புதன், 7 மே, 2014

அற்ப புகழுக்கு பல வழிகளுண்டு


தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து அதன் மூலம் புகழ் பெறுவது ஒரு வகை என்றால்
அந்த ஜமாஅத்தின் அறிஞர்களுடன் விவாதித்து அதனால் கிடைக்கும் அற்ப புகழுக்கு அலைவது ஒரு வகை என்றால்
அந்த ஜமாஅத்தில் தான் இதுவரை இருந்தேன், இப்போது வெளியேறி விட்டேன் என்று அறிவித்து அதில் அற்ப சுகம் பெறுவது புது ரகமாக ஆகியிருக்கிறது.

நானெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த ஃபத்வாவை எதிர்ப்பவனாக்கும், நானெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த நிலைபாட்டை கடுமையாக விமர்சிப்பவனாக்கும் என்று மற்றவர்களிடம் சொன்னால்.. ஓஹ் ஆளானப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையெ இவர் விமர்சிக்கிறாரே..அப்படியானால் இவர் எப்பேர் பட்ட ஆளாக இருக்க வேண்டும்..
என்று மற்றவர்கள் தம்மைப் பற்றி எண்ண வேண்டும் என்பது சிலரது சபலம்.

நீ அதில் இருந்தது தானப்பா கொடுமை. உன்னைப் போன்றவர்கள் இந்த ஜமாஅத்தில் இருந்தால் அது தான் அந்த ஜமாஅத்திற்கு இழுக்கே தவிர, விலகி செல்வது ஜமாஅத்திற்கு கண்ணியம் தான்.

பெண் பித்தனாக இருந்து கொண்டே ஜமாஅத்தின் நிர்வாகியாகவும் அங்கம் வகித்தால் அது தான் இந்த ஜமாஅத்திற்கு அவமானம்.
பண மோசடி செய்பவர் ஜமாஅத்தின் உயரிய பொறுப்பில் இருந்தால் அது தான் இந்த ஜமாஅத்திற்கு கேவலம்.
இந்த ஜமாஅத்தில் அங்கம் வகித்தால் பேரும் புகழும் கிட்டும் என்பதை நோக்கமாக கொண்ட ஒருவன் இதில் இருந்தால் அது தான் இந்த ஜமாஅத்திற்கு கேடு !

தவ்ஹீத் ஜமாஅத்தினால் தூக்கி வீசப்பட்டவர்களோ, இதிலிருந்து தாமாக கழன்று கொண்டவர்களோ ஏதேனும் உலக ஆதாயத்தை நாடாமல் இருந்ததேயில்லை என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது.

எந்த ஆதாயமும் கிட்டாத ஒருவர் குறைந்த பட்சம், நான் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து விலகியவனாக்கும்.. என்று நான்கு பேரிடம் சொல்லி அதிலாவது பெருமைப்பட்டுக் கொள்வர்.

செருப்படி வாங்கினாலும் அது தங்க செருப்பாக்கும் என்று கூறுவதினால் பெருமை இல்லை, மென்மேலும் அது அவமானம் தான் என்று இவர்கள் புரியும் காலம் என்றைக்கோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக