒரு போதும் ஏற்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

இறுதியாக, மறுமையில் பாவிகளாக ஆவார்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே, அதற்கு மட்டும் தான் இது பொருத்தமாக இருக்கும்.
இறுதியில் சொல்லப்படுவது இது தான், இதைத் தொடர்ந்து தான் அவர்கள் பாவமன்னிப்பு கேட்டாலே தவிர என்று அல்லாஹ் சொல்கிறான் எனும் போது,
இவ்வுலகில் தவறுகள் செய்பவர் அதற்கான தண்டனையை இவ்வுலகில் பெற்று விட்டால், தவ்பாவும் செய்து விட்டால் மறுமையில் அவர் அல்லாஹ்விடம் பாவியாக மாட்டார்.
இது அனைத்திற்கும் பொதுவான இஸ்லாமிய விதி தான்.
அதை தான் இந்த வசனம் சொல்கிறதே தவிர, பாவி என்கிற குறிப்புக்கு முன்னர் அல்லாஹ் சொல்கிற சாட்சியத்தைப் பற்றி இது சொல்லவில்லை.
சாட்சியத்தை தான் சொல்கிறது என்று இவர்கள் சொன்னால், அதற்கும் முன்னர் வரக்கூடிய 80 கசையடியையும் சேர்த்து தான் இது சொல்கிறது என்று நாமும் சொல்வோமே.
ஆக, இந்த வாதம் சரியில்லை என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.




தவ்ஹீத் ஜமாஅத் அறிவுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறது :

அறிவுக்கு முன்னுரிமை கொடுத்து தான் ஹதீஸ்களை மறுக்கிறோம் என்று ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
இதுவும் அடிப்படையற்ற விமர்சனம் தான்.

அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்கத் தான் வேண்டும்.
அறிவை பயன்படுத்தாமல் அப்படியே நம்ப வேண்டிய விஷயங்களை அப்படியே நம்ப வேண்டும்.
இரண்டும் தான் இஸ்லாம் சொல்கின்றது.

மறுமை, மலக்குமார்கள், ஜின்கள், சொர்க்கம், நரகம் இது போன்ற காரியங்களைப் பற்றி அறிவைக் கொண்டா நம்புகிறோம்?
அல்லாஹ் சொல்லி விட்டான், நம்பி விட்டோம்.
நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எதற்கும் நாம் அறிவைப் பயன்படுத்தி கேள்வியெழுப்புவதோ மறுப்பதோ கிடையாது.

அதே சமயம், நடைமுறையில் நாம் காணக்கூடிய விஷயங்கள், உலக விஷயங்கள், பார்த்தோ, கேட்டோ, உணர்ந்தோ நிரூபணமாகக் கூடிய விஷயங்களைப் பொறுத்தவரை அறிவை தான் பயன்படுத்த வேண்டும்.

அஜ்வாவுக்கு இந்த அற்புதத் தன்மை இருக்கிறது என்று சொன்னால், இது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல.
இது உலகக் காரியம். நடைமுறையில் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்கிற விஷயம். அப்படிப்பட்டவற்றை பரிசோதித்து தான் நம்ப முடியும்.
கத்திரிக்காய் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்படியானால், கத்திரிக்காய் என்பது இன்றைக்கும் கிடைக்கின்ற ஒரு பொருள். ஒரு பொருளுக்கு இன்ன அற்புதம் இருக்கிறது என்று இஸ்லாத்தின் பெயரால் சொன்னால் அதை எப்படி வெறுமனே நம்பிக்கை சார்ந்த விஷயமாக எடுப்பது?
அதை ஒரு காஃபிர் எப்படி அணுகுவார்?
கத்திரிக்காயில் இன்ன குணம் இருக்கிறது என்கிறாய். பரிசோதித்தால் அது இல்லை, அப்போது இஸ்லாமே பொய் என்று அவன் கருத மாட்டானா?
அதே சமயம், நரகம் அல்லாஹ்விடம் பேசியது என்று ஒரு ஹதிஸில் வருவதைப் பற்றி நாம் சொல்கிறோம்.
இது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல.
நரகம் என்பது மறைவானது.
படைத்த இறைவன் சொல்லி விட்டான், அதனால் அதை நம்புகிறோம்.
அதே இறைவன், அந்த நரகம் பேசும் என்கிறான், அப்படியானால் அது பேசும், அல்லாஹ் நாடினால் எதையும் செய்வான்.
இப்படி புரிவது தான் சரியானதே தவிர, அறிவையே பயன்படுத்தமல் கூமுட்டைகளாக இருக்கவா இஸ்லாம் சொல்கிறது?

சிந்தியுங்கள், சிந்தியுங்கள், ஏன் சிந்திக்காமல் இருக்கிறீர்கள்?,ம் உங்கள் மூளையில் பூட்டா போடப்பட்டிருக்கிறது?
என்றெல்லாம் அல்லாஹ் குர் ஆனில் பல இடங்களில் சொல்கிறானே, அவையெல்லாம் எதற்காக?

எனவே, இது போன்ற வாதங்கள் அபத்தமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்திக்கத் தான் வேண்டும்.
அறிவைப் பயன்படுத்தாமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களில் அப்படியே நம்பி விட வேண்டும்.




எல்லாரும் ஒப்புக்கொண்ட ஹதீஸ்களை நீங்கள் மறுக்கலாமாஅப்படி மறுப்பது எப்படி சரியாக இருக்கும்?


இதுவரை யாரும் மறுக்காதவற்றை இன்று நாமும் மறுக்கக் கூடாது என்கிற வாதம்சரியென்றால்இதுவரை சில ஹதீஸ்களை சில அறிஞர்கள் மறுத்திருக்கிறார்களே,அவர்களெல்லாம் என்ன நபி (சல்அவர்களின் காலத்தில் வாந்தவர்களா?
அவர்களும் ஹிஜ்ரி 500 இலும் ஹிஜ்ரி 700 இலும் வாழ்ந்தவர்கள் தானே?
அப்படியானால்முதன் முதலாக அவர்கள் மறுத்த போது அதற்கு முன் எவரும்மறுக்கவில்லை தானே?
அதை காரணம் காட்டிஅந்த அறிஞர்களும் தவறாக சொல்கிறார்கள் என்று தான் இவர்கள்குற்றம்சாட்டுவார்களா?

இப்னு கய்யும் எத்தனையோ ஹதீஸ்களை மறுக்கிறார்.
இமாம் இஸ்மாயிலிஇப்ராஹிம் நபியின் தந்தை நரகத்திற்கு செல்வது தொடர்பான ஹதீஸைமறுக்கிறார்.
இப்னு தைமியா அவர்கள் 7 நாட்களில் உலகம் படைக்கப்பட்டது என்கிற ஹதீஸை மறுக்கிறார்.
இதையெல்லாம் அவர்கள் மறுக்கும் போது அவர்களுக்கு முன் எவருமே மறுக்கவில்லை தான்.

இதுவா வாதம்?


இப்படியெல்லாம் மடமையாக வாதம் புரிந்தால் நபிக்கு பிறகு எவருமே வாய் திறக்கக் கூடாதுஎன்று சொல்ல வேண்டும்.

யார் என்ன கருத்தை சொன்னாலும்இதற்கு முன் யாரும் சொல்லவில்லையே என்றுஅப்போதும் கேள்வி எழத்தான் செய்யும்.

மறுப்பதற்கு முகாந்திரம் இருந்தால் அன்றைக்கும் மறுப்பார்கள்இன்றைக்கும் மறுக்கலாம்,நாளை வரக்கூடிய அறிஞர்களும் கூட இன்று நாம் அங்கீகரித்த ஹதீஸ்களை கூடமறுப்பார்கள்.

அடிப்படை சரியா என்று தான் நாம் பார்க்க வேண்டுமேயல்லாமல்இதை இதற்கு முன் யாரும்சொல்லவில்லையேஇது வரை இந்த கொல்கையே எவருமே கொண்டிருக்கவில்லையே,நீங்கள் தானே புதிதாக சொல்கிறீர்கள்என்பதெல்லாம் அர்த்தமற்ற வாதங்கள்.




நபிக்கு மன நோய் எதுவும் இல்லைசாதாரணமாக நமக்கெல்லாம் வருகின்றது போன்றநினைவாற்றல் குறைவு தான்.

இப்படியொரு கருத்தை பரவலாக நாம் காண்கிறோம்.
இது தவறான வியாக்கானம்ஹதீஸை நியாயப்படுத்துவதற்காக எந்த நிலைக்கும்செல்வார்கள் இவர்கள்.
நினைவாற்றல் குறைவு தான் அவர்களுக்கு ஏற்பட்டது என்றால் அதை செய்வதற்கு ஏன்சூனியம் தேவை?
எல்லா மனிதர்களுக்கும் வருவது போன்று சாதாரணமாக அவருக்கும் வந்து விடுமேஅதைஉருவாக்க ஒரு யூதன் புறப்பட்டுஅதற்கென சீப்புமுடி எல்லாம் எடுத்துசூனியம் செய்யவேண்டுமா?
அது போகநினைவாற்றல் பிரச்சனை என்றால் ஒரு விஷயம் தொடர்பாக ஒரு முறை வந்தால்அது நினைவாற்றல் பிரச்சனை.
அதுவே தொடர்ச்சியாக நீடித்தது என்றால் அது எப்படி நினைவாற்றல் பிரச்சனை?

இன்று காலை சாப்பிட்டேனா இல்லையா என்பதை ஒருவர் மறந்து விட்டால் அது ஞாபக மறதி.
ஒவ்வொரு நாளும்காலை வேளையில் தாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அவர் மறந்துகொண்டேயிருந்தால் அவருக்கு ஒரு வித மன நோய் இருப்பதாக தான் பொருள்.

மனைவியுடன் சேராமல் சேர்ந்ததாக நபி (சல்அவர்களுக்கு ஒரு முறை தோன்றியது என்றுஹதீஸில் இல்லை.
மாறாகஅப்படியான நிலையே நீடித்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

"மக்கத்த" : நீடித்தது, "கான" : தொடர்ந்து இருந்து கொண்டேயிருந்தது.

என்று ஹதீஸில் வரக்கூடிய வாசகங்கள் வெறும் நினைவாற்றல் பிரச்சனை என்று அடிப்படைஅறிவுள்ள எவருமே ஒப்புக் கொள்ளாத ஒன்று.

அது போகஇந்த பிரச்சனை என்பது குளிப்பு கடமை என்கிற மார்க்க சட்டத்தோடுதொடர்புடையதுமார்க்க விஷயத்தில் இந்த அளவிற்கு பொடுபோக்காகஅல்லது அது பற்றியஅக்கறையின்றி பல காலம் அவர்கள் நீடித்தார்கள் என்றால் ஏற்க முடிகிறதா?

இதெல்லாம் போகஅல்லாஹ் திருமறையில் நபி (சல்அவர்களைப் பற்றி என்னசொல்கிறான்?
இவருக்கு எந்த விதமான பைத்தியமும் இல்லை என்கிறான்.
வெறுமனே பைத்தியம் இல்லை என்று மட்டும் சொல்லப்பட்டிருந்தாலாவதுஅது முத்திப்போன பைத்தியத்தை தான் அல்லாஹ் சொல்கிறான் என்பதாக இவர்கள் சால்ஜாப்பு கூறுவர்.
அல்லாஹ் இங்கு பயன்படுத்தும் வாசகம் "மின் ஜின்னத்தி": எந்த விதமான பைத்தியமும்இல்லை.
சாதாரண மனக்குழப்பம் முதல் முற்றிப் போன நோய் வரை எந்த வகையான பைத்தியமும்அவர்களுக்கு இல்லை எனும் போதுமனைவியுடன் போகாமல் போனதாக சொல்கின்றமனக்குழப்பமும் அவர்களுக்கு இல்லை !




உங்கள் அறிவுக்கு மாற்றமாக தெரிகிறதுஎங்கள் அறிவுக்கு மாற்றமாக தெரியவில்லை,அதனால் என்ன?
உங்கள் அறிவுக்கு சரியென்று படுவது தான் சத்தியம் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

இப்படியொரு கேள்வியை முன்வைக்கிறார்கள்இவர்கள் எந்த அளவிற்கு மார்க்கத்தில் ஞானசூனியங்களாக இருந்தால் இது போன்ற வாதத்தை வைப்பார்கள்?
இதே கேள்வியை மத்ஹபை பின்பற்றுகிற ஒருவன் இவர்களிடம் முன்வைத்தால் இவர்கள்அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
உங்கள் அறிவுக்கு மத்ஹப் கூடாது என்று படுகிறதுஎங்கள் அறிவுக்கு மத்ஹப் சரியென்றுபடுகிறதுஅதனால் என்ன??

என்று சொன்னால் சரியா?

தர்காவுக்கு செல்பவனும் இதையே சொல்வானே?
உங்கள் அறிவுக்கு தான் தர்காவுக்கு செல்லக் கூடாது என்று தெரிகிறதுஎங்கள் அறிவுக்குஅங்கே செல்லலாம் என்று தெரிகிறது.. என்பான்.

சரியாகி விடுமா?

உன் அறிவுக்கு சரியென்று தெரிந்தால் எப்படி தெரிகிறது என்பதை முதலில் விளக்குஅதைஆதாரங்களுடன் நிரூபிஎன்று இவர்கள் கேட்பார்களா இல்லையா?

இது தான் சத்தியம் என்பதற்கு என்ன உத்திரவாதம்என்று கேட்கிறார்கள்.
நாங்கள் கொண்டிருப்பது தான் சத்தியக் கொள்கை என்பதை நிரூபிக்கிறோம்நேரடிவிவாதத்திற்கு தயாராஎன்று நாம் அழைப்பு விடுக்கும் போது விவாதத்திற்கு முன்வராமல்ஓடி ஒளிகிறார்களேஅதுவே நாம் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதற்கான உத்திரவாதம்தான்.


நாங்கள் இணை வைக்கவில்லைஎல்லா அமல்களையும் சரிவர செய்கிறோம்புஹாரியில்இருக்கிறது என்பதற்காக தான் சூனியம் ஹதீஸை நம்புகிறோம்நாங்கள் வழிகேடர்களா?

என்று அப்பாவித்தனமாய் ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர்.

ஆம்அப்போதும் அது வழிகேடு தான்.
இதே வாதத்தை தர்காவுக்கு செல்பவனும் முன்வைப்பான்.

நாங்கள் என்ன சுயமாக முடிவு செய்தா தர்காவுக்கு செல்கிறோம்?
புஹாரியில்அவ்லியாவின் கையாக நான் மாறி விடுவேன்அவ்லியாவின் காலாக நான் மாறிவிடுவேன் என்று அல்லாஹ் சொல்வதாக வருகிறதுஅவ்லியா என்றால் அல்லாஹ் என்றுபுரிவதால் தான் நாங்களும் அவ்லியாக்களை வணங்குகிறோம் என்று அவன் சொன்னால்சரியாகி விடுமா?

இதுவெல்லாம் அர்த்தமுள்ள வாதமாக பார்க்கப்பட வேண்டுமென்றால்யாரும் யாரையும்எந்த விமர்சனமும் செய்யவே முடியாது.
ஒவ்வொரு வழிகேட்டுக் கொள்கையில் இருப்பவரும் தன்னளவில் ஏதேனும் ஒரு குர் ஆன்வசனத்தையோ ஹதீஸையோ தான் ஆதாரமாக காட்டிக் கொண்டிருப்பார்.

நீ எறியும் போது நீ எறியவில்லைமாறாக அல்லாஹ்வாகிய நான் தான் எறிந்தேன் என்றுஅல்லாஹ் நபி (சல்அவர்களிடம் சொல்வதாக வரக்கூடிய குர் ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி தான் தரீக்கா காரர்கள் நபி தான் அல்லாஹ்அல்லாஹ் தான் நபி என்று வியாக்கானம்கொடுக்கிறார்கள்.

கேட்டால்குர் ஆனில் இருக்கிறது அதனால் தான் இப்படி நம்புகிறோம் என்று அவர்களும் தான்சொல்வார்கள்.

குர் ஆனில் இருப்பதை வைத்து தான் அவர் அந்த கொள்கையில் இருக்கிறார்எனவே நாம்குறை சொல்லக் கூடாது என்கிற முடிவை எடுத்தால் உலகில் தாவாவே செய்ய இயலாது,நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்கிற சித்தந்தத்திற்கே அர்த்தமில்லாமல் போய் விடும்.

அல்லாஹ்வின் வேத வசனங்களைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டாலும்குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் அதில் விழாதே என்பது தான் அல்லாஹ்வின்கட்டளை.

புஹாரியில் இருக்கின்றது என்பதற்காகவெல்லாம் ஒன்றை சரி கண்டு விடக் கூடாதுஇதைநபி (சல்அவர்கள் சொல்லியிருப்பார்களாகுர் ஆனின் மகிமைக்கும் நபியின்கண்ணியத்திற்கும் இது ஏற்புடையது தானா?
என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.



 அஜ்வாகருஞ்சீரகம் தொடர்பான ஹதிஸ்களை மறுக்கின்றீர்களேஅப்படியானால் குர் ஆன் வசனங்களை ஓதி ஊதினால் நிவாரணம் கிடைக்கும் என்பதாக வரக்கூடிய செய்திகளையும் மறுப்பீர்களா?
தேனில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கிறானேஎல்லா நோய்க்கும் அதைசோதித்துப் பார்த்து விட்டு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் மறுத்து விடுவீர்களா?

இப்படியொரு கேள்வி பரப்பப்படுகிறது.

அஜ்வாவுக்கு விஷம் முறிக்கும் ஆற்றல் உண்டு என்பதையோ கருஞ்சீரகத்தில் மரணத்தைத்தவிர அனைத்திற்கும் நிவாரணம் உண்டு என்பதையோ நாம் ஏற்பதாக இருந்தால் அதைசோதித்துப் பார்த்து நம்ப வேண்டும்ஏனெனில்ஒரு உணவுப் பொருளைக் குறிப்பிட்டு,இன்றைக்கும் நமக்கு கிடைக்கின்ற ஒரு பொருளைக் குறிப்பிட்டு இதற்கு இந்த ஆற்றல்இருக்கின்றது என்று சொல்லும் போது அந்த ஆற்றல் அதில் இருக்கிறதா இல்லையா என்பதைசோதனையில் அறிய முடிகின்ற ஒன்று.

குர் ஆன் வசனத்தை ஓதுவது இதே போன்றதாஅது நமது ஈமானைப் பொறுத்தது.
குர் ஆன் வசனத்தைக் கூட ஒரு காஃபிர் ஓதினால் நிவாரணம் கிடைக்குமா?
ஆகஇறை வசனத்தை ஓதினால் இந்த நிவாரணம் என்று சொல்லும் போதுஅது இறைவணக்கத்தோடு தொடர்புடையதுஅது ஒரு தொடுப் பொருள் இல்லைதொட்டுப் பார்த்தோரசாய கூடத்தில் சோதித்துப் பார்த்தோ அதன் தன்மையை உணர்வதற்கு.

குர் ஆன் வசனத்தை ஒருவன் ஒரு குவளை தண்ணீரில் ஓதி ஊதுகிறான்.
அதே போல்இன்னொரு குவளை தண்ணீரில் கெட்ட வார்த்தைகளைப் பேசி ஊதுகிறான்.
சோதித்துப் பார்த்தால் இரண்டு தண்ணீரும் ஒரே தன்மையை கொண்டதாக தான் இருக்குமேதவிரகுர் ஆன் ஊதப்பட்ட நீருக்கென்று எந்த பிர்த்தியேக சிறப்பும் இருக்காது.
இதுவெல்லாம் நம்பிக்கை சார்ந்தது.

அது போல் தேன் பற்றி கேட்கிறார்கள்அல்லாஹ் குர் ஆனில் தேனைப் பற்றி சொல்லும் போது,தேனில் ஒரு நிவாரணம் இருக்கின்றது என்று தான் சொல்கிறானே அல்லாமல்மரணத்தைத்தவிர அனைத்திற்கும் நிவாரணம் இருக்கிறது என்று கருஞ்சீரகம் பற்றி சொல்லப்படுவதைப்போல் எந்த வாசகத்தையும் அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

இந்த வேறுபாட்டினையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த பொருளாக இருந்தாலும்அதற்கென்று சில மருத்துவ குணங்கள் இருக்கத் தான் செய்யும்.
வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணம்அந்த நிவாரணத்தை தரும்.
தக்காளியில் இருக்கும் மருத்துவ குணம்அந்த வேலையை செய்யும்.
இதுவெல்லாம் இயற்கை தான்.
அதுவே வெங்காயத்தில் உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது என்றுசொன்னால் நம்புவோமா?
அதை சோதித்துப் பார்த்து தான் நம்புவோம்.

அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு என்று சொன்னால்அதை நபியின்பெயரால் சொன்னால்அதை செய்து காட்டி நிரூபிப்பது தான் நபியை மதிப்பவர்கள் செய்யவேண்டியது.
இவர்கள் உள்ளத்தால் நம்பாமல் வெறுமனே வாயளவில் நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நாமோ உள்ளத்தாலும் நம்பவில்லைவாயளவிலும் நம்பவில்லை என்று சொல்கிறோம்.

இது தான் வேறுபாடு !



நபியைப் பார்த்துஅவர் சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் சொன்னது போல்,எங்களைப் போல் மனிதர் தான் என்று சொல்லத் தான் செய்தனர்.
சூனியம் செய்யப்பட்டவர் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களென்றால் அவர் மனிதர் என்பதையும்மறுக்கிறீர்களா?

என்பதாக ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர்.

சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று காஃபிர்கள் சொல்வதைஅல்லாஹ் 17:47 வசனத்தில் சுட்டிக் காட்டிஇப்படி சொல்பவர்கள் அநியாயக்காரர்கள்என்கிறான்.
அதே போல்நபியும் எங்களைப் போல் மனிதர் தான் என்று அவர்கள் சொல்வதாகவும் ஃபுர்கான்அத்தியாயத்தில் 7, 8 வசனங்களில் சுட்டிக்காட்டுகிறான்.

இரண்டையும் நாம் மறுக்கிறோமேஎன்று கேட்டால்ஆம்இரண்டையும் தான் மறுக்கிறோம்.

சூனியம் செய்யப்பட்டவர் என்று அவர்கள் சொன்னதையும் மறுக்கிறோம்அது போல்இவரும்எங்களைப் போன்ற மனிதர் தான் என்பதாக அவர்கள் என்ன நோக்கத்திற்காக சொன்னார்களோஅந்த நோக்கத்திற்காக அதையும் மறுக்கிறோம்.

இவரும் மனிதர் தான் என்று என்ன நோக்கத்திற்காக சொன்னார்கள்நபி (சல்அவர்கள்அல்லாஹ்வின் தூதர் இல்லை என்று மறுப்பதற்காக சொன்னார்கள்.
நபி (சல்அவர்களின் தூதுத்துவத்தை மறுப்பதற்கு அவர்கள் முன்வைத்த வாதம் தான்அவரும்மனிதர் தான் என்பது.

அதே சமயம்நபி (சல்)அவர்களை நாமும் மனிதர் தான் என்கிறோம்ஆனால்அவர்கள் தூதர்இல்லை என்று நிலைனாட்டவா அப்படி சொல்கிறோம்?
இல்லை.
அவர்கள் அல்லாஹ் இல்லைஅவர்களுக்கு இறைத்தன்மை கிடையாதுஎன்கிற ஓரிறைக்கொள்கையை நிலை நாட்டவே நாம் அவர்களை மனிதர் என்கிறோம்.
மக்கத்து காஃபிர்களோஅவர் தூதர் இல்லை என்பதை நிலை நாட்ட அவர்களை மனிதர்என்றார்கள்.

நாம் நபியை மனிதர் என்று சொல்வது தவறில்லை,
அவர்கள் மனிதர் என்று சொல்வது தவறுஅநியாயம்.

இந்த வேறுபாட்டினை விளங்காமல் தான் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன‌.


சாலிம் பால்குடி சம்பவம் :

இதைப் பற்றி சற்று விளக்கமாகவே நாம் காணலாம்.

ஆரம்ப காலத்தில் வளர்ப்புப் பிள்ளையை தன் பிள்ளையாக கருதிக் கொள்ளலாம் என்கிறசட்டம் இஸ்லாத்தில் இருந்தது.
நபி (சல்அவர்கள் கூட சைத் (ரலிஅவர்களை தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி வந்தார்கள்.
ஆனால்அதன் பிறகு இந்த சட்டம் அல்லாஹ்வால் மாற்றப்பட்டது.
இனி முதல் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை அவர்களது தந்தையின் பெயரைக் கொண்டேஅழையுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அதன் பிறகுநபி (சல்அவர்களும் சைத் (ரலிஅவர்கள் தமது மகனாக கருதுவதை நிறுத்திக்கொண்டார்கள்.

அதே போன்றுஇந்த சட்டம் வருவதற்கு முன்னால் ஹுதைஃபா (ரலிஅவர்களும்அவர்களதுமனைவி சஹ்லா (ரலிஅவர்களும் சாலிம் என்பவரை வளஎர்ப்பு மகனாக வளர்த்து வந்தார்கள்.

எப்போது இந்த சட்டம் இறங்குகிறதோ அது முதல் சாலிமும் அவரது வளர்ப்புத்தாயானசஹ்லாவும் அன்னியர்களாகி விட்டனர்.

அந்த வகையில்சாலிம் அவர்கள் தாம் இல்லாத வேளைகளில் தமது வீட்டிற்குள் வந்து தன்மனைவி சஹ்லாவுடன் தனித்திருப்பதை ஹுதைஃபா அவர்கள் விரும்பவில்லை.

சஹ்லா அவர்களும் விரும்பவில்லை.
இதை தொடர்ந்துமார்க்க சட்டம் அறிவதற்காக நபி (சல்அவர்களிடம் சஹ்லா அவர்கள்செல்கிறார்கள்.
சாலிம் என் வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் வந்து செல்கிறார்என்ன செய்வதுஎன்றுஅவர் கேட்க,
நீ சாலிமுக்கு பால் கொடுஎனவே நீ அவருக்கு தாயாகி விடுவாய்அதன் பிறகுபிரச்சனையில்லை என்று நபி (சல்அவர்கள் சொன்னார்கள்.

இப்படியான ஒரு அப்பட்டமான ஆபாசத்தை ஹதீஸ் என்கிற பெயரில் எழுதி வைத்து நபிஇப்படி சொன்னதாக பொய்யுரைத்திருக்கிறார்கள்.

இப்படியொரு சம்பவமே நடக்கவில்லைஇப்படி நபி சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை.
அசிங்கத்தை நபி (சல்அவர்கள் ஏவ மாட்டார்கள்.

எந்த அளவிற்கு இது அசிங்கம் என்று நிரூபணமாகிறது என்று பார்க்கும் போது,

நபி இவ்வாறு சொன்ன போதுஅவர் பெரியவராக இருக்கிறாரேதாடி எல்லாம் வைத்தவராகஇருக்கிறாரேஆண்கள் அறிகின்ற மறைவான விஷயங்களை எல்லாம் அறிந்தவராகஇருக்கிறாரேஎன்றெல்லாம் சஹ்லா அவர்கள் பதில் சொல்கிறார்கள் என்று அந்த ஹதீஸில்வருகிறது.
அதை கேட்டு விட்டுநபி அவர்கள் சிரித்தார்களாம்சிரித்து விட்டுபரவாயில்லை கொடு..என்று சொன்னார்களாம்.

இந்த செய்திகளெல்லாம் முஸ்லிமில் 3675 , இன்னும் ஏராளமான ஹதீஸ்களில்பதியப்பட்டிருக்கின்றது.

இது அசிங்கமா இல்லையா?
இளைஞரான சாலிம்ஒரு  ந் நியப் பெண்ணின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிப்பதைஇஸ்லாம் ஏவுமா?
ஆபாசமில்லையா இது?
இதை எப்படி நபி (சல்அவர்கள் ஏவியிருப்பார்கள்?
கேட்டவுடனேயே இது நபி சொன்னதாக இருக்காது என்று பளிச்சென்று தெரிகிறதே..
உங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று குர் ஆன் சொல்லியிருக்கும் போது,அதற்கு மாற்றமாக  ந் நியப் பெண்ணிடம் ஒரு ஆண் பால் குடித்து விட்டு பிறகுதனித்திருக்கலாம் என்று நபி (சல்அவர்கள் சொல்வார்களா?
இஸ்லாத்தை இதை விடவும் கேவலப்படுத்த முடியுமா?

இதை விட..
இந்த சட்டத்தை ஆதாரமாகக்கொண்டு ஆயிஷா (ரலிஅவரகளும் செயல்பட்டார்களாம்.
அதாவதுயாரேனும் தம்மை தனிமையில் சந்திக்க விரும்பினால்தமது சகோதரிகளிடம்இந்தநபருக்கு நீங்கள் பால் கொடுங்கள்அப்போது நீங்கள் அவருக்கு தாய் ஆகி விடுவீர்கள்நான்அவருக்கு சின்னம்மா ஆகி விடுவேன்அப்போது பிரச்சனையில்லை என்று ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னதாக அஹமதில் இருக்கும் ஹதீஸ் அவர்களது கண்ணியத்தைக்குலைப்பதைப் பார்க்கிறோம்.

ஒழுக்கத்திற்கு உதாரணமான அன்னை ஆயிஷா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்களா?நிச்சயம் மாட்டார்கள்.\


மற்ற பெண்களைப் போல் நீங்கள் இல்லைநீங்கள் திரைக்கு அப்பாலிருந்து தான் ஆண்களிடம்பேச வேண்டும் என்பதாக நபியின் மனைவிமார்களுக்கு தனிச் சட்டத்தைகடுமையானநிபந்தனைகளை அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருக்கும் போதுஇப்படி ஆயிஷா (ரலி)அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள்.


எவனோ ஒரு விஷமி நபியின் மீதும் ஆயிஷா (ரலிஅவர்கள் மீதும் களங்கம் சுமத்த வேண்டும்என்கிற நோக்கத்தில் கட்டவிழ்த்து விட்ட பொய் தான் இவை.

பாலூட்டுதல் என்பது இரண்டு வயதிற்கு உட்பட்டு தான்.
இரண்டு வயதிற்கு கீழே ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும்என்பது குர் ஆன் கூறுகின்ற சட்டம்.
அதற்கு மேல் பாலூட்டினால் தாய் பிள்ளை உறவே ஏற்படாது எனும் போதுதாடி வைத்தஇளைஞர் ஒரு பெண்ணிடம் பால் குடித்து விட்டு மகனாகி கொள்கிறேன் என்றால் இது எப்படிஇஸ்லாமாகும்???

சரிஅது போகதோன்றிய நேரமெல்லாம் ஒரு பெண்ணிடம் பால் சுரக்குமா என்ன?
பால் சுரக்க வேண்டுமென்றால் பால் குடிக்கும் பருவத்தில் அந்த பெண்ணுக்கு கைக்குழந்தைஇருக்க வேண்டும்அப்போது தான் பால் சுரக்கும்சஹ்லாவுக்கு அப்படி ஏதும் குழந்தைகள்இருந்ததற்கான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் உண்டா?

இன்னும் சொல்வதானால்ஹதீஸ் என்று ஒன்றை சொல்வதானால் அதை செயல்படுத்தவேண்டும்அதை செய்யலாம் என்று ஃபத்வா கொடுக்க வேண்டும்.
ஏனெனில்அதை சொல்வது நபி.

காந்தியின் சுய சரிதையை நாம் வாசிப்பதாக இருந்தால் அதில் சொல்லப்பட்டவைகளைவெறுமனே தகவல் என்கிற அடிப்படையில் தெரிந்து கொண்டு அமைதியாக இருந்துகொள்ளலாம்.
ஆனால்நபி (சல்அவர்கள் ஒன்றை சொன்னார்கள் என்றால் அது வெறும் தகவல் அல்லஅதுவஹி.
வஹீ என்றால் அதை நாமும் செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறான பிரச்சனை வந்தால் நபி சொன்னது போன்று செய்யலாம் என ஃபத்வா கொடுக்கவேண்டும்.
ஏனெனில்இவரிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் சொல்லி விட்டான்.

அப்படியானால்இந்த பிரச்சனை இன்றைக்கு வந்தால் இந்த ஹதீஸை சரி காணக்கூடியவர்கள்இவ்வாறு ஃபத்வா கொடுப்பார்களா?
விபச்சாரம் புரிகிறான் ஒருவன்.. கையும் மையுமாக மாட்டிக் கொள்கிறான்.

நான் விபச்சாரமா செய்தேன்நான் என் அம்மாவுடன் தானே இருந்தேன் என்பான்.
எப்படி சொல்கிறாய்என்று கேட்டால்இப்போது தான் பால் குடித்தேன் என்று சொல்வான்.

சரியாகி விடுமாஅவன் சரியாகதான் சொல்கிறான் என்று அவனை விட்டு விடுவார்களா?

இதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்ல இயலாதவர்கள்எப்படியாவது ஹதீஸுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சால்ஜாப்புகள் சொல்வதைப் பார்க்கிறோம்.

கறந்து கொடுக்க சொல்லியிருப்பார்கள்என்று பதில் சொல்கின்றனர்.
கறந்து கொடுத்தல் பற்றி அங்கே சொல்லப்படவேயில்லை.

வருடங்கள் பாலூட்டுங்கள் என்று குர் ஆனில் அல்லாஹ் சொல்கிற இடத்திலும் இதே அரபுவாசகமான அர்ளயீ என்கிற சொல் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அங்கே என்ன பொருளோ அது தான் இங்கேயும்.

சரிஒரு வாதத்திற்கு கறந்து கொடுக்க சொல்லியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால்அப்போதும் இது பொருந்தாது.
ஏனெனில்இந்த ஹதீஸ் படிதாய் ஆக ஆவதற்கு தான் நபியவர்கள் இங்கே சட்டம்சொல்கிறார்கள்.
கறந்து கொடுத்தால் தாய் ஆக முடியுமா?
வயதுக்கு கீழுள்ள குழந்தைக்கு கறந்து கொடுத்தால் கூட தாயாக ஆக முடியாதே..
அப்படியானால்இங்கு கறந்து கொடுக்க சொல்லவில்லைமாறாக குழ்ந்தை எப்படி தாயிடம்பொதுவாக பால் குடிக்குமோஅல்லாஹ்வும் குர் ஆனில் 2 வயது வரை தாய்மார்கள்பாலூட்டுங்கள் என்று என்ன முறையில் பாலூட்டுமாறு சொல்கிறானோ அந்த முறையில்பாலூட்ட சொன்னார்கள் என்பது தான் அந்த ஹதீஸின் கருத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அது போககறந்து கொடுப்பதாக இருந்தால் சஹ்லா அவர்கள் ,அவர் இளைஞராகஇருக்கிறாரேஅவர் ஆண்கள் அறிவதையெல்லாம் அறிந்தவராக இருக்கிறாரே,தாடியெல்லாம் வைத்தவராக இருக்கிறாரே என்றெல்லாம் ஏன் கேட்க வேண்டும்?
கறந்து கொடுப்பதற்கு இதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லையே.. கறந்துடம்ளரில் கொடுத்து அவரைக் குடிக்க சொல்வதாக இருந்தால்அவர் இளைஞராக இருந்தால்என்ன சிறுவனாக இருந்தால் என்ன?
தாடி வைத்தவராக இருந்தால் என்ன தாடி இல்லாதவராக இருந்தால் என்ன?

இந்த சமாளிப்பும் பயனளிக்கவில்லை என்று ஆனதும்இது சாலிமுக்கு மட்டும் உரிய தனிச்சட்டம் என்று அடுத்ததாக சமாளிக்கின்றனர்.

சிலருக்கு சில விதிவிலக்குகளை நபி (சல்அவர்கள் கொடுப்பார்கள்குர்பானிப் பிராணியாகஒரு குட்டியை தேர்வு செய்து ஒரு சஹாபி அறுத்து விடுவார்இது தவறுஇந்த ஒரு தடவைசரிஅடுத்த முறை இப்படி செய்யாதேஎன்று நபியவர்கள் விதிவிலக்கு அளிக்கிறார்கள்.

ஆனால்,  அசிங்கத்திலுமா விதிவிலக்கு?
விபச்சாரத்திலுமா விதிவிலக்கு?
அருவருப்பானதை அல்லாஹ் ஏவ மாட்டான் என்று குர் ஆன் சொல்லியிருக்கும் போது,அருவருப்பில் இன்னாருக்கு மட்டும் சிறப்பு சட்டம் என்று சொல்ல முடியுமா?
பொதுவாக அனைவருக்கும் விபச்சாரம் செய்ய தடைஇவரைத் தவிர.. என்று விதிவிலக்குஇருக்குமா?
யாரும் திருட கூடாதுஉனக்கு மட்டும் விதிவிலக்கு.. என்று அதிலுமா விதிவிலக்குஅளிப்பார்கள்?

இது போன்ற வாதங்கள் நபியை இன்னும் கேவலப்படுத்தத் தான் செய்கின்றன.

சரிஅவருக்கு மட்டும் சிறப்புச் சட்டம் என்றால்,அதையே ஆயிஷா (ரலிஅவர்கள்முன்மாதிரியாக கொண்டு இன்னொருவருக்கு சட்டம் சொல்லியிருக்கிறார்களே அது எப்படி?அதுவும் இதே முஸ்லிம் நூலில் பதிவாகியிருக்கிறதே..
தம்மை யாரேனும் சந்திக்க விரும்பினாலும் இந்த சட்டத்தைசாலிமுக்கு நபி (சல்அவர்கள்அனுமதியளித்ததன் அடிப்படையில் நானும் அமல்படுத்துவேன் என்று அவர்கள் சொன்னதாகஅஹமதில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் கூறுகின்றதேஅது எப்படி?

சாலிமுக்கு மட்டுமுரிய தனி சட்டம் என்று சொல்பவர்கள் குறைந்த பட்சம்
ஆயிஷா அவர்களது இந்த ஹதீஸ்களையாவது மறுக்க வேண்டும்.

முரண்பாடான இரண்டையும் ஏற்பார்களாம்ஆனால் சாலிமுக்கு மட்டுமுரிய சட்டம்என்பார்களாம்.

எந்த அளவிற்கு மார்க்கத்தோடு இவர்கள் விளையாடுகின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.



அந்நியப் பெண்ணுடன் நபி (சல்அவர்கள் தனித்திருந்தார்களா?

உம்மு சுலைம் (ரலிஅவர்களது சகோதரி உம்மு ஹராம் (ரலிஅவரக்ள்.
தமது வீட்டிற்கு எதிர் வீடு என்கிற வகையில் அந்த வீட்டிற்கு நபி (சல்அவர்கள் அடிக்கடிசென்று வருவார்கள் என்றும்உம்மு ஹராம் அவர்கள் நபி (சல்அவர்களின் தலையில் பேன்வார்த்து விடுவார்கள் என்றும்நபி (சல்அவர்களின் உடலில் வழியும் வியர்வையை சேகரித்துவைப்பார்கள் எனவும்நபியை இழிவுப்படுத்திபொய்களை எழுதியிருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் வரிசையில் குறைகள் எதுவும் இல்லையென்ற போதிலும்இது குர் ஆனோடுநேரடியாக மோதுகின்ற ஹதீஸ்.
இதை ஒரு காலும் ஏற்க முடியாதுநபி (சல்அவர்கள் ஒரு போதும் இது போன்ற காரியத்தில்ஈடுபட மாட்டார்கள்.
பைஅத் செய்கின்ற போது கூட பெண்களின் கைகளை தொட மாட்டேன் என்கிற அளவிற்குஒழுக்கத்தை பேணியவர்கள் நபி (சல்அவர்கள்.

நபியேநீர் உயரிய நற்குணத்துடன் இருக்கிறீர் என்பதாக அல்லாஹ் குர் ஆனில்பாராட்டுகின்றான்.
அந்நியப் பெண்ணிடம் இவ்வாறு தலையை கொடுத்து பேன் பார்க்கும்படி சொல்வதாநற்குணம்?
நிச்சயம் இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி தான்.

ஆனால்அறிவிப்பாளரின் குறையில்லையே.. என்கிற காரணத்தைச் சொல்லி இதையும்நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

அந்த பெண்மணி நபி (சல்அவர்களின் இரத்த பந்தமாக இருக்கலாம்என்று ஹதீஸில்இல்லாததை இவர்களாக யூகிக்கின்றனர்.
வளர்ப்புத் தாயாக இருக்கலாம் என்று சொல்கின்றனர்.

இவையெல்லாம் எந்த அடிப்படையுமற்றஎந்த ஆதாரமுமில்லாத யூகங்களே தவிரவேறில்லை.

இன்னும் சொல்லப்போனால்நபி (சல்அவர்களை விடவெல்லாம் மிகவும் குறைவானவயதுடையவர்கள் உம்மு ஹராம் (ரலிஅவர்கள்.
நபி (சல்அவர்கள் மரணித்து 40 வருடங்கள் கழித்து தான் இவர்கள் மரணிக்கிறார்கள்.
அகவளர்ப்புத் தாய் என்கிற யூகமெல்லாம் அடிப்படையிலேயே தவறு.

இன்னும் சொல்லபோனால்இப்படியொரு சம்பவம் உண்மையில் நிகழ்ந்திருந்தால் இதையேயூதர்கள் நபிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு எளிதில் பயன்படுத்தியிருப்பார்கள்.

ஒன்றுமில்லாத ஆயிஷா (ரலிஅவர்கள் தொடர்பான செய்தியையே ஊதிப் பெரிதாக ஆக்கி,ஊர் முழுக்க அவதூறு பரப்பியவர்கள்நபி (சல்அவர்கள்  ந் நியப் பெண்ணின் வீட்டுக்குசென்று வருகிறார் என்று இருக்குமானால் அதை பரப்பி ஆனந்தம் அடைந்திருக்கமாட்டார்களா?
நிச்சயம் பரப்பியிருப்பார்கள்.

ஆண்களேநீங்கள் உங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடும் குர்ஆனை போதிக்கும் நபி (சல்அவர்கள் இது போன்ற தவறான காரியத்தில் ஈடுபடுவார்கள்என்பதை கனவிலும் நம்ப முடியாது.

ஆகநபியின் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் கட்டுக்கதை இருக்கிறது,அதை கூட இவர்கள் தூக்கிப் பிடிக்கின்றனர் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது?
நபியின் கப்ருக்கு மேலுள்ள டூமை இடிக்க வேண்டும் என்று சொன்னதற்கு குய்யோ முய்யோஎனக் கத்தினார்களேஇங்கு ஒட்டு மொத்த நபியின் ஒழுக்கமும் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது,அதற்கு எவரும் கத்தக் காணோம்கண்டித்து குரல் கொடுக்க காணோம்..
அது... வளர்ப்புத் தாயாக இருக்கும்..
அது.. தூரத்து பந்தத்தில் மஹரமாக இருக்கும்.. என்றெல்லாம் சமாளிக்கிறார்கள்.

குர் ஆனுக்கும்பெருமானார் (சல்அவர்களுக்கும் இவர்கள் கொடுத்திருக்கும் மரியாதை இதுதான் !



நபியை கொல்ல முடியாது என்பதற்கு புஹாரி ஹதீஸ் முரணா?

நபியே உம்மை மனிதர்களிடமிருந்து நாம் பாதுகாப்போம் என்பதாக அல்லாஹ் குர் ஆனில்சொல்கிறான்.
நபி (சல்அவர்கள் இயற்கையாக தான் மரணிப்பார்களே தவிரஅவர்களை யாராலும் கொல்லமுடியாது என்பது இதன் பொருள்.

இதை அடிப்படையாக கொண்டுசிலர் ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர்.
அதாவதுயூதப் பெண்மணி ரசூல் (சல்அவர்களுக்கு விஷம் கொடுத்தார்,
இந்த விஷத்தின் பாதிப்பானதுநபி (சல்அவர்களின் மரணத்தருவாயிலும் கூட தென்பட்டதுஎன்பதாக புஹாரி 2617 இல் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சொல்கிறது.

அப்படியானால் இந்த விஷத்தின் மூலமாக தானே இறந்திருக்கிறார்கள்இதுவும் குர் ஆனுக்குமுரண் என்று மறுப்பீர்களா?

என்பது இவர்களது கேள்வி.

உண்மையில் குர் ஆனுக்கு முரணாக இது இருக்குமேயானால் சந்தேகமேயில்லாமல் இதுவும்மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ் தான்.
ஆனால்இதை இவர்கள் புரிந்து கொண்டது தான் தவறு.

யூதப் பெண்மணி விஷம் வைத்தது தொடர்பாக நபி (சல்அவர்கள் அப்போதேவிளக்கமொன்றை அளித்திருப்பார்கள்எனக்கெதிராக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லைஎன்று நபி (சல்)அவர்கள் அந்த பெண்ணிடம் சொல்வதாக முஸ்லிமில் 4408 ஹதீஸில் நபி (சல்)அவர்கள் கூறியதாக பதியப்பட்டிருக்கிறது.

எனக்கெதிராக உன்னை அனுப்பவில்லை என்றால் என்னை உனது விஷம் எதுவும் செய்யாதுஎன்று பொருள்.

ஆகநபியின் மரணத்திற்கு நிச்சயம் அந்த விஷம் காரணமல்ல.

இவர்கள் சுட்டிக் காட்டும் புஹாரி 2617 இல் கூடவிஷத்தின் பாதிப்பை நான் உணர்கிறேன்என்று சொன்னது நபி (சல்அவர்களாஇல்லை.
அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்துஅனஸ் (ரலிஅவர்கள் இவ்வாறு யூகிக்கிறார்கள்,அவ்வளவு தான்.
அல்லாமல்நபி (சல்அவர்களே அப்படி சொல்லவில்லை.

இது போகநடைமுறையிலும் இப்படியான தாக்கம் கொண்ட விஷங்கள் இல்லை.
விஷம் என்றால் உடனடியாக வேலை செய்யும்.
அல்லது மெல்ல சாகடிக்கும் விஷம் என்றால் அதை தினமும் சிறிது சிறிதாக கொடுத்து வரவேண்டும்.
அப்படி செய்தால் தான் அந்த விஷமானது அவரை மெல்ல சாகடிக்கும்.
அல்லாமல்ஒரேயொரு முறை ஒரு விஷத்தை அருந்தி விட்டுஅது பத்து வருடங்களுக்குப்பிறகு வேலை செய்தது என்றால் அப்படியொரு விஷம் கிடையாது.
பாதிப்பென்றால் அது உடனடியாக நடந்திருக்கும்.
உடனடியாக எந்த பாதிப்பும் இல்லையென்றால்இரத்ததோடு கலந்து அது சுத்திகரிக்கப்பட்டுவிட்டது என்றுதான் பொருள்.

எனவேஇந்த ஹதீஸ் குர் ஆனுக்கு எந்த வகையிலும் முரணில்லை.




இதற்கு முன் உங்கள் நிலைபாடு இது இல்லையேஏன் அடிக்கடி மாற்றிப் பேசுகிறீர்கள்?

ஹதீஸ் குர் ஆனுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்கக் கூடாது என்கிற அடிப்படையில் எந்தமாற்றமும் எங்களுக்கு இல்லை.
1980 களில் வெளியான அல்ஜன்னத் இதழில் கூடஒப்பும் உயர்வும் என்கிற தலைப்பில்மேற்கண்ட நிலைபாடு தொடர்பாக விளக்கப்பட்டிருக்கின்றது.

சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிற ஒரு அடிப்படையில் மட்டும் தான் மாற்றம்செய்தோம்.
சஹாபாக்கள் நபியிடம் நேரடியாக பயின்றவர்கள் தானே எனவே அவர்கள் சொல்லையும்ஏற்கலாம் என்பதாகஏனைய குர் ஆன் வசனங்களையும்இஸ்லாத்தின் அடிப்படையையும்கவனிக்காமல் அன்றைக்கு நாம் இதை சொன்னோம்.
இன்று மாற்றிக் கொண்டோம்.

ஒரு முறை சொன்னதைமாற்று ஆதாரங்கள் கிடைக்கும் போது மாற்றிக் கொள்வதுநேர்மையா அல்லது சொன்னதை எக்காரணம் கொண்டும் மாற்றவே மாட்டேன் என்றுசொல்வது நேர்மையா?

நாம்மவ்லூத் ஓதியவர்கள் தான்மத்ஹப் சட்டத்தைப் பின்பற்றியவர்கள் தான்ஏன்,தர்காவுக்கு கூட சென்றவர்கள் தான்.
இஸ்லாமிய ஞானம் இல்லாத காலங்களில் இவற்றையெல்லாம் செய்தோம் என்பதற்காக,இன்று இவையெல்லாம் தெரிந்த பிறகும் மாற்றக் கூடாது என்றால் அது எப்படி அர்த்தமுள்ளவாதமாகும்?

இவர்கள் அங்கீகரிக்கும் இமாம்கள் இது போன்று ஒரு தடவை சொன்னதை இன்னொருசந்தர்ப்பத்தில் மாற்றவில்லையா?

ஷாஃபி இமாமின் சொற்களில் கதீம்ஜதீத் என இரண்டு நிலைகள் உண்டே..
கதீம் என்றால் ஆரம்ப காலங்களில் அவர் ஈராக்கில் இருக்கும் போது சொன்னவை.
ஜதீத் என்றால்பின்னர் எகிப்துக்கு வந்த பிறகு மாற்றியவை என்று இரண்டு நிலைகளை ஷாஃபிமத்ஹபும் கொண்டு தான் இருக்கிறது.

ஹனஃபி மத்ஹபின் துர்ருல் முக்தாரில் மா ரஜஅ அபு ஹனீஃபா (சொல்லி விட்டு பிறகுமாற்றியவைஎன்கிற தலைப்பிட்டே பல்வேறு மசயில்களின் பட்டியல் உள்ளன.
ஆகஒரு செய்தி கிடைக்கும் போது ஒன்றை சொல்வோம்அதற்கு எதிரான ஆதாரம் அப்போதுநமக்கு கிடைத்திருக்காது.
பின்னர்அதற்கெதிரான புரிதல் நமக்கு ஏற்படும் போது அதை மாற்றிக் கொள்வோம்.

அப்படியானால்உங்கள் முந்தைய விளக்கத்தை கேட்டு அமல் செய்து மரணித்தவர்களின்நிலை என்னஎன்று குதர்க்கமாக கேள்வியெழுப்புவார்கள்.

அப்படியானால் இதே கேள்வியை நாம் இவர்களிடமும் கேட்போம்.
அனு ஹனீஃபா இமாம் சொல்லி விட்டு மாற்றியவை என்று எழுதி வைத்திருக்கிறார்களே,அப்படியானால் முதலில் அவர் சொன்னதைக் கேட்டு அமல் செய்து மரணித்தவர்களின் நிலைஎன்ன?

ஷாஃபி இமாம் ஈராக்கில் இருந்த போது சொன்னாரேஅவற்றையெல்லாம்  கேட்டு அமல்செய்து மரணித்தவர்களின் நிலை என்ன?

ஆகஇதுவெல்லாம் பிழையான வாதங்கள்.

நாம் அல்லாஹ்வுக்கு பயந்து எது சரி என்று உண்மையில் நம் அறிவுக்கு படுகிறதோ அதைசொல்வோம்.
அதை கேட்கும் மக்களும் குர் ஆன் ஹதீஸோடு ஒப்பிட்டுப் பார்த்து பின்பற்றுகிறார்கள்.

அவ்வாறுநம் சக்திக்குட்பட்டு ஆய்வு செய்து ஒன்றை பின்பற்றிஅது சரியான ஆய்வாகஇருக்கும் பட்சத்தில் நமக்கு இரு நன்மை.
ஆய்வு செய்த நன்மைஅதை சரியாக செய்த நன்மை.
ஒரு வேளை அது தவறாக இருந்தால் கூடஆய்வு செய்த ஒரு நன்மை நமக்கு கிடைக்கும்என்பது நபி மொழி.

அந்த வகையில்எதை சொன்னாலும்நம் சக்திக்குட்பட்டு குர் ஆனிலும் ஹதீஸிலும்தேடிப்பார்க்க வேண்டும் என்பதே அடிப்படை.
இதை நாம் சரியாகவே கடைபிடிக்கிறோம்.

ஆனால்வேடிக்கை என்னவென்றால்யார் நம்மை நோக்கி இந்த விமர்சனத்தைஎழுப்புகிறார்களோஅவர்கள் தான் கண்மூடித்தனமாக ஒன்றை பின்பற்றுகின்றவர்கள்.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்று ஹதீஸில் இருப்பதை தெரிந்து கொண்டே எங்கள்மத்ஹபில் அது இல்லை என்று சொல்லி அதை மறுப்பவர்கள் இவர்கள் தான்.
பெரு நாள் தொழுகையில் நபி (சல்அவர்கள் 12 தக்பீர் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்குஹதீஸில் ஆதாரம் இருப்பது தெரிந்தும் ஹனஃபி மத்ஹபில் அப்படியில்லை என்றுமாற்றுகின்றனர்.

இவர்கள் தான் உண்மையில் வழிகேடர்கள்இவர்கள் சொல்லைக் கேட்ட மனிதர்களை தான்நாளை அல்லாஹ் கேள்வி கேட்பான்.



குர் ஆன் ஓதினால் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்று முஸ்லிம் 1470 இல் ஒரு ஹதீஸ் இருக்கிறதே, இந்த ஹதீஸை தவ்ஹீத் ஜமாஅத் இன்னும் ஏன் மறுக்கவில்லை?

என்று நமக்கு பாயிண்ட் எடுத்து தருகிறார்களாம்.

குர் ஆனுக்கு முரணாக இருந்தால் இதை மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஹதீஸ் இருந்தாலும் மறுக்கத் தான் செய்வோம், சந்தேகமேயில்லை.

இந்த கேள்வியை எழுப்புகின்றவர்களைப் பொல் குர் ஆனின் மகத்துவம் தெரியாதவர்களல்ல நாம்.

மறுக்கக் கூடிய காரணங்கள் சரியாக இருந்தால் அந்த ஹதீஸை மறுப்பாமல் ஏற்பது தான் இஸ்லாத்திற்கு விரோதம். இந்த அடிப்படையை நாம் முதலில் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், இவர்கள் சுட்டிக் காட்டுகின்ற இந்த ஹதீஸானது குர் ஆனுக்கு முரணாக இல்லை, அதை மறுக்க வேண்டிய காரணங்களும் இல்லை.

குர் ஆனை ஓதினால் சூனியக்காரர்கள் செயலிழந்து போவார்கள் என்பது பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த ஹதீஸுக்கு கொடுக்கும் கூடுதல் வியாக்கானம். ஹதீஸில் அப்படி எந்த வாசகமும் இல்லை.

ஹதீஸில், குர் ஆனை ஓதினால் வீணர்கள், வழிகேடர்கள், செயலிழந்து போவார்கள் என்று தான் உள்ளது.

எனவே இதை மறுக்கத் தேவையில்லை.


முற்றும்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக