வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : அஹ்லே குர்ஆன் ஏன் தோன்றினார்கள்?



ஹதீஸ்களை முழுமையாக மறுக்கும் கூட்டத்தினர் ஏன் உருவானார்கள்? குர்ஆனுக்கு முரணாக இருந்தாலும் அதை ஏற்று குர்ஆனை மறுக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் காரணமாகத் தான் உருவானார்கள். 
குர் ஆனுக்கு முரண்பட்டால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்ற சரியான நிலைபாட்டை மார்க்க அறிஞர்கள் சொல்லி இருந்தால் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டத்தினர் உண்டாகி இருக்க மாட்டார்கள். 

எந்தக் கோட்பாடு ஹதீஸ்களை மறுக்கும் போக்கைத் தடுத்து நிறுத்துமோ அந்தக் கோட்பாடுதான் ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறுவதை விட வேடிக்கையான வாதம் எதுவும் இருக்க முடியாது.

இவர்கள் கூறுவது போல் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அறிவற்ற வாதத்தை யாராவது எடுத்து வைத்தால் அது குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று எடுத்துக் காட்டி அதை முறியடிப்பது தான் முறையாகும் .
கொசுவுக்குப் பயந்து குடிசையைக் கொளுத்தக் கூடாது. குடிசையை வைத்துக் கொண்டு கொசுவைத் தான் கொல்ல வேண்டும்.

குர்ஆனிற்கு முரண்படாத ஹதீஸை யாராவது குர்ஆனிற்கு முரண்படுவதாக ஆதாரங்கள் இன்றிக் கூறினால் அவருடைய அந்த கருத்தை தவறு என்பதை விளக்கி அதன் முதுகெலும்பை முறிக்கும் வகையில் நாம் பதிலளிப்போம்.

நபிகள் நாயகத்தின் எந்த ஒரு ஆதாரப்பூரவமான வழிமுறையும் மறுக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அல்லாஹ் அத்தகைய சத்தியவாதிகளை கியாமத் நாள் வரை கொண்டுவரத்தான் செய்வான்.

Article Copied From: www.onlinepj.com ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக