வியாழன், 22 மே, 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (C)


அன்புள்ள nashid, (11.5.2014 தொடர் 2 க்கு பதில்) 

1) நீ எழுதி உள்ளது : 

“உங்கள் தொடர் 2 ஐ மீண்டும் ஐந்து ஆதாரம் ஐந்து ஆதாரம் என்கிற அதே பல்லவியோடு துவக்கியுள்ளீர்கள்”

என் பதில் : .

ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்பதற்கு 5 வசனங்களை எடுத்துவைத்தேன். ஏன் என்றால் நாம் விவாதத்தின் முதல் தலைப்பே அதுதான். நான் எடுத்து வைத்த 5-ம் எனது சொந்த கருத்தா? OR அல்லாகுவின் வசனங்களா?

நீயோ காந்தியை சம்பந்தம் இல்லாமல் இழுத்தாய். அத்துடன் விடவில்லை, அவர் சென்னை பேருந்தில் ஏறி, சாய்பாபாவின் ஆஷ்ரமத்திற்கு சென்றாரா? நான் அதை பற்றி கேட்கவே இல்லையே! பால் தாக்கரே ஒரு அரசியல்வாதி, அவர் கொன்றாரா? or இல்லையா என்பதா விவாதம்? இப்படி உனது reel ஓடிக்கொண்டே இருக்கிறது...

நான் அல்லாகுவின் வசனங்களை எழுதி உள்ளதை, நீ பல்லவி என்கிறாய். ஆனால் நீயோ அல்லாகுவின் வசனங்களுக்கு, குரான் அடிப்படையில் பதில் சொல்ல முடியாமல் திணறி உலகவாதிகளை உதாரணம் காட்டுகிறாய்.

============================================================

2) நீ ஏப்ரல் 27 இல், ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதற்கு சக்கராத் நிலையில் இருக்கும் ஒருவரை உதாரணம் காட்டி இருந்தாய், அதாவது அவர் இன்னும் இறக்கவில்லை என்று சொல்வது ஷிர்க் இல்லை என்றும் எழுதி இருந்தாய்.

எனது பதிலில் (ஏப்ரல் 30), சகாரத் நிலையில் உள்ளவர், சுவாசித்தும், உண்டும் இருக்கிறார், எனவே இவர் இப்போது இறக்கவில்லை என்று சொல்வது ஷிர்க்கு ஆகாது, ஆனால் இயற்கை வீதிக்கு எதிராக, 2000 வருடமாக உண்ணாமல் குடிக்காமல் ஈஸா உயிரோடு வாழ்கிறார் என்று நம்புவது ஷிர்க் ஆகும் என்று எழுதி இருந்தேன்.

அதற்கு உன் பதிலில்,

“ஈஸா இன்னும் மரணிக்கவில்லை என்றாலும் அவரும் ஒரு நாள் மரணிப்பார். அவரது ஆயுள் தான் நீட்டிக்கப்படிருக்கிறது”

என்றும், “அவரை இந்த பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக மட்டும் தான் அல்லாஹ் சொல்கிறான்” என்றும் எழுதினாய்.

அதற்கு, அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டதற்கும், ஈசாவை பூமியிலிருந்து அப்புறப்படுத்தியதாக அல்லாஹு சொன்னதாக எழுதி உள்ளதற்கும் ஆதாரம் என்ன? என்று கேட்டேன்.

இதுவரையிலும் பதில் தராதது ஏன்?.

எனவே உன்னால் முடியாத உடான்ஸை எழுதி கற்பனை ஈசாவை கொண்டுவராதே.
.உனது விருப்பம்போல் அல்லாஹு சொன்னதாக எழுதிவிட்டு, ஆதாரம் கேட்டால், புரியாத்தது போல், உலக வாதிகளை வைத்து கதை அளக்காதே.

ஈசாவை அப்புறப்படுத்தியதாக அல்லாஹ் சொல்கிறான் என்று நீ கூறியது மிகப்பெரிய தவறு.

சரி போகட்டும், சகராத்து ஹாலில் இருந்தவர் இப்போது என்ன ஆனார் ? பேச்சு மூச்சில்லையே!
============================================================

3) அடுத்து குரான் 2:259 வசனத்தை காட்டி, ஒரு பிரயாணியின் உதாரணத்தை கூறி உள்ளாய்,

“ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. 'இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து 'எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?' என்று கேட்டான். 'ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்' என்று அவர் கூறினார். 'அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது 'அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்' எனக் கூறினார்.

என் பதில் :

ஒருவரை 100 ஆண்டுகள் மரணிக்கச்செய்து பின்னர் உயிர்பித்ததாக, நீ நேரடியாக பொருள் கொண்டுள்ளாய்.
ஆனால்வசனத்தை முழுமையாக படித்து பார்த்தால் உண்மையான பொருள் விளங்கும்.
ஏனென்றால் அடுத்து வரக்கூடிய வசனத்தில், ‘உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக, உமது கழுதையையும் கவனிப்பீராக’ என்று கூறுகின்றான்.

‘செத்து விட்ட’ என்று நீ bracket இல் போட்டுள்ளது உன் சொந்த கருத்து தான். இப்படி சொந்த கருத்தை சேர்த்து, தவறான பொருள் கொண்டுள்ளாய்.

அல்லாஹு கூறி உள்ளது,
உமது உணவும், பானமும் பாரும், அது கெட்டு போகவில்லை, மேலும் உமது கழுதையை பாரும் என்று மட்டுமே அல்லாஹு கூறுகின்றான்.

இதிலிருந்து, உணவும், பானமும், கேட்டுபோகவில்லை, கழுதையும் உயிரோடு இருக்கிறது என்று தான் பொருள். நீ பொருள் கொண்டதன் படி 100 ஆண்டுகள் அவர் மரணித்து இருந்தால், இவை மூன்றும் கேட்டு போயிருக்கும்.
ஆனால் அல்லாஹு, ஆவை 3-ம் கெட்டு போகவில்லை என்று கூறுகின்றான். இதிலிருந்து, இது ஒரு கனவு காட்சி என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

எனவே அடிப்படையான கருத்துக்கு எதிராக, அதாவது இயற்க்கை சட்டத்திற்கு எதிரான பொருள் ஒன்றும் இவ்வசனத்தில் இல்லை.

எனவே இந்த வசனத்தை வைத்துக்கொண்டு, ஈஸா நபி 2000 வருடங்களாக உயிரோடு இருக்கிறார் என்று நிரூபிக்க முடியாது.

மேலும் அல்லாஹு ஈஸா நபியை பற்றி அவர் உயிரோடு இருப்பதாகவோ, 2000 வருடம் என்றோ எங்கும் கூறவில்லை.
எனவே உன் வாதம் தவறு.

மேலும் அடுத்த தொடர், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக